Sunday, December 30, 2012

2012-ல் எப்படி இருந்தது அமெரிக்கா + புத்தாண்டு தீர்மானங்கள் !

சுஜாதா எழுத்துக்களை கரைத்து குடித்தவர் பாலஹனுமானா - தேசிகனா என பட்டிமன்றமே வைக்கலாம். அப்படி ஒரு தீவிர சுஜாதா ரசிகர் நண்பர் பாலஹனுமான் !

தான் படித்த நல்ல விஷயங்களை மட்டும் ப்ளாகில் தொடர்ந்து பகிர்கிற இவரை நேரில் சந்திக்கும் போது பல விஷயங்களை, அனுபவங்களை சரளமாய் பேசினார். " ஏன் உங்கள் எண்ணங்களை எழுதுவதே இல்லை? எழுதுங்களேன்" என்றால், " ஆம். சில நண்பர்கள் இதை சொல்லத்தான் செய்றாங்க; செய்யணும் " என்றாரே ஒழிய அந்த "தவறை" செய்யவே இல்லை :)

விடுவோமா நாம்? 2012-ல் அமெரிக்கா குறித்தும், புத்தாண்டு தீர்மானங்கள் பற்றியும் அவரிடம் எழுதி வாங்கி விட்டோம். தன் ப்ளாகிலேயே எழுதாத நண்பர் பால ஹனுமானின் சிறப்பு பதிவுகள் இதோ :

****
2012-ல் எப்படி இருந்தது அமெரிக்கா - பாலஹனுமான்

எல்லாக் கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து, இரண்டாவது முறை​யாக அமெரிக்க அதிபராகி விட்டார் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா.



2008 தேர்தல் மாதிரி இந்த முறை அவருக்கு பெரிதாக ஆதரவு அலையும் இல்லை. அவரை உற்சாகமாக தேர்ந்தெடுத்த மக்களுக்கு கடந்த நான்கு வருடங்களில் அவர் அளித்த ஏமாற்றங்கள் ஒன்றா இரண்டா ?

•பொருளாதார சரிவு

•வேலையில்லாதோர் எண்ணிக்கை உயர்வு

•வாக்களித்தபடி போர் நிறுத்தங்கள் நடைபெறவில்லை

•படைகள் வாபஸும் முழுமை பெறவில்லை

பாவம், ஒரு விதத்தில் அவரைச் சொல்லியும் குற்றமில்லை. முந்தைய அதிபர் புஷ் நிர்வாகத்தில் நடந்த குளறுபடிகளை சரிசெய்வதிலேயே அவரது பாதி நேரம் போய் விட்டது.

கடந்த ஆட்சிக் காலத்தில் அவரது சாதனைகளை இப்போது பார்ப்போம்.

•அமெரிக்காவுக்கு சவாலாக இருந்த ஒசாமா பின்லேடன், லிபிய அதிபர் கடாபி ஆகியோரைத் தீர்த்துக்கட்டியது.

•நாடுதழுவிய ஒபாமா ஹெல்த்கேர்

•கட்சிப் பாகுபாடுகளை மறந்து ஒபாமா எதிர்க்கட்சிக்காரர்களுடன் பாராட்டும் நல்லுறவு.

•நாடெங்கும் சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டைக் குறைக்க எடுத்துவரும் பெரு முயற்சிகள்.

•தக்க சமயத்தில் அமெரிக்க கார் தொழிலுக்குக் கை கொடுத்துத் தூக்கிவிட்ட புத்திசாலித்தனம்.

இப்படி தன்னுடைய பாபுலாரிட்டி ரேட்டிங்கும் சரிந்து வந்த நிலையில், ஒபாமாவின் இந்த வெற்றிக்குக் கை கொடுத்தவர் வேறு யாரும் இல்லை. அவரது போட்டியாளரான ரோம்னியேதான். வரியில்லாமல், பொருளாதாரத்தை மீட்டெடுப்பேன், வேலை வாய்ப்பைப் பெருக்குவேன் என்றெல்லாம் உதார் விட்டவர் அதை எப்படி செயல்படுத்தப் போகிறேன் என்ற தெளிவான திட்டத்தை அறிவிக்கத் தவறியது ஒரு மிகப் பெரிய சொதப்பல்.

