Thursday, March 28, 2013

வானவில் - இலியானா- கம்யூனிஸ்ட்- மேவி- ஸ்நேகிதனே ..

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - இந்திய கம்யூனிஸ்ட் என்ன வேறுபாடு?

இந்த கேள்வி என்னை ரொம்ப நாளாக உறுத்தி கொண்டிருந்தது. பல இடங்களில் இரு அணியும் சேர்ந்து தான் தேர்தலில்  நிற்கும். சித்தாந்தத்திலும் பெரிய வேறுபாடு இருக்கிற மாதிரி தெரியலை.

நண்பனின் மாமா ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்தவர். சமீபத்தில் பேசும்போது அவரிடம் இந்த சந்தேகத்தை கேட்க இப்படி பதில் சொன்னார்

" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் முதலில் இருந்தது. அதிலிருந்து பிரிந்து போனவர்கள் தான் இந்திய கம்யூனிஸ்ட். தங்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லைன்னு தான் எதோ காரணம் சொல்லிட்டு பிரிஞ்சு போனாங்க

கேரளா, மேற்கு வங்காளம் இங்கெல்லாம் ஆட்சியை பிடித்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான். கம்யூனிஸ்ட் ஓட்டு நிறைய இருக்கும் இடத்தில் பிரிஞ்சு நிற்பாங்க மற்ற இடங்களில் தேர்தலில் சேர்ந்து நிற்பாங்க.

இந்திய கம்யூனிஸ்ட் - பல நேரம் அரசாங்கத்துக்கு சாதகமா நடந்துப்பாங்க. உண்மையான கம்யூனிஸ்ட் அரசோட தவறான நடவடிக்கைக்கு எதிரா போராடணும். தங்களுக்கு கிடைக்கும்  சில பலன்களுக்காக அரசோட கை கோர்த்து போனா அப்புறம் எப்படி மக்கள் பிரச்னையை உரக்க பேச முடியும்? " என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்டுக்கு வேறு வித்தியாசம் இருக்கா? தெரிஞ்சா பின்னூட்டத்தில் சொல்லுங்க !

அழகு கார்னர் 

" இருக்காண்ணா  ? அட இல்லியாண்ணா ? " என "ண்ணா" விஜயை குழம்ப வைத்தவர். 

ஆரம்ப கட்டத்தில் இவர் அதிகம் கவராவிடினும் நண்பனில் ஓரளவு  பிடித்தது. பார்பி ஹிந்தி படம் பார்த்ததும் இவர் அழகில் சொக்கி போய் விட்டேன். 

நமக்கெல்லாம் ஒல்லி குச்சி நடிகைகளை சுத்தமாய் பிடிக்காது. (குண்டாய் இருந்தாலும் பிடிக்காது தான் !) இந்த இஞ்சி இடுப்பழகியை மட்டும் எப்படி பிடித்தது என்று சற்று ஆச்சரியமாய் தான் இருக்கு ! அடுத்து எப்போ தமிழ் படம் நடிப்பாரோ ஹூம் :(
                                 
பதிவர் அறிமுகம் - மேவி

மேவி என்கிற பெயர் கூகிள் பிளஸ் வட்டத்தில் மிகவும் பிரபலம். மிக இளைஞர் இப்போது தான் திருமணம் நிச்சயமாகி கடலை சாகுபடியில் பிஸி ஆக உள்ளார்.

ஆயினும் கொஞ்ச காலமாக தனது ப்ளாகை தூசு தட்டி அவ்வப்போது மீண்டும் எழுத ஆரம்பித்துள்ளார்

கொத்து பரோட்டா, வானவில் வகையில் கலவை என்று எழுதுவது சுவாரஸ்யமாக உள்ளது. மேவியின் ப்ளாக் பெயர் : தினசரி வாழ்க்கை. வாசித்து பாருங்கள் !

என்னா பாட்டுடே ! ஸ்நேகிதனே - ஸ்நேகிதனே

எதை சொல்வது எதை விடுவது?

வைரமுத்துவின் அற்புதமான பாடல் வரிகள் ! அதை தான் முதலில் சொல்ல வேண்டும். ஒரு பெண்ணின் உணர்வுகளை இவ்வளவு அழகாய் சொன்ன பாடல்கள் தமிழில் மிக குறைவு !

