Thursday, June 14, 2012

டில்லி-இந்திராகாந்தி இல்லத்தில் எங்களின் 1 நாள்

  
மறைந்த பிரதமர் இந்திரா  இல்லத்தில்
டில்லிக்கு நாங்கள் சென்ற மே மாதம் மிக அதிக வெய்யில் காலம் என்பதால் பகல்நேரத்தில் முழுதும் குளிர் சாதனம் செய்யப்பட்ட இடங்களை தேர்ந்தெடுத்து பார்க்க சென்றோம். அப்படி இந்திரா காந்தி அவர்களின் வீட்டை பார்க்க நாங்கள் பகலில் செல்ல காரணம் அது முழுதும் ஏ. சி செய்யப்பட்ட வீடு !வீடு மிக குறுகிய அறைகள் கொண்டது என்பதால் கூட்டம் மிக அதிகமாக இருக்கும் !  காலை பத்து மணிக்கு இந்த வீட்டை  பார்வையிட அனுமதிக்கிறார்கள். திறக்கும் போதே சென்று விடுவது நல்லது. மதியத்துக்கு மேல் பார்வையாளர்கள் வெளியே வரை கியூவில் நிற்பதை பார்க்க முடிகிறது.

உள்ளே நுழையும் போது இந்த வீட்டுக்கு எப்போது குடி வந்தனர் என்கிற விபரம் உள்ளது. கூடவே வீடு குறித்த இந்திராவின் நினைவுகளும்:

"வீடு என்றதும் நினைவுக்கு வருவது எனது குடும்பமல்ல; போலிஸ் வந்து என்னை இங்கு கைது செய்ததும், இங்கு பல அரசியல் தலைவர்களுடன் நடந்த கார சாரமான உரையாடல்களும் தான் " என்கிறார் இந்திரா !

1959-ல் காங்கிரஸ் தலைவர் ஆனது முதல் 1967-ல் முதல் முறை பிரதமர் ஆனது- பின் தேர்தலில் நின்று தோற்றது- மீண்டும் வென்றது- சுட்டு கொல்லப்பட்டது அனைத்தும் படங்களாய் விரிகிறது ...

அங்கிருந்த ஏராள புகை படங்களில் குறிப்பிடத்தக்க சில மட்டும் உங்கள் பார்வைக்கு :

வித விதமான Mood-களில் பிரதமர் இந்திரா காந்தி  :




 
படங்களை பார்க்கும் மக்கள்



நேரு, இந்திரா, ராஜீவ் - 3 பிரதமர்கள்  
இந்திராவை கேலி செய்து பத்திரிக்கையில் வெளிவந்த கார்ட்டூன்களும் அங்கு இருந்தன






 தன் கணவருடன்

இரு முறை பிரதமர் ஆனபோது அவர் கையெழுத்திட்ட கோப்பு:























ராஜீவ் ஒரு மிக சிறந்த புகைபடக் காரர் என்பதை அறிந்து ஆச்சரியத்தில் மூழ்கினேன். ஒரு professional புகைப்படக்காரர் எடுத்தது போல் உள்ளது இவர் எடுத்த  படங்கள் ! மாதிரிக்கு இதோ இரு படங்கள் :


பிரியங்காவுடன் இந்திரா
















ராஜீவ் திருமணமும், இளமை கால படமும் :



 


அங்கு வைத்திருந்த பல பத்திரிக்கை செய்திகளில் தமிழுக்கு தனி இடம் இருந்தது :





*************
இனி பிரதமர் இந்திராவின் வீட்டு அறைகளை காணலாம் :


டைனிங் ஹால்

நூலகம் 

டிரெஸ்சிங் ரூம்
ராஜீவ் காந்திக்கு பெயர் வைக்க எவ்வளவு பெயர்கள் தாத்தா நேரு பரிந்துரைத்துள்ளார் பாருங்கள் :


இந்திராவுக்கு நேரு எழுதிய கடிதங்கள் நாம் பள்ளியில் பாடத்தில் வாசித்திருப்போம். இங்கு ராஜீவுக்கு அவர் அம்மா இந்திரா எழுதிய கடிதம்; ராஜீவ் எழுதிய பதில் இவற்றை பார்க்க முடிகிறது. ராஜிவின் கடிதம் குழந்தை கிறுக்கலில் உள்ளது.