'கடுமையான பாதை... தொலைதூரப் பயணம். அமெரிக்காவின் வளர்ச்​சிக்காக ரோம்னியுடன் சேர்ந்து சிந்திக்க நான் விரும்புகிறேன். அவரு​டைய யோசனைகளை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்’ என்று அறிவித்திருக்கிறார் ஒபாமா. 'ஒபாமா நல்ல ஆட்சி நடத்திட இறைவனைப் பிரார்த்திக்கிறேன்’ என்று வாழ்த்து சொல்லி இருக்கிறார் ரோம்னி. இந்த அரசியல் நாகரிகம் வரவேற்கத்தக்கது.

ஒபாமாவுக்கு மீண்டும் ஒரு சான்ஸ் கிடைத்திருக்கிறது. இந்த முறையாவது அவர் சொன்னதைச் செய்வாரா ? பொறுத்திருந்து பார்ப்போம்.

வாழ்க அமெரிக்கா! வளர்க ஜனநாயகம்!
###################################

புத்தாண்டு தீர்மானங்கள் - பால ஹனுமான்

********************************************************************
புத்தாண்டுத் தீர்மானங்கள் என்பது ரப்பர் கண்டு பிடித்த காலத்திலிருந்தே வந்திருக்க வேண்டும். போன வருஷம் செய்த தப்புக்களையும் அபத்தங்களையும் அழித்துவிட்டு இந்த வருஷம் புதுசாக ( தப்பில்லாமல் ) ஆரம்பிக்கலாம் என்ற எண்ணம். நன்றாக யோசித்துப் பார்த்தால் இந்த ஆதார குணம் நம் எல்லோருக்கும் இருக்கிறது.


புது நோட்டு வாங்கும் போது அழகாக எழுத வேண்டும் என்று முதல் இரண்டு பக்கம் எழுதிவிட்டு, பிறகு கோழிக் கிறுக்கலாகப் போகும். அடுத்த புது நோட்டு வாங்கும் வரை.

தேர்வு எழுதும் போதும் முதல் பக்கம் அழகாக எழுத ஆரம்பிப்போம் பிறகு அதே கோழி வந்து கிறுக்கிவிட்டுப் போகும்.

இது எல்லாவற்றுக்கும் பொருந்தும். புது வீடு, புது கார், புது மனைவி... இவை எல்லாம் வருடா வருடம் வருவதில்லை. ஆனால் புது வருடம் வருகிறது. வாழ்க்கையில் நமக்கு ரிவைண்ட் பட்டன் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று முதல்வன் படத்தில் வரும் வசனம் தான் நினைவுக்கு வருகிறது.

இந்த வருடமும் தீர்மானங்கள் போட உத்தேசம்... நீங்களும் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். பிரச்சனை வந்தால் நான் அதற்கு பொறுப்பு இல்லை. நான் ஏற்கனவே இவற்றைக் கடைப்பிடிப்பவ(ன்)(ள்) என்றால் உங்களுக்குக் கடைசியில் ஒரு தீர்மானம் வைத்திருக்கிறேன்.

“New year resolutions are meant to be broken.” ( இந்த மாதிரி ஆங்கிலத்தில் ஏதாவது சொன்னால் யாரோ பெரியவர் சொல்லியிருக்கிறார்கள் என்ற எண்ணம் வரும் அதனால் )

1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை (Ego) விட்டு விடுவேன்.

2. அர்த்தமில்லாமலும், பின்விளைவு அறியாமலும் பேசிக் கொண்டேயிருப்பதை விட்டு விடுவேன். (Loose Talk)

3. எந்த விஷயத்தையும், பிரச்சனையையும் நாசூக்காகக் கையாளுவேன். (Diplomacy) விட்டுக் கொடுப்பேன். (Compromise)

4. சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துத்தான் ஆக வேண்டும் என்பதை உணர்வேன், (Tolerance)

5. எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிருக்க மாட்டேன்.

6. எனது கருத்துகளில் உடும்புப் பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக் கொள்வேன். (Flexibility)

7. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும், இனிய, இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவற மாட்டேன். (Courtesy )

8. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்து கொள்ள மாட்டேன்.

9. பிரச்சனைகள் ஏற்படும்போது அடுத்தவர் தான் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல், நானே பேச்சைத் துவங்க முன்வருவேன்.

