Tuesday, February 12, 2013

உணவகம் அறிமுகம்: ஹோட்டல் Subway, சேமியர்ஸ் ரோடு



சேமியர்ஸ் ரோடு மூப்பனார் மேம்பாலம் மிக அருகே உள்ளது சப் வே என்கிற இந்த ஹோட்டல். நல்ல பசி நேரத்தின் மதியம் இங்கு ஒதுங்கினோம் (நல்ல ஹோட்டல் அருகில் எங்கிருக்கு எனக்கேட்க, இங்கு போக சொன்னவர் மூப்பனார் மேம்பாலம் அருகே இருந்த டிராபிக் காவலர்)

சப்வே என்கிற பெயரே சற்று ஈர்த்தது. ஹோட்டலின் அட்மாஸ்பியரும் கூட சற்று வித்யாசமாக தான் இருக்கு. உட்கார்ந்தால் நம்மை பாதி விழுங்கும் தனி தனி சோபா ஒவ்வொருவருக்கும் உள்ளது. எனக்கு முன் ஒருவர் உணவு வாங்கி கொண்டிருக்க நான் காத்திருக்கும் நேரத்தில் அங்கு ஒட்டியிருந்த தாள்களை கவனித்தேன்

எப்படி ஆர்டர் செய்யணும் என்கிற தலைப்பில் ( How to Order ) இருந்த போஸ்டர் பல விஷயங்களை உணர்த்தியது.

     

முதலில் எந்த பிரேட் என முடிவு செய்யணுமாம். அடுத்து சீஸ் போன்றவை தேவையா இல்லையா என முடிவெடுக்கணுமாம். என்ன சைஸ், காய்கறி எது சேர்க்கணும்  என முடிவெடுத்துவிட்டு குக்கீஸ், கூல் டிரிங்க்ஸ் போன்றவை சொல்லணுமாம்.

" ஏங்க நிஜமாவே சாண்ட்விட்ச் தவிர வேறு ஏதும் இல்லையா? " என்று கேட்க " வித வித சான்ட்விச் தான் இருக்கு" என்றார் சிப்பந்தி ! என்னென்ன இருக்கு என்று கேட்க அவர் சொன்ன பெயர்கள் எதுவுமே அவை என்ன வித சான்ட்விச் என்று உணர்த்தவில்லை

" உங்க கடையில் நன்றாக இருக்கும் வெவ்வேறு வித சான்ட்விச் 3 தாருங்கள் " என்று ஆர்டர் செய்து விட்டு காத்திருந்தேன்

3 வித சாண்ட்விச் தயார் செய்து தந்தார். அவர் தயார் செய்யும் விதம் பார்த்த படி இருந்தேன். மூன்றுக்கும் ஒரே வித பிரெட் தான் எடுத்தார். சீஸ் கட்டிகள் உள்ளே வைத்து சூடு பண்ணினார் (அப்போ தானே சீஸ் கட்டிகள் உருகி கரைந்து விடும் !) வெங்காயம் முட்டைகோசு உள்ளிட்ட சமாச்சாரங்கள் அனைத்துக்கும் தூவினார். பின் கடைசியாய் சேர்த்த விஷயம் தான் மூன்றையும் வேறு படுத்தியது

ஒவ்வொன்றையும் இரண்டாக கட் செய்து தர சொன்னேன் அப்போது தானே நாங்கள் மூவரும் மூன்றையும் ருசி பார்க்க முடியும்?


நாங்கள் சாப்பிட்ட 3 சாண்ட்விச்சில் இரண்டு சான்ட்விச் டேஸ்ட் மிக நன்றாக இருந்தது. என்னடா சாப்பாடு இது; சான்ட்விச்; கூல் ட்ரிங்க்ஸ் இதெல்லாம் அமெரிக்க வாழ்க்கைக்கு தானே ஒத்து வரும்; வயிறு எப்படி நிரம்பும் என்ற யோசனை முதலில் இருந்தாலும் வயிறு சீக்கிரமே அனைவருக்கும் நிரம்பி விட்டது. ஒரு சான்ட்விச் நிச்சயம் ஒருவருக்கு போதுமானது !

வழக்கமான சான்ட்விச் ( 6 இன்ச் அகலம்) நூறு ருபாய்; அதை போல இரு மடங்கு சான்ட்விச் - 160 ரூபாய் தான். குழுவாய் செல்லும்போது இப்படி பெரிய சான்ட்விச் வாங்கி கட் செய்து சாப்பிடுவது தான் புத்திசாலித்தனம் !

சாண்ட்விச்சை விட அதன் பின் சாப்பிட்ட சாக்லேட் குக்கீஸ் மிக சுவையாய் இருந்தது



நிற்க சாப்பிட்டு முடித்து கை கழுவ, வாஷ் பேசின் என்பதே அங்கு இல்லை. கேட்டால் டிஷ்யூ பேப்பரில் துடைத்து கொள்ளுங்கள் என்கிறார்கள். நமக்கு இதெல்லாம் சரிப்படாது; கை கழுவணும் என்றால் ரெஸ்ட் ரூமை காட்டி, அங்கு தான் வாஷ் பேசின் இருக்கு என்றனர்.

மொத்தத்தில் : வித்யாசமான அனுபவத்துக்காக ஒரு முறை செல்லலாம். நிச்சயம் ரீபீட் ஆடியன்ஸ் ஆக முடியாது !

***
முகவரி: 

ஹோட்டல் Subway
சேமியர்ஸ் ரோடு, நந்தனம்

18 comments:

  1. அடிக்கடி இந்த மாதிரி ஹோட்டலுக்குப் போனால் சீக்கிரம் சுகர் வந்துவிடும்....

    ReplyDelete
  2. Anonymous9:37:00 AM

    அது சேமியர்ஸ் சாலை சார்.

    ReplyDelete
  3. சிவா: தலைப்பில் ஒழுங்கா சேமியர்ஸ் சாலை என போட்டுட்டு பதிவின் உள்ளே சாமியர்ஸ் என போட்டுட்டேன். சுட்டி காட்டியமைக்கு நன்றி ! மாற்றி விட்டேன்.

    ReplyDelete
  4. இங்கு மூலைக்கு மூலை இருக்கும். அமெரிக்காவில் இல்லையா? நீங்கள் அமெரிக்கா return என்று கேள்விப்பட்டேன். :-)

    ReplyDelete
  5. பக்கதுல Boskin Robbins ஐஸ்கிரீம் கடை இருக்கே அங்க போன இன்னொரு பதிவு கிடைச்சிருக்குமே சார்..

    ReplyDelete
  6. அமெரிக்காவில் முக்குக்கு முக்கு இருக்கும் பாஸ்ட் புட் ரெஸ்டாரன்ட்களில் ஓரளவு ஆரோகியமான உணவு சப்-வே தான்.

    சில நேரங்களில் அங்குள்ள மருத்துவர்கள் கூட வயிற்று/கேஸ் பிரச்னை என்று போனால் சப்-வே சாப்பாட்டை! தான் recommend செய்வார்கள். ஏனென்றால் சப்-வே சாண்ட்விட்ச் பெரும்பகுதி பச்சை இலை தலை காய்கறிகளை கொண்டிருக்கும். இதில் ஒரே பிரச்னை சீஸ் மட்டும் தான். அதை தவிர்த்து விட்டால் இதை விட ஒரு நல்ல உணவு இல்லை.

    சப்-வே எனக்கும் என் பெரிய பெண்ணுக்கும் மிகவும் பிடிக்கும். நம்ம ஆர்டர் இப்படி தான் இருக்கும்.

    இட்டாலியன் பிரட் + டூனா (Tuna fish ) பில்லிங் + அங்கிருக்கும் அனைத்து இலை, தலை, காய்கறிகளுக்கு everything except cheese என்று சொல்லி விடுவேன். பசிக்கு தகுந்தாற்போல் 6 இன்ச் இல்லை 12 இன்ச் ஆர்டர் செய்து விடுவோம். நீங்கள் சொல்வது போல் அங்கும் 12 இன்ச் ஆர்டர் காசு கம்மி தான். இந்த சாண்ட்விச்சுடன் சேர்த்து ஒரு சிப்ஸ் பாக்கெட் + கோக் செம காம்பினேசன். I love it.

    சமீபத்தில் ஸ்கை-வாக் மாலில் சப்-வே சென்று ஒரு 6 இன்ச் சிக்கன் சான்ட்விச் ஆர்டர் செய்தேன். என்னமோ ஊறுகாய் வைப்பது போல் இத்துனூண்டு சிக்கன் பீசை உள்ளே வைத்தார்கள் (உடனே எனக்கு விவேக் காமெடி தான் நினைவுக்கு வந்தது. நீ கொடுக்கும் 5 ரூபாய்க்கு காக்கா கறி இல்லாமல் யானை கறியா போடுவாங்க...)

    அமெரிக்காவில் சப்-வேயில் சாபிட்டவர்களுக்கு நிச்சயம் இங்குள்ள சாண்ட்-விச் பிடிக்காது என்பது என் அபிப்பிராயம். அங்கு ஒரு 12 இன்ச் சான்ட்விச் 6-7 டாலர்கள் ஆகும் என்று நினைக்கிறன். சரியாக நியாபகம் இல்லை.

    அப்படியே மெக் டொனால்ட், KFC என்று ஒரு ரவுண்ட் போய் வாருங்கள். நாங்கல்லாம் அங்க எப்படி கஷ்டப்பட்டோம்! என்று அப்ப தான் உங்களுக்கு தெரியும். just kidding ...

    ReplyDelete
  7. @எஸ் சக்திவேல்...
    //இங்கு மூலைக்கு மூலை இருக்கும். அமெரிக்காவில் இல்லையா? நீங்கள் அமெரிக்கா return என்று கேள்விப்பட்டேன். :-)//

    மோகன் சொல்லவேயில்லை!

    ReplyDelete
  8. சப்வே என்பது மெக் டொனால்ட் , KFC மாதிரி ஒரு செயின் ஆப் ரெஸ்டாரன்ட் என்பது தெரியாது நண்பர்களே. ஆள் ஆளுக்கு அநியாயமா ஓட்டுறீங்க :)

    பதிவு எழுதியதால் தான் இதை தெரிஞ்சுகிட்டேன் என சமாதானம் பண்ணிக்குறேன் :)

    ReplyDelete
  9. Subway is certainly healthier than other fast food chains

    ReplyDelete
  10. சீச்சீ இந்த சாண்ட்-விச் புளிக்கும்! :)))

    ReplyDelete
  11. This is not a Hotel. "Hotel" to a place where one stays when one is away on business or on vacation. It's usually a place where you pay to have a room to sleep in.

    "Subway" is a global chain restaurent. Surprising that you are visiting this for the first time.

    ReplyDelete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. ரோட்டு கடையில ஒரு சொம்பு கம்மங் கூலு குடிச்சா சும்மா வயிறு தெம்முனு இருக்கும்.

    காசும் கம்மி ஆரோக்கியமும் கூட. . . .

     இது மாதிரி பாஸ்புட் கடைக்கு ஒரு முறை மட்டுமே ஆடம்பரத்தை அனுபவிக்க போகலாம் என்பது என் கருத்து.

    ReplyDelete
  14. Anonymous1:36:00 AM

    சப்வேவிற்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டமே உண்டு சார். டயட் பிரியர்களின் சொர்க்கம் அது. மிக பேமஸ்.

    ReplyDelete
  15. என்னதான் போர்டு முதல் அமெரிக்காவில் எப்படியிருக்கிறதோ அப்படியே கொண்டுவந்தாலும், வாஷ்பேசின் வைக்காமல் டிஷ்யூவில் துடைத்துக்கொள்ள சொல்வது அக்கிரமம்! இது பிரான்சைஸ் கடைகள் என்பதால் இன்னும் நிறைய வரும் என நினைக்கிறேன். அதே போல், வாஷ்பேசினும் கூடிய சீக்கிரம் வரும்..எப்போதும் சாப்பிடுவது வெஜ்ஜி டிலைட் தான். Footlong $5

    ReplyDelete
  16. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
  17. Subway is pure organic food.Their vegetables from their own farm.
    Very good and best food.

    ReplyDelete
  18. Anonymous10:21:00 PM

    சேமியர்ஸ் ரோடு? It is appropriate to mention it as பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சாலை. I know many people still call அண்ணா சாலை as Mount Road, however we need to change one day. As a blogger, you could take that first step.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...