குழந்தை கிறுக்கலில் ராஜிவின் கடிதம்

அதற்கு இந்திரா எழுதும் பதிலில் " ஏன் சுருக்கமாய் பதில் எழுதினாய்? விரிவாய் எழுதலாமே?" என்று எழுதி உள்ளார். " என்ன நினைத்தாலும் கடிதத்தில் எழுது. பயப்படாதே"

ராஜீவ் சிறு வயதிலேயே residential பள்ளியில் தங்கி படித்துள்ளார். அப்போது எழுதிய கடித போக்கு வரத்து தான் இவை. ஒரு கடிதத்தில் அம்மா இந்திரா ராஜிவுக்கு எழுதுகிறார் " நீ இங்கு வந்து விட்டு சென்ற போது உன் செருப்பை விட்டு விட்டு போய் விட்டாய். அதை நீ இருக்கும் ஊருக்கு வரும் ஒரு நபரிடம் அனுப்புகிறேன். பெற்று கொள் "

இதனை வாசித்தபோது என் அம்மா இதே போல் யாரிடமாவது நான் மறந்த பொருளை கொடுத்து அனுப்பியது நினைவுக்கு வந்தது !

இந்திரா ராஜிவுக்கு எழுதிய கடிதம் ஒன்று

துவக்கத்தில் மகன்கள் residential பள்ளியில் படித்தாலும் பின் அங்கிருந்து அழைத்து வந்து விடுகிறார் இந்திரா. இது பற்றி இப்படி எழுதி உள்ளார் :

" சஞ்சய்/ ராஜீவ் பள்ளி முடிக்கும் வரை பொது வாழ்வில் ஒதுங்கி இருக்க எண்ணியுள்ளேன். என் இளமை காலத்தில் அம்மா- அப்பா இருவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை நான் மிக மிஸ் செய்தேன். என் குழந்தைகள் அதே கஷ்டம் படக்கூடாது "  

இந்திரா பிரதமரான பின் அவரது ஒரு நாள் engagements-அப்போதைய  மேனுவல்  டைப் ரைட்டிங் மெஷினில் அடித்ததை ஒரு மாதிரிக்கு வைத்துள்ளனர். பிரதமர் ஒருவரின் தினசரி நிகழ்வை பார்க்க முடிவது ஆச்சரியமாய் தான் உள்ளது .

இது அவரது மறைந்த தினத்தில் நடக்க இருந்தவை.. எனவே இவற்றில் எதுவும் நடக்க வில்லை என்பது சோகம் !



சுட்டு கொல்லப்பட்டபோது அணிந்திருந்த புடவை ரத்த கறையுடன் வைத்துள்ளனர். அப்போது அணிந்த அனைத்து பொருட்களும் கண்ணாடிக்குள் உள்ளது



இந்திரா இல்லத்தில் எடுத்த வீடியோ இதோ:



*********
சுட்டு கொல்ல பட்ட இடத்துக்கு செல்லும் முன் உள்ள போர்டு :



சுட்டு கொல்லப்பட்ட அதே இடத்தில் இந்திரா முன்பு நடந்த போது எடுத்த படம்



இந்த இல்லத்திலிருந்து அக்பர் ரோடு இல்லத்துக்கு இந்திரா தினமும் காலை ஒன்பது மணி அளவில் நடந்து செல்வாராம். இரண்டுக்கும் இடையே ஒரு கிலோ மீட்டர் தூரம் ! அப்படி நடந்து செல்லும் போது தான் அவர் சுட்டு கொல்லபட்டார்.

கண்ணாடி உள்ள இடத்தில் தான் அவர் சுடப்பட்டார்
இந்திரா இல்லத்தில் அவரது புகை படங்களும் (பத்து ரூபாய்) அவர் படம் போட்ட டி ஷர்ட்டுகளும் ( விலை 600 !) விற்கப்படுகிறது.

இந்த இல்லத்தை பொறுமையாய் பார்வையிட இரண்டு மணி நேரம் ஆகும் !

*******
டில்லி துணுக்ஸ்:

டில்லியில் கார்கள் தான் மிக மிக அதிகம். 80 % கார்களும் 20 % பைக்குகளும் இருக்கும் போலும் ! இதற்கு முக்கிய காரணம் கிளைமேட் தான் என்கிறார்கள். மிக அதிக வெய்யில், மிக அதிக மழை இவை இரண்டும் மாறி மாறி இருப்பதால் பலர் காரை விரும்புகிறார்கள்

ரோடுகள் மிக மிக பெரியதாய் உள்ளது. சிக்னல்கள் நிறைய இருந்தாலும் அவை சீக்கிரம் கிளியர் ஆகி விடுகிறது. சென்னையில் சில சிக்னல்களில் இரண்டு மூணு நிமிஷமெல்லாம் காத்திருக்க வேண்டும். தில்லியில் ஒரு நிமிஷத்துக்கு மேல் எந்த சிக்னலிலும் நிற்கலை !

கார் டிரைவர் மட்டுமல்லாது முன்னே அமரும் நபரும் அவசியம் சீட் பெல்ட் போடணும். இல்லா விடில் பைன் ஐநூறு ரூபாய். இதனால் அனைவரும் சீட் பெல்ட் போடுகின்றனர். மிக நல்ல விஷயம் இது !

42 comments:

  1. டெல்லி சென்று வந்த உணர்வு...

    ReplyDelete
  2. அற்புதமான பதிவு. நேரில் கண்ட நிறைவு.

    ReplyDelete
  3. இந்திரா இல்லம் பற்றிய தகவல்கள் இதுவரை அறியாதது. ஒரு நிருபரின் லாகவத்தோடு இம்மாதிரி விஷயங்களை எக்ஸ்க்ளூஸிவ்வாக பதிவு செய்கிறீர்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. இந்திரா இல்லம் பற்றிய தகவல்கள் இதுவரை அறியாதது. ஒரு நிருபரின் லாகவத்தோடு இம்மாதிரி விஷயங்களை எக்ஸ்க்ளூஸிவ்வாக பதிவு செய்கிறீர்கள். வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. நல்ல வர்ணனை.

    தில்லியின் சாலைகள் பற்றிய தங்களின் அவதானிப்பு மிகவும் சரியானதே. தில்லியின் (குறிப்பாகப் புதுதில்லியின்) சாலைகள் மிகவும் அகலமானவை. பழைய தில்லியின் சாலைகள் சில இடங்களில் குறிகியவையே.

    தில்லியில் கார்களின் எண்ணிக்கை 2000-ஆவது ஆண்டுக்குப் பின் மிகவும் அதிகம். அதற்கு முன் இருசக்கரவாகனங்கள், அதிலும் பைக்-களை விட ஸ்கூட்டர்கள் அதிகம். பெரும்பாலானவை ‘பஜாஜ்’ நிறுவனத்தைச் சேர்ந்தவையே. காரணம் அவற்றைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் தில்லியை ஒட்டியே இருந்ததால் கூட இருக்கலாம். LML வெஸ்பா போன்றவை ஒரு சதவிகிதம் கூட இருந்திருக்காது. மொபெட்-கள் லட்சத்தில் ஒன்றுகூட இருக்காது. இருந்திருந்தாலும் அவற்றைப் பயன்படுத்துபவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்.

    தில்லி வந்த புதிதில் மொபெட்களை வைத்தே தமிழர்களை அடையாளம் கண்டதும் உண்டு.

    ReplyDelete
  6. இந்திரா - பெயரைக் கேட்டாலே நமக்குள்ளும் ஒரு கம்பீரம் வரும். இன்னும் கொஞ்ச நாள் இருந்திருக்கக் கூடாதா என்று ஏங்க வைப்பவர். Lovable Dictator!!

    இந்திரா காந்தி இல்லம் - புதிய தகவல். இந்திரா - ராஜீவ் கடிதங்கள் சுவாரஸ்யத் தகவல். டில்லிக்கு ரா(ஜா)ணின்னாலும், பிள்ளைக்கு அம்மாதான்!!

