Friday, February 8, 2013

வேலை கிடைக்க உதவி பண்ணா தப்பா சார்?

ரு நல்ல நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் நண்பர் சமீபத்தில் மனம் விட்டு பேசினார். அவரது அனுமதியுடன் இதனை இங்கு பகிர்கிறேன்

" சென்னையில் ஒரு நிறுவனத்தில் கொஞ்சம் சொல்லிக்குற மாதிரி வேலையில் இருக்கேன்; அதனால் " என் சொந்த கார பையனுக்கு வேலை இருக்குமா?" என கேட்டு நிறைய பேர் மெயில் அனுப்புவர். போன் பண்ணுவர்.

எங்க கம்பனியில் தினம் வேலைக்கு ஆள் எடுப்பாங்க. நூறு பேராவது தினம் இன்டர்வியூவுக்கு வருவாங்க. அதனால் நமக்கு வரும் இந்த மாதிரி பயோ டேட்டா HR-க்கு அனுப்பவதில் எந்த கஷ்டமும் இல்லை. பையன் ஓரளவு நல்லா இருந்தா, நம்ம reference-க்கும் ஒரு வெயிட்டேஜ் கொடுத்து வேலைக்கு எடுப்பாங்க. ஆனா இனிமே அந்த மாதிரி பயோ டேட்டாவை அனுப்பணுமா என நினைக்க வைக்கும் அளவு சில விஷயம் நடக்குது.

பழைய கம்பனியில் எனது பாஸா இருந்தவர் ஒருத்தர் தன்னோட சொந்த கார பையனை அனுப்பியிருந்தார். பையன் கதை கேட்டா ரொம்ப பாவமா இருந்தது. அம்மா - அப்பா இருவரும் அவன் பள்ளியில் படிக்கும் போதே இறந்துட்டாங்க. அப்பாவுக்கு வந்த எல். ஐ . சி மற்றும் P. F பணத்தை பாங்கில் போட்டு அதை வச்சு தானாவே படிச்சிருக்கான். கூடவே தங்கச்சியை படிக்க வச்சிருக்கான். இவ்ளோ பொறுப்பான பையனா என நேராக நானே HR-இடம் அழைத்து சென்று அவசியம் ஏதாவது செய்யணும் என சொல்லிவிட்டு வந்தேன். பையனுக்கு வேலை கிடைத்தது. வந்து நன்றி சொல்லிட்டு காலில் விழுந்துட்டான். இதுவரை யாரும் என் காலில் விழுந்தது கிடையாது. " ஏன் காலில் விழுறே ? இப்படி எல்லாம் விழ கூடாது" என்று சொன்னேன்.

ரெண்டு நாள் போச்சு. பையன் வந்தான் "சார் இப்போ என்னை போட்டிருக்குறது ரொம்ப சாதாரண வேலை ; எனக்கு சிஸ்டம் அட்மின் வேலை தான் பாக்கணும்னு ஆசை; முடிஞ்சா கேட்டு பாருங்க சார்" என்றான். சிஸ்டம் அட்மின் நபரிடம் பேசி ஹைதராபாத்தில் ஒரு வேலை இருக்கு என, அந்த வேலைக்கு அவனை அனுப்பினர். பையனுக்கு மிக குஷி.

புகைப்படம் நன்றி: The Hindu
அங்கு சென்று சில மாதங்கள் ஆனது. அங்கு இருக்கும் HR மற்றும் அட்மின் ஆட்களிடம் சொல்லி பையனை நன்கு பார்த்து கொள்ளுங்கள் என்று சொல்வேன். கொஞ்ச நாள் போனது " சார் எனது தங்கை ஊரிலிருந்து சென்னை வரணும் என்கிறாள். எனக்கு சென்னைக்கு நம் ஆபிசில் மாறுதல் கிடைத்தால் நன்றாயிருக்கும்" என கேட்டு எப்படியோ சென்னைக்கு மாற்றல் ஆகி வந்துட்டான். இப்போது அவனுக்கு கம்பனியிலேயே ஆட்களை தெரிய ஆரம்பித்து விட்டது. அவனது தங்கைக்கும் எங்கள் ஆபிசில் ஒரு வேலை வாங்கி விட்டான். இவ்வளவும் நடந்தது ஆறு மாசத்துக்குள்.

