Saturday, February 2, 2013

பாவிகளே, மனந்திரும்புங்கள்! - ராஜசுந்தரராஜன்

பாவிகளே, மனந்திரும்புங்கள்! By- ராஜசுந்தரராஜன்
--------------------------------------------------------------   -----------------------------------------


நேற்று இரவு நான் டாக்டரம்மா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது, “ஏம்மா, இந்தக் குழம்பு இன்னும் இருக்கா?” என்றாள் சௌந்தர்யா. “இருக்கு, ஆனா நீ தான் சாப்ட்டுட்டியே?” என்றார்கள் டாக்டரம்மா.

அப்புறம், நான் என் வீட்டுக்கு வந்து, ‘தண்ணி’ அடித்துக்கொண்டே, முகப்புத்தகச் சுவர்கள் ஒன்றில் முட்டிக்கொண்ட போது...

இன்று காலை, அப்படியொன்றும் சகுணத்தடை கண்டேன் இல்லை. மதியத்துக்கு என்று எனக்கு டாக்டரம்மா கட்டிக் கொடுத்த சாப்பாட்டுப் பொட்டலத்தை என் வீட்டில் கொண்டுபோய் வைக்காமல் பைக் சைடு-பாக்ஸ் உள்ளேயே விட்டு வைத்தேன். ஒரு சோடா பாட்டிலில் நீர் பிடித்து அதோடு சேர்த்து வைத்தேன். பாதி படித்திருந்த “வனசாட்சி” நாவலையும் எடுத்து வைத்தேன். பத்து மணிக்கு விருகம்பாக்கம் ‘தேவி கருமாரியம்மன்’ தியேட்டர் கேட் திறக்கையில் அங்கிருந்தேன். பத்துமுப்பது பேர்தான் வந்திருந்தார்கள். எல்லாரும் வாலிபர்கள். பள்ளிக்கூடத்துப் பையுடன் இரண்டு சிறுவர்களும்.

முதல் டிக்கெட் வாங்கித் திரும்பியவனிடம், சீட் நம்பர் என்ன என்றதற்கு C-20 என்றான். விலகி, வரிசையின் வாலில் போய் நின்றுகொண்டேன். அப்படியும் எனக்கு D-14 தான் கிடைத்தது. (நடுத்தியேட்டரில் இருந்து பார்த்தால்தான் எனக்குப் படம்பார்த்த திருப்தி வரும்). வெளியே டீக்கடையில் நின்றிருந்த பச்சைப் புடவையும் சினிமாவுக்கு வரவில்லை போலும். எல்லாம் பையன்கள்.

ஒரு டீ போட்டுவிட்டு, “வனசாட்சி” தேயிலைத் தோட்டத்திற்குள் புகுந்தேன். பத்து மணிக்கு டிக்கெட் எடுத்து பன்னிரண்டு மணி படம் தொடங்குவது வரை காத்திருக்க வேண்டும் என்றால், பக்கத்தில், ‘டாஸ்மாக்’ கண்ணடிக்கும்; கையைப்பிடித்து இழுக்கும். பிறகு படம் முடிவதற்குள் பசி வந்து, லோ ஸுகர் பிரச்சனை வரும். கட்டுச்சோறும் கட்டிக்கொண்டு நாவலும் கையுமாய் வந்தது இதற்காகத்தான்.

ஆனால் படம் தொடங்குவதற்குள் தியேட்டர் நிரம்பிவிட்டது. ஒரு பத்துப் பன்னிரண்டு பேர், “ஓத்தா, பாபு! ஒம்மாளே, எங்கே? லௌடே கே பால்!” என்று கத்திக்கொண்டு நுழைந்தார்கள். அப்படி, ஒரு கொண்டாட்டக் களை கட்டிவிட்டது! (‘சத்யம்’, ‘எஸ்கேப்’ என்று போனால், அறுக்கப் பிடித்து மஞ்சள்தண்ணீர் முழுக்காட்டிய ஆடுகள் மாதிரி ஒரு கூட்டம் வரும். வாய்விட்டுச் சிரிப்பதற்கும் செலவு வைப்பார்கள்!)

அரவிந்த்சாமி பாதிரியாருக்குப் படிக்க வந்து சேர, “சைத்தான் மூத்தமகன்; இயேசு கிறிஸ்து இளையமகன்” என்று அர்ஜுன் வசனம் பேசிப் படம் தொடங்குகிறது. ‘தொடக்கத்திலேயே தகவல் பிழையா?’ என்று யோசிக்க வேண்டா. சைத்தான் பொய் சொல்லக் கூடியவன். படத்தில் சைத்தான் பாத்திரத்தில் அர்ஜுன்.

kadal
இடைவேளையில், கூட வந்தவனை கூட்டிக்கொண்டு வந்தவனை எல்லாம் குறை சொல்லிக்கொண்டு இருந்தார்கள் மக்கள். நேற்றிரவு முகநூல் சுவரொன்றில் முட்டியது எனக்கு ஞாபகம் வந்தது:

||இனிக்கும்னு நெனச்சி கடல் அள்ளிக் குடிச்சேன்.
என் ஞானம் கரிக்க வாய் துப்பி முடிச்சேன்.||

என்று ஒரு கவிஞர் சுவர்ப்படுத்தி இருந்தார். அதற்கு நான்: |‘கடல்- ' அப்பொ நல்லாவே இல்லியா?| என்று கருத்தூட்டம் இட்டேன். அவர் உடனே போனில் வந்து, “இது குசும்புதானே?” என்றார். “இல்லீங்க, நீங்க ஃபீல்டுல இருக்கிறதால, வாய்ப்புக் கிடைச்சு முதல்லயே பார்த்துட்டீங்களோன்னு...”. “ஸாரி, சுந்தர்ராஜன், உங்க மேல எனக்கு மரியாதை உண்டு.” வருந்தி, |“மன்னிக்க வேண்டுகிறேன்!”| என்று மேலும் ஒரு கமென்ட் போட்டேன்.