    டில்லியில் சீட்-பெல்ட் கட்டாயம் - நல்ல விஷயம். நம்மூரில் ஹெல்மெட்டும், சீட் பெல்டும் எவ்ளோ விழிப்புணர்வு இருந்தாலும் போட யோசிக்கிறாங்க. இதுல தனியார் மருத்துவமனைகளின் சதியும் இருக்குமோன்னெல்லாம் யோசிக்கத் தோணுது!! (ஓவரா இருக்கோ?)

    ReplyDelete
  7. சஞ்சய்/ ராஜீவ் பள்ளி முடிக்கும் வரை பொது வாழ்வில் ஒதுங்கி இருக்க எண்ணியுள்ளேன். என் இளமை காலத்தில் அம்மா- அப்பா இருவரும் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை நான் மிக மிஸ் செய்தேன். என் குழந்தைகள் அதே கஷ்டம் படக்கூடாது "

    ----மென்மையான தாய்மை! ரசித்தேன்

    ReplyDelete
  8. -இந்த வீட்டில் வைத்து எழுபதுகளில் இந்திரா காந்தியை நேரில் சந்தித்ததுண்டு..... நானல்ல, என் தந்தை!

    -ராஜீவ் திருமணப் புகைப்படம் அந்தக்கால ஹிந்தித் திரைப் படக் காட்சி போல இருக்கிறது!

    -பத்திரிகைச் செய்திகளிலோ, கார்ட்டூன்களிலோ 'தமிழ்' இல்லையா?

    -நூலகம்.... ஹம்ம்மம்ம்ம்மா...

    -சிக்னல் விஷயமும் சீட் பெல்ட் விஷயமும் தமிழகத்திலும் பின்பற்றப் பட வேண்டும்!

    ReplyDelete
  9. டெல்லி சென்று பார்த்த வந்த உணர்வுகளை ஏற்படுத்தியது புகைப்படங்கள் :)

    ReplyDelete
  10. சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம், படங்கள், தகவல்கள்!!! பகிர்வுக்கு மிக்க நன்றி.

    /முன்னே அமரும் நபரும் அவசியம் சீட் பெல்ட் போடணும்./

    பெங்களூரிலும்! சாலையில் போலீஸ் தலைகளைக் கண்டதும் அவசரமாக பெல்ட் மாட்டும் காட்சிகளும் சகஜமாகக் காணக் கிடைக்கும்.

    ReplyDelete
  11. வாவ்..அரிய புகைப்படங்கள்.எங்களியும் இந்திராகாந்தி இல்லத்துக்கு அழைத்துச்சென்று காட்டிய உணர்வை ஏற்படுத்திய பகிர்வு.நன்றி!

    ReplyDelete
  12. அருமையாய் இந்திராகாந்தி அவர்களின் இல்லத்தை படங்களுடன் காட்சிப்படுத்தியதற்குப் பாராட்டுக்கள்...

    ReplyDelete
  13. ஆறு மாதங்களுக்கு முன்பு நானும் அங்கு வந்திருந்தேன்
    அம்மையார் அவர்கள் சுடபட்டு வீழந்த இடத்தைப் பார்க்கையில்
    நிச்சயம் யாராலும் கண்கலங்காமல் இருக்க முடியாது
    நேரடியாகப் பார்ப்பதைப்போல மிக அழகாக
    படங்களுடன் பதிவைத் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி

    ReplyDelete
  14. வணக்கம் உறவே
    உங்களின் அருமையான இடுகையை இன்னும் பல பார்வையாளர்கள் படிக்க இங்கே இணைக்கவும்
    http://www.valaiyakam.com/

    முகநூல் பயணர் கணக்கின் மூலம் வலையகத்தில் நீங்கள் எளிதில் நுழையலாம்.

    5 ஓட்டுக்களை உங்கள் இடுகை பெற்றவுடன் தானியங்கியாக வலையகம் முகப்பில் உங்கள் இடுகை தோன்றும்.

    உங்கள் இடுகை பிரபலமடைய எமது புதிய ஓட்டுப்பட்டையை உங்கள் தளத்தில் இணைக்கவும்:
    http://www.valaiyakam.com/page.php?page=votetools

    நன்றி

    வலையகம்
    http://www.valaiyakam.com/

    ReplyDelete
  15. சங்கவி: நன்றி

    ReplyDelete
  16. அரபாத்: மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  17. யுவா: //ஒரு நிருபரின் லாகவத்தோடு இம்மாதிரி விஷயங்களை எக்ஸ்க்ளூஸிவ்வாக பதிவு செய்கிறீர்கள்.// உங்களிடமிருந்து இந்த வரிகள் வரும்போது மிக மகிழ்ச்சியாக உள்ளது. மனம் திறந்து பாராட்டியமைக்கு நன்றி

    ReplyDelete
  18. வேங்கட சீனிவாசன்: டில்லி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் பகிர்ந்தமைக்கு மிக நன்றி

    ReplyDelete
  19. ஹுசைனம்மா said
    //தனியார் மருத்துவமனைகளின் சதியும் இருக்குமோன்னெல்லாம் யோசிக்கத் தோணுது!!
    ***
    தனியார் மருத்துவமனை எல்லாம் இல்லை ஹுசைனம்மா . போலிஸ் காரர்கள் காசு பண்ண வழி. எப்போதும் பிடித்தால்
    போட்டுடுவாங்க. எப்போதாவது பிடித்தால் போட மாட்டாங்க. அப்போதான் போலிசும் காசு பாக்கலாம்

    //டில்லிக்கு ரா(ஜா)ணின்னாலும், பிள்ளைக்கு அம்மாதான்!!//

    சரியா சொன்னீங்க. நான் சொல்ல நினைத்ததை நீங்க அழகான வார்த்தையில் சொல்லிட்டீங்க

    ReplyDelete
  20. உமா: உண்மைதான் நன்றி

    ReplyDelete
  21. ஸ்ரீராம்: அட உங்கள் தந்தை இந்த இல்லத்தில் இந்திராவை சந்திதுள்ளாரா !! ஆச்சரியம் தான் !

    //பத்திரிகைச் செய்திகளிலோ, கார்ட்டூன்களிலோ 'தமிழ்' இல்லையா?//

    பத்திரிக்கையில் நிறைய தமிழ் செய்தி இருந்ததே புகை படத்தில் கவனிக்கலையா?

    ReplyDelete
  22. வரலாற்று சுவடுகள் நன்றி நண்பா

    ReplyDelete
  23. ராமலட்சுமி: பெங்களூரு நிலை பகிர்ந்தமைக்கு நன்றி. டில்லியில் அநேகமாய் எல்லாரும் seat belt போட்டுடுறாங்க

    ReplyDelete
  24. சாதிகா: மிக நன்றி மகிழ்ச்சி

    ReplyDelete
  25. ராஜ ராஜேஸ்வரி: மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  26. நன்றி ரமணி: தங்கள் அனுபவம் சொன்னதற்கும் தமிழ் மண ஓட்டுக்கும்

    ReplyDelete
  27. நல்ல வர்ணனை மோகன். பள்ளி விடுமுறை விடும் காலங்களில் இங்கே அதிக கூட்டமிருக்கும். பல ஊர்களிலிருந்தும் இங்கே சுற்றுலா வருவதால்.

    மற்ற நாட்களில் அவ்வளவு கூட்டம் இருப்பதில்லை. ராஜீவ் காந்திக்கு என்றே ஒரு அறை ஒதுக்கி அவரது பரிசுப் பொருட்கள், பெட்டி, இறந்தபோது அணிந்திருந்த உடை ஆகியவையும் வைத்திருப்பார்கள்.....

    அவரது அலுவல அறை, உணவருந்துமிடம் என எல்லாவற்றிலும் இந்திரா காந்தியின் நினைவுகள் படிந்திருக்கும்....

    ReplyDelete
  28. திரு மோகன் குமாரின் மற்றொரு அருமையான பதிவு. இப்போது நம்மை டில்லி திருமதி இந்திரா காந்தி அவர்கள் இல்லத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
    நன்றி திரு மோகன் குமார்.

