Thursday, February 21, 2013

வானவில்- போலிஸ் பிரம்படி - செயற்கை கருத்தரிப்பு வெற்றி % - ஷ்ரேயா

பார்க்க வேண்டிய புது படங்கள்

வரும் வெள்ளியன்று வெளியாகும் ஹரிதாஸ் என்ற படம் நன்றாக இருப்பதாக ப்ரீவியூ பார்த்த கேபிள் சங்கர் சொல்கிறார். இன்னொரு பக்கம் ஹிந்தியில் வெளியான ஸ்பெஷல் 26 அட்டகாசமாய் இருக்கு என்கிறார்கள். பிரபு தேவா டான்சில் கலக்கும் ஆடுங்க பாய்ஸ் சின்னதா டான்ஸ்ம் நன்றாக இருக்காம். இந்த 3 புது படங்களும் பார்க்க வேண்டிய பட்டியலில் இருக்கிறது !

சம்பவம் - சாலையில் பிரம்படி -1

எக்மோர் ரயில் நிலையம் எதிரே, இந்தியன் காபி பார் என்கிற கடையில், மாலை 4 மணியளவில் தேநீர் அருந்தி கொண்டிருக்க திடீரென ஒரு பெண்ணின் அலறல் சத்தம்.

சாலையில் ஒரு பெண்ணை போட்டு கட்டையால் அடித்து கொண்டிருந்தான் ஒரு ஆள். அந்த பெண் ஒவ்வொரு முறை எழும் போதும் மிக சரியாக முகத்தின் மேலேயே கட்டையால் அடித்தவாறு " ஓடிடு. இங்கே இருக்காதே" என்று சொல்லி கொண்டிருந்தான். கணவன் - மனைவி சண்டையா - வேறு பிரச்சனையா என்று புரிய வில்லை. போய் அந்த நபரை தடுக்கலாமா என எண்ணும் நேரத்தில் அவ்விடத்திலிருந்து அந்த பெண் ரத்த காயங்களுடன் ஓடி மறைந்தார்

சற்று நேரத்தில் இன்னொரு ஆண், கட்டை ஏந்திய நபருடன் வாக்கு வாதத்தில் இறங்க, சண்டை முற்றியது. இது ஆணுக்கும் - ஆணுக்குமான சரி சமமான சண்டை !

தேநீர் அருந்திய கடையில் " என்னாங்க இது; இப்படி அடிசிக்குறாங்க" என்று கேட்க " இந்த பிளாட் பாரத்தில் தான் அவங்க இருக்காங்க. எப்பவும் இவங்களுக்கு இதான் வேலை; அந்த பெண் அவனது அக்கா - அவரை போட்டு அடித்து "இனிமே வீட்டுக்கு (!!??) வராதே" என துரத்தினான். இப்படி தான் அடிச்சிக்குவாங்க. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா ரெண்டு பேரும் சேர்ந்து உட்கார்ந்து சிரிச்சு பேசிகிட்டு இருப்பாங்க " என்றார். அவர் சொன்னதை அங்கிருந்த பலரும் ஆமோதித்தனர்.

என்ன தான் இருந்தாலும் அந்த பெண் முகத்திலேயே கட்டையால் வாங்கிய அடிகளை இப்போது நினைத்தாலும் மனதை என்னவோ செய்யுது !

சாலையில் பிரம்படி -2

அதே நாளில், அடுத்த சில மணி நேரத்தில் அண்ணா நகர் ஆர்ச் அருகே இன்னொரு பிரம்படி பார்க்க நேர்ந்தது. பேருந்தொன்று நிறுத்தத்தில் வந்து நிற்க, அங்கு தயாராய் காத்திருந்த போலிஸ் காரர் பஸ் படிகளில் நின்ற இளைஞர்களின் முட்டியை லத்தியால் பதம் பார்த்தார்.

அவசர அவசரமாய் பேருந்தின் உள்ளே காலியாய் இருந்த இடத்திற்கு ஓடினர் சில இளைஞர்கள் . இன்னும் சிலரோ உள்ளங்கையை காட்டி பள்ளியில் ஆசிரியரிடம் அடி வாங்குவது போல் வாங்கி கொண்டனர்

முன்பக்கம் அடித்து விட்டு சடாரென பின்பக்கம் சென்று அங்கு இருந்தவர்களுக்கும் மண்டகப்படியை தொடர்ந்தார் போலிஸ் !