அடுத்து கவர்வது ஷாலினி ! வாவ் ! அந்த கண், மூக்கு மற்றும் சிரிப்பு.. .சான்சே இல்லை ! ஷாலினி அஜீத்தை மணந்த பின் திரையுலகை விட்டு விலகியது மிக பெரிய இழப்பு !

அருமையான மெட்டு மற்றும் டாமினேட் செய்யாத இசையமைத்த ரகுமான்.. கலக்கிட்டார்.பாடிய சாதனா சர்கமுக்கு தமிழில் இது முதல் பாட்டு என நினைக்கிறேன்.

படமாக்கத்தில் சினிமாத்தனம் இருந்தது தான் சற்று உறுத்தும். குழு நடனமின்றி - கணவன் - மனைவி நெருக்கத்தை மட்டும் காட்டும் பாடலாக இருந்திருக்கலாம்.

என்றைக்கும் அலுக்காத அற்புத பாட்டு இது. கேட்டு/ பார்த்து ரசியுங்கள் !



டாப் 20- இஞ்சினியரிங் கல்லூரிகள்

முகநூலில் நண்பர் ஒருவர் பகிர்ந்தது இது.

உண்மையான ஆய்வா, எப்படி இதை ஏற்கமுடியும் , இந்த காலேஜ் மிஸ் ஆகிருக்கு என எப்படியும் வாதாடலாம். ஆனால் சில காரணிகளின் அடிப்படையில் அண்ணா யூனிவர்சிட்டியால் சொல்லப்பட்ட தகவல் என்ற அடிப்படையில் இவ்வருடம் +2 படிக்கும் மாணவர்களுக்கும், அவர்தம் பெற்றோருக்கும் பயன்பட கூடும் என்பதால் பகிர்கிறேன்


சென்னை ஸ்பெஷல் : ஒண்ணே கால் லட்சத்தில் வீடு

ஒண்ணே கால் லட்சத்தில் குரோம்பேட்டையில் வீடு என விளம்பரம் தூள் பறக்குது. பஸ்களின் பின் பக்க விளம்பரமென்ன.. டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு பக்க விளம்பரமென்ன... 

என்னடா இது இந்த விலைக்கு காலி இடமே கிடைக்காதே வீடு எப்படி கிடைக்கும் என அவர்கள் தந்திருந்த நம்பருக்கு தொலை பேசினேன் . 

ஒண்ணே கால் லட்சம் என்பது முதலில் கட்டும் பணமாம். மத்ததெல்லாம் லோன் போட்டு கட்டணுமாம். 20 லட்சத்தில் இருந்து சிங்கிள் பெட் ரூம் வீடு இருக்காம். 



இவர்கள் சொன்ன பிறகு கவனித்தால் " நோ மோர் டவுன் பேமென்ட் வொர்ரீஸ்" என்ற வரிகளை கவனித்தேன். அதை யாரு கவனிக்கிறா? இவர்களே ஒண்ணே கால் லட்சத்தை தானே பெரிது பண்ணுகிறார்கள் ! அதுவும் ஒண்ணே கால் லட்சத்தில் வீடு என்று தான் சொல்கிறார்கள். 

யாரோ அமர் பிரகாஷ்னு  பில்டராம். குவாலிட்டி எப்படி இருக்குமோ தெரியலை. 

வானவில்லில் ஒரு சின்ன பாரா எழுத ஆசைப்பட்டு கால் செய்ய,  இப்போ அங்கிருந்து ஒரு பெண்மணி நமக்கு கால் மேலே கால் செஞ்சிக்கிட்டு இருக்காங்க !

அய்யாசாமி கார்னர்

அய்யாசாமி தன் நண்பரிடம் ஒரு முறை பெருமையாய் இப்படி சொன்னார்:

" ஒரு சில வீட்டில கிளம்பும் போது தான் வண்டி சாவி எங்கே, வீட்டு சாவி எங்கே அப்படின்னு தேடுவாங்க. நம்ம வீட்டில் அந்த பிரச்சனையே வராது. ஏன்னா எல்லா சாவியும் கரக்டா குறிப்பிட்ட இடத்தில் தான் இருக்கும் "

நண்பர் சொன்னார் " எங்க வீடு இதுக்கு ஒரு படி மேலே; சாவி எப்பவும் சரியா ஒரே இடத்தில் வைப்போம். அதுக்கு மேலே எல்லா சாவிக்கும் ஒரு டூப்ளிகேட் சாவியும் வச்சிருப்போம். இந்த டூப்ளிகேட் சாவி எல்லாத்தையும் அது எதற்கான சாவின்னு ஒரு சின்ன அட்டையில் எழுதி அந்த கீ செயினுடன் வைத்திருப்போம். எப்பவாவது சாவி காணும்னா உடனே அந்த பையிலிருந்து ஒரு நிமிடத்தில் ஸ்பேர் கீ எடுத்துடுவோம் " என்றார்

அய்யாசாமி வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க கூடாது. " திருடன் வந்தா அந்த பை மட்டும் எங்கே இருக்குன்னு பார்த்தா போதும்.. இல்லே?" என்று கேட்க நண்பர் முறைத்தார் பார்க்கணுமே !

