பாண்டிச்சேரியில் ஆட்டோவில் பயணிக்கும் போது ஒரு சுவாரஸ்யமான ஆட்டோ காரரை சந்தித்தேன் அவர் பேசியதில் இருந்து சில விஷயங்களை இங்கு பகிர்கிறேன். ஒரு சாதாரண மனிதர் தான். ஆனால் அரசியல் வாதிகள் குறித்தும், தனது ஊர், அதன் வரலாறு, நிறுவனங்கள், எக்கானமி, தமிழக மின்வெட்டு என எத்தனை விஷயம் தொட்டு சென்றுள்ளார் பாருங்கள் ! அவரது பெயர் கூறினார் எனினும் அதனை இங்கு தவிர்க்கிறேன்.
இனி பாண்டிச்சேரி பற்றி அவர் சொன்ன சில விஷயங்கள் :
முன்பெல்லாம் பாண்டியில் பல பொருட்கள் விலை குறைவு என்பதால் வீடு கட்ட தேவையான பொருட்கள் உட்பட பலவும் பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து வாங்கி போவார்கள். அப்போது இங்கு வரி மிகவும் குறைவு. VAT வந்த பிறகு இந்த வித்யாசம் அகன்று வரிச்சலுகை முழுதும் ஒழிந்து விட்டது. இப்போது படங்களின் DVD (எல்லா இடத்திலும் வெறும் இருபது ரூபாய் சார் !) போன்ற ஒரு சில பொருள் தவிர மற்றவை தமிழகத்தில் என்ன விலையோ ஏறக்குறைய அதே விலை.
மதுபானங்கள் விலை முன்பு மிக குறைவு; இப்போது அந்த வித்யாசமும் பத்து முதல் இருபது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. ஒரு காலத்தில் பார்டரில் இருந்து தினம் இங்கு வந்து குடித்து செல்வோர் உண்டு. இப்போது விலை வித்யாசமே பத்து ரூபாய் என்பதால், பஸ்ஸில் வந்து செல்ல அதற்கு மேல் செலவாகிறது என தினம் வரும் குடிமக்கள் கூட்டம் குறைந்துள்ளது
சனி, ஞாயிறுகளில் பாண்டிச்சேரி வருகிற கூட்டம் இன்றைக்கும் மிக அதிகமாகவே உள்ளது. பார்கள், ஹோட்டல்கள் லாட்ஜுகள் நிரம்பி விடுகின்றன. நீங்கள் வார இறுதியில் பாண்டிச்சேரி வருவதாக இருந்தால் முன்பே ரூம் புக் செய்து விடுவது நல்லது. இல்லா விடில் கிடைக்கிற இடத்தில் தங்குகிற மாதிரி ஆகி விடும் !
சென்னைக்கு இணையாக பல்வேறு கம்பனிகளும் இங்கு இருக்கின்றன. இரும்பு, சாராயம், கணினி துறை என ஏராள கம்பனிகள் ! சில வருடங்கள் முன் வரை இங்கு கம்பனி துவங்கினால் முதல் ஐந்து வருடங்கள் நிறுவனத்தின் விற்பனை வரி கட்ட வேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. (Tax Holiday for 5 years) இதனால் புது புது நிறுவனங்கள் துவங்கப்பட்டு வந்தன. அதிலும் ஐந்தாண்டு ஆனதும் அதே நிறுவனம் நஷ்டம் என கணக்கு காட்டி மூடி விட்டு இன்னொரு புது நிறுவனம் துவங்குவார்கள் .. அப்போ தானே மறுபடி விற்பனை வரி சலுகை கிடைக்கும் ? இப்போது இத்தகைய வரிச்சலுகை எதுவும் புதிதாய் துவங்கும் நிறுவனத்துக்கு கூட இல்லை !
எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் யூனியன் டெர்ரிடரி தான் பாண்டிச்சேரி; ஆனால் வருகிற பணம் முழுசும் மக்களுக்கு போகிறதா எனில் ஹீ ஹீ. ஒரு எம். எல் ஏ அடுத்தடுத்து இரு முறை தேர்வானார். கடைசியாக நடந்த தேர்தலில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அதற்குள் நான்கு ஹோட்டல் மூன்று பார்கள் அவர் வசம் வந்து விட்டது. இனி அரசியல் இல்லாவிட்டால் கூட, வாழ் நாளைக்கு தேவையான வசதியுடன் அவர் செட்டில் ஆகிவிட்டார்.
