Friday, February 22, 2013

ஆதிபகவன்- பாதி அரவான் - விமர்சனம் -By- ராஜ சுந்தர்ராஜன்


“பாதி-அரவான்” - ராஜ சுந்தரராஜன்

---------------------------------------------------------------------

இந்தக் கதையில் வரும் எதுவும் எவையும் உயிரோடோ, இறந்தோ, ஆவியாகவோ அல்லது உண்மையும் இன்மையுமாயோ இருக்கும்/இல்லாத எதையும் எவரையும் எந்த இனத்தையும் மதத்தையும் குறிப்பன அல்ல. எல்லாம் கற்பனையே. We will meet in hell.

“டைரக்டர் ஸார், கடைசியில, a film by ன்னு உங்க பேரையும் சேர்த்து ரத்தத் துளிகளால எழுதிக் காட்டுறீங்க பாருங்க, அய்யோ, சூப்பர் ஸார்! ஆமா, அதுக்கு என்ன ஸார் அர்த்தம்?”

“அஸிஸ்டெண்டுனா உன்னெ மாதிரிதான்யா இருக்கணும். கத்துக்கோ! மொதல்ல இருந்து சொல்றேன்: ‘அரவான்’ அன்ட்டே தெலுகுலோ ‘அரவாடு’. அதாவது தமிழன்னு அர்த்தம். அதனாலதான் படம் ஆந்திரப்பிரதேசத்துல தொடங்குறா மாதிரி எடுத்தேன்; ஹீரோ தமிழ் ஆளுன்னு வெச்சேன்.”

“சூப்பர், ஸார்! ஆனா அப்புறம் பாட்டயா (தாய்லாந்து) போகுதே கதை, அது ஏன் ஸார்?”

“இந்தப் படத்துல பட்டையெக் கிளப்பணும்னு தோணுச்சா, அதுதான் பாட்டயா. அப்புறமா கதை ஏன் மும்பைக்கு போகுதுங்கிறதையும் சொல்லிடுறேன்: பாட்டயாவுல ஹீரோயின் தன்னோட பேரு ‘கரிஷ்மா’ன்னு சொல்றாளா, எனக்கு மும்பை ஞாபகம் வந்திடுச்சு.”

“சூப்பர், ஸார், சூப்பர்! ஆனா மும்பையில ஹீரோயின் பேரு ‘ராணி’ன்னு மாறிடுது, இல்லையா ஸார்?”

“அது ஏன்னு கேளு: ‘அரவான்’ல முன்பாதி ‘அரவா’; ‘ராணி’ல பின்பாதி ‘ணி’. ரெண்டையும் சேர்த்தா, ‘அரவாணி’. அதனாலதான் படத்துக்கு “பாதி-அரவான்” ன்னு பேரு; மும்பையில வில்லனா வர்ற இரட்டை வேட ஹீரோவும் அரவாணியா வர்றாரு.”

“சூப்பரோ சூப்பர் ஸார்! ‘விஸ்வரூபம்’ கமல் கூட அரவாணியா...?”

 

“அங்கெதான்யா இருக்கு நம்ம ஜீனியஸ்னெஸ். இன்டெர்நெட் பசங்க ‘நட்டுவாக்காலி’, ‘திருவோடு’ன்னு எல்லாம் பேரு வெச்சுக்கிட்டு, நாம ஹாலிவுட்ல இருந்து, லெட்டீன்-அமெரிக்காவுல இருந்து, ஜப்பான், கொரியாவுல இருந்தெல்லாம் காப்பி அடிக்கிறதா எழுதிப் போடுறானுக. அதனால இந்தப் படத்துக்கு நம்ம பசங்க தீயா வேலை செஞ்சானுக. நீ கூட திருக்குறள்ல முதற்குறள் நாலாவது அஞ்சாவது சீருக்கு என்ன அர்த்தம்னு அரசஅழகரசன்ங்கிற மடக்குவரிக் கவிஞர்ட்ட கேட்டுத் தெரிஞ்சு சொன்னியே? அது மாதிரி ‘கடல்’ படத்துல சைத்தான் கேரக்டர் வர்றதாவும் ‘விஸ்வரூபம்’ படத்துல அரவாணி கேரக்டர்ல கமல் வர்றதாவும் பசங்க துப்பறிஞ்சு வந்து சொன்னானுக. சுட்டு, சைத்தானையும் அரவாணியையும் இணைச்சுட்டேன். எந்த நட்டுவாக்காலியாவது நான் நோலனைக் காப்பி அடிச்சேன் பூ... னைக் காப்பி அடிச்சேன்னு இனி எழுதுவானா சொல்லு?”

