Thursday, February 28, 2013

வானவில் : ராதிகா ஆப்தே - அரசு பேருந்துகள் - என்றும் இளமை

அழகு கார்னர்




ராதிகா ஆப்தே : சைலண்ட் பியூட்டி ! கண்கள், சிரிப்பு இரண்டுமே மனதை கொள்ளை அடிக்கும்.

பிரகாஷ் ராஜின் தோனியில் நிறைய எதிர் பார்க்க வைத்தார். ஆனால் வெகு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு, நம்மை சோக கடலில் ஆழ்த்தி விட்டார்

பெட்ரோல் பங்க்கில் வரிசையில் நிற்கும் அரசு பேருந்துகள்

அரசு பேருந்துகள் ஏதோ சில காரணங்களால் வழக்கமாய் நாம் பெட்ரோல் போடும் பங்க்கிலேயே க்யூவில் நின்று  டீசல் நிரப்புகின்றன. இது மாதிரி இதற்கு முன் பார்த்ததே இல்லை ! ஒவ்வொரு பேருந்துக்கும் முழுதும் டீசல் நிரப்பவே 5 நிமிடமாவது ஆகும். அவ்வளவு பெரிய வாகனம் திரும்பி, உள்ளே வந்து பின் வெளியே செல்ல மிகுந்த நேரம் எடுக்கிறது. ஒரு பஸ் பெட்ரோல் பங்க்கில் நுழைந்து டீசல் பிடித்து வெளியே வர 15 நிமிடமாவது ஆகும். பஸ்ஸில் உள்ள பயணிகள் அனைவரும் இதனால் தேவையற்ற தாமதத்துக்கு உள்ளாகிறார்கள். முதல்வர் இந்த விஷயத்தில் பயணிகள் கஷ்டத்தை மனதில் கொண்டு நல்ல முடிவெடுப்பார் என எதிர்பார்ப்போம் !

ரசித்த கவிதை

என் காதலை
நான் இழந்து விட்டேன் தான்
ஆனால் இந்த உலகில்
யார் தான் எதை தான் இழக்கவில்லை?

-பாரதி புத்திரன்

சம்பவம் - பீச்சில் சிக்கிய சிறுவன்

நண்பர் ஒருவர் நேரில் பார்த்த சம்பவத்தை பகிர்ந்தார் :

ஞாயிறு மாலை குடும்பத்துடன் பீச் செல்ல, நான்கைந்து சிறுவர்கள் அவர்கள் இருந்த இடத்துக்கு சற்று தள்ளி குளித்துக் கொண்டிருந்திருந்தனர். திடீரென ஒருவன் கடலின் உள்ளே அடித்து செல்லப்பட, அதை கவனித்த கடை காரர் ஒருவர் ஓடி போய் தண்ணீரில் குதித்துள்ளார். எங்கிருந்தோ சில மீனவர்கள் டியூப் ஒன்றுடன் அடுத்த சில நிமிடத்தில் வந்து குதித்துள்ளனர். 5 நிமிட போராட்டத்துக்கு பின் சிறுவனை வெளியே கொண்டு வந்து விட்டனர். தண்ணீரை அமுக்கி அமுக்கி வெளியேற்ற, வாயிலிருந்து தண்ணீர் வடிந்துள்ளது. 

மீனவர்களில் ஒருவர் " பையனை அரை மணிக்குள் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தால் மட்டுமே பிழைப்பான் " என்று சொல்ல, கரை வரைக்கும் உடனிருந்த சிறுவர்கள் தோளில் தூக்கி போட்ட படி வேகமாக ஓடியிருக்கிறார்கள். 

நண்பர் ஆச்சரியமாய் சொன்ன விஷயம். கடைக்காரரும் , மீனவர்களும் உடன் பாய்ந்து காப்பாற்றியது தான் மீனவர்கள் மேல் அதை பார்த்த பின் மதிப்பு அதிகமானது என்றார். 

ஒரே வருத்தமான விஷயம்: மறுநாள் செய்தித் தாள் மூலம் அந்த சிறுவன் இறந்த செய்தி தெரிய வந்தது தான் :(

போஸ்டர் கார்னர்




கம்பனி சட்டம் - தொடரும் தாமதம் 

கம்பனி சட்டம் 1956-ல் இயற்றப்பட்டது. கடந்த 10 வருடமாக பல முறை இதை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்து ஒவ்வொரு முறையும் ஏதேனும் காரணத்தால் நிறுத்தப்படும். இம்முறை சில வாரங்களுக்கு முன் நாடாளு மன்றம் (இரவு 10.40 க்கு) புதிய கம்பனி சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. அடுத்து ராஜ்ய சபாவில் ஒப்புதல் பெற, நேற்று 26 பிப்ரவரி நேரம் ஒதுக்கியிருந்தனர்.