ஆனால், ஒரு நிமித்த மொழி உண்டு. பூனை தன் வேலையாகத்தான் குறுக்கே போகிறது. நாம்தான், ‘எதையோ மறந்துவிட்டோம்; அல்லது போகிற காரியம் கூடிவராது’ என்று கற்பித்துக் கொள்கிறோம். இதைத்தான் கலை இலக்கியத்தில் la mort de l'autre என்கிறோம். அவர் ஏதோ கவிதை எழுத, நான் அதை, ‘கடல்’ திரைப்பட விமர்சனம் என்று தவறாகப் புரிந்துகொண்டதற்கு வருத்தப் பட்டாலும், ‘கவிஞர் வாய்ச்சொல் பொய்க்காதே. அதிலும் இவர் பாரதியைப் போல் கோபக்காரராக வேறு இருக்கிறாரே!’ என்று மறுகிக் குடிபோதை இறங்கி நொம்பளப்பட்டேன். அது மெய்யாகிவிட்டது.

எழுத்தாளர் ஞாநி, ‘இங்லீஷ் கிஸ்’ விளம்பரம் செய்திருந்தது போல படத்தில் ஒன்றும் இல்லை. கார்திக்கும் ராதாவும் முதல் படத்தில் இணைந்து நடித்ததால், பிள்ளைகள் அப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று உணர்ந்திருப்பார்கள் போலும். “கடலில் தூக்கிப் போட்டுக் கொல்கிற பாவம், துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிற பாவம், கத்தியால் வெட்டிக் கொல்கிற பாவம்” என்று வசனம் வருகையில், “இந்தப் படத்தைப் பார்க்க வந்ததே பாவம்!” என்று ரசிகர்களின் கூச்சல். நாயகியின் ஃப்ளாஷ் பேக் காட்சியில், அவள் அலறுவதற்கு முன்பே ரசிகர்கள் அலறுகிறார்கள். அதோடு சாரைசாரையாக வெளியேறவும் தொடங்கிவிட்டார்கள். அடுத்த காட்சிக்குக் காத்திருந்த மக்களை ஊளை கூட்டிக் கலாய்த்ததையும் கண்டேன்.

வீட்டுக்கு வந்து சோற்றுப் பொட்டலத்தைத் திறந்தால், நான் ஆசைப்பட்டது போல கருவாட்டுக் குழம்பு இல்லை. பருப்புக் குழம்பு; அதிலும் வெண்டைக்காய் போடப்பட்டிருந்தது.

நீங்கள் ஒரே நேரத்தில் தேவனுக்கும், பணத்திற்கும் பணிபுரிய முடியாது. (மத். 6:24)
***
தொடர்புடைய பதிவுகள் 



தொல்லை காட்சி- சிவகார்த்தி - லொள்ளு சபா -சூப்பர் சிங்கர் T  20 பைனல் 




7 comments:

  1. ஆர்வமூட்டும் "இன்டர்நெட்" தகவல்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/interest-internet-news.html

    ReplyDelete
  2. ஆர்வமூட்டும் "இன்டர்நெட்" தகவல்கள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/interest-internet-news.html

    ReplyDelete
  3. //“ஓத்தா, பாபு! ஒம்மாளே, எங்கே? லௌடே கே பால்!”//

    ஆகக்கா..

    ReplyDelete
  4. அலெக்ஸ் பாண்டியன், கடல், டேவிட் அனைத்திலிருந்தும் தப்பிவிட்டேன். சந்தோஷம்!!!

    ReplyDelete
  5. "எங்கே? லௌடே கே பால்!”//

    லவடகாய் பால் என்பதே சரி . .



    கொஞ்சம் சுருக்கினால் . .

    LK பால்



    அண்ணே ஏன் இப்டி எல்லாம் . .

    ReplyDelete
  6. 'லவ்டே கே பால்' என்பதற்கும் 'லவ்டே கீ பால்' என்பதற்கும் சின்ன வித்யாசம் இருக்கிறது. ஆனால் 'லவடகாய் பால்' என்றால் இன்னதென்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. (ஹிந்தி ராஷ்ட்ரபாஷா தேரியவன் நான். மட்டுமல்ல, வட இந்தியாவில் ஏழு ஆண்டுகள் பணி புரிந்தவனும் கூட). ஆனால் நான் இங்கே எழுதி இருப்பது அந்தத் தியேட்டரில் என் செவியில் விழுந்த ஒரு வாசகம். அது இலக்கணச் சுத்தமா அல்லவா என்று யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை அல்லவா? என்றாலும், நண்பர் குரங்குபெடல், நன்றி!

    ReplyDelete
  7. ஹிந்திய்ல் பால் என்றால் மயிர் என்று அர்த்தம்..முதல் வார்த்தைக்கு அர்த்தம் கருவிலிருக்கும் குழ்ந்தைக்கும் தெரியும்!

    அது மருவி, சென்னையில் 'லவ்டே கோபால்' ஆகிவிட்டது...கோபாலன்கள் மன்னிக்கவேண்டும்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...