10. அட இவை எல்லாம் நான் கடைப்பிடிப்பவன் வேறு ஏதாவது இருக்கா ? என்று கேட்பவர்களுக்கு இந்த தீர்மானம் - பிளாக் எழுதுவதை/படிப்பதை விட்டுவிடுவேன் :-)

வீடு திரும்பல் வாசகர்கள் அனைவருக்கும் பாலஹனுமானின் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! Inline image 1

11 comments:

  1. Good one. Wish you all a very happy new year.

    ReplyDelete
    Replies
    1. Anonymous10:44:00 PM

      நன்றி ஆதி மனிதன்.. அமெரிக்காவின் ப்ளஸ் மற்றும் மைனஸ் இரண்டையும் அலசிய உங்கள் தொடர் பதிவுகளும் அதற்குக் கிடைத்த வரவேற்பும் அபாரம். தொடர்பில் இருப்போம்...

      Delete
  2. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. Anonymous10:45:00 PM

      நன்றி சுரேஷ் உங்கள் ரத்தினச் சுருக்கமான பாராட்டுக்கு...

      Delete
  3. அருமையான பதிவு.
    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. Anonymous10:50:00 PM

      நன்றி ரத்னவேல் அய்யா.

      உங்களுக்கும் நமது வக்கீல் நண்பர் மோகன் குமாருக்கும் ஒரு ஒற்றுமை உள்ளதே கவனித்தீர்களா ?

      உங்கள் இருவருக்கும் நமது அபிமான எழுத்தாளர் சுஜாதா தனது கைப்பட கடிதம் எழுதியுள்ளார்.

      மேலும் நீங்கள் அவருக்கு அனுப்பிய 'நாடார்கள் வரலாறு' புத்தகம்தான் அவருக்கு ரத்தம் ஒரே நிறம் (கருப்பு சிவப்பு வெளுப்பு) எழுத தூண்டுதலாக அமைந்தது என்பதிலும் நான் மறக்க முடியாத ஒரு மாமனிதர் நீங்கள்! உண்மை வெறும் புகழ்ச்சியில்லை...

      Delete
  4. //அப்படி ஒரு தீவிர சுஜாதா ரசிகர் நண்பர் பாலஹனுமான் !//

    இதுக்காகவே அவரை சந்திக்கணும் மோகன்.

    ReplyDelete
    Replies
    1. Anonymous10:56:00 PM

      நன்றி ரகு.

      எனக்கும் உங்களை நேரில் சந்திக்க மிக மிக விருப்பம். சென்ற முறை ஆகஸ்ட் மாதம் வந்த போது, மோகன் குமாரையும், மின்னல் வரிகள் பாலகணேஷையும் சந்திக்க முடிந்தது. நீங்கள் வார இறுதியில் உங்கள் பெற்றோரை சந்திக்க சென்று விடுவீர்கள் என்றும் சென்னையில் இருக்க மாட்டீர்கள் என்று நண்பர் மோகன் குமார் தெரிவித்தார்.

      இந்த முறை ஜனவரியில் இந்தியா வரும்போது கண்டிப்பாக உங்களை சந்திக்க முயற்சிக்கிறேன். நீங்கள் உங்கள் blog-ல் எப்போதாவது எழுதினாலும் அருமையாக எழுதுகிறீர்கள். உங்களது சுஜாதா புத்தகங்களை நீங்கள் மோகன் குமாருடன் பகிர்ந்து கொள்வது கூடுதல் மகிழ்ச்சி. புது வருடத்தில் உங்களிடம் இருந்து ஒரு நல்ல செய்தியை எதிர்பார்க்கிறோம் :-)

      Delete
  5. என் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்

    தமிழ்நாடு LIST OF HOLIDAYS

    ReplyDelete
  6. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  7. //எல்லாக் கருத்துக் கணிப்புகளையும் முறியடித்து, இரண்டாவது முறை​யாக அமெரிக்க அதிபராகி விட்டார் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா.//
    Not true at all. Most opinion polls favored Obama only. There was a small rise to Romney after the first debate. Even on that time it was Obama who was favored to win. The elections are decided mostly on battle ground states's decision. Obama was expected to win most; he did the same.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...