******
அண்மை பதிவு :


26 comments:

  1. மார்க்சிஸ்ட் ,இந்திய கம்யூனிஸ்ட் தற்போதைய வித்தியாசம் இந்திய கம் தா .பாண்டியன் அம்மாவின் சொம்பாக மாறி ஜால்ராவை பலமாக போடுகிறார்.மார் -கம ராமகிருஷ்ணன் விஜயகாந்தோடு ஜோடி போட்டு இப்போது அம்மாவிடமே திரும்ப நேரம் பார்த்து கொண்டிருக்கிறார் .இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீன் கிரியேட்டர் நன்றி

      Delete


  2. //" மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் முதலில் இருந்தது. அதிலிருந்து பிரிந்து போனவர்கள் தான் இந்திய கம்யூனிஸ்ட். தங்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லைன்னு தான் எதோ காரணம் சொல்லிட்டு பிரிஞ்சு போனாங்க//

    இந்தியாவில் இந்திரா காலம் வரை ஒரு கம்யூனிஸ்ட் கட்சி தான் இருந்து வந்தது.
    எஸ்.ஏ. டாங்கே தலைமைப்பொறுப்பில் இருந்தபோது தான் கட்சியில் கொள்கை பற்றிய தீவிரமான கருத்து வேறுபாடு
    ஏற்பட்டது. இதற்கு ஒரு முக்கிய காரணம் ரஷியாவில் கம்யூனிசம் சீர்குலைந்து போனதுதான். கொர்பசேவின் முடிவுகளை
    இந்திய கம்யூனிஸ்டுகளில் பலர் ஒத்துக்கொள்ள வில்லை. முக்கியமாக, இ.எம்.எஸ். நம்பூத்ரிபாடு, தமிழ் நாட்டில் ராம மூர்த்தி,
    சுர்ஜீத் சிங்க் , ஹரி க்ருஷ்ணன் .வங்காளத்தில் ஜோதி பாசு போன்றவர்களுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இந்த கால கட்டத்தில் சீன கம்யூனிச‌
    கொள்கைகளும் வாதங்களும் அமெரிக்காவை எதிர்த்த ஒரு நிலையும் தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிகாட்ட ,
    இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒரு ஜெனுவின் கொள்கை ரீதியான கட்சியாக உருவாக்க இயலும் என்று நினைத்தனர்.
    இவர்கள் ஆகவே அப்பொழுது இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இருந்து ரஷியக்கொள்கைகளை ஆதரித்த‌
    வர்களுடன் ஒத்துப்போக இயலாத நிலை ஏற்பட்டு, பிரிவது என்று முடிவு செய்து, சி.பி. ஐ. (மார்க்சிஸ்ட்) எனும் கட்சியை உருவாக்கினர்.
    அன்றைக்கு இருந்த கம்யூனிஸ்ட் தலைவர்களில் எழுபது சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் சி.பி.ஐ. எம் இல் சேர்ந்தார்கள்.

    நாளடைவில் இந்தக் கட்சிக்குத் தான் வலு, வங்காளத்திலும் கேரளாவிலும் வலுத்தது. மற்ற மானிலங்களிலோ இரு கட்சிகளுமே
    கிட்டத்தட்ட சமமான ஆதரவு நிலை தான் இருந்தது. இந்திரா காந்தி காலத்திலெ பல சோஷலிச கொள்கைகள், உதாரணமாக‌
    தேசீய்மயமாக்குதல், விளைபயிர் நிலங்களில் அதிக பட்ச உரிமை ( சீலிங்) , விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் கடனுக்கான‌
    வட்டியின் உச்ச வரம்பு , வயல்களிலிருந்து வரும் கொள்முதலினை அதை ஒத்தி முறையில் எடுத்து விவசாயம் செய்பவருக்கான‌
    மகசூல் உரிமையின் நிலை, இவற்றை எல்லாம் காங்கிரஸ் கட்சியே எடுத்துக்கொண்ட நிலையிலே கம்யூனிசக் கொள்கைகள் அந்த தலைவர்களுக்கு
    மாஸ் பேஸ் அதாவது மக்களிடையே ஒரு பரவலான ஆதரவு நிலை இல்லை.