    இந்த அருமையான பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  29. Anonymous1:51:00 AM

    நேரில் கண்ட நிறைவு மோகன்...
    டிக்கட் காசு அனுப்பி வைக்கிறேன்...-:)

    ReplyDelete
  30. மோகன்,

    ஆஹா , ஒரே சுற்றுலா ஓஹோனு பதிவா, வரிசையா சுற்றுலா வச்சே பதிவ போட்டு ஜமாய்க்கிறிங்க, இந்த வேலை எல்லாம் எனக்கு செய்ய வரலையே:-((

    அடுத்து இப்படியாக பதிவுகள் வரும் எனபார்க்கிறேன்,

    நேரு இல்லம் மோத்தி பவனில் எங்களின் ஒரு நாள்,

    காந்தி நினைவில்லம்-பிர்லா ஹவுசில் எங்களின் ஒரு நாள்,

    இந்திரா நினைவிடம் ஷக்தி காட்டில் எங்களின் ஒரு நாள்,

    மும்தாஜ் நினைவில்லம் -தாஜ்மஹாலில் எங்களின் ஒரு நாள்,

    குதுப்மினாரில் எங்களின் ஒரு நாள்,

    ஜந்தர் மந்தரில் எங்களின் ஒரு நாள்,

    ஒரு நாள் போதுமா ...இன்றொரு நாள் போதுமானு பாடும் மோகநாத பாகவதரா நீர் :-))

    ReplyDelete
  31. அருமையானதொரு பகிர்வு.. அவர் கொல்லப்பட்ட இடத்தைப் பார்க்கறப்ப மனசு கலங்குது..

    ReplyDelete
  32. வெங்கட்: நன்றி. ராஜீவ்க்கு ஒரு அறை இருந்ததை கண்டேன். அங்கு எடுத்த படங்களும் பகிர்ந்துள்ளேன். இருந்தாலும் தனியே எழுத வில்லை. நீங்கள் பகிர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  33. ரத்னவேல் ஐயா: மிக நன்றி.. முக நூலில், உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்தமைக்கும்

    ReplyDelete
  34. ரெவரி: மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  35. திண்டுக்கல் தனபாலன் சார்: மிக நன்றி

    ReplyDelete
  36. வவ்வால்: உங்கள் கமன்ட் மிக சிரிக்க வைத்தது. ரசித்தேன்

    பெரிய அளவு செலவு பண்ணி டூர் போயிட்டு உங்களை எல்லாம் சும்மா விடலாமா? நானெல்லாம் ஸ்கூல்
    காலத்திலேயே நான் பாத்தா படம் தான் சூப்பர் என நண்பனிடம் சொல்லி திரிந்த ஆள். இப்போ பதிவர் வேற ஆயாச்சு.

    ப்ளாகில் வெறும் பயண கட்டுரையாய் இல்லாம கலந்து கட்டி தர ரொம்ப சிரமபடுறேனாக்கும் :)

    எல்லா இடத்துக்கும் "எங்களின் ஒரு நாள்" தலைப்பு வைக்க முடியாது. தலைப்புல்லாம் மாறி மாறி , எல்லாரும் உள்ளே வர வைக்கிற மாதிரி டெரர் ஆக வைக்கணும். வெயிட் அண்ட் சி. :))

    ReplyDelete
  37. அமைதிசாரல்: உண்மை தான். சரியாய் சொன்னீர்கள் நன்றி

    ReplyDelete
  38. டெல்லியை பற்றி பல செய்திகள். இந்திராகாந்தியின் வீடு...நல்ல ஒரு பயணக்கட்டுரை வாசித்த எண்ணத்தை கொடுத்தது நன்றி.

    ReplyDelete
  39. பல்வேறு தகவல்களும் படங்களும் நன்று. தொடருங்கள்...

    ReplyDelete
  40. இந்திரா காந்தியின் இல்லம் கணடுகொள்ளக் கிடைத்தது.பல தகவல்கள்,புகைப்படங்கள் கண்டுகொண்டோம்.

    எனது அப்பா நேரு இந்திராபுகைப்படம் பிரேம்போட்டு மாட்டி வைத்திருந்தார்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...