ஒரு தேர்தலில் ஜெயிக்க அம்பது லட்சம் செலவு பண்ணி பதவிக்கு வர்றாங்க. அந்த காசையும் அதுக்கு மேலே அவர் வாழ்க்கைக்கு தேவையான சொத்து சுகம் பதவியில் இருக்கும் போது சேர்த்துடுறாங்க. காசு வாங்கிக்கிட்டு தானே மக்கள் ஓட்டு போடுறாங்க? அப்புறம் எப்படி ஏன் லஞ்சம் வாங்குறே என கேட்க முடியும்?
பாண்டிச்சேரி ஆங்காங்கு பிரிந்து உள்ளது. பாண்டிச்சேரி பார்டரில் தமிழ் நாடு வருகிறது ஆனால் இருபது கிலோ மீட்டர் சென்ற பின் மீண்டும் பாண்டிச்சேரி வந்துடுது. இப்படி பாண்டிச்சேரி விட்டு விட்டு இருக்கு. இதை விட முக்கியமா கேரளா மற்றும் கர்நாடகாவில் ஒரு சிறு பகுதி இன்னும் பாண்டிச்சேரி கீழ் வருது. மாஹி (கேரளா) மற்றும் ஏனாம் (ஆந்திரா) என்று சொல்லப்படும் இந்த இடங்கள் ஒவ்வொன்றும் நான்கைந்து தெருக்கள் தான். இப்படி ஆந்திராவில் இருக்கும் நான்கைந்து தெரு மற்றும் கேரளாவில் இருக்கும் சில தெருக்கள் இன்றும் பாண்டியின் கீழ் இருக்கு. அவற்றை அந்த மாநிலத் தோடே கூட சேர்த்துடலாம். ஆனால் எதோ சில காரணங்களால் அப்படி செய்வதில்லை. மக்கள் அவை பாண்டிச்சேரி கீழ் தான் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்
பாண்டிச்சேரியை பிரிட்டிஷ் ஆளவே இல்லை. இந்தியாவின் பல பகுதிகளை பிரிட்டிஷ் ஆண்டபோது இந்த இடத்தை பிரன்ச்சு காரர்கள் கைப்பற்றியிருந்தனர். கடல் வழியே வந்து ஆங்காங்கு கைப்பற்றிய போது இப்படி பிரிந்து பிரிந்து அவை அமைந்து விட்டன
பாண்டிச்சேரி முழுதுமே தெருக்களில் சாக்கடைகள் ஓபன் ஆக ஓடுகிறது. இதை கவனித்து கேட்டபோது மழைக்காலத்தில் சாக்கடை நிரம்பி அதன் தண்ணீர் ரோடில் வழிந்தோடும் என்றார்.
போலவே கூவம் போல ஒரு பெரிய சாக்கடை ஆறு ஆங்காங்கு ஓடுகிறது. அது முழுக்க குப்பை கொட்டி வைத்துள்ளனர் இவ்விஷயத்தில் அப்படியே சென்னையை ஒத்துள்ளது பாண்டிச்சேரி
வீடுகளுக்கு தண்ணீர் அரசாங்கமே பைப் மூலம் தருகிறது. காலை, மதியம், மாலை ஒவ்வொரு வேலையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தண்ணீர் விடுகிறார்கள் . இதனால் வீடுகளில் போர்வெல் பயன்பாடு சற்று குறைவு தான். இம்முறை மழை மிக குறைவு என்பதால் அரசாங்கத்தால் வெயில் காலம் மற்றும் ஜூன், ஜூலையில் இதே போல் தண்ணீர் விட முடியுமா அப்படிங்குறது கொஞ்சம் பயமா இருக்கு .