    அடுத்ததாக, இருப்பவர், இல்லாதவர் என்ற இரு பிரிவுகளே என்று வாதிட்ட கம்யூனிஸ்டுகள் 1970 க்குப்பின்னே பொருளாதாரத்தில்
    பின் தங்கி விட்டவர்கள் மட்டும் தங்கள் கவனம் என்று இலாது, அன்றைய நாட்களிலே மக்களை வசீகரித்த ஒ.பி.ஸி. கொள்கைகளிலும்
    ஒரு நிலை எடுக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார்கள். சமுதாயத்தில் தாழ்த்தப்பட்ட நிலையில் இருப்பவர் பலர் பொருளாதார‌
    நிலையில் மேலே இருந்தாலும் அவர்களுக்காகவும் தமது கொள்கைகளில் ஒரு திருத்தம் செய்துகொள்ளவேண்டிய அரசியல் நிர்ப்பந்தக்களுக்கு உட்படுத்தப்பட்டனர்.

    பிறகு நமது நாட்டிலே தேசியமயமாக்குதல் என்ற கொள்கையே திருப்பி அடிக்கப்பட்டு தேசீய்மயமாக்கப்பட்ட தொழில்களையெல்லாம்
    பிறகு தனியார் வசம் ஒப்படைக்கும் சக்திகள் தலையெடுக்கும்பொழுதும், உலகப்பொருளாதாரம் அதுவும் அமெரிக்கா போன்ற டெவலப்டு
    தேசங்களின் தலையீடு காரணமாக, பொருளாதார அன்னிய தலையீடு அதிகரித்த பட்சத்தில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுமே சேர்ந்து
    செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டது. இது காலத்தின் கட்டாயம். இவர்கள் ஒன்று சேர்ந்து தேர்தல்களில் போட்டியிடாது இருந்திருந்தால்,
    இவர்கள் கை இத்தனை காலம் கேரளாவிலே வங்காளத்திலோ உயர்ந்திருக்க வாய்ப்பில்லை. இதை அவர்கள் இன்னமும் புரிந்துதான்
    இருக்கிறார்கள்.

    நாட்டில் பொருளாதார பிரச்னைகளைக் காட்டிலும் சமூக பிரச்னைகள், மொழிப் பிரச்னைகள், மா நிலங்களின் எல்லைப் பிரச்னைகள்,
    மதவாத பிரச்னைகள் என்று பல இருக்கின்றன. ஒரு ஜெனுவின் கம்யூனிச சித்தாந்தத்தில் இவற்றிற்கெல்லாம் பெரிய இடங்கள் இல்லை என்றாலும் நாட்டில் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்னைகளில் ஒரு நிலை எடுத்துத்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

    தமிழ் நாட்டின் கதை வேறு. அதிகம் சொல்லத்தேவை இல்லை.

    சுப்பு தாத்தா.


    ReplyDelete
    Replies
    1. விரிவான விளக்கத்துக்கு மிக்க நன்றி சுப்பு தாத்தா

      Delete
  3. பல தகவல்களை உள்ளடக்கிய பதிவுன்னே

    ReplyDelete
  4. சாதனா சர்கமுக்கு தமிழில் இது முதல் பாட்டு என நினைக்கிறேன். MINSARAKANAVIL VARUM VENNILAVE VENNILAVE MUDHAL PATTU ENDRU NINAIKKIRAN

    ReplyDelete
    Replies
    1. You are right. veNNilavE veNNilavE is the first song for sadhanaa sargam in thamizh.