“அடடா, எங்கேயோ போயிட்டிங்க ஸார்! ஆமா, கதை கடைசியில கோவாவுக்குப் போகுதே ஏன் ஸார்?”

“ப்ரொட்யூஸரு பினாமி மாதிரி தெரிஞ்சுதா, இதுதான்டா சான்ஸ்னு மும்பை தாய்லாந்துன்னு அனுபவிச்சாச்சு. கோவாவெ ஏன் விட்டு வெய்க்கணும்னு க்ளைமாக்ஸை அங்கெ வெச்சேன், எப்பூடி?”

“ஆஹா! ஆஹா! ஆஹஹஹஹா! அப்புறம் நமக்கு மரபுன்னு ஒண்ணு எம்ஜிஆர், அவருக்கு முந்துன காலத்துல இருந்துகூட இருக்குதானே? அதாவது, ஹீரோ ஒரு பொம்பளையெ அடிக்கக் கூடாதுன்னு... இதுல கொலையே பண்றானே ஸார்?”

“ஜெயமோகனுக்குத்தான் மரபு. நமக்கென்னத்துக்கு? “We will meet in hell.” ன்னு இதுல வசனம் வெச்சது சும்மா இல்ல. நார்ம்ஸ் எல்லாத்தையும் ப்ரேக் பண்ணணும். அந்தப் புரட்சியை உணர்த்தத்தான் கடசியில a film by ன்னு என் பேரை ரத்தத் துளிகளால எழுதிக் காட்டுனேன். படம் பார்த்த ரசிகர்கள் கழுத்தைத் தடவிப் பார்த்தாங்கன்னா பாரேன், நம்ம படத்தால என்ன எஃப்ஃபெக்ட்டுன்னு!”


-ராஜ சுந்தரராஜன்

அண்மை பதிவுகள் 


4 comments:

  1. அன்னே கடைசி வரைக்கும் என்ன விமர்சனம் எழுத வரீங்கனே புரியவில்லை.ஒரே குழப்பமா இருக்கு எதை சொல்லவரீங்க ஒன்னும் புரிஜ்ஜிக்கவே முடியலை.

    தெளிவா சொல்லுங்க படம் பார்க்க கூடிய வகையில் இருக்க இல்லையானு?

    ReplyDelete
  2. அன்னே கடைசி வரைக்கும் என்ன விமர்சனம் எழுத வரீங்கனே புரியவில்லை.ஒரே குழப்பமா இருக்கு எதை சொல்லவரீங்க ஒன்னும் புரிஜ்ஜிக்கவே முடியலை// சேர் படம்பார்த்த பாதிப்பில் எழுதிய விமர்சனம் அது.இப்படிப்பட்ட படங்களைப்பார்ட்ததும் கூல் வோட்டரில் முகத்தை நன்கு கழுவி சுய நினைவுக்கு வந்தபின்னரேயெ எழுத ஆரம்பிக்கவேண்டும்....குமார் அண்ணே..படத்தை கழுவிக்கழுவி ஊத்தியிருக்கிறார்கள் விமர்சகர்கள் சி.பி அண்ணேண்டையையும் வாசிச்சுட்டுத்தான் வாரன் நான் இன்னும் பாக்கல பட் படம் மரண புளாப்பின்னு மாத்திரம் புரியுது சரியா?

    ReplyDelete
  3. "படம் பார்த்த ரசிகர்கள் கழுத்தைத் தடவிப் பார்த்தாங்கன்னா பாரேன், நம்ம படத்தால என்ன எஃப்ஃபெக்ட்டுன்னு! "

    இதுக்கு மேல என்னையா புரியணும் . . .





    விருகம்பாக்கம் டாஸ்மாக்ல நேத்து ஒரு இலக்கிய இளை்ஞர் . . .( நம்ம சுந்தர் ராஜன் சார்தான் )

    படம் தயாரிச்சவர் திமுக ஆளா இருந்தாலும் . .

    அதிமுக அரசுக்கு லாபம் தரும் வகையில் . .

    படம் பாத்தவங்கவளை குடிக்கவைக்கிறது ஒரு சாதனை தானே

    ReplyDelete
  4. கதையே சொல்லலையே....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...