ஆறு மாசம் முடிந்து " சார் இன்கிரிமென்ட் போட்டிருக்காங்க. ஆனா அந்த அளவு திருப்தி இல்லை" என்று வந்து பேசினான். " தம்பி.உனக்கு இந்த கம்பனி எவ்வளவோ உதவி பண்ணிருக்கு. வேற வேலைக்கு எடுத்துட்டு சிஸ்டம் அட்மின் நீ கேட்டதால் தந்தது. அப்புறம் சென்னைக்கு மாற்றியது. ஆறு மாசத்தில் இன்க்ரீசும் தந்திருக்கு. " என்றேன். சென்று விட்டான்.

ஒரு மாசத்தில் வந்து சொல்கிறான் " சார் எனக்கு வேற இடத்தில் நல்ல வேலை கிடைச்சிருக்கு; இதை விட அதிக சம்பளம். நான் போக போறேன். இன்னிக்கு எனக்கு லாஸ்ட் நாள் !"

என்ன சொல்றது சொல்லுங்க ! " சரி தம்பி போயிட்டு வா. ஆல் தி பெஸ்ட்" டுன்னு சொல்லி அனுப்பினேன்

சிஸ்டம் அட்மின் ஆளும் HR-ம் என்னை திட்டி தீத்தாங்க. " நீ சொன்னாய் என்று வேலைக்கு எடுத்தோம். அப்புறம் சிஸ்டம் அட்மின் வேணும்னே. தந்தோம். சென்னைக்கு மாறுதல் வேணும்னே அதுவும் தந்தோம். எல்லாம் ஆறு மாசத்தில் ! கொஞ்சமாவது நன்றி உணர்வு வேண்டாம்? எப்படி இவனுக்கு வெளியில் முயற்சி பண்ண மனசு வந்தது? தயவு செஞ்சு இனி நீ யார் பயோ டேட்டாவும் அனுப்பாதே. நீ அனுப்பினா இனி அவங்களுக்கு வேலை கிடையாது. "

என்னத்தை சொல்றது? இதுக்கு முன்னாலும் இதே மாதிரி சில கேஸ் நடந்துள்ளது. நாம சொல்லி சேர்த்து விட்டுட்டு, சொல்லாம கொள்ளாம வேலையை விட்டு ஓடிடுவாங்க. அப்புறம் HR-ல் நீங்க ரெகமன்ட் பண்ண பையன் ஒரு வாரமா வரலைன்னு நம்ம கிட்டே கேட்பாங்க. அவனுக்கு போன் செஞ்சா அவன் வேறு வேலையில் சேர்ந்து விட்டதாவும் சொல்லிட்டு வந்தா ரிலீவ் செய்ய மாட்டாங்க என சொல்லாம வந்ததாவும் சொல்வார். அதை போய் சொல்லி நாம் திட்டு வாங்கிக்கணும்

ஒரு நிறுவனத்தில் சேர்ந்தவுடன் 2,3 மாசம் எப்படி பேசணும், எப்படி பிகேவ் பண்ணனும் என மெனக்கெட்டு சொல்லி தர்றாங்க. அதை வச்சே ஒரு பையனுக்கு நிறைய தன்னம்பிக்கை வருது. அடுத்து இன்டர்வியூ அட்டன்ட் பண்ணா ஈசியா வேலை கிடைக்குது. இப்படி ஒரு மாசம் ரெண்டு மாசத்தில் வேலையை விட்டு போனா அதை சீ. வி யிலும் போட முடியாது ; உங்களை ரெகமன்ட் பண்ணவருக்கும் அசிங்கம். இதெல்லாம் யாரும் நினைக்கிறதே இல்லை.

ஒரு சிலர் பண்ண தப்பால இப்போல்லாம் யாரோட சீ. வி- யும் நான் HR-க்கு அனுப்பறதே இல்லை"

என முடித்தார் !

********
இதற்கு நேர் எதிர் அனுபவம் கூட இதே துறையில் பணிபுரியும் இளைஞர்களுக்கு இருக்கலாம். இருப்பின் பின்னூட்டத்தில் சொல்லுங்கள் !

44 comments:

  1. பணி விட்டு பணி மாறுவதால் அதிகம் சம்பளம் கிடைக்கும் என்ற ஆசை, பணத்தைத் துரத்துவதொன்றே குறிக்கோளாய் மாறிப்‌ போனதால் வந்த வி‌னை இது! தவிர, உழைக்காமல் கிடைக்கும் எதற்கும் மதிப்பிருக்காது என்பது போல, அவன் முயலாமல் சிபாரிசால் கிடைத்ததால் கிடைத்ததன் அருமை அவன் போன்றோருக்குப் புரிவதில்லை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பால கணேஷ்

      Delete
  2. இந்த மாதிரி நெறைய நடக்குது

    ReplyDelete
  3. பணம் செய்யும் மாயை... ஏறிய ஏணியை யாரும் நினைப்பதேயில்லை... (எட்டி உதைக்காமல் இருந்தால் சரி...)

    எப்படியோ உதவிய மனதில் ஒரு சின்ன திருப்தி இருக்கும்... அதை வெளிக் கொண்டு வந்து தனக்குள்ளேவாக சந்தோசப்பட்டு, பெருமைப்பட்டால்... மனது நினைக்கும் மற்ற எல்லாவற்றையும் சரியாக்கி விடும்...

    மறுபடியும் முதல்லேயிருந்து... ஆனால் இப்போது திடமான திட்டமிட்ட மாறுதல்களோடு உதவினால்... உணர வைத்தால்... இந்தக் குழப்பம் / சங்கடம் வராது...

    ஏணி என்று ஆகி விட்டால்... ஏணியின் வேலை ஏற்றி விடுவது தான் என்று உங்கள் நண்பருக்கு தெரியாமல் இருக்குமா என்ன...?

    ReplyDelete
    Replies
    1. தங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்தமைக்கு நன்றி தனபாலன்

      Delete
  4. பரவாயில்லையே, ரெம்ப சுயமுயற்சி உள்ள ஆளா இருக்கானே அந்தப் பையன்!

    எங்க கம்பெனியில என் ரெக்கமென்டேஷன்ல வந்த ஒரு பையன், கையாடல் பண்ணிட்டும் போயிட்டான்னு கேள்விப்பட்டேன். நல்லவேளை, என் பேச்சைக் கேட்டு அவனை வேலைக்கு எடுத்த பெரிய மனுஷன் அதுக்கு முந்தியே ரிட்டையர்டு ஆகிட்டாரு.

    ||ஒரு தேள் தண்ணீரில் தத்தளித்தது. ஒரு ஆள் அதை எடுத்துக் கரையில் போட முயன்றார். அது அவர் கையில் கொட்டி விட்டது. பிறகும் அதை எடுத்துக் கரையில் விட முயன்றார். இப்படியே இரண்டு மூன்று கொட்டுகள் வாங்கி அதைக் கரைசேர்த்தார். கூடவே வலியால் துடித்த அவரைப் பார்த்து, கரையில் நின்றுகொண்டிருந்த ஒருவன் கேட்டான், "ஒரு தரம் கொட்டுச்சுல்லா, அத்தோடு விட்டுத் தொலைச்சிருக்க வேண்டியதுதானே?" என்று. அவர் சொன்னார், "கொட்டுறது அதோட இயல்பு. கண்ணுக்கு முன்னால கஷ்டப் படுற உயிரெக் காப்பாத்துறது என்னோட இயல்பு, அதுதான்."||

    முயற்சி தளராதீர்!

    ReplyDelete
  5. மிக மிக நம்பிக்கையானவராக இருந்தால் மட்டுமே வேலைக்கு சேர்த்துக்கொள்ளுங்கள். இல்லையென்றால் ஏதாவது சாக்கு சொல்லி மறுத்துவிடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்கூல் பையன் நன்றி

      Delete
  6. சிலரால் நல்லவர்களும் பாதிக்கப்படுகிறார்கள்

    ReplyDelete
  7. இதனால்தான் நிறைய கம்பெனிகள் முதலிலேயே 2 வருடங்களுக்கு காண்ட்ராக்ட் போட்டுவிடுகிறார்கள்.

    தவிர்க்க இயலாத காரணங்களாக இருந்தால் சரி. மற்றபடி 6 மாதம், 8 மாதம்....இப்படியெல்லாம் வெளியேறுவது எப்பவும் பிரச்னைதான். வேறு எந்த இண்டர்வியூவுக்கு சென்றாலும், அது குறித்து கேள்வி கேட்பார்கள். Validஆன காரணத்தை சொல்லாவிடில், ரொம்ப கஷ்டம்.

    இவர் ஒருவர் தவறு செய்தார் என்பதற்காக, உங்கள் நண்பர் மற்றவர்களுக்கு உதவுவதை நிறுத்தவேண்டாம். சில முன் நிபந்தனைகளின் பேரில் உதவலாம்.

    ReplyDelete
  8. இதுக்குத்தான் குறைந்தது ஒரு வருடமாவது அங்கே வேலை பார்க்கணும், ஒரு குறிப்பிட்ட தொகையை டெபாசிட்டா கட்டணும்ன்னு சில கம்பெனிகள் நிபந்தனை போடுது. குறைந்த பட்சம் தன்னை அங்கே வேலையில் உக்கார வெச்ச நபருக்காகவாவது சட்ட்னுன்னு வேலையை விடாமல் இருத்தல் நல்லது. ஒக்காந்து ஒரு இடத்துல வேலை செஞ்சாத்தானே நெளிவு சுழிவும் கத்துக்க முடியும்.

    ReplyDelete
    Replies
    1. ஆம். நன்றி அமைதி சாரல்

      Delete
  9. பல ஆண்டுகளாக IT துறையில் பணியில் இருக்கும் அனுபவத்தில் கூறுகிறேன். இதில் இரண்டு பக்கமும் (அ)நியாயங்கள் உண்டு. வேலைக்கு சேர்ந்த ஆறு மாதத்தில் வேறு ஒரு கம்பெனிக்கு மாறுகிறார் என்றால் அதை வேறு விதமாகவும் எடுத்துக் கொள்ளலாம். ஒன்று அவர் தகுதிக்கு தகுந்த வேலையோ/மரியாதை/சம்பளம் அங்கு அவருக்கு கிடைக்காமல் இருந்திருக்கலாம். அங்கு வேலையில் சேர்ந்த பிறகு தான் அவருக்கே அவரின் திறமை பற்றி தெரிய வந்திருக்கும்.

    இரண்டாவது, அதே கம்பெனி ஆறு மாதம் ஏன், ஒரு மாதத்திலேயே அல்லது பல வருடங்கள் அங்கு உண்மையாக அவர் வேலை செய்திருந்தாலும் ஒரு நாள் நோட்டீஸ் பீரியடில் அவரை வீட்டுக்கு (Lay off) அனுப்பவும் வாய்ப்பு உள்ளது.

    உங்கள் நண்பர் விசயத்தில் முதன் முதல் வேலைக்கு சேர்த்து விட்டார் என்ற நன்றிக்காவது அவரிடம் அந்த பையன் தனது தரப்பு நியாயங்களை சொல்லி, முடிந்தால் அவர் எதிர்பார்த்ததை கேட்டு வாங்கி இருக்க வேண்டும் இல்லையென்றால் தான் வேலையை விட்டு விலகுவதாக அட்லீஸ்ட் அவரிடம் மட்டுமாவது சொல்லி விட்டு விலகி இருக்க வேண்டும். இது தான் என் கருத்து.

    இதையெல்லாம் சொல்லும் நான் கடந்த 15 வருடங்களில் IT துறையில் இருந்தும் கூட இது எனக்கு இரண்டாவது கம்பெனி தான் (தற்போதுள்ள கம்பெனியில் இது எனக்கு 11 வது வருடம்). இதை பற்றிய ஒரு தனி பதிவுக்கு என்னை தட்டி விட்டு விட்டீர்கள். அதற்காக நன்றி.


    ReplyDelete
    Replies
    1. "(தற்போதுள்ள கம்பெனியில் இது எனக்கு 11 வது வருடம்)"

      ஆச்சரியமான விஷயம். ஒரே கம்பனியில் இருந்தால் சம்பளம் அதிகம் கிடைக்காதே. உங்களுக்கு எப்படி நண்பரே?

      Delete
    2. விரிவான கருத்துக்கு நன்றி ஆதிமனிதன்

      நன்றி DiaryAtoZ.com

      Delete
  10. இப்பலாம் அவங்க அவங்க எதிர் காலத்த தான் பெருசா நினைக்கறாங்க.. சிபாரிசு செய்யறவரைக்கும் தான் செஞ்சவங்களுக்கு மதிப்பு!!
    நன்றி உணர்வு பத்தி கேட்டா , வாய்ப்பு வரும் போது பயன்படுத்திக்கணும்-னு நமக்கே அட்வைஸ் பண்ணுவாங்க சார்... பாவம் இதல பாதிக்கபடுறது உண்மையில் ஏழ்மையில உதவி தேடி தவிக்கறவங்க தான்!!!

    ReplyDelete
  11. இப்படிதான் சார், நான் ஒரு நிறுவனத்துல வேலை விட்டப்ப அந்த வேலைக்கு முன்பின் தெரியாத என் நண்பரோட நண்பரோட தங்கைக்கு அந்த வேலைய சிபாரிசு செஞ்சி வாங்கி தந்தேன். சில மாதங்களுக்கு அப்புறம் அந்த பெண்ணை பற்றி நான் கேள்வி பட்ட எதுவுமே சரியில்ல..போலீஸ் ஸ்டேஷன் வரைக்கு ஏதோ காதல் விவகாரம் + அண்ணனோட பிரச்னை பண்ணிட்டான்னு போயிருக்கு!! கேட்டதும் செம கடுப்பு எனக்கு, அதோட ஒரு ஆறுதல், அந்த நிறுவனத்தோட இப்ப தொடர்பே இல்லை எனபது தான்!!!

    ReplyDelete
    Replies
    1. இது அவளோட பர்சனல் விஷயம்-னு நினைக்காதீங்க.. அந்த ஆபீஸ் ல இருந்தவனோட தான் காதல் + நிறுவனதுல வேலைசெஞ்ச பலரும் போலீஸ் ஸ்டேஷன் போய்ட்டு இதால அவஸ்தை பட்டு இருக்காங்க!!

      Delete
    2. சமீரா : பலருக்கும் இப்படி கசப்பான அனுபவம் இருக்கும்னு பின்னூட்டங்கள் மூலம் தெரியுது கருத்துக்கு நன்றி

      Delete
  12. மிகவும் பயனுள்ள பதிவு. நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி சிவகுமார் !

      Delete
  13. நல்ல அருமையான பதிவு. அதற்குதான் தராதரம் பார்த்து செய்யணுமுன்னு சொல்லியிருக்காங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கும்மாச்சி நன்றி

      Delete
  14. இதுக்கு தான் அக்ரிமெண்ட் போட்டுக்கறாங்க.....இப்படியெல்லாம் செய்தா உதவி செய்றவங்களுக்கும் வெறுப்பு வந்துடும்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் ரோஷினி அம்மா

      Delete
  15. அருமை.

    எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
    செய்நன்றி கொன்ற மகற்கு.

    நன்றி & வாழ்த்துகள் திரு மோகன் குமார். எனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    எனக்கு இப்படி அனுபவம் நிறைய அனுபவம் உண்டு. கற்றுக் கொண்ட பாடம்: " பாத்திரம் அறிந்து பிச்சை இடு"

    ReplyDelete
    Replies
    1. முகநூளில் பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா

      Delete
  16. vidunga sir avanai ippo kettaal neenga illenna innoruthar uthaviyiruppaarnu solluvaan ithuthaan ulakam
    keezhai.a.kathirvel

    ReplyDelete
  17. நானும் இது போல பல கெட்ட அனுபவங்களப் பார்த்துட்டேன் சார். ஆனாலும் பலனடைஞ்ச எவ்வளோ நல்லவங்களும் இருக்காங்களே. சில கெட்டவங்களால ஒரு நல்லவனுக்கு நாம உதவி செய்யாம போயிடக் கூடாதுன்னு இதுவரைக்கும் உதவுறத நிறுத்தல.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜோசப். நீங்க நிச்சயம் வித மக்களையும் பார்த்திருப்பீர்கள். இத்தகைய சம்பவம் போது சற்று மனம் நோவது தானே நண்பர் நிறுத்த மாட்டார் என்று தான் எனக்கும் தோணுது

      Delete
  18. அந்த பையன் வியூவில் இருந்து பார்க்கும்போது, அவன் செய்ததுதான் சரியென்று படுகிறது. ரொம்ப அடிபட்டு வளர்ந்த பையன், சீக்கிரமா வளரணும்னு நெனைப்பதுதானே இயல்பு?

    ReplyDelete
    Replies
    1. அப்படிங்கறீங்க? ரைட்டு !

      Delete
  19. HR, நண்பரை கடிப்பது அவர்களின் முதிர்வின்மையை காட்டுகிறது.பையன் மேல் ஏதும் தப்பிருப்பதாக தெரியவில்லை.கொஞ்சம் ஆளுமை அதிகம் உள்ளவன் என்பது அவனது கதையில் நன்றாக தெரிகிறது. அந்த மாதிரி இருப்பவர்கள், தகுதிக்கு குறைந்த வேலையில் நீடிப்பதில்லை.. நண்பரை இதனால் பரிந்துரை செய்வதை நிறுத்த வேண்டாம் எனச் சொல்லுங்கள்.. :)

    ReplyDelete
    Replies
    1. நல்ல கோணம் தான் நன்றி ராகின்

      Delete
  20. In the current situation and trend, Boy has taken right decision.. Nothing Wrong.!

    ReplyDelete
    Replies
    1. I remember Rajarajan cholan MLA :)

      Delete
    2. //I remember Rajarajan cholan MLA :)//

      Exactly ! It is the best example ! There are some information which is not shared here; if that is also added, the example given by you suits perfectly :)

      Delete
  21. Enakkum ithe nilamai thaan..... naanum refer pannuvathai niruthivitten.

    anaal ennai refer paniyavar appadi solla mattaar :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...