அத்துடன் இந்த சம்பவம் முடிந்திருந்தால் இங்கே பகிர்ந்திருக்கவே மாட்டேன்.

அவர் பின்வாசலில் அடிக்கும் போது முன்பக்க படியில் நின்ற இளைஞர் குழு மீண்டும் வழக்கம் போல் படியில் வந்து நிற்க... பேருந்து நகர்ந்து செல்ல துவங்கியது !

அழகு கார்னர்

அழகு, அட்டகாசமான டான்ஸ், சுமாரான நடிப்பு எல்லாம் இருந்தும் அம்மணி அதிகம் பிரகாசிக்காததன் காரணம் தலைக்கனம் மற்றும் ஆட்டிடியூட் ப்ராப்ளம் தான் என்கிறார் திரை துறையை சார்ந்த நண்பர் !



ஹெல்த் பக்கம்- படித்ததில் பகிர்வது : Test Tube Baby & Artificial Insemination

செயற்கை கருத்தரிப்பு என்பது இயற்கையாக ஆண் - பெண்ணுக்கிடையே நிகழும் கலவியின் மூலம் அல்லாமல் மருத்துவ முயற்சிகள் மூலம் கர்ப்பமுறுதல் ஆகும். ஆய்வுக்கூட கருவூறல் ( In Vitro Fertilization ), செயற்கை முறை உயிரணு புகுத்தல் (Artificial Insemination ) ஆகியன முக்கிய முறைகள்.

ஆய்வுக்கூட கருவூறல் ( In Vitro Fertilization ): ஆணின் உயிரணு,  பெண்ணின் கருமுட்டை இரண்டையும் வெளியே எடுத்து பரிசோதனை கூடத்தில் கரு உண்டாக்கி வளர்ந்த பின் பெண்ணின் கருப்பையிலேயே வளர வைத்து விடுகிறார்கள் . இதனை சோதனை குழாய் குழந்தை (Test Tube baby ) என்பர்

Artificial Insemination-ல் ஆணின் உயிரணு மட்டும் வெளியே எடுக்கப்பட்டு பெண்ணின் கருப்பை பாதையில் செலுத்தப்படும். கருமுட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்

Test Tube Baby முயற்சிகள் 27 % வெற்றிகரமான குழந்தையாக வெளிவருகின்றன

86 % செயற்கை முறை உயிரணு செலுத்தல் (Artificial Insemination) வெற்றி பெறுகின்றன

போஸ்டர் கார்னர்




அய்யாசாமி கார்னர்

அலுவல் மற்றும் ஸ்டடி சர்க்கிள் வேலைகள் ஏகமாய் இருப்பதால், அய்யாசாமியின் இணைய சேவை, தினம் ஒரு பதிவு போடுவதோடு முடிந்து விடுகிறது. Draft -ல் இருக்கும் பதிவுகளை வச்சு தான் காலத்தை ஒட்டுகிறாரே ஒழிய புதுசாய் கிறுக்குவது பெரிதும் குறைந்து விட்டதாம்.

கம்பனி சட்டம் இவ்வருடம் மாறுவதால் இவரையும் நம்ம்ம்ம்பி பல இடங்களில் அது பற்றி பேச அழைக்கிறார்கள் !! ஆக............. அய்யா (சாமி) ரொம்ப பிஸ்ஸி !

நல்ல நாளிலேயே நாலு மணி நேரம் போனில் பேசுவார். அது இப்போது எட்டு மணி நேரம் ஆகிடுச்சு. தூக்கத்திலும் இது சம்பந்தமாகவே பிதற்றுகிறார்.

ஒரு நாள், இரவு 10 மணிக்கு பின், நீண்ட நேரம் இது போன்ற தொலை பேசி பேச்சு சென்று முடிய, சற்று பயந்தவாறே மனைவியை பார்த்தார்.

அவரது மனதை படித்தது போல் மனைவி சொன்னார் " என்ன திட்டுவேனான்னு பாக்குறீங்களா ?"

"........"

