Friday, March 8