Wednesday, February 20, 2013

“விஷயரூபம்”

விஷயரூபம்” - ராஜ சுந்தரராஜன்

-------------------------------------------------------------------

வளை நான் எவ்வளவு காதலித்தேன் தெரியுமா: அவளது வேலைகளையும் சேர்த்து நானே செய்ததோடு அவளுக்கு ஒரு ஆபத்து என்றானபோது என் உயிரையும் துச்சமாக்கி அவளைப் பாதுகாத்தேன்.” இது செய்வினை வாக்கியம்.

“அவள் என்னால் எவ்வளவு காதலிக்கப்பட்டாள் தெரியுமா: அவளது வேலைகளும் சேர்ந்து என்னால் செய்யப்பட்டதோடு அவளுக்கு ஒரு ஆபத்து என்றானபோது என்னால் என் உயிரும் துச்சமாக்கப்பட்டு அவள் பாதுகாக்கப்பட்டாள்.” இது செயப்பாட்டுவினை வாக்கியம்.

 

அவள் என்பது, "விஸ்வரூபம்" படத்தில், ஆச்சாரமற்ற ஆனால் தன்முனைப்புள்ள தாராளமனமுள்ள அறிவாளியான நிரூபமா எனும்பெயர்ப் பார்ப்பனத்தியா, அல்லது அமெரிக்காவா, அல்லது இஸ்லாமா?

பக்தி மார்க்கத்தில், குரங்குக்குட்டி மார்க்கம் என்றும் பூனைக்குட்டி மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. குரங்குக்குட்டி தன்முயற்சியால் தாய்வயிற்றில் தொற்றிக்கொண்டு இடம்விட்டு இடம்போகும். பூனைக்குட்டி தன்னை ஒப்படைக்கும்; தாயே தன் வாயால் கவ்வி எடுத்து இடம்மாற்றும். பூனைக்குட்டி மார்க்கத்து எழுத்தாளர்கள் கூட தன் எழுத்தாக்கம் முழுவதையும் செயப்பாட்டுவினை வாக்கியங்களால் எழுதமாட்டார்கள். செய்வினை வாக்கியத்தில் ஒரு முனைப்பு (motif) இருக்கும். செயப்பாட்டுவினை வாக்கியத்தில் அது இருக்காது; அதனால் சலிப்பூட்டும்.

படம் தொடங்கியதில் தொடங்கி, விஸ்வா என்ற விஷாம், ஃபரூக் & கூட்டாளிகளைச் சாக அடித்துவிட்டு (வெள்ளைக் காரில்) தப்பிவிட, (கருப்புக் காரில்) ஓமர் அவ்விடம் வந்து சேர்வதோடு, இந்திய - குறிப்பாகத் தமிழ் - ரசனைக்குரிய சினிமா முடிந்து விடுகிறது. அப்புறம் கமல் தனக்கு உலக விஷயங்கள் எம்மட்டுத் தெரியும் என்று கட்டுரைக்கிறார்.

சினிமா, கட்டுரைக்கக் கூடாதா? கோதார் (Godard) ஆக்கிய சினிமாக்கள்? கட்டுரைத்தல் உண்டுதான், ஆனால் நான், இந்திய - குறிப்பாகத் தமிழ் - ரசனைக்குரிய சினிமா என்கிறேன். அது என்ன புண்ணாக்கு ரசனை? எண்ணெய் ரசனையாக அது எப்போது சாரப்படுவது? 100 கோடி, வீடு மனை, நாட்டைவிட்டுப் போவது பற்றி எல்லாம் பேச வேண்டியுள்ள நிலைமை எப்போது மாறுவது?

கமலின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டின் வரவேற்பறையில், கருப்புவெள்ளையில், தாடிவைத்த இளங்கமலின் ஒரு புகைப்படம் உண்டு (இப்போதும் உண்டா தெரியவில்லை). அப் படத்தில் அவர் முகத்தில் அறிவுஜீவிக் களை உண்டு. 1980 வாக்கில் துத்துக்குடியில் நாங்கள் ஒரு நான்கு பேர் சேர்ந்து “ரீங்காரம்” என்று ஒரு இலக்கியப் பத்திரிக்கை நடத்தினோம். கவிஞர் தேவதேவன் ஒரு ட்ரெடில் எந்திரம் வைத்திருந்தார். அதில்தான் அச்சடித்தோம். பிறகு அப் பத்திரிக்கைக்கு “Kleen” டாய்லெட் பவுடர்க் கம்பெனி முதலாளி பொருளுதவி செய்தார். அவர் கமலுக்கு நண்பர் போலும். அவர் பெற்றுத் தந்து, கமல் எழுதிய ஒரு சிறுகதை “ரீங்காரம்” இரண்டாவதோ மூன்றாவதோ இதழில் அச்சேறியது.

அப்படி, கமல் ஒரு படைப்புக் கலை ஆர்வமுள்ளவராகவே இருந்துவந்திருக்கிறார். தான் எடுக்கும் படங்களிலும் அப்படி வெளிப்படவே அவர் தொடர்ந்து முயல்கிறார். இப் படத்தில் ஆனால், மீண்டும் தான் ஒரு நிகழ்த்துக்கலை விற்பன்னர் என்றே நிரூபித்து நிற்கிறார். படைப்புக்கலை முயற்சிகள் செயப்பாட்டுவினை வாக்கியங்கள் ஆகிவிட்டன.

ஆமா, ஜிகாதிகள் குரங்குக்குட்டிகளா? பூனைக்குட்டிகளா? கமல்?

எல்லா மதமும் போல நாத்திகமும் ஒரு மதமே (மதம் = கொள்கை). சமயம் என்பது வேறு. மதவாதிகளைப் புண்படுத்தாமல் நாத்திகம் பேச முடியாது. நாத்திகர்களைப் புண்படுத்தலாமா? நாத்திகர்கள் திருநங்கைகள் போலவா? கலைஞர்கள்?

விஷாம் என்னும் குணவார்ப்போ சுத்த ஆத்திகன், ஆனால் “யாருடைய கடவுள் காப்பாத்துவார்?” என்பது போன்ற நக்கல் அவர் வாயில் இருந்து வருவதேன்? அந்தக் கேரக்டரைத் தீவிர ஆஸ்திகனாகவே காட்டி நாத்திகம் உணர்த்த முடியாதா? கதாநாயகியோடு கடைசிக் கட்டத்திலாவது கட்டிப்பிடித்து உருளாவிட்டால், பொட்டை என்று பேர்வந்துவிடுமோ? (அஜீத் கூட தனது ஒரு படத்தில் அப்படித்தான்!)

||இசைப்புயல் இல்லை! உலகஅழகி இல்லை! பன்ச்வசனம் இல்லை! எனினும் வரலாறு காணாத வெற்றி!

“விஸ்வரூபம்” வசூல் 20 நாட்களில் 200 கோடியில்! ஹாலிவுட்டெல்லாம் தெருக்கோடியில்!!

தமீம், ஜாவித், அல்தாப், மஸ்தான் ... (இப்படி ஒரு இருபது அரபிப் பெயர்கள்)

மற்றும் கலைஞானி கமல்ஹாஸன் பக்தர்கள் (சென்னை)||

இந்த வாக்கியங்களுடன், சென்னை வடபழனியில், ஒரு சுவரொட்டி கண்டேன்: அல்லாஹ் கருணையுள்ளவன்! 

                                                                                                     -ராஜ சுந்தரராஜன்
*****
டிஸ்கி:வேலைப்பளு அதிகம். வானவில் நாளை வரும் !

13 comments:

  1. என்னனே நீங்க . .



    கருமாரி தியேட்டர்

    பக்கார்டி போட்டி கறின்னு

    ஆவலா வந்தா . .



    படத்தை பத்தி எழுதி


    ஏமாத்தி விட்டிங்களே




    ReplyDelete
  2. தமிழக மக்களின் பயன் பாட்டிலிருந்து எக்மோர் ரயில் நிலையம் பறிபோகப் போகிறது.


    எக்மோர் இரயில் நிலையம் தென் தமிழக மக்களுக்கு தொடர்ந்திட
    தந்தி மற்றும் இ - மெயில் மூலம் மத்திய அரசை வலியுறுத்துவோம் நீங்களும் உங்களது நண்பர்களும் தவறாமல் அனுப்பிடக் கேட்டுக் கொள்கிறோம்
    URGENT Dear friend we kindly Request you and your friends post your blog be help our peopls more... visit www.vitrustu.blogspot.in

    ReplyDelete
  3. எனக்கு சினிமாவும் புரியாது, இலக்கியமும் புரியாது.அது ரெண்டும் சேர்ந்து வந்த இந்த பதிவு மட்டும் புரிஞ்சுட போகுதாக்கும்.

    ReplyDelete
    Replies
    1. viswarupam padamkooda enakku purinchathu.. aanaa, intha' sundararajan' enna solla vararnnu suththama purila. enna panna. intha illakkiyamum, ilakanamum satharana manitharuku ennaikku purinchirukku..

      Delete
  4. Mohan, i really do not understand what he is trying to say... it seems kamal is more easy to understand than this article.,.

    ReplyDelete
  5. சுத்தமா ஒண்ணுமே புரியலை

    தயவு செய்து இந்த மாதிரி பதிவுகளை போடாமல் உங்களுடைய பதிவை மட்டும் போடுங்கள். ப்ளீஸ் .

    ReplyDelete
  6. நல்ல பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. விஸ்வரூபம் படமே எல்லாருக்கும் புரிசிடும் போலருக்கு .இவரு என்ன சொல்ல வராருன்னு புரியலே.யாரவது சொல்லுங்க.

    ReplyDelete
  8. Really do not understand what he is trying to say. seems to be one more arivujivi type who likes to write in riddles. we neither know english nor tamil grammar then how can we understand such posts

    ReplyDelete
  9. மோகன்குமாருக்கும் குரங்குபெடலுக்கும் எஸ். சுரேஷுக்கும் புரிஞ்சிருக்கு! ஹைய்யா புரிஞ்சிருக்கு!

    ReplyDelete
    Replies
    1. Rajasundarajan,

      In this article, you also trying to showcase your intelligence.. at the same time why othes (kamal) should not do ??

      so don't try to overtake kamal, (one kamal is enough for TN) in using tamil words without any continuity..

      "அப் படத்தில் அவர் முகத்தில் அறிவுஜீவிக் களை உண்டு." well said.

      Delete
  10. உண்மையிலே புரியலையா. புரியாத மாதிரி நடிக்கிறான்களா...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...