முன்பெல்லாம் பாண்டியில் பல பொருட்கள் விலை குறைவு என்பதால் வீடு கட்ட தேவையான பொருட்கள் உட்பட பலவும் பிற மாநிலத்திலிருந்து இங்கு வந்து வாங்கி போவார்கள். அப்போது இங்கு வரி மிகவும் குறைவு. VAT வந்த பிறகு இந்த வித்யாசம் அகன்று வரிச்சலுகை முழுதும் ஒழிந்து விட்டது. இப்போது படங்களின் DVD (எல்லா இடத்திலும் வெறும் இருபது ரூபாய் சார் !) போன்ற ஒரு சில பொருள் தவிர மற்றவை தமிழகத்தில் என்ன விலையோ ஏறக்குறைய அதே விலை.
மதுபானங்கள் விலை முன்பு மிக குறைவு; இப்போது அந்த வித்யாசமும் பத்து முதல் இருபது ரூபாய்க்குள் முடிந்து விடுகிறது. ஒரு காலத்தில் பார்டரில் இருந்து தினம் இங்கு வந்து குடித்து செல்வோர் உண்டு. இப்போது விலை வித்யாசமே பத்து ரூபாய் என்பதால், பஸ்ஸில் வந்து செல்ல அதற்கு மேல் செலவாகிறது என தினம் வரும் குடிமக்கள் கூட்டம் குறைந்துள்ளது
பாண்டிச்சேரி ஆரோவில்லில் .... |
சென்னைக்கு இணையாக பல்வேறு கம்பனிகளும் இங்கு இருக்கின்றன. இரும்பு, சாராயம், கணினி துறை என ஏராள கம்பனிகள் ! சில வருடங்கள் முன் வரை இங்கு கம்பனி துவங்கினால் முதல் ஐந்து வருடங்கள் நிறுவனத்தின் விற்பனை வரி கட்ட வேண்டியதில்லை என்ற நிலை இருந்தது. (Tax Holiday for 5 years) இதனால் புது புது நிறுவனங்கள் துவங்கப்பட்டு வந்தன. அதிலும் ஐந்தாண்டு ஆனதும் அதே நிறுவனம் நஷ்டம் என கணக்கு காட்டி மூடி விட்டு இன்னொரு புது நிறுவனம் துவங்குவார்கள் .. அப்போ தானே மறுபடி விற்பனை வரி சலுகை கிடைக்கும் ? இப்போது இத்தகைய வரிச்சலுகை எதுவும் புதிதாய் துவங்கும் நிறுவனத்துக்கு கூட இல்லை !
எல்லாவற்றுக்கும் மத்திய அரசை நம்பியிருக்கும் யூனியன் டெர்ரிடரி தான் பாண்டிச்சேரி; ஆனால் வருகிற பணம் முழுசும் மக்களுக்கு போகிறதா எனில் ஹீ ஹீ. ஒரு எம். எல் ஏ அடுத்தடுத்து இரு முறை தேர்வானார். கடைசியாக நடந்த தேர்தலில் அவர் தோற்றுவிட்டார். ஆனால் அதற்குள் நான்கு ஹோட்டல் மூன்று பார்கள் அவர் வசம் வந்து விட்டது. இனி அரசியல் இல்லாவிட்டால் கூட, வாழ் நாளைக்கு தேவையான வசதியுடன் அவர் செட்டில் ஆகிவிட்டார்.
ஒரு தேர்தலில் ஜெயிக்க அம்பது லட்சம் செலவு பண்ணி பதவிக்கு வர்றாங்க. அந்த காசையும் அதுக்கு மேலே அவர் வாழ்க்கைக்கு தேவையான சொத்து சுகம் பதவியில் இருக்கும் போது சேர்த்துடுறாங்க. காசு வாங்கிக்கிட்டு தானே மக்கள் ஓட்டு போடுறாங்க? அப்புறம் எப்படி ஏன் லஞ்சம் வாங்குறே என கேட்க முடியும்?
பாண்டிச்சேரி ஆங்காங்கு பிரிந்து உள்ளது. பாண்டிச்சேரி பார்டரில் தமிழ் நாடு வருகிறது ஆனால் இருபது கிலோ மீட்டர் சென்ற பின் மீண்டும் பாண்டிச்சேரி வந்துடுது. இப்படி பாண்டிச்சேரி விட்டு விட்டு இருக்கு. இதை விட முக்கியமா கேரளா மற்றும் கர்நாடகாவில் ஒரு சிறு பகுதி இன்னும் பாண்டிச்சேரி கீழ் வருது. மாஹி (கேரளா) மற்றும் ஏனாம் (ஆந்திரா) என்று சொல்லப்படும் இந்த இடங்கள் ஒவ்வொன்றும் நான்கைந்து தெருக்கள் தான். இப்படி ஆந்திராவில் இருக்கும் நான்கைந்து தெரு மற்றும் கேரளாவில் இருக்கும் சில தெருக்கள் இன்றும் பாண்டியின் கீழ் இருக்கு. அவற்றை அந்த மாநிலத் தோடே கூட சேர்த்துடலாம். ஆனால் எதோ சில காரணங்களால் அப்படி செய்வதில்லை. மக்கள் அவை பாண்டிச்சேரி கீழ் தான் வரவேண்டும் என்று விரும்புகிறார்கள்
பாண்டிச்சேரியை பிரிட்டிஷ் ஆளவே இல்லை. இந்தியாவின் பல பகுதிகளை பிரிட்டிஷ் ஆண்டபோது இந்த இடத்தை பிரன்ச்சு காரர்கள் கைப்பற்றியிருந்தனர். கடல் வழியே வந்து ஆங்காங்கு கைப்பற்றிய போது இப்படி பிரிந்து பிரிந்து அவை அமைந்து விட்டன
பாண்டிச்சேரி முழுதுமே தெருக்களில் சாக்கடைகள் ஓபன் ஆக ஓடுகிறது. இதை கவனித்து கேட்டபோது மழைக்காலத்தில் சாக்கடை நிரம்பி அதன் தண்ணீர் ரோடில் வழிந்தோடும் என்றார்.
குறுகிய தெருக்கள் ஓபன் சாக்கடைகள் |
இத்தனைக்கும் டிரைநேஜ் வசதி இருக்கிறது என்கிறார்கள் ! பாதி இடங்களில் பைப் உடைத்து கொண்டு தெருவில் சாக்கடையாய் ஓடுகிறது. மிக முக்கிய பெரிய தெருக்கள் தவிர 90 % இடங்களில் இப்படித்தான் இருக்கிறது என்றார்.
போலவே கூவம் போல ஒரு பெரிய சாக்கடை ஆறு ஆங்காங்கு ஓடுகிறது. அது முழுக்க குப்பை கொட்டி வைத்துள்ளனர் இவ்விஷயத்தில் அப்படியே சென்னையை ஒத்துள்ளது பாண்டிச்சேரி
வீடுகளுக்கு தண்ணீர் அரசாங்கமே பைப் மூலம் தருகிறது. காலை, மதியம், மாலை ஒவ்வொரு வேலையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தண்ணீர் விடுகிறார்கள் . இதனால் வீடுகளில் போர்வெல் பயன்பாடு சற்று குறைவு தான். இம்முறை மழை மிக குறைவு என்பதால் அரசாங்கத்தால் வெயில் காலம் மற்றும் ஜூன், ஜூலையில் இதே போல் தண்ணீர் விட முடியுமா அப்படிங்குறது கொஞ்சம் பயமா இருக்கு .
நல்ல தண்ணீர் மிக எளிதாய் கிடைப்பதால் செடிகள் எல்லாம் மிக பசுமையாக, நன்கு வளர்கின்றன சென்னையை விட செடி, கொடிகள் நிச்சயம் அதிகமே ! இத்தனைக்கும் தானே புயலுக்கு கிட்டதட்ட 60 சதவீத மரம் செடி கொடிகள் அழிந்துவிட்டது. இப்போது நீங்கள் பார்ப்பது மிச்சம் மீதியே !