      Delete
    2. நீங்க சொன்ன பிறகு விக்கி பீடியாவில் தேடி பார்த்தேன். கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற படத்தில் வித்யாசாகர் முதலில் பாட வைத்துள்ளார் அதன் பின் வெண்ணிலவே அடுத்த வருடம் பாடியுள்ளார் நன்றி பிரகாஷ்/ நாகராஜன்

      Delete
  5. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தான் இந்திய கம்யூனிஸ்டிலிருந்து பிரிந்த கட்சி. நீங்கள் எழுதியது போல் அல்ல. 1962 ஆம் வருட இந்திய- சீன போரின்போது இந்திய கம்யூனிஸ்டில் ஒரு பிரிவினர் சர்வதேசியம் என்ற பெயரில் சீனாவை ஆதரித்தனர். அவர்கள்தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்ற பெயரில் தனிக்கட்சி கண்டனர். இந்திய கம்யூனிஸ்ட் ரஷ்ய சார்புடையதாக இருந்தது.1990 வரை இந்தியா ரஷ்ய ஆதரவு நாடாக இருந்ததால் பெரும்பாலும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் போக்கை மேற்கொண்டது. இந்திய கம்யூனிஸ்ட் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையை ஆதரித்தது. மார்க்சிஸ்ட் ஆதரிக்கவில்லை இன்றைய நிலையில் இவ்விரு கட்சிகளும் தனித்தனியாக இயங்க வேண்டிய அவசியமிருப்பதாகத் தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. தகவலை திருத்தியமைக்கு நன்றி ; நம்மிடம் சொன்னவர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் :)

      Delete
  6. இந்திய கம்யூனிஸ்ட் பார்டி என்பது 1960களில் சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1964-ஆம் ஆண்டு ICP & CPI(M) என இரண்டாக உடைந்தது. இகபா ரஷ்யாவையும் மார்க்ஸிஸ்டுகள் சீனாவையும் ஆதரித்தனர். 1964-ஆம் ஆண்டு இகபா-வின் தலைவர் S.A.தாங்கே-வை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சியின் இடதுசாரி தலைவர்கள் [கம்யூன்ஸ்ட்களே இடது சாரிகள் தான் இருந்தாலும் இந்திய அரசுக்கு எதிரான சீனப் போரை வர்கப் போராட்டமாகக் கொண்டு அதை ஆதரித்தத் தங்களை இடது கம்யூனிஸ்டுகள் என்றும் இந்திய அரசை ஆதரித்தவர்களை வலது கம்யூனிஸ்ட்கள் என்று அழைத்தனர்] தனியாகப் பிரிந்தனர். தாங்கே-வை எதிர்த்து இவர்கள் நடத்தியக் கூட்டத்தில் சீனத்தலைவர் மாசேதுங்-இன் பெரிய பெரிய படங்களைத் தாங்கி தலைமையை எதிர்த்தார்கள். இதை எதிர்த்து பம்பாயில் (மும்பை) வலதுசாரித் தலைவர்கள் மாநாடு நடத்தினர். அதில் இடதுசாரியினர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இருந்தனர். அதே நேரத்தில் கல்கத்தாவில் கூடிய இடதுசாரியினர் தங்களை தனி கட்சியாக CPI(Leftist)என்று அறிவித்துக் கொண்டார்கள். பின்னர் 1965-ஆம் ஆண்டு கேரள மாநில தேர்தலின் பொழுது சிபிஐ(மார்க்ஸிஸ்ட்) என்ற அதிகாரபூர்வ பெயரில் போட்டியிட்டனர். சிபிஐ(எம்) என்பதை சிபிஐ(மாசேதுங்) என்று கேலியும் செய்வார்கள்.

    பின்னர் சிபிஐ(எம்) வங்கத்தில் ஆட்சியில் இருந்தபொழுது அவர்களை வலதுசாரி கைக்கூலிகள் என்று மாவோயிஸ்ட்கள் கேலி செய்தது தனிகதை!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீனி; விரிவான கருத்துக்கு நன்றி

      Delete
  7. Communist Party of India,Communist Party of China, Communist Party of France என்றுதான் சொல்லப்படவேண்டும். அதாவது Communist Party என்பது உலகத்துக்குப் பொது. அதிலிருந்து ஓரொரு நாட்டுக்கும் கிளை. அப்படி, Communist Party of India தான் இந்தியாவுக்கு உரிய கிளை. அதை 'பொதுவுடைமைக் கட்சி அதா இந்தியா' என்று மொழிபெயர்க்க வழியில்லாமல், தமிழில், 'இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி' என்கிறோம்.

