Friday, February 1, 2013

கடல் = சொதப்பல் ; சினிமா விமர்சனம்

டல் ..எவ்வளவு எதிர்பார்ப்புகளை உண்டாக்கி  ரிலீஸ் ஆனது. ஒரு பக்கம் பாட்டுகள் வேறு பட்டையை கிளப்பின. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா?

கதை

அரவிந்த் சாமியும், அர்ஜுனும் பாதிரியார்கள். ஒரு தவறு செய்யும் போது அரவிந்த் சாமி கையும் களவுமாய் பிடிக்க, அவமானத்துடன் வெளியேறுகிறார் அர்ஜூன்.

                                   
அதே ஊரில் தாயை பறிகொடுத்து விட்டு வளரும் ஹீரோ கெளதமை - அரவிந்த்சாமி வளர்க்கிறார். ஹீரோவுக்கு வில்லன் அர்ஜூன் மகள் மேல் காதல்.

அர்ஜூன் " அரவிந்தசாமியை விட்டு விட்டு என் பக்கம் வா ; அப்போ தான் மகள்" என்கிறார். ஹீரோ அர்ஜூன் பக்கம் சென்றாரா, ஹீரோயினை மணந்தாரா என்பதை...

உடனே, உடனே உடனே பார்த்து தெரிஞ்சுக்குங்க . பத்து நாள் ஆனா எந்த தியேட்டரிலும் படம் இருக்காது !

அரவிந்த்சாமி & அர்ஜூன்

விக் வைத்து அதே பழைய சிரிப்புடன் வருகிறார் அரவிந்த்சாமி. புல்லட்டில் கலர் டிரேஸ்சில் பாதிரியாராய் வரும்போது அட வித்யாசமா இருக்கே என நினைத்தால், அதன் பின் அநியாயத்துக்கு நல்லவரா இருக்கிறார். அவருக்கு விரும்பிய கம்பேக் இதுவல்ல. 

" நைஸ் நைஸ் நைஸ் " எனும் அர்ஜூனுக்கு வில்லன் வேஷம்.

எஸ். பி முத்துராமன், கே. எஸ் ரவிகுமார் பட வில்லன்களை தூக்கி சாப்பிட்டுடுது இவர் பாத்திர படைப்பு . ரியலிசம் துளியும் இல்லை.

கெளதம் & துளசி

கார்த்திக் மகன் கெளதமிடம் கடுமையாய் வேலை வாங்கியது தெரிகிறது. டான்ஸ் ஆடுவது ஓகே. நடிப்பில் நிச்சயம் தேறனும்

துளசிக்கு சற்று வித்தியாச பாத்திரம் ; வளர்ந்த பின் கூட மனதளவில் 5 வயதே ஆன பெண் ; இது முக்கால் வாசி தாண்டிய பின் தான் தெரிகிறது. எப்பவும் வெள்ளை ஆடையில் வருகிறார் (நர்ஸ் என்கிறார்கள் ) அப்பப்போ அக்கா கார்த்திகா ஜாடை தெரியுது. முக்கியமான விஷயத்தை சொல்லிடுறேன் : எதோ லிப் கிஸ். லிப் கிஸ்னாங்களே .. அது இல்லவே இல்லீங்கண்ணா .. ஏமாந்துடாதீங்க

இசை

எலேய் கீச்சான் , மூங்கில் தோட்டம், அடியே 3 பாட்டும் அழகாய் படம் பிடிச்சிருக்காங்க. நெஞ்சுக்குள்ளே, பாட்டு ஒரு பக்கம் போகுது; இன்னொரு பக்கம் வசனம் போகுது. அதனால் எந்த பாதிப்பும் இல்லாமல் கடக்கிறது 

பின்னணி இசை சில இடம் ஓகே. பல இடங்கள் சருக்கல்

ஒளிப்பதிவு

பல படங்களுக்கு பின் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவு !  குறை சொல்ல முடியாத ஒரு டிபார்ட்மெண்ட் ; ஹீரோ அறிமுக காட்சியில் கடல் அலைகள் அட்டகாசம் ! பீச்சின் அழகு மட்டுமே நம்மை உள்ளே உட்கார வைக்கிறது

இயக்கம்
                                 
மணிக்கு என்ன ஆச்சு? ரொம்ப சீரியஸா அவர் யோசிக்க வேண்டிய நேரம் இது. ராவணன் எப்படி எந்த உணர்வும் நமக்கு தரமால் மேலோட்டமாய் இருந்ததோ, டிபிக்கல் அதே உணர்வு தான் இங்கும் ! மிக மிக பெரிய ஏமாற்றம்.

பாத்திரங்களின் வலி நமக்கும் தெரிய வேணாமா? அவன் அழும் போது நமக்கு அழகை வரவேணாமா? அப்படி எந்த இம்பாக்ட்டும் படம் தரலை.