ரியல் எஸ்டேட் எல்லா இடம் போல் நன்கு வளர்ந்து விட்டது. 800 sq feet உள்ள சிறு பிளாட் ( காலி மனை ) ஊருக்கு வெளியே ஆறு லட்ச ரூபாய்க்கு கிடைக்குது. இதுவே ஊருக்கு உள்ளே, கமர்ஷியல் என்றால் 800 sq feet, இருபது லட்சம் வரை கூட போகும் ! (அவர் ரியல் எஸ்டேட் பற்றி ஆர்வமா பேசியதை பார்த்தால் சைட் பிஸினஸா அது செய்கிறாரோ என தோன்றியது)
டிராபிக் மிக அதிகமாக காலை மற்றும் மாலை ஒரு மணி நேரம் தான் இருக்கும் (பள்ளி மற்றும் ஆபிஸ் செல்வோர் போகும் நேரம்)
தமிழகத்தில் இருக்க மாதிரி இங்கு கரண்ட் கட் பிரச்சனை சுத்தமா கிடையாது எப்பவாவது கரண்ட் நிறுத்தினா அரை மணி போல் நிறுத்துவாங்க. அவ்ளோ தான். மின்சாரம் பற்றாக்குறை என்றால் கடைகள் அல்லது நிறுவனங்களுக்கு நிறுத்தி, ஜெனரேட்டர் பயன்படுத்துங்க என்று சொன்னாலும் சொல்வார்களே தவிர மக்கள் பாதிக்கிற மாதிரி பல மணி நேரம் கட் ஆவதில்லை என்றவரை இடை மறித்து " பாண்டிச்சேரி சின்ன ஊர் அதனால் சமாளிக்க முடியுதோ ? " என்று கேட்க, " இருக்கலாம் சார். அதுக்குன்னு ஊர் பக்கம் 18 மணி நேரம், 20 மணி நேரம் கரண்ட் நிறுத்துவதெல்லாம் ரொம்ப கொடுமை இல்லியா?

தமிழகத்தில் எனக்கு தெரிஞ்ச ஒரு வீட்டில் வயசான பெரியவர்கள் இருவர் இருந்தாங்க . நைட்டு விளக்கு வெளிச்சத்தில் பார்த்தா ஒரு பாம்பு உள்ளே வந்துடுச்சு; இருக்கிற விளக்கை எல்லாம் வச்சிக்கிட்டு தேடினா கண்டு பிடிக்க முடியலை. கரண்ட் இல்லாம என்ன பண்றது ? தூங்கவும் முடியாம பயந்துகிட்டு உட்கார்ந்திருந்தாங்க. யாரையாவது கடிச்சு உயிர் போனா என்ன ஆறது ? அரசாங்கம் இப்படி இருக்க கூடாது சார் " என்றார்
இவங்க ஆட்சிக்கு வந்து வந்து ரெண்டு வருஷம் ஆக போகுதே சார் ! ஏதாவது செஞ்சிருக்கலாமே ! போக போக நிலைமை மோசமா தானே போகுது ! கம்பெனிகளுக்கு அதிகம் மின்வெட்டு செய்து, நீங்க ஜெனரட்டர் போட்டு ஓட்டுங்க என சொல்லிட்டு, மக்களுக்கு ஓரளவு குடுக்கலாம் இல்லியா ? பாண்டிச்சேரியில் போத்தீஸ் புதுசா துணிக்கடை திறந்தாங்க. அவங்களுக்கு மின் இணைப்பே இன்னும் தரலை. முழுக்க ஜெனரேட்டரில் மட்டும் தான் ஓடுது. முழுக்க, முழுக்க ஜெனரேட்டரில் ஓடினாலும் அவங்களால சமாளிக்க முடியுதே. அது மாதிரி கம்பனிக்கு உங்க ஊரில் செய்யலாமே !
மேட்டூர் கல்பாக்கம் மின் நிலையங்களில் ரிப்பேர் வேலை ஒழுங்கா செஞ்சு முழுசா மின்சாரம் தயாரிக்கலாம் ! சோலார் மின்சாரம் நல்ல யோசனை தான். ஆனா அதுக்கு ஆயிரக்கணக்கில் தானே யாரும் செலவு செய்ய மாட்டாங்க. அரசு தான் மானியம் மாதிரி ஏதாவது தரனும் அப்ப தான் அந்த ப்ராஜக்ட் வெற்றி ஆகும்; எல்லாத்தையும் விட முக்கியம் மத்திய அரசோடு ஒத்து போகணும் சார். அப்படி இருந்தா உங்க ஊரில் இவ்வளவு மின்வெட்டு பிரச்சனை பெருசா இருக்காது “என்று பேசிக்கொண்டே போனவரை பார்க்க வியப்பாய் இருந்தது !
