Wednesday, March 6, 2013

வானவில்- சில்லுன்னு 1 சந்திப்பு- லக்ஷ்மி மேனன்- புஜாரா

பார்த்த படம்: சில்லுன்னு ஒரு சந்திப்பு 

விமல், ஓவியா மற்றும் புதுமுகம் தீபாஷா நடித்த காதல் கதை. ஆனால் படம் எடுத்த விதம், பாட்டுகள் & நடிப்பு என எல்லாமே அமெச்சூர் தனமாய் இருக்கிறது.



முகத்துக்கு வழமை போல் வெள்ளை பெயின்ட் அடித்து கொண்டாலும் கூட ஓவியாவின் மேக் அப் உடன் கூடிய அழகு மட்டுமே ஆறுதல். ஆனால் அவருக்கு வாய்ப்பு மிக கம்மி. செகண்ட் ஹீரோயின் போல ஆக்கி விட்டனர்

விமல் விளக்கெண்ணை குடித்த மாதிரியே இருக்கிறார். பேசுகிறார். பள்ளி மாணவனாக அவரை பார்க்க சகிக்க வில்லை

தமிழ் சினிமாவில் படம் இயக்கம் வாய்ப்பு கிடைப்பதே பெரிது . அதை சரியே பயன்படுத்தாமல் தவற விட்டு விட்டார் அறிமுக இயக்குனர் !

கிரிக்கெட் கார்னர் 

இந்தியாவுடன் டெஸ்ட் மேட்ச் ஆடுவது ஆஸ்திரேலியா A - டீமா என சந்தேகம் வருமளவு பேட்டிங்,பவுலிங் அனைத்திலும் சொதப்பி வருகிறது ஆஸ்திரேலிய அணி. கிளார்க் தவிர ஒருத்தரும் ஒழுங்கா ஆடுற மாதிரி தெரியலை.

கொஞ்ச நாள் முன்பு இங்கிலாந்துடன் வழிந்த அதே இந்திய அணி இப்போது வீறு நடை போடுகிறது ( வீரு தான் சரியா ஆடலை; அது தனி கதை )

புஜாராவின் Consistency அசத்துகிறது. சொல்வதற்கு சற்று early தான் என்றாலும், இந்தியன் பிட்ச்களில் டிராவிடுக்கு சரியான மாற்றாக இருக்கிறார் புஜாரா. வெளிநாட்டில் டிராவிட் மாதிரி ஆட்டத்தை எதிர்பார்ப்பது மிக கஷ்டம். அதில் பாதியளவு ஆடினாலே பெரிது

அஷ்வின் தொடர்ந்து 5 விக்கெட்டுகளாக எடுத்து தள்ளுகிறார் என்றால், ஜடேஜா பவுலிங் தான் செம சர்ப்ரைஸ். ஜடேஜா ஒவ்வொரு பந்தையும் விக்கெட்டுக்கு நேராக தான் வீசுகிறார். இதனால் அனைத்து பந்தையும் பேட்ஸ்மென் ஆடியே ஆக வேண்டிய நிலையில் விக்கெட் கிடைக்கும் வாய்ப்புகள் அதிகரிக்கிறது.

எதிரணியில் ஓட்டை பவுலிங் என்றாலும், இந்த சீரிஸில் சச்சின் ஒரு செஞ்சுரி அடித்தால் நல்லாருக்கும் !

அழகு கார்னர்

அழகுடன் நன்கு நடிக்கவும் தெரிந்த நடிகைகள் அமைவது ரொம்ப கஷ்டம். இந்த அம்மணி அவ்விதத்தில் இரண்டிலும் கலக்குபவர்.

                           

சுந்தர பாண்டியனில் சற்று குண்டாய் தெரிவார். கும்கியில் பார்த்தால் கரக்ட்டாய் இருந்தார். சென்ற வருடம் அவர் நடித்து வெளியான அந்த 2 படங்களும் வெற்றி படமாக அமைந்து விட்டன,

அந்த கால நதியா, ரேவதி போல ஒரு முழு ரவுண்ட் வருவார் என நினைக்கிறேன்.

படித்ததில் பிடித்தது


இளைஞிகள் எடுக்க வேண்டிய புத்தாண்டு ரிசல்யூஷன்கள் என குங்குமம் புத்தகத்தில் பதிவர் ஆல் தோட்ட பூபதி எழுதிய விஷயங்கள் மிக ரசிக்க வைத்தது படித்து சிரியுங்கள் :

இளம்பெண்கள் எடுக்க வேண்டிய புத்தாண்டு ரிசல்யூஷன்கள் :
எந்த பையனை லவ் பண்ணாலும் குறைந்தது 6 மாசமாவது கேரன்ட்டி தருவேன்.

செல்போனில் 22 மணி நேரத்திற்கு மேல் பேச மாட்டேன். ஒரு நாளைக்கு 1250 மெசேஜுக்கு மேல் அனுப்ப மாட்டேன்.

லவ்வரிடம் ஒரு நாளைக்கு 9 முறைக்கு மேல் சண்டை போட மாட்டேன்

லவ்வருக்கு ஒரு நாளைக்கு 500 ரூபாய்க்கு மேல் செலவு வைக்க மாட்டேன். சொந்த கல்யாணமா இருந்தாலும்

3 மணி நேரத்துக்கு மேல் மேக் அப் போட மாட்டேன்.

சம்பவம் - சாதாரண மனிதர்கள் - 1

ஞாயிறு மதியம் 2 மணிக்கு அருகிலுள்ள மளிகை கடைக்கு, ஏதோ வாங்கி வர என்னை அனுப்பினார்  வீட்டம்மா. உண்ட களைப்பு... சற்று அலுப்புடனே சென்றேன். கடையில் எனக்கு முன் இரு வட நாட்டவர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் 2 பிஸ்கட் பாக்கெட்டும் , வாட்டர் பாக்கெட் இரண்டும் வாங்கினர். கடைகளில் நமக்கு முன் பொருள் வாங்கும் ஆட்கள் மேல் நமக்கு எப்பவுமே சற்று எரிச்சல் வரும். அவர்கள் என்னவோ நிறைய நேரம் எடுத்து கொள்கிற மாதிரியும், அவர்களால் நமக்கு தாமதம் ஆகிற மாதிரியும்... அப்படி தான் நானும் அவர்களை வேறு வழியின்றி பார்த்து கொண்டிருந்தேன்

எனது பொருள்கள் வாங்கும் போது அவர்கள் வாட்டர் பாக்கெட்டை அங்கேயே வைத்து விட்டு சென்று விட்டதை உணர்ந்து கடைக்காரரிடம் சொல்ல, அவர் " அவங்க எங்கேயும் போகலை; அதோ உட்கார்ந்து பிஸ்கட் சாப்பிடுறாங்க பாருங்க" என்றார்

5 ரூபா பிஸ்கட் பாக்கெட் ஒன்றை முழுமையாய் - நிதானமாய் சாப்பிட்டு கொண்டிருந்தனர் அவர்கள். மதியம் 2 மணி - அவர்களது சாப்பாடே அது தான் என தெரிந்தது ! கடைக்காரரும் அதை உறுதி செய்தார். மனதை என்னவோ செய்தது. அவர்களிடம் நெருங்கி, சற்று பேச, வட நாட்டிலிருந்து வந்த பெயிண்டர்கள் என்று தெரிந்தது.

அருகிலுள்ள புது கட்டிடத்தை காட்டி " அங்கு இப்போ தான் பூச்சு வேலை முடிஞ்சிருக்கு. அங்கு யாரையும் தெரியுமா? பெயிண்டிங் வேலை கிடைக்குமா? " என்றனர். கடைக்காரரிடம் சொல்லி அந்த கட்டிட மேஸ்திரியிடம் அறிமுக படுத்த சொல்லி விட்டு விடை பெற்றேன்.

வீட்டுக்கு திரும்ப நடக்கும் போது,  அவர்கள் இன்னும் பிஸ்கட் சாப்பிட்டு கொண்டிருக்க, எனக்கு மதியம் சாப்பிட்ட பிரியாணி நினைவில் வந்து இம்சை செய்தது :(

சம்பவம் - சாதாரண மனிதர்கள் - 2

அடுத்த 2 மாதம் பெண்ணிற்கு மதியம் தான் பள்ளி என்பதால் - நான் 1 மணிக்கு தான் அலுவலகம் செல்வேன். காலை கணினியில் அமர்ந்து வேலை பார்த்து கொண்டிருக்க, வீட்டின் வெளியே யாரோ பிச்சைக்காரர்கள் குரல். " போக சொல்லுமா " என பெண்ணிடம் சொல்லி விட்டு, வேலையை தொடர, அவள் அருகில் வந்து " அப்பா - ஒரு தாத்தா - பாட்டிப்பா - பார்க்க ரொம்ப பாவமா இருக்கு. ஏதாவது குடு " என்றாள்.

போய் எட்டிப் பார்த்த போது அவர்கள் அடுத்த வீட்டில் நின்று பேசி கொண்டிருதனர்

சற்று பணமும், உண்ண 4 வாழை பழங்களும் எடுத்து கொண்டு போய் தர பழத்தை பார்த்ததும் உடனே  சாப்பிட ஆரம்பித்து விட்டார் அந்த பெரியவர். வேஷ்டி கட்டிய விதமே வேறு மாதிரி இருந்தது. தெலுகு மொழியில் பேசி அவர்கள் கதையை கேட்ட பக்கத்துக்கு வீட்டு பெரியவர் சொன்னார் : " அந்த பெரியவர் பையனும், மாட்டு பொண்ணும் - இங்கே எங்கேயோ கட்டிட வேலை செய்றாங்களாம். எங்கேன்னு தேடி பல நாளா அலையிறாங்களாம் . கண்டு பிடிக்க முடியாம, போற இடத்தில் பிச்சை எடுக்குறாங்களாம். நம்ம ஊரில் அட்ரஸ் இல்லாம எப்படி கண்டு பிடிப்பாங்க? பாவம் " 

இப்போது சற்று தூரம் சென்று விட்ட அவர்களை மீண்டும் பார்க்க, நிச்சயம் பிச்சை காரர்கள் இல்லை என்பதும், தங்கள் மகனை தேடி அலைபவர்கள் தான் என்பதும் உடை மற்றும் கையில் உள்ள பை மூலம் தெரிந்தது...

அந்த மகன் வேண்டுமென்றே முகவரி தரலையோ என்னவோ.. ! இன்னமும் அந்த வயதான பெரியவரின் முகம் நினைவில் ஆடுகிறது

அய்யாசாமி அப்டேட் 

அய்யாசாமி வருகிற வெள்ளியன்று - ACS இன்ஸ்டிடியூட்டில் "Listed Companies " பற்றி பேசுகிறார். பின் இம்மாதம் 23ஆம் தேதி - கிண்டியில் " New Companies Bill " குறித்து உரை ஆத்துகிறார். இதனால் எப்பவும் பிரசண்டேஷன் தயார் செய்கிறேன் என கணினியும் கையுமாய் பிலிம் காட்டுகிறார்.

லூட்டி அடிக்கவும், வீட்டம்மாவிடம் வாங்கி கட்டிக்கவும் அவருக்கு நேரமில்லை. கொஞ்ச நாள் வானவில்லில் வர முடியாதென லீவு கேட்டுள்ளார். பொருத்தருள்க !

***********
அண்மை பதிவுகள்

சரவண பவன் ஓனர் கட்டிய கோவில் - நேரடி அனுபவம்

தொல்லை காட்சி- கிச்சன் சூப்பர் ஸ்டார் சரவணன் மீனாட்சி -போக்கிரி

ரயில் எஞ்சின் டிரைவர் வாழ்க்கை - அறியாத தகவல்கள் - பேட்டி

27 comments:

  1. // வெளிநாட்டில் திராட் மாதிரி ஆட்டத்தை எதிர்பார்ப்பது மிக கஷ்டம். அதில் பாதியளவு ஆடினாலே பெரிது//

    இன்னும் ஆடவே இல்லை. அதுக்குள்ள ஜட்ஜ் பண்றிங்களே சார். என்ன அவசரம்?

    He played only 2 test vs. South Africa which is his second & third test( scored only 31 runs in 3 innings).

    Let us wait & see his future performance sir

    ReplyDelete
    Replies
    1. வரதராஜலு சார் : ஓகே ஓகே

      Delete
  2. விமல் : பம்மும் பாத்திரமாகவே நடித்தால் இப்படித்தான்...

    சச்சினுக்கு கொஞ்சம் டென்சனை கொடுங்கப்பா... அடிப்பார்...

    ரவுண்ட் முகம் ரவுண்ட் வருவது சிறிது கஷ்டம் தான்...

    உரை சிறப்பாக ஆற்ற அட்வான்ஸ் வாழ்த்துக்கள்...

    மற்ற எல்லாவற்றையும் விட மனதில் கோபமும், வருத்தமும் வருவது சம்பவம் 2

    ReplyDelete
    Replies
    1. ஆம் இரண்டாம் சம்பவம் இன்னும் கூட மனதை நெருடுகிறது

      ரவுண்டு முகம் பற்றிய உங்கள் கருத்தை ரசித்தேன் தனபாலன் சார் :)

      Delete
  3. சுழற்பந்துவீச்சுக்கு பழக்கப்படாத வீரர்களும் அனுபவமற்ற சுழற்பந்துவீச்சாளர்களும் தான் ஆஸியில் இருக்கிறார்கள்.மைக் ஹஸியின் வெற்றிடம் நன்றாகவே தெரிகின்றது.

    ReplyDelete
    Replies
    1. டினேஷ்சாந்த்: கரக்ட்

      Delete
  4. சம்பவம் 1,2 ம் இன்னும் உருளுகிறது உள்ளில் .

    ReplyDelete
  5. அண்ணே அது என்னே விளகெண்ணை குடிச்ச மாதிரி

    ReplyDelete
    Replies
    1. சக்கர கட்டி: சொல்லவும் முடியாம, மெல்லவும் முடியாம, ஒரு எக்ஸ்ப்ரஷனும் ஒழுங்கா தராம முழிக்கிறது :)

      Delete
  6. வானவில் வர்ணமயம். சாதரண மனிதர்கள் மனதை கலக்குகிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ராம்வி நன்றி

      Delete
  7. சில மனிதர்கள் நினைப்பு நம்மை விட்டு அகல பல நாட்கள் ஆகும்..

    ReplyDelete
    Replies
    1. சீனு: சரியாய் சொன்னீர்கள்

      Delete
  8. சொந்த ஊரை விட்டு பிழைக்க வருபவர்கள் பாடு ரொம்ப கஷ்டம்.
    பாவம் அந்த வயதான் பெற்றோர்...முகவரி தெரியாமல் கிளம்பி வந்து இருக்க கூடாது...

    ReplyDelete
  9. சாதாரண மனிதர்கள் பற்றி எழுதி இருந்தது மனதை உருக்கியது......பதிவு தொடர வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் குமார்: நன்றி

      Delete
  10. சாதாரண மனிதர்கள் - பாவம் தான்.....

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்: ஆம் வருகைக்கு நன்றி

      Delete
  11. ACS- இல் லிமிடெட் கம்பெனீஸ் presentation , வாழ்த்துகள். PPT . அப்டேட் பண்ணி ஒரு விளக்கம் சொல்லி blog எழுத விண்ணப்பம். (disclaimer பிரச்சனை ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டும் )

    ReplyDelete
    Replies
    1. ஹரி: எழுதும் யோசனை நிச்சயம் இருக்கு. ஆனால் கம்பனி சட்டம் வருமா என்பது சற்று கேள்விக்குறியாய் இருக்கு. ராஜ்ய சபாவில் சட்டம் பாஸ் ஆனால் நிச்சயம் எழுதுகிறேன்

      நன்றி

      Delete
  12. சம்பவம் 1 , 2 மனதை நெருடும் நிகழ்வுகள் .

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஞானம் சேகர் நன்றி

      Delete
  13. // புஜாராவின் Consistency அசத்துகிறது. சொல்வதற்கு சற்று early தான் என்றாலும் //

    சொல்ல நெனச்சதை, சரியா சொல்லலியே அவரு
    Ref :
    Quotes from presentation "Really happy about it," says Cheteshwar Pujara, the Man of the Match. "There was a bit of pressure on me. I just got married, and my wife was worried I should perform.

    courtesy : link

    ReplyDelete
  14. தம்பி.. வெண்ணிற ஆடை மூர்த்தி மாதிரி டபுள் மீனிங்கில் பேசுறியே :))

    ReplyDelete
  15. சம்பவம் 1 & 2 மிகவும் வருந்தத்தக்க கூடிய விஷயம்..

    //அந்த கால நதியா, ரேவதி போல ஒரு முழு ரவுண்ட் வருவார் என நினைக்கிறேன்.//

    அண்ணே இரண்டு படம் பார்ததுக்கே நீங்க மயங்கிட்டிக போல..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...