    நக்சல்பாரிப் பிரச்சனை வந்தபோது பிரிவினை ஏற்பட்டது. இரண்டாக அல்ல, மூன்றாக. இந்தியாவைப் பொறுத்தவரை, எட்டப்பன் வேலையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்களை விட மார்க்சிஸ்ட்டுகளே கைதேர்ந்தவர்கள். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக CPM பார்ப்பனியக் கட்சியாக மாறத் தொடங்கிச் சரிவைக் கண்டது.அதைச் சரிக்கட்ட இப்போது தலித்களை ஊறுகாயாகப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள்.

    தமிழ்நாட்டில், CPM ஐயங்கார் கட்சி; CPI தேவமார் கட்சி. இது அளவுக்குமீறிய எளிமைப்படுத்தல் என்றாலும், கொஞ்சூண்டு உண்மை இல்லாமல் இல்லை.

    (டிஸ்கி: நகைச்சுவை.)

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சார் ரசித்தேன் :)

      Delete
  8. எனக்கு தெரிந்தவரை இந்தியாவில் எல்லா கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒரே மாதிரித்தான் இருக்கின்றன. சுவையான பகிர்வு! நன்றி!

    ReplyDelete
  9. Election Commission of India has recognized Communist Party of India (CPI) and Communist Party of India Marxist (CPM) as national parties.

    But, these two parties have presence only in three states - Kerala, West Bengal and Tripura and they cannot win even a single seat in other states on its own.

    In Tamil Nadu, these two parties, will go either with AIADMK or DMK in elections, otherwise, they will loose deposits if they contest alone.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நாகராஜன்

      Delete
  10. கம்யூனிஸ்ட் என்று யாரும் இன்றைய நிலையில் இந்தியாவில் இருப்பதாக தெரியவில்லை.
    என்றைக்கு பதவி என்ற சுகம் அனுபவிக்க ஆரம்பித்தார்களோ அந்த வினாடியே அவர்கள் அந்த தகுதியை இழந்து விடுகின்றார்கள் எந்த பிரிவிலும் அப்படி இருப்பதாக தெரியவில்லை பதவிக்காக என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை தான் இன்று. கம்யுனிஸ்ட் என்ற போர்வையில் முதலாளிகள் இருப்பதையே இன்று பார்க்கின்றோம். முதலாளிகள் எப்படி கம்யுனிஸ்ட் ஆக இருக்க முடியும்?


    தினசரி வாழ்க்கை பார்த்தேன் படித்தேன் அவசியம் அனைவரும் என் அறிவில் இன்று புது வரவு நன்றி தோழரே

    --
    www.vitrustu.blogspot.com
    VOICE OF INDIAN
    256 TVK Qts TVK Nagar,
    Sembiyam,
    Perambur,
    Chennai 600019

    ReplyDelete
    Replies
    1. மேவி அவர்களின் பதிவை படித்து விட்டு கருத்தும் இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே

      Delete
  11. கமெண்ட் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சி பற்றி மட்டுமேவா? :)

    ReplyDelete
    Replies

    1. எல்லா கமென்டுமே கம்யூனிஸ்ட் பத்திதானா ? என்ற உங்கள் ஆதங்கம் எனக்கு நன்றாகவே
      புரிகிற்து.

      //நமக்கெல்லாம் ஒல்லி குச்சி நடிகைகளை சுத்தமாய் பிடிக்காது. (குண்டாய் இருந்தாலும் பிடிக்காது தான் !) இந்த இஞ்சி இடுப்பழகியை மட்டும் எப்படி பிடித்தது என்று சற்று ஆச்சரியமாய் தான் இருக்கு ! //

      இஞ்ச் இஞ்சா வர்ணிச்சு இருக்காரே ....
      \
      வலையின் தலைப்பை வீடு திரும்பல் என்று போட்டிருக்காரு...
      வூட்டுக்கு போவாரா .. அங்கன வரவேற்பு என்ன இருக்கும் அப்படின்னு கவலையா இருக்கு...

      ஆமா... நீங்க என்ன நினைக்கிறீங்க...
      எனக்கு இஞ்சி மட்டும் தான் பிடிக்கும்.

      சுப்பு தாத்தா.

      Delete
    2. ஹா ஹா ஆம் ஸ்ரீராம் சார் நன்றி

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  12. நன்றி மோகன் ஸார்

    ReplyDelete
  13. மோகன், இலியானாவுக்கு நீங்கள் செய்திருக்கிற பெருமை பத்தாது. எனது "நாடோடித்தடம்" நூலிலேயே அவருக்கு இடம் அளித்துப் பெருமைப் படுத்தி இருக்கிறேன், போதுமா?

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...