தேர்வு முடிவுக்கு காத்திருப்பது போல் எங்களில் பலரும் நாள் முழுதும் காத்திருக்க, கம்பனி சட்டம் தவிர மற்ற சட்டங்களை பாஸ் செய்து விட்டு, அதனை அப்படியே விட்டு விட்டனர். இனி மீண்டும் ராஜ்ய சபாவில் எப்போது கொண்டு வருவார்களோ.. தெரிய வில்லை ! இந்த அரசுக்கு இன்னும் சில மாதங்களே மீதம் உள்ள நிலையில் அதற்குள் ராஜ்ய சபா ஒப்புதல் கிடைக்கா விடில் சட்டம் மீண்டும் காலாவதி ஆகி விடும் :(

ஆடிட்டர்கள் தவறு செய்தால் சில தண்டனைகள் தருவதற்கும், அவர்கள் செய்யும் தவறுகளை விசாரிக்க தனி அமைப்பு (NFRA ) உண்டாக்கியமைக்கும் எதிர்ப்பு தெரிவித்து ஆடிட்டர்கள் தான் கம்பனி சட்டம் வர விடாமல் செய்கிறார்கள் என்று தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.

நிச்சயம் இம்முறை பொது மக்களுக்கு சில நன்மைகளும், கம்பனிகள் வெளிப்படியாய் செயல்படும் வண்ணம் சில ஷரத்துகளும் உள்ளன. மார்ச் முதல் வாரத்தில் சட்டம் மீண்டும் ராஜ்ய சபாவில் கொண்டு வரப்படலாம் என்றும் சொல்கிறார்கள். பார்க்கலாம்.

என்றும் இளமை

நண்பர் ஒருவரை 10 வருடத்துக்கு பின் பார்த்தேன். மனிதர் 10 வருஷத்தக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியே இருந்தார். 50 வயதை தொடும் அவரை - 35 வயது என்று சொன்னால் நிச்சயம் நம்பலாம் ! அதை விட ஆச்சரியம் அவருக்கு தொப்பை என்ற ஒன்று பேருக்கு கூட இல்லை.

" எப்படி சார்? தினம் எக்சர்சைஸ் செய்வீங்களா " என்று வியப்பாய் கேட்டேன்.

" அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் என்னிக்குமே எக்சர்சைஸ் செஞ்சதில்லை. டயட் கண்ட்ரோல் தான். மூணு இட்லி சாப்பிட வேண்டிய இடத்தில் 2 தான் சாப்பிடுவேன். எந்த உணவுமே இப்படி தான். அதுக்காக சாப்பாட்டை நான் என்ஜாய் செய்யலை என அர்த்தம் இல்லை. எப்பவும் ரொம்ப மெதுவா ரசிச்சு சாப்பிடுவேன்.

ஒரு சுவீட் இருந்தா. அதை முதலில் தள்ளி வச்சு அழகு பார்ப்பேன். அதோட அழகை ரசிக்கிறது தான் எனக்கு பெரிய விளையாட்டே ! அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா தான் சாப்பிடுவேன் . இப்படியே சுவீட்டை சாப்பிட அரை மணி எடுத்துக்குவேன்" என்றார்.

ம்... கேட்க நல்லா தான் இருக்கு ! நாம இதை பின்பற்ற முடியுமா என்ன? நாமெல்லாம் ரெண்டு சாப்பிட வேண்டிய இடத்தில் 3 சாப்பிடுகிற ஆளுங்க ஆச்சே !

28 comments:

  1. //வெகு சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு, நம்மை சோக கடலில் ஆழ்த்தி விட்டார்
    //
    நோ நோ இப்படிலாம் சொல்ல கூடாதுங்க உங்களுக்கு கல்யாணம் ஆச்சுல்ல நாங்க தான் கவலை படனும்

    ReplyDelete
    Replies
    1. அட விடுங்கண்ணே அழகை ரசிக்க இதெல்லாம் ஒரு பொருட்டா ?

      Delete
  2. பெட்ரோல் பங்க் பிரச்சனைக்கு காரணம் -அரசு(கள்) வாங்கும் டீசல் விலை கிட்டதட்ட பங்க் விலையை விட ரூ.20-க்கு மேல சமீபத்தில் ஏத்திட்டாங்க. அதை தவிர்க்கதான் அரசு மொத்தமாக கொள்முதல் செய்யாமல் பெட்ரோல் பங்குகளில் போட முடிவெடுத்தது. இதுதான் காரணம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? விளக்கத்துக்கு நன்றி வரதராஜலு சார்

      Delete
  3. Brendaவின் பொன்மொழி ரொம்ப க்ராண்டா இருக்கு.. அசத்தல்.