ஜெயமோகன் கதை கொஞ்சம் கூட மனதில் ஒட்டலை. திரைக்கதை அதை இன்னும் மோசமாக்கிடுச்சு

அனைவரின் கடின உழைப்பும் தெரியுது. ஆனால் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீர்

தியேட்டர் நொறுக்ஸ்

படம் முடியும் நேரம் " உனக்கு என்ன ஆச்சு? மூளை கீளை குழம்பி போச்சா? " என்று அரவிந்த்சாமி அர்ஜூனை கேட் கிறார் " நாங்களும் அதான் கேட்கிறோம்" என சொன்னுது நம் மைண்ட் வாய்ஸ் .

படம் தொடங்கி கொஞ்ச நேரத்திலேயே சள சள  என மக்கள் சத்தமாய் பேச ஆரம்பித்து விட்டனர். இடைவேளையில் 2 நண்பர்கள் " ஏண்டா கடலை வச்சி படம் எடுக்குறார். அழகா ஒரு காதல் கதை; நாலு காமெடி வச்சாலே பிச்சுக்கிட்டு ஓடிருக்கும். என்ன சொல்ல வர்றார்ணே புரியலையே  " என பேசி கொண்டிருந்தனர்.

*******

கடற்கரை  + காதல் என இதே கதை களனில் வந்த நீர்ப்பறவை இப்படத்தை விட 10 மடங்கு பெட்டர் .   இவ்வருடத்து டாப் 10 பாடல்களில் இப்பட பாடல் ஒன்றாவது இருக்கும் என்பது எந்த அளவு உறுதியோ, அதே அளவு உறுதி, இவ்வருட டாப் 10 மொக்கை படங்களில் இப்படமும் இருக்கும் என்பது !  

கடல் - ரோஜா, பம்பாய் ரகமல்ல . . ராவணன் ரகம் ..  

****
அண்மை பதிவு

கடல் விமர்சனம் " பாவிகளே மனந்திரும்புங்கள்" -   ராஜசுந்தரராஜன் 

கடல் பாடல்கள்: ரகுமான் மாஸ்டர் பீஸ் : ஆடியோ + விமர்சனம்

கன்யாகுமரி சில கசப்பான உண்மைகள்

தொல்லை காட்சி- சிவகார்த்தி - லொள்ளு சபா -சூப்பர் சிங்கர் T  20 பைனல் 

21 comments:

  1. நான் தான் ஃபர்ஸ்டா! படம் மொக்கைன்னு தெரிஞ்சிக்கிறதுக்கு! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க சுரேஷ் :)

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  2. டேவிட் 100 நாள்.ஓட வழி தெரியுது போல அண்ணா

    ReplyDelete
    Replies
    1. தம்பி அதுக்கு கடலே தேவலையாம் ...!

      Delete
  3. காலை 8.45 மணி ஷோவிற்கு என் பையன் புக் செய்து இருந்தான் .குரோம்பேட்டை வெற்றி தியேட்டரில் திடீரென்று காலை ஷோ கேன்சல் செய்து விட்டார்கள்.தப்பிச்சேன்.

    ReplyDelete
    Replies
    1. கிரேட் எஸ்கேப் !

      Delete
  4. பாடலை கேட்டுவிட்டு இருப்பது நல்லது என்று தெரிகிறது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க. சரியா சொன்னீங்க மாதேவி

      Delete
  5. அப்படின்னா... பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸ்கூல் பையன் நன்றி

      Delete
  6. விமர்சனம் எப்பவும் லேட்டதானே எழுதுவீங்க!

    ReplyDelete
    Replies
    1. அப்பப்ப இந்த மாதிரி தப்பு நடக்குறதும் உண்டு சார்

      Delete
  7. //கடற்கரை + காதல் என இதே கதை களனில் வந்த நீர்ப்பறவை இப்படத்தை விட 10 மடங்கு பெட்டர்//
    200% CORRECT!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க நீங்களும் நம்மை மாதிரி அடிபட்டவர் போல :)

      Delete
  8. அந்த மிருகம் நம்மை கடிக்க வருது..எல்லோரும் ஓடுங்க...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கர் தங்கள் முகநூல் வட்டத்தில் பகிர்ந்தமைக்கு

      Delete
  9. Anonymous3:57:00 AM

    Mokka Padam .. David is far better than this film.. But the climax in David film some quite normal.. But acting wise Jeeva, Vikram has proved yet again as super actors..

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? டேவிட் படம் காத்து வாங்குது அப்படிங்கிறாங்க !

      Delete
  10. பார்க்க வேண்டாம்னு சொல்றீங்க! 150/- மிச்சம்! :)

    ReplyDelete
    Replies
    1. நமக்கு பாதி அனுப்புறது :)

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...