" நீங்க எவ்ளோ பெரிய ஆளா வேண்ணா இருக்கலாம் ; எங்கேயும்  போயி கலக்கலாம். ஆனா வீட்டுக்கு வந்தா நான் தானே உங்களை டாமினேட் பண்றேன். நீங்க போனில் பேசுறப்பல்லாம் அதை நினைச்சு தான் சந்தோஷ பட்டுக்குறேன் " என்று சொல்ல " அப்பாடா ! எப்படியோ நம்மை ப்ரீயா விட்டா சரி " என்றவாறு "கொர்..கொர்" ஆனார் அய்யாசாமி.

32 comments:

  1. (1) அநியாயம்... பாவம்...

    (2) இளைஞர் குழு அல்ல முதியோர் குழு...

    போஸ்டர் கார்னர் : என்ன ஒரு தன்னம்பிக்கை... மன உறுதி...

    அழகு கார்னர் : (1)

    Draft -ல் இருக்கும் பதிவுகள் நிறைய இருக்கும் போது கவலை ஏன்...?

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி தனபாலன்

      Delete
  2. Special 26 இங்கே ரிலீஸ் செஞ்சாங்க ரெண்டு வாரம் முன்பு. போயிருந்தோம். நல்ல படமே!

    ஜஸ்ட் மூணு ஷோ மட்டுமே. அதுக்கே ஆள் வேணுமே பார்க்க:(

    ReplyDelete
    Replies
    1. அடடா Special 26 பாத்துட்டேன்களா டீச்சர் ? ரைட்டு

      Delete
  3. எக்மோரில் இது போன்ற நிகழ்வுகளை அவ்வப்போது நானும் பார்த்திருக்கிறேன்.
    உங்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவைகளில் ஒன்று டைம் மேனேஜ்மென்ட்

    ReplyDelete
    Replies
    1. சார்: நன்றி மகிழ்ச்சி

      Delete
  4. //அந்த பெண் ஒவ்வொரு முறை எழும் போதும் மிக சரியாக முகத்தின் மேலேயே கட்டையால் அடித்தவாறு " ஓடிடு. இங்கே இருக்காதே" என்று சொல்லி கொண்டிருந்தான்.//

    சைக்கோ.

    //அவர் பின்வாசலில் அடிக்கும் போது முன்பக்க படியில் நின்ற இளைஞர் குழு மீண்டும் வழக்கம் போல் படியில் வந்து நிற்க//

    மிக கேவலமான attitude. நானும் நிறைய இது போல் வேளச்சேரியில் பார்த்திருக்கேன் :(

    //என்ன திட்டுவேனான்னு பாக்குறீங்களா//

    திக் திக்'னு இருந்திருக்குமே? :))

    ReplyDelete
    Replies
    1. //திக் திக்'னு இருந்திருக்குமே? :))

      உமக்கும் அதே மாதிரி அனுபவம் சீக்கிரம் வர வேண்டுகிறேன் :)

      Delete
  5. நல்லா போடுறாங்கய்யா டைட்டில் ஹி.ஹி.ஹி.ஹி..........
    ஸ்ரேயாவின் நடனம் சிறப்பாக இருக்கும்

    ReplyDelete
    Replies
    1. ண்ணா ; தலைப்பை சற்று மாத்திட்டேன் நன்றி

      Delete
  6. அவர் பின்வாசலில் அடிக்கும் போது முன்பக்க படியில் நின்ற இளைஞர் குழு மீண்டும் வழக்கம் போல் படியில் வந்து நிற்க... பேருந்து நகர்ந்து செல்ல துவங்கியது !

    எத்தனை பட்டாலும் புத்தி வராதோ ..!

    ReplyDelete
  7. பிரம்படிகள் --வருந்தத்தக்கது.

    போஸ்டர்கார்னர்-- மிக சிறப்பு.

    வானவில் அருமை.

    ReplyDelete
  8. பிரம்படி - அராஜகமா இருகே...:(

    போஸ்டர்கார்னர் - நன்று. இந்த படத்தை முன்பு என் கணவர் தன் பதிவிலும் பகிர்ந்திருந்தார் என நினைக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. பதிப்புரிமை பெறவில்லையா ?

      Delete
    2. வெங்கட் பகிர்ந்தாரா? நான் கவனிக்கலை, முகநூளில் யாரோ பகிர்ந்தது பார்த்து இங்கு எடுத்து பகிர்ந்தேன் நன்றி

      Delete
  9. // அவர் பின்வாசலில் அடிக்கும் போது முன்பக்க படியில் நின்ற இளைஞர் குழு மீண்டும் வழக்கம் போல் படியில் வந்து நிற்க ... பேருந்து நகர்ந்து செல்ல துவங்கியது ! //

    Thissu.. Thissu... this only I expected(du)

    ReplyDelete
  10. //ஒரு நாள், இரவு 10 மணிக்கு பின், நீண்ட நேரம் இது போன்ற தொலை பேசி பேச்சு சென்று முடிய, சற்று பயந்தவாறே மனைவியை பார்த்தார்.//

    Same blood:(


    நீங்கள் பெரிய ஆளோ இல்லையோ. இம்மாதிரி உண்மையை ஒத்துக் கொள்வதற்க்காகவே உங்களுக்கு ஒரு விருது கொடுக்கணும். ஆமா, மணி கணக்குல சேலை/சுரிதார் கடையிலும் அடுத்த/எதிர்த்த வீட்டு பெண்களுடன் (வீணாக)பேசியே நேரத்தை செலவழிக்கும் பெண்களுக்கு ஆண்கள் ஓரிரு மணி நேரம் (அவ்வப்போது) நண்பர்களுடன் போனில் பேசினால் ஏன் சுருக்குனு வருது?

    ReplyDelete
    Replies
    1. நோ கமண்ட்ஸ்

      மை ஹவுஸ் பாஸ் ரீடிங் திஸ் ப்ளாக்

      Delete
    2. Same blood.....
      100000000000 likes.............. :)

      Delete
  11. வீட்டுக்கு வந்தா நான் தானே உங்களை டாமினேட் பண்றேன். நீங்க போனில் பேசுறப்பல்லாம் அதை நினைச்சு தான் சந்தோஷ பட்டுக்குறேன் "
    >>>
    ச்சே அவங்களை வக்கீலுக்கு படிக்க வெச்சிருக்கலாம் ஐயாசாமிக்கு பதில்

    ReplyDelete
    Replies
    1. ஏம்மா? ஏன்? இப்பவே கண்ணை கட்டுது; வக்கீலா வேற இருக்கனுமா?

      Delete
  12. முதல் அடி மிரட்டல் என்றால் போலீஸ் அடிக்கு மாணவர்கள் பயப்படவில்லை என்பது உறுத்தல்! சிறப்பான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  13. அன்புடையீர் வணக்கம்! இந்த வாரம் “ வலைச்சரம் ” http://blogintamil.blogspot.in எனது ஆசிரியர் பணியில், நாளைய பதிவில் (22.02.2013) உங்கள் வலைப்பதிவினைப் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுகிறேன். நாளைய 22.02.2013 வலைச்சரம் கண்டு தங்கள் கருத்தினைச் சொல்லவும். நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா வாசிக்கிறேன்

      Delete
  14. Special 26 எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது. கண்டிப்பாக பார்த்து உங்கள் விமர்சனத்தை எழுதுங்கள் ! !

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி பொன் சந்தர்; பார்த்து விட்டு எழுதுகிறேன் நன்றி

      Delete
  15. கோவையிலும் இந்த மாதிரி படியில் பயணம் செய்தால் தடியடி உண்டு! 1992-ஆம் வருடம் என நினைக்கிறேன் - பார்த்திருக்கிறேன். இப்போது உண்டா தெரியவில்லை!

    அய்யாசாமி - :))))

    ReplyDelete
    Replies
    1. குறுக்கு விசாரணையில் யாராலும் தப்பிக்கமுடியாதபடி வெகு சிறப்பாக 'பணியாற்றும்' வீட்டுவீட்டுக்குள்ளே இருக்கும் வக்கீல்களை உங்க ஆண்வர்க்கத்தால் ஒருநாளும் ஜெயிக்கமுடியது என்பது உலகறிந்த உண்மை என்று சொல்லிக்கொள்கின்றேன் யுவர் ஆனர்!

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...