*****
தொடர்புடைய பதிவுகள் :
பாண்டிச்சேரி பீச் ஒரு ஜாலி ரவுண்ட் அப்
பாண்டிச்சேரி பயணம்: அசத்தல் படங்கள்

ஏழு தொலைக்காட்சிப்பெட்டிகள் வைத்திருப்பதை பெருமையாக சொல்கிறார் ஒரு நடிகர்...
ReplyDeleteமின்விசிறி சத்தம் கேட்டால் தான் தூக்கம் வருமென்று சொல்லி போர்வையை மூடுகிறான் நண்பன்...
விவசாயத்திற்கு கொடுக்கும் இலவச மின்சாரமும், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாராமுமே கண்னை உருத்துகிறது...
எல்லேருக்கும் உயிர் வாழ்வதை விட உல்லாசமாக வாழ்வதே முக்கியமாய் தெரிகிறது, இதில் அரசைக் குறை சொல்வது வேறு....
////விவசாயத்திற்கு கொடுக்கும் இலவச மின்சாரமும், தொழிற்சாலைகள் பயன்படுத்தும் மின்சாராமுமே கண்னை உருத்துகிறது...////
DeleteYou are correct...
வெவரமான ஆட்டோகாரர்தான். ரைட்டு
ReplyDeleteநன்றி வரதராஜலு.
Deleteபாண்டிக்கு போனா கிடைக்கும்னு நினைச்சுகிட்டு இருந்து அத்தனை சலுகையும் கோவிந்தாவா ........... அடப் பாவமே.............
ReplyDeleteஆமாங்கோ :)
Deleteபாண்டிச்சேரியை பற்றிய நல்ல பய(னுள்ள)ணக் கட்டுரை . அவர் கூறுவதும் சரிதான் மத்திய அரசும் கொஞ்சம் போட்டுத்தான் பாக்கறாங்க...
ReplyDeleteகருத்துக்கு நன்றி எழில்
Deleteவிவரமான ஆட்டோகாரர் தான்.. அனால் அவர் சொல்லும் மத்திய அரசுடன் ஒத்துபோவதுன்ன என்னனு தான் தெரியல....பாண்டிச்சேரி ல காங்கிரஸ் ஆட்சி அதனால அவங்க ஒத்துபோவாங்க!!
ReplyDeleteதமிழ் நாட்ட பாத்தாலே மத்திய அரசுக்கு தான் எரியுதே....அவர் சொல்றத பார்த்த அந்நிய முதலீடுக்கு ஓகே சொல்லணும், காவிரி தண்ணிக்கு போனா போகுதுன்னு விடனும்... இதுபோல பல ஒத்துபோகனும் போல இருக்கே.....
அடேங்கப்பா ! கருத்துக்கு நன்றி சமீரா !
Deleteமத்திய அரசோடு ஒத்துப் போவது என்பது ஒரு கை ஓசை போல!
ReplyDeleteமற்ற விவரங்கள் ஓகே. பகிர்வும், படங்களும் அழகு.
நன்றி ஸ்ரீராம் சார்
Deleteமத்திய அரசோடு ஒத்துப்போனால் தான் இதுபோன்ற நிகழ்வுகள் இருக்காது என்றால், மாநில அரசு எதற்கு? தனி தனி அரசு எல்லாம் வேஸ்ட் தானே?
ReplyDeleteநன்றி Bandhu. நிறைய பேர் மத்திய அரசு பற்றி அவர் சொன்னதில் மாற்று கருத்து கொண்டுள்ளது புரிகிறது
Deleteஒரே ஒரு முறை பாண்டிச்சேரிக்கு போய் இருக்கேன். அதுவும் சில மணி நேரங்கள் மட்டுமே பீச்சுல.
ReplyDeleteபார்க்க நிறைய இடங்கள் இருக்கு போயிட்டு வாங்க ராஜி
Deleteசெங்குட்டை முருகேஷ் & கிருஷ்ணா : விவசாயிகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் பற்றி அவர் குறை சொன்ன மாதிரி தெரியலை; தமிழகத்தில் சென்னை தவிர்த்து மற்ற இடங்களில், மக்களுக்கு 18 - 20 மணி நேர மின்தடை இருக்கும் போது சென்னை உள்ளிட்ட பல இடங்களில் நிறுவனங்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்குவதை குறித்து தான் பேசியுள்ளார் என நினைக்கிறேன்
ReplyDeleteதங்கள் கருத்துகளுக்கு நன்றி !
புதுவை ஓர் அருமையான ஊர். சலிக்காமல் பார்க்கலாம். நல்ல கட்டுரை.
ReplyDeleteஅந்த திறந்த வகை சாக்கடை பற்றி : என்னைக்கேட்டால், மனித கழிவுகளுக்கு தனிப்பட்ட வீடுகளில் / அடுக்ககங்களில் செப்டிக் டேன்க் வைத்து - சாக்கடையில் கழிவுகள் நேரடியாக கலக்காமல் / இணைக்காமல் இருந்தால் - இது போன்ற திறந்த வகை சாக்கடைகள் பல விதங்களில் எவ்வளவோ சிறந்தது என்பேன்.
1> பராமரிப்பு எளிது
2> கடைசியாக சேகரிக்குமிடம் பாழ்படுவதில்லை.
3> மழை நேரத்தில் அடைப்பு ஏற்படுவதில்லை / ஏற்படும் அவசரகாலத்தில் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு சிக்கல் ஏற்படுவதில்லை.
4> எல்லாவற்றிற்கும் மேல், நம்மாட்கள் பாதாள சாக்கடை கட்டும் அழகு...!!! - பெருமைமிகு ஹரப்பா, மொஹஞ்சதாரோ, சிந்து சமவெளி நகர நாகரிகத்தின் தொடர்சியாளர்கள் இந்த விஷயத்தில் காட்டும் தொழில் நுட்ப அறிவை???!!! எப்படி மெச்ச?
ஒன்று என்னவோ இதுவரை வாங்கிய வரியில் மற்றும் இதன் பெயர் சொல்லி கண்ட உலக அமைப்புகளிடம் வாங்கிய கடன் போதாது என்று சிறப்பாக ஒரு நகராட்சி வரி தலைப்பிட்டு கலக்க்ஷன் ஒரு 3-5 ஆண்டுகளுக்கு போடுவார்கள்.
பிறகு நடு வீதியினை பிளந்து ஒரு 1-2 ஆண்டுகள் போடுவார்கள்.
இதற்க்கு இடையில், இருக்கும் திறந்த வகை சாக்கடையை பராமரிப்பின்றி விட்டு பாழ்படுத்துவார்கள் - இதை ஏன் மழை நீர் வடிய பயன் படுத்தக்கூடாது என்று இன்னும் எனக்கு புரியவில்லை.
இதுதான் சாக்கு என அந்த தெரு வாசிகள் தெரு ஓரமாக சாக்கடைக்காக விட்டுருந்த அந்த அரை அடியினை ஆக்கிரமிக்க ஆரம்பிப்பார்கள்.
நாம காசு கொடுத்த பாதாள சாக்கடை வரப்போகிறது என தெரிந்த நாள் முதல் செப்டிக் டேன்க் கவனிக்கப்படாமல் விட்டு - அந்த இடத்தை தூர்த்து சிமிண்ட் போட்டு மாடிப்படி கட்ட ஆலோசனை நடந்து கொண்டிருக்கும் - ஏனென்றால் பாதாள சாக்கடை வந்து விட்டால் "நேரா குழாய் போட்டு வீட்டின் கழிவு நீரை அதில் இணைத்து விடலாம்...!!!" "பிரித்து தனிப்படுத்தவோ / சுத்தமான சுகாதாரமான முறையில் வெளியேற்றவோ அவசியமில்லை"
பின் பக்க தோட்டத்தில் விடப்பட்ட சாதாரண, குளியல், சமையல் கழுவுநீர் தன்னால் முடிந்த மட்டும் உதவிய தெருவின் நிலத்தடி நீர் மட்ட இருப்புக்கும் வந்தது கேடு. அந்த இடத்திலும் சிமிண்ட் போட்டு ஒரு ரூம் கட்டி விட்டுடலாம்.
இந்த 7-8 ஆண்டுகளில் நம்ம நகராட்சி / ஒப்பந்தக்காரர் பொறியாளார் போட்டு வைத்த பாதாள சாக்கடை பாதை மற்றும் அதன் சாய்மானங்களில் / வழியில் எதாவது மாற்றம் ஏற்பட்டு அது பல்லிளிக்கும்.
இதை எல்லாம் தாண்டி இணைத்தபின் வரும் பெருமழையில் அடைத்து வீதிப்பெரும் பாதாள சாக்கடையிலிருந்து எதிரழுத்தத்தில் பாதாள லோகமே வீட்டிற்க்குள் வந்து கொண்டிருக்கும் - நம்மவர்கள் போட்டு வைத்த நேரடி குழாய்கள் மூலமாக - அக்கம் பக்கத்து வீட்டு நேரடி குழாய் வெளிப்பாடுகளும் சேர்த்து!!!
இப்போது அடைப்பு உடைப்பு பராமரிப்புக்கு வேண்டி "நடு வீதியினை பிளந்து.........................????!!!!!" மறுபடியும் முதல்லேர்ந்தா???!!!
தேவையா இந்த தீராத தலைவலி??
http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/
மிக வித்யாசமான கோணம். விரிவான அலசல் நன்றி நண்பரே
Deleteநாட்டு நடப்பை நன்றாக அலசியிருக்கிறார் ஆட்டோ ஓட்டுநர். நல்ல பகிர்வு.
ReplyDeleteநன்றி ராமலட்சுமி மேடம்
Deleteநான் சொல்ல நினைத்த பதிலை நீங்கள் சொல்லி விட்டீர்கள் மோகன். ஒரு நாளைக்கு 300 ரூபாய் கூலி கொடுத்து விவசாயம் செய்தால் தெரியும் ஒரு விவசாயியின் சிரமம். தானே பாடு பட்டாலும் தன்னுடைய சம்பளம் கூட கட்டுபடியாகாது. மேலும் அவர்கள் உபயோகிக்கும் மின்சாரமும் பெரிதாக இல்லை. கிணறெல்லாம் வறண்டு கிடக்கும் போது மின்சாரத்தை வாய் வழியாகவா சாப்பிடுவது. கொஞ்சமே கொஞ்ச நாள் பொறுங்கள் ஒரு கிலோ மட்ட ரக அரிசி குறைந்தது 150 ரூபாய்க்கும் ஒரு கிலோ காய்கறி 100 ரூபாய்க்கும் குறையாமலும் ஒரு கிலோ மட்டன் 1000 ரூபாய்க்கும் விற்கப் போகிறது. அப்போது தெரியும் விவசாயியின் அருமை.
ReplyDeleteஅமரபாரதி :(((
Deleteதஞ்சை அருகே சில ஊர்கள் சென்றபோது சில விவாசாயிகளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவர்களின் குமுறல் கேட்டால் கொடுமையாக இருந்தது
சிறப்பான பகிர்வு....
ReplyDeleteநன்றி வெங்கட்
Deleteபாண்டிச்சேரி அருமையான ஊர் 1996- 2003 வரை நாங்கள் விழுப்புரத்தில் இருந்தபோது வாரா வாரம் போயிருக்கிறோம் ஆரோவில் அருமை! பதிவு அருமை! அரவிந்தோ ஆஸ்ரமம் படங்களை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன்!
ReplyDeleteஆசிரமத்தில் படங்கள் எடுக்க அனுமதி இல்லை. நிறைய தகவல்கள் ஆசிரமம் பற்றி நம் பதிவில் எதிர்பாருங்கள் நன்றி உமா
Deleteசுவாரஸ்யமான அனுபவம்தான்..
ReplyDeleteஅப்படியே.... பாண்டிக்குள் ஓர் ஆட்டோ சவாரி செய்த உணர்வு... நன்றி :)