சென்னையில் மாபெரும் பதிவர் சந்திப்பு
சென்னையில் மிகபெரிய பதிவர் சந்திப்பிற்கு ஏற்பாடாகி வருகிறது. நண்பர்கள் மதுமதி, பாலகணேஷ் ஆகியோர் பெரியவர்கள் சென்னைப்பித்தன், ராமானுஜம் ஐயா ஆகியோர் வழிகாட்டுதலுடன் விழா ஏற்பாடுகள் செய்து வருகிறார்கள். விழா ஏற்பாடுகள் குறித்து சந்திப்பு இவ்வார இறுதியில் நடந்தது. முதலில் ஆகஸ்ட் 19- நடப்பதாக இருந்த விழா அன்று ரம்ஜான் என்பதால், இஸ்லாமிய தோழர்களும் கலந்து கொள்ளும் வண்ணம் ஆகஸ்ட் 26- ஞாயிறுக்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து மதுமதி அவர்களின் பதிவு இங்கே வாசிக்கலாம் !
ஏற்கனவே ஆகஸ்ட் 19 -க்கு முன்பதிவு செய்த வெளியூரில் வசிக்கும் நண்பர்களும் கூட, இந்த காரணம் மிக genuine என்பதால் ஒப்புக்கொண்டு ஆகஸ்ட் 26- விழாவில் கலந்து கொள்ள இசைந்துள்ளனர். விழாவிற்கான இடம் finalize ஆனதும் ஓரிரு நாட்களில் விரிவான அறிவிப்பு வெளியாகும். சென்னை பதிவர்களும், வெளியூர் வாழ் பதிவர்களும் மிக அதிக அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விழா சிறப்பாய் நடப்பது நம் ஒவ்வொருவர் கையிலும் உள்ளது. அவசியம் கலந்து கொண்டு விழாவை சிறப்பியுங்கள். முழு விபரங்கள் விரைவில் வெளியாகும் !
பார்த்த படம் - Guzaarish (ஹிந்தி)
ரித்திக் ரோஷனும் ஐஸ்வர்யா ராயும் இணைந்து நடித்த படம் இது
மாஜிக் நிபுணரான ரித்திக் ஒருமுறை உயரத்தில் இருந்து விழுந்து, தலைக்கு கீழே உடல் முழுதும் இயங்காமல் ஆகி விடுகிறார். ரேடியோ ஜாக்கி ஆக இருந்து பலருக்கு ஊக்கம் தந்தாலும், அவரின் வாழ்க்கை அவருக்கே மிக கசப்பாய் உள்ளது. கருணை கொலை செய்ய சொல்லி இரண்டு முறை விண்ணப்பித்து இரண்டு முறையும் கோர்ட் நிராகரிக்கிறது. அவரை பார்த்து கொள்ளும் நர்ஸ் ஐஸ்வர்யாவே அவரை கருணை கொலை செய்கிறேன் என்று சொல்வதுடன் படம் நிறைகிறது
கதை எழுதி இயக்கிய சஞ்சய் லீலா பன்சாலி. மிக மிக பாராட்ட பட வேண்டியவர். அடுத்து ரித்திக். என்னா மாதிரி நடிப்பு. பிரபு தேவா போல் நடனம் தெரிந்த ரித்திக்கை இந்த பாத்திரத்தில் பார்க்க ஆச்சரியமாக உள்ளது.
படத்தில் இரண்டு காட்சிகள் மனதை என்னவோ செய்து விடும். ஒரு காட்சியில் ஈ ரித்திக் முகத்தில் உட்கார, உடலில் எந்த பாகமும் இயங்காததால் அதை விரட்ட முடியாமல் ரித்திக் மனம் நொந்து போகும் காட்சி. போலவே ஒரு முறை கூரை ஒழுகி ஒவ்வொரு சொட்டாய் ரித்திக் முகத்தில் இரவு முழுதும் சொட்ட, ரித்திக் குளிரில் நடுகிய படி நகர முடியாமல் இருக்கும் காட்சி !
நல்லவேளை இறுதியில் ரித்திக் இறப்பதை காட்டாமல் முடிக்கிறார்கள் ; படம் முடியும் போது மனம் கனத்து போகிறது.