    ReplyDelete
  4. என்ன சார் இப்படிச் சொல்லிட்டீங்க, இரண்டு சாப்பிடற இடத்தில மூணுன்னு, இரண்டு சாப்பிடற இடத்தில இருபது சாப்பிடறவங்க சார் நாங்க.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி சார்

      Delete
    2. Nan vazhimozhikiren Kandhasamy Sir

      Delete
  5. பீச் சிறுவனின் மரணம் வேதனைக்குரியது.இது போல சிறுவர்கள் தனியாக வந்து விளையாடுவது தவிர்க்கப்பட வேண்டும்.

    போஸ்டர் சூப்பர்.

    உடல் நலம் குறித்த தங்கள் நண்பர் கடைபிடிக்கும் விஷயம் சிறப்பு.

    வானவில் சிறப்பான அலசல்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராம்வி நன்றி

      Delete
  6. கம்பெனி சட்டம் என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவில் உள்ள கம்பனிகள் துவங்கியது முதல், மூடுவது (Winding up வரை - உள்ள அனைத்து நடைமுறைகளும் சொல்வது தான் கம்பனிகள் சட்டம்

      Delete
  7. சம்பவம் : வருத்தம்...

    போஸ்டர் கார்னர் : பல பேர் கேட்பது - யார் அவர்...? அவரா முக்கியம்...?

    ரசித்த கவிதை : அப்படித்தானே ஆறுதல்பட்டுக் கொள்வோம்...!

    என்றும் இளமை : அனுபவசாலி...

    அழகு கார்னர் : காய்ச்சலோ...?

    ReplyDelete
    Replies
    1. விரிவான காமண்ட்டுக்கு நன்றி தனபாலன் சார்

      Delete
  8. ராதிகா ஆப்தே- இப்படி ஒரு நடிகையா? பார்த்ததில்லை.
    பீச் சிறுவன் - சோகம்.
    ஏற்கெனவே சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகம். இது வேற தொல்லை!

    ReplyDelete
    Replies
    1. ராதிகா ஆப்தே .. கொஞ்சம் படங்கள் தான் நடித்தார் சார்

      Delete
  9. மனிதாபிமானத்தை கலங்கரை விளக்கமாக்கிய நிகழ்வு
    அரசு பேருந்து -எரிச்சல்
    அவசர வாழ்க்கையில் ஒரு இட்லிய சாப்பிடரதுகுள்ள சாப்பிடவைக்கர்துகுள்ள எவ்வளவோ தொல்ல இதுல மெல்லமாவா

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு நன்றி மலர் பாலன். நபர் போல சிலரும் இருக்க தான் செய்கிறார்கள். அதிலும் அவர் மெதுவாய் சாப்பிடும் விதத்தை நானும் பார்த்தேன் :)

      Delete
  10. சுவையான பகிர்வு! என்னாலும் உணவை கட்டுப்படுத்த முடியாது! சைக்கிளில் இருந்து பைக்கு மாறியதும் தொப்பையும் சேர்ந்து விட்டது! நன்றி!

    ReplyDelete
  11. நாமெல்லாம் ரெண்டு சாப்பிட வேண்டிய இடத்தில் 3 சாப்பிடுகிற ஆளுங்க ஆச்சே !

    great Mohan :)

    ReplyDelete
  12. ராதிகா ஆப்தே சோக கடலில் ஆழ்த்தி விட்டார் என்றால் ,அடுத்த கவிதையில் உள்ள கடைசிவரியைப் படித்து மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியதுதான் ....
    யார்தான் எதைதான் இழக்கவில்லை ?

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா வாங்க சார் நன்றி

      Delete
  13. //மீனவர்கள் மேல் அதை பார்த்த பின் மதிப்பு அதிகமானது என்றார். //

    இது போல் இன்னொரு விஷயம். சாலையில் விபத்து நடந்தால், அங்கு ஆட்டோக்காரர்கள் அருகில் இருந்தால், உடனே உதவிக்கு வருவார்கள். என்னதான், சமயங்களில் ஓவராக காசு கேட்கிறார்கள் என்று தோன்றினாலும், இந்த விஷயத்தில் அவர்களை குறை சொல்லவே முடியாது.

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ரகு

      Delete
  14. போஸ்டர் கார்னர் அருமை...
    பீச்சில் சிறுவனின் நிலை பரிதாபம். சிறுவர்கள் இப்படி தனியாக குளிக்க தடை செய்யலாம்.
    என்றும் இளமை படிக்க நல்லாத் தான் இருக்கு. ஆனா பொறுமையா ரசித்து சாப்பிட நேரம் எங்கே இருக்கு...:)

    இந்த அழகு கார்னர் முதலிலேயே வந்திடுச்சே.... மிஸஸ் அய்யாசாமி கவனிங்க...:))

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...