தோனி - இந்த பெயரை சுற்றி தான் எத்தனை சர்ச்சைகள் ! எத்தனை புரளிகள்... !
இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசனின் செல்ல பிள்ளை- அதனால் தான் இந்திய அணியின் கேப்டனாக நீடிக்கிறார்
தோனி - அணியில் அவருக்கு வேண்டியவர்களை வைத்து கொள்வார்- வேண்டாதவர்களை ஒதுக்கி விடுவார்
தோனியின் பார்ம் சரியில்லை - அவர் கேப்டனாக நீடிக்க தகுதியில்லை; (அணியில் நீடிப்பதே தப்பு என்று சொல்லியோரும் உண்டு )
3 வகை விளையாட்டுக்கும் தலைவர் ஆக உள்ளது அவரது ஆட்டத்தை பாதிக்கிறது - ஓரிரு பார்மட்டில் அவர் கேப்டன் ஆக இல்லாதிருந்தால் நல்லது
மிக விரைவில் டெஸ்ட்டில் ஓய்வு பெற போகிறார் தோனி ( டெஸ்ட், T - 20, ஒன் டே - இந்த மூன்றும் விளையாடுவது சிரமமாக உள்ளது. ஏதேனும் ஒரு பார்மட்டில் இருந்து விலக போகிறேன் என்று சொல்லியிருந்தார் தோனி )
இப்படி எத்தனையோ வகை ஊகங்கள் இருக்க, அனைத்துக்கும் பதில் சொல்லும் விதமாக சென்னை டெஸ்ட்டில் அசத்தியிருக்கிறார் தோனி
தோனி எதோ ரொம்ப நாள் கழித்து விளையாடியுள்ளார் என்று அர்த்தம் இல்லை. கடைசியாக இங்கிலாந்துடன் விளையாடிய டெஸ்ட்டில் (அதாவது இந்த 200 க்கு முன் கடைசியாக அவர் விளையாடிய இன்னிங்க்சில்) அவர் எடுத்த ரன்கள் 99 !
நிற்க சென்னை டெஸ்ட்டுக்கு வருவோம். முதலில் ஆஸி ஆடி 380 ரன் எடுக்க, இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் சச்சினின் அழகான ஆட்டத்தால் சற்று டீசண்ட் ஆக 180 க்கு 3 விக்கெட் என்ற நிலையில் மேட்ச் - பேலன்சில் இருந்தது.
ஜடேஜாவை டீமில் சேர்த்ததால், தோனி போர்த் டவுனில் ஆடவேண்டிய நிலை. இதனால் இந்திய அணியின் டெயில் - நீளமாக இருந்தது. அஷ்வின் நன்கு ஆட கூடியவர் எனினும் தொடர்ந்து நன்கு ஆட, ரெகுலர் பேட்ஸ் மேன் போல அவரை எதிர்பார்க்க முடியாது
எனவே சச்சின், கோலி , தோனி இவர்கள் மூவரும் நன்கு ஆடவேண்டும் என்பதே இன்றைய நாள் துவங்கும் போது நம் மனநிலையாக இருந்தது.
துரதிர்ஷ்டவசமாக சச்சின் 81 ரன்னில் அவுட் ஆக , தோனி நினைத்ததை விட சற்று முன்னரே இறங்க வேண்டியதாயிற்று.
ஒருபக்கம் கோலி ஸ்டைலிஷ் மற்றும் நிதானமான ஆட்டத்தில் இருக்க, தோனி வந்த சற்று நேரத்திலேயே பந்துகளை நன்கு மிடில் செய்யவும், சில ஷாட்கள் அடிக்கவும் ஆரம்பித்தார்
இன்றைய தோனியின் ஆட்டத்தில் குறிப்பிட படவேண்டியை :
1. அவர் அடித்த ஸ்ட்ரைட் டிரைவ். அட்டகாசம். பல முறை அம்பையர் அல்லது நான் ஸ்ட்ரைக்கரை காலி பண்ணுமளவு வேகத்துடன் இருந்தது அந்த ஷாட்கள் ( விக்கெட்டுக்கு நேரே பீல்டர் இருக்க கூடாது என்பதால் - ஸ்ட்ரைட் டிரைவ் - 4 அல்லது 6 பெற்று தர வாய்ப்புகள் அதிகம்)
2. தோனி அடித்த சிக்சர்கள். சென்னை அவருக்கு இரண்டாவது வீடு என்று சொல்ல முடியாது. முதல் வீடே சென்னை தான் ! இங்கு ஆடிய அளவு அதிக மேட்ச் எங்கும் ஆடியிருக்க மாட்டார். இந்த க்ரவுண்ட் மற்றும் பிட்ச் அவருக்கு அத்துப்படி. ஒவ்வொரு முறை இறங்கி இறங்கி அடிக்கும் போதும் பார்க்கும் நமக்கு தான் கேட்ச் அல்லது ஸ்டம்பிங் ஆகிடுவாரோ என பயமாக இருந்தது. ஆனால் அவர் கவலையே படாது இறங்கி இறங்கி ஆறுகளாக விளாசினார். காண கண் கொள்ளா காட்சி. நேரில் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்திருப்பார்கள் ( ஆபிசில் பலர் போயிருந்தனர் ஹும் !!)
வேக பந்து வீச்சாளர்கள் பந்துகளை மிக சாதாரணமாக, கிரீசுக்கு வெளியே இறங்கி வந்து அடித்தது அவருக்கு சென்னை பிட்ச்சின் மீதிருந்த நம்பிக்கையால் தான் என்று தோன்றியது
3. புவனேஷ் குமாரை வைத்து கொண்டு தோனி ஆடிய புத்திசாலிதனமான ஆட்டம்.. சூப்பர்ப். 109 ரன்கள் அவரை வைத்து கொண்டு சேர்த்துள்ளார். 4 பந்துகள் தோனி ஆடுவது, அதற்குள் ஒரு நான்கு அல்லது ஆறு. கடைசி சில பந்தில் சிங்கிள் எடுப்பது என செம புத்திசாலிதனமாக ஆடினார். இத்தனைக்கும் முதல் நாலு பந்துகள் பீல்டிங் விரிந்தும், கடைசி இரு பந்துகள் சிங்கிளை தடுக்க, பக்கத்திலும் இருந்தனர்
தேநீர் இடைவேளையின் போது முதல் நூறை எட்டிய தோனி , தேநீர் இடைவேளை துவங்கி ஆட்ட நேர இறுதிக்குள் இன்னொரு நூறு அடித்தது அமர்க்களம் !
இதே இன்னிங்க்சில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் எடுத்தவர் என்கிற சாதனையையும் நிகழ்த்தி உள்ளார் தோனி.
சச்சின் மற்றும் புஜாரா இருவரின் ஆட்டம் சரிவிலிருந்து மீட்டது; கோலியின் செஞ்சுரி சற்று ஸ்டேபிலிட்டி தந்தது என்றாலும், தோனியின் ஆட்டம் தான் இந்தியா இந்த டெஸ்டில் இனி தோற்காது என்ற தைரியத்தை தந்துள்ளது என்று க்ரிக் இன்போ நிருபர் குறிப்பிட்டது முழுக்க சரி !
*********
நேற்றைய ஆட்டம் ஹைலைட்ஸ் 5 பிரிவாக கீழே பகிர்ந்துள்ளேன்.
ஒவ்வொரு வீடியோவும் ஆறு நிமிடம் போல் இருக்கும். வீடியோவின் முதல் 15 நொடிகள் மட்டும் விளம்பரம் ! அதை தாண்டினால் கிரிக்கெட், கிரிக்கெட் தான் !
Part I Highlights
Part II Highlights
Part III Highlights
Part IV Highlights
Part V Highlights
*************
மெதுவாய் நகரும் -டெஸ்ட் மேட்ச் என்ற எண்ணத்தை போக்கி, இத்தகைய அதிரடி ஆட்டங்கள் தான் இளம் ரசிகர்கள் ஆர்வம் கொள்ள வைக்கிறது.
சரி.. இந்த ஒரு ஆட்டத்தால் எல்லாம் சரியாகி விட்டதா? தோனி கேப்டன்சி பிரச்சனை சரியாகி விட்டதா ?
அடுத்து தோனியின் பொறுமையான அணுகுமுறை. இது பலருக்கும் வாய்க்காது.
தனது Instinct -ல் தோனி எப்போதும் முடிவெடுப்பதால் சில நேரம் அவரது முடிவுகள் தவறாக போனாலும் இப்போதைக்கு தோனி தான் சிறந்த கேப்டன்
சரி.. கேப்டன் பதவி சர்ச்சைக்குள் சென்று விவாதம் செய்யாமல், let us savour this Dhoni special for some more time !
இந்த சென்னை சூப்பர் கிங்கிற்கு பெரிய விசிலை அடிங்க !

இல்லை. தோனி கேப்டன்சியில் நிச்சயம் சில தவறுகள் செய்கிறார் ஆனால் இன்றைய நிலையில் என்னை பொறுத்த வரை அவர் தான் சிறந்த கேப்டன் ; வேறு நபரை மாற்ற தேவையில்லை. இதற்கு 2 காரணம் மட்டுமே.
பலரும் கேப்டன் ஆனால் அவர்களது தனிப்பட்ட ஆட்டம் பாதித்து விடும் (சச்சின், டிராவிட், துவங்கி உதாரங்கள் சொல்லி கொண்டே போகலாம்) இருக்கும் ஆட்களில் கோலி தவிர வேறு யாருக்கும் கேப்டன்சி தர வாய்ப்பில்லை. கோலி ஒரு கேப்டன்சி மெட்டிரியல் தான் என்றாலும் துணை காப்டனாக இருந்து கற்று கொண்டு பின் காப்டனாகலாம். மேலும் அது அவர் ஆட்டத்தஹி பாதிக்க கூடாது. மாறாக கேப்டனாக இருந்தாலும் தோனியின் பேட்டிங் எவ்விததிலும் மாற போவதில்லை. அவரது ஆட்டத்தில் வந்த மாறுதல்கள் கால போக்கில் யாருக்கும் வர கூடிய நிதானம் தான்.
பலரும் கேப்டன் ஆனால் அவர்களது தனிப்பட்ட ஆட்டம் பாதித்து விடும் (சச்சின், டிராவிட், துவங்கி உதாரங்கள் சொல்லி கொண்டே போகலாம்) இருக்கும் ஆட்களில் கோலி தவிர வேறு யாருக்கும் கேப்டன்சி தர வாய்ப்பில்லை. கோலி ஒரு கேப்டன்சி மெட்டிரியல் தான் என்றாலும் துணை காப்டனாக இருந்து கற்று கொண்டு பின் காப்டனாகலாம். மேலும் அது அவர் ஆட்டத்தஹி பாதிக்க கூடாது. மாறாக கேப்டனாக இருந்தாலும் தோனியின் பேட்டிங் எவ்விததிலும் மாற போவதில்லை. அவரது ஆட்டத்தில் வந்த மாறுதல்கள் கால போக்கில் யாருக்கும் வர கூடிய நிதானம் தான்.
அடுத்து தோனியின் பொறுமையான அணுகுமுறை. இது பலருக்கும் வாய்க்காது.
தனது Instinct -ல் தோனி எப்போதும் முடிவெடுப்பதால் சில நேரம் அவரது முடிவுகள் தவறாக போனாலும் இப்போதைக்கு தோனி தான் சிறந்த கேப்டன்
சரி.. கேப்டன் பதவி சர்ச்சைக்குள் சென்று விவாதம் செய்யாமல், let us savour this Dhoni special for some more time !
இந்த சென்னை சூப்பர் கிங்கிற்கு பெரிய விசிலை அடிங்க !
****
மேட்சை நேரில் பார்த்த நண்பர் பாலசுப்ரமணியம் - நமக்கு தரும் கமண்டரி இது. ஆங்கிலத்தில் அவர் பகிர்ந்ததை அப்படியே பகிர்கிறேன்
*********
I am sharing my experience and some facts during the course of 3rd day of India vs Australia test match here at Chennai:
Sachin's score at the end of day 2 was 71* and everyone wished to see him to score yet another 100 on day 3. Moreover, since Day 3 was Sunday, you could imagine the flood of people waiting to get inside the Chepauk stadium. Some people were there from 4 AM in the morning to buy daily tickets. Even if one reaches the stadium on time, it would have taken atleast 1 hour to get inside as the queue grew in kilometers.
To our disappointment, Sachin got out on 81 to an half filled stadium as most of the people were stuck in queues outside. It took a while for the crowd to face the reality of Sachin's wicket. But, when MS Dhoni walked in, the crowd again started cheering and expected him to score big. He did it.
Initially he built a partnership with Kohli, who scored his 4th century and then sort of gave away his wicket to a loose shot. Dhoni ensured that the crowds who were present in the stadium were in for a treat.
Dhoni's score at lunch was 37*, at tea was 97* and at stumps was 206*. You could see how well he smashed the ball during the third session by scoring more than a hundred runs. Bhuvaneshwar Kumar did really well to support Dhoni.
Thanks to the TN Cricket Association, through which anybody can send SMS about the team and the match and the best SMS will be displayed in the big screen at the stadium. Even the players acknowledged the SMS. There was a SMS asking Clarke and Warner to dance to which they danced and entertained the crowd. The crowd asked Ashwin to raise his bat so that the crowd can roar. He acknowledged it and raised his bat.
Not to mention the huge roar when a SMS asked all the Power Star fans to show their strength.
Sachin scored his 200* in ODI on 24th Feb 2010 and exactly after 3 yrs Dhoni scored his 200 on 24th Feb 2013. The last ODI match also, played by Dhoni at Chennai vs Pakistan, he scored a century. Of course, Chepauk is his den.
While nearing 200, Dhoni broke many records such as reaching 4000 test runs, highest individual score, highest score by a keeper captain, highest score by an Indian captain against Australia and a few more. The crowd rose to its feet and gave him an excellent ovation when he left the field at Stumps. The day was completely dominated by India and it was worth watching at the stadium.
Regards,
Balasubramanian
*******

இதன் மூலம் வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி.
ReplyDeleteநாளை ஜெயிச்சிடுவோம் !
Deleteமின் வெட்டினால் பார்க்க முடியாதை பார்க்கிறேன்...
ReplyDeleteகண்ணொளிகளை இணைத்தமைக்கு நன்றி...
நன்றி மகிழ்ச்சி தனபாலன்
Deleteமின்வெட்டு, அலுவலக வேலைப்பளு இவற்றால் உங்களை மாதிரி பெருமூச்சுதான் விடவேண்டியிருக்கு கிரிக்கெட் பாக்க முடியாம. உங்கள் பதிவும் கிளிப்பிங்ஸும் தான் ஆறுதல் பரிசு! நன்றி.
ReplyDeleteநன்றி பாலகணேஷ்.
Delete//இந்தியா சிமிண்ட்ஸ் சீனிவாசனின் செல்ல பிள்ளை//
ReplyDeleteநல்லா விளையாடினாலும் இது உண்மைதானே?
சென்னை vs. மும்பை ஐபிஎல் டிக்கெட் கிடைச்சா சொல்லுங்க மோகன்.
சொல்றேன் ரகு
DeletePart V - செம விளாச்... ச்..ச்..
ReplyDeleteநன்றி...
தற்போதைய கிரிகெட் நிலவரங்கள் எதுவுமே எனக்குத் தெரியாததால் என்னைப் பொறுத்த வரை இது ஒரு சூடான பதிவு
ReplyDeleteஅப்படியா? நன்றி சீனு
Deleteஉய்ய்ய்ய்ய்ய்
ReplyDeleteபெரிய விசில் அடிச்சாச்சி
சென்னைல தானே இருக்கிங்க. நீங்க போயிக்கலாமே? நல்லா என்ஜாய் பண்ணியிருக்கலாம்.
டோனி 224 அவுட். கீப்பர் கேட்ச், பேட்டின்சன் பாலில்
வாங்க சார்; ரொம்ப நாள் கழிச்சு கிரிகெட் பற்றி என்பதால் எட்டி பார்த்துள்ளீர்கள்
DeleteDhoni played like a Legend.His double century remembered Gilchrist's 212 ball Double century against South Africa.
ReplyDeleteஉண்மை தான் நன்றி டினேஷ்
Deleteதோனியின் ஆட்டத்தை மிக அழகாக விவரித்து இருக்கீங்க. காணொளி எல்லாமே அருமை.அதிலும் கடைசி காணொளி சிறப்பு.
ReplyDeleteஆம் ராம்வி நன்றி
Deleteஅருமையான கிரிக்கெட் விமர்சனம். இதுபோல் அடிக்கடி கிரிக்கெட் பற்றியும் எழுதுங்கள் .பதிவுலகில் கிரிக்கெட் பற்றி அதிகம் பேர் எழுதுவதில்லை .பேப்பரில் அதிகம் வருவதனாலோ என்னவோ.வீடியோ இணைப்புகளும் அருமை
ReplyDeleteமிக மகிழ்ச்சி சீன் கிரியேட்டர் ; இயலும்போது அவசியம் எழுதுகிறேன்
Deleteசூப்பரான விமர்சனம் தோணி இன்னும் கொஞ்சம் வேகமாக் தோனியை செலுத்தினால் நல்ல தான் இருக்கும் ஆனா பாருங்க நாம் எதிர் பார்காத போது கண்ணா லட்டு திங்க ஆசையான்னு கேட்பார்
ReplyDeleteஹா ஹா நன்றி நண்பரே
Deleteசுவையான கிரிக்கெட் பகிர்வு! உண்மைதான் இப்போது தோனிக்கு மாற்று யாரும் இல்லை!
ReplyDeleteவாங்க சுரேஷ் நன்றி
Delete