ரசிக்கும் பாட்டு
இசை அமைப்பாளர் இமான் வர வர மிகவும் கவர்கிறார். மைனாவிலிருந்து இவர் ஒரு Form-க்கு வந்துட்டார் என்று தான் சொல்லவேண்டும். அழகான, எளிமையான ஒரு மெட்டு. ஈர்க்கும் விதத்தில் சாதாரண இசை -இவற்றுடன் பாடல்களை ஹிட் செய்து விடுகிறார்.
சமீபத்தில் நான் அடிக்கடி கேட்பது மனம் கொத்தி பறவை பாடல்களே. ஒன்று குத்து பாட்டு அல்லது நல்ல மெலடி - என அனைத்துமே அருமை ! உதாரணத்துக்கு ஜல் ஜல் ஜல் ஓசை என்கிற இந்த பாட்டை பாருங்கள்.
பக்கத்து ஊரில் ஒரு கலவரம் நடக்கிறது. அங்கு தவிக்கும் ஹீரோயினை ஹீரோ சிவகார்த்தி சென்று கூட்டி கொண்டு அவளது ஊருக்கு அழைத்து வருகிறார். இந்த பேக் ரவுண்டில் பாடல் ஆரம்பிப்பதே வித்யாசமாய் உள்ளது. பின் வயல்கள், ஆறு என விரிகிறது. ஹீரோயின் வெரி கியூட் !
இந்த வார மகிழ்ச்சியும் வருத்தமும்
மகிழ்ச்சி: ஒலிம்பிக்கில் ககங் நரங் பதக்க பட்டியலை துவக்கி வைத்தது
வருத்தம் 1: சென்னை குழந்தை ஸ்ருதி வேனின் உள் விழுந்து இறந்தது -மிக பரிதாபம் ! இவ்வளவு நடந்தும் இன்னும் எங்கள் ஊர் மடிப்பாக்கத்தில் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் தொங்கி கொண்டே செல்லும் ஆட்டோக்கள் தினம் பார்க்கிறேன் :((
வருத்தம் 2: டில்லியிலிருந்து வந்த ரயில் விபத்து ! பாவம் பயணிகள் - நெருப்பில் சிக்கி கொண்டு கத்திய நேரம் நிறையவே துடித்திருப்பார்கள். பல நேரங்களில் ரயில்களின் கதவுகள் திறக்க முடியாமல் தகராறு செய்கின்றன. ரயில்வே இதை எப்போது தான் பார்க்குமோ?
அய்யாசாமி கார்னர்
சென்ற பதிவில் புறமுதுகு காட்டியநபரை சரியாக கண்டுபிடித்த யாருக்கும் எந்த பரிசும் கிடையாது. பின்னே இம்புட்டு அடி அடிச்சா எப்புடி?
நீங்கள் சொன்ன மாதிரி அங்கு பதிவுலகம் நியாபகம் வரவே இல்லை. ஆனால் ஆபிஸ் நியாபகம் அவ்வப்போது வந்தது. காரணம் அரை நாள் லீவு போட்டு விட்டு போயிருந்த போதும், அலுவலகத்திலிருந்து தொடர்ந்து போன் மற்றும் SMS-வந்து கொண்டே இருந்தது.
கேள்விகள் லாப்டாப் மூலம் PPT-ல் கேட்டதால் தான் அய்யாசாமி கணினி முன் உட்கார்ந்தார். நீங்க சொன்ன காரணங்கள் எல்லாம் தப்பு ஒகேவா?
இணையத்தில் திரைப்பாடல்கள்
திரை பாடல்களை இணையத்தில் கேட்க பெரும்பாலும் யூ டியூபை நாடுவோம். அங்கு வீடியோவுடன் தான் அநேகமாய் கிடைக்கும். அல்லது ராகா போன்ற வெப்சைட்களில் இருந்து பாடலை தரவிறக்கம் செய்து கேட்போம்.
திரைப்பாடல் என்கிற இந்த வெப்சைட்டில் அனைத்து பாடல்களும் ஆடியோ வடிவில் கிடைக்கிறது. மேலும் நீங்கள் அந்த பாடலின் ஆடியோ வடிவை மட்டும் உங்கள் பதிவில் இணைக்க வேண்டுமென்றாலும் இந்த சைட் மூலம் அது முடிகிறது !
வானவில் 99
இந்த வார தலைப்பை பார்த்தீர்களா? வானவில் - 99 ! ஆம் அடுத்த புதன் வானவில்லுக்கு 100 வது பதிவு. மிக மிக வித்யாசமான முறையில் இந்த வானவில் தயாராகி வருகிறது. அப்படி என்ன வித்யாசம் என ஊகியுங்கள் ...! ஒரு வாரத்தில் விடை தெரியும் !

ACS Institute-ல் தென் இந்திய ரீதியில் நடந்த குவிஸ்-க்கு நம்ம அய்யாசாமி தான் குவிஸ் மாஸ்டர். பதினாறு ரவுண்டுகள். எல்லாமே வித்தியாச concept-ஆய் இருக்கணும். ஒவ்வொன்றிலும் பத்து கேள்விகள். இப்படி - 160 கேள்விகள்/ அதற்கான பதில்கள் மூன்று நாளில் தயார் செய்ய வேண்டியதாய் இருந்தது. செமையா பெண்டு நிமுந்துடுச்சு. இருந்தாலும் கம்பனி சட்டம் முழுக்க ஆதி முதல் அந்தம் வரை மறுபடி படிக்க ஒரு வாய்ப்பு.
நீங்கள் சொன்ன மாதிரி அங்கு பதிவுலகம் நியாபகம் வரவே இல்லை. ஆனால் ஆபிஸ் நியாபகம் அவ்வப்போது வந்தது. காரணம் அரை நாள் லீவு போட்டு விட்டு போயிருந்த போதும், அலுவலகத்திலிருந்து தொடர்ந்து போன் மற்றும் SMS-வந்து கொண்டே இருந்தது.
கேள்விகள் லாப்டாப் மூலம் PPT-ல் கேட்டதால் தான் அய்யாசாமி கணினி முன் உட்கார்ந்தார். நீங்க சொன்ன காரணங்கள் எல்லாம் தப்பு ஒகேவா?
இணையத்தில் திரைப்பாடல்கள்
திரை பாடல்களை இணையத்தில் கேட்க பெரும்பாலும் யூ டியூபை நாடுவோம். அங்கு வீடியோவுடன் தான் அநேகமாய் கிடைக்கும். அல்லது ராகா போன்ற வெப்சைட்களில் இருந்து பாடலை தரவிறக்கம் செய்து கேட்போம்.
திரைப்பாடல் என்கிற இந்த வெப்சைட்டில் அனைத்து பாடல்களும் ஆடியோ வடிவில் கிடைக்கிறது. மேலும் நீங்கள் அந்த பாடலின் ஆடியோ வடிவை மட்டும் உங்கள் பதிவில் இணைக்க வேண்டுமென்றாலும் இந்த சைட் மூலம் அது முடிகிறது !
வானவில் 99
இந்த வார தலைப்பை பார்த்தீர்களா? வானவில் - 99 ! ஆம் அடுத்த புதன் வானவில்லுக்கு 100 வது பதிவு. மிக மிக வித்யாசமான முறையில் இந்த வானவில் தயாராகி வருகிறது. அப்படி என்ன வித்யாசம் என ஊகியுங்கள் ...! ஒரு வாரத்தில் விடை தெரியும் !
காலை வணக்கம்..வானவில் 100 க்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்
ReplyDeleteதற்போதைய கும்கி பட பாடல் கேட்டீங்களா .அதில் ஒரு பாடல் மைனா பட பாடல் மாதிரியே ரொம்ப அருமையாக இருக்கும்.நீங்க சொல்ற படி இமான் நல்ல பார்ம்ஆயிட்டார்,
ReplyDeleteகுயிஸ் மாஸ்டர் க்கு வாழ்த்துகள்.
ReplyDeleteக்விஸ் மாஸ்டர் அய்யாசாமி... ம்ம்ம்... கலக்குங்க... படு ஸ்டைல் ஆக இருக்கிறீர்கள்...
ReplyDeleteவானவில் நூறாவது பதிவுக்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...
'புளிய மரத்தின் கதை' குறித்து நீங்கள் பேசியது நன்றாக இருந்தது... (த.ம. 1)
பதிவர் சந்திப்பு, பிடித்த படம், பிடித்த பாடல் ..............
ReplyDeleteபல்சுவை தகவல்கள்....
வானவில் 100 ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்.
நன்றி...
(த.ம. 2)
வரும் நூறுக்கும் வரப்போகும் நூறுகளுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
ReplyDelete100-ஆவது வானவில்-லுக்கு வாழ்த்துகள்.
ReplyDelete//நீங்க சொன்ன காரணங்கள் எல்லாம் தப்பு ஒகேவா? //
இல்லையே இப்பொழுது பதிவாக மாறியிருப்பதால் இது பதிவுக்கான மேட்டராகத் தான் ‘பதிவு’ செய்வோம்.
:-)
\\அல்லது ராகா போன்ற வெப்சைட்களில் இருந்து பாடலை தரவிறக்கம் செய்து கேட்போம்.\\ காசு குடுக்காமலேயே தரவிறக்கம் பண்ண முடியுமா சார்? எப்படி?
ReplyDeleteபதிவர் சந்திப்பிற்கு வாழ்த்துக்கள் அண்ணே...
ReplyDeleteவர முயலுகிறேன்... சந்திப்போம்...
100வது வானவில்லை எதிர்பார்க்கிறேன்...
வரப்போகும் நூறுக்கு அட்வான்ஸ் வாழ்த்துகள்..
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு என்னாலான பங்களிப்பு செய்கிறேன்..
ReplyDeleteவானவில் 100 க்கு வாழ்த்துக்கள்..
அருமையாய் தொகுத்துள்ளீர்கள்..
வானவில் - 99
ReplyDeleteவாழ்த்துகள் !
ஒரு தொடர் பகுதியை 100 வாரங்கள் எழுதுவது பெரிய விஷயம் மோகன். என் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் செஞ்சுரிக்கு.
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வவ்வாலும் வருமா!
ReplyDeleteஎனக்கென்னமோ ரித்திக் ரோசன் மூஞ்சியே பிடிப்பதில்லை.
அந்த படம் நான் பார்த்ததில்லை .. விரைவில் பார்த்து விடுகிறேன் ..
ReplyDeleteசந்திப்பு சிறக்கும் சார் ... மற்றும் 100 க்கு வாழ்த்துக்கள்
வானவில்லின் வண்ணங்கள் கொள்ளை கொண்டன! சிறப்பு!
ReplyDeleteஇன்று என் தளத்தில் வெற்றி உன் பக்கம்! தன்னம்பிக்கை கவிதை! http:// thalirssb.blogspot.in
பதிவர் சந்திப்பு நல்ல படியாக நடந்து முடிய வாழ்த்துக்கள்!
ReplyDeleteகோவை நேரம்: கும்கி பாடல் இன்னும் கேட்கலை. கேட்குறேன் பாஸ்
ReplyDeletebalhanuman said...
ReplyDeleteக்விஸ் மாஸ்டர் அய்யாசாமி... ம்ம்ம்... கலக்குங்க... படு ஸ்டைல் ஆக இருக்கிறீர்கள்...
போச்சு ! அய்யாசாமியை பிடிக்க முடியாது. ஏன் இப்படியெல்லாம் அவரை கிளப்பி விடுறீங்க :)
//'புளிய மரத்தின் கதை' குறித்து நீங்கள் பேசியது நன்றாக இருந்தது//
பார்த்தீர்களா? மிக நன்றி
துளசி கோபால் said...
ReplyDeleteவரும் நூறுக்கும் வரப்போகும் நூறுகளுக்கும் இனிய வாழ்த்து(க்)கள்.
அடடா ! தங்களின் ஆசி மிக மகிழ்ச்சி தருகிறது மேடம் நன்றி
சீனி: ரைட்டு :) நன்றி
ReplyDeleteதாஸ்: Mobiltamilan.net என்கிற சைட்டில் பாடல்கள் இலவசமாக தரையிறக்கம் செய்யலாம்
ReplyDeleteசங்கவி said...
ReplyDeleteபதிவர் சந்திப்பிற்கு வர முயலுகிறேன்... சந்திப்போம்...
அவசியம் வாருங்கள் சங்கவி சந்திப்போம் நன்றி
அமைதி சாரல்: மிக மகிழ்ச்சி நன்றி
ReplyDeleteகாவேரிகணேஷ் said...
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு என்னாலான பங்களிப்பு செய்கிறேன்..
மிக மகிழ்ச்சி காவேரி கணேஷ்; நீங்கள் அவசியம் செய்வீர்கள் என தெரியும் நன்றி
நன்றி ராஜராஜேஸ்வரி மேடம்
ReplyDeleteபால கணேஷ் said...
ReplyDeleteஒரு தொடர் பகுதியை 100 வாரங்கள் எழுதுவது பெரிய விஷயம் மோகன்
எனக்கே ஆச்சரியமா தான் இருக்கு சார் நன்றி
ராஜ நடராஜன் said...
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வவ்வாலும் வருமா!
வரமாட்டார். வந்தாலும் தன்னை வவ்வால் என வெளிப்படுத்தி கொள்ள மாட்டார் என நினைக்கிறேன்
//எனக்கென்னமோ ரித்திக் ரோசன் மூஞ்சியே பிடிப்பதில்லை.//
இந்த படம் பார்த்தால் அந்த எண்ணம் மாற வாய்ப்புண்டு. செம இயல்பான நடிப்பு
அரசன் : நன்றி கலக்கிடுவோம்
ReplyDeleteநன்றி சுரேஷ்
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி வரலாற்று சுவடுகள்
ReplyDelete//Guzaarish - படம் முடியும் போது மனம் கனத்து போகிறது//
ReplyDeleteநமக்கு இந்த மாதிரி படங்கள் ஒத்துவராது.
// சென்னை குழந்தை ஸ்ருதி வேனின் உள் விழுந்து இறந்தது -மிக பரிதாபம்//
ஒவ்வொரு பள்ளி வியாபாரிக்கும் குழந்தைகள் ஒரு ஏடிஎம் மெஷின் போலத்தான். அவர்கள் பாதுகாப்பு குறித்து எவ(னு)ருக்கும் அக்கறை இல்லை :((
//நீங்கள் சொன்ன மாதிரி அங்கு பதிவுலகம் நியாபகம் வரவே இல்லை//
நம்பிட்டேன் :)
This comment has been removed by the author.
ReplyDeleteவானவில் நன்று. பதிவர் சந்திப்பு சிறப்புடன் அமைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteரகு
ReplyDeleteஒவ்வொரு பள்ளி வியாபாரிக்கும் குழந்தைகள் ஒரு ஏடிஎம் மெஷின் போலத்தான். அவர்கள் பாதுகாப்பு குறித்து எவ(னு)ருக்கும் அக்கறை இல்லை :((
உண்மை கொடுமை
நம்பிட்டேன் :)
ரகு: 160 கேள்விகள் ! அனைத்துக்கும் சரியான பதில் நியாபகம் வச்சிக்கணும். பத்து டீம். அடுத்து எந்த டீம் என பார்த்து சரியா கேட்கணும். இதற்கு மிக அதிக கான்சென்ட்ரேஷன் தேவை . எப்படி வேறு எதுவும் நினைக்க முடியும்? படங்கள் அவர்கள் அனுப்பிய பின், அதில் ஒரு படம் திரும்பிய படி இருக்க, இதை போடலாமே என்று அப்போது தான் தோன்றியது.
நாளை AGM மீட்டிங். நாளை மறுநாளைக்கு பின் என்று வேண்டுமானாலும் மீட் பண்ணுவோம்
நன்றி அமரபாரதி மகிழ்ச்சி
ReplyDeleteபதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்...!
ReplyDeleteநூறாவது வானவில் - மிக்க மகிழ்ச்சி மோகன்.
ReplyDeleteவானவில் மேலும் பல நூறு பதிவுகள் வர மனமார்ந்த வாழ்த்துகள்...
Welcome வானவில் -100
ReplyDeleteTHIRAIPAADAL PLAYER -ல் பாடல் கேட்க ஆரபித்தது விட்டேன் முதல் பாடல் காத்தோடு பூவுரச...
பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஆஹா பதிவர் சந்திப்பு 19 என்றால் என் கணவரின் அண்ணா பெண்ணிற்கு சென்னையில் திருமணம்.26 என்றால் கோத்தகிரியில் ரிசப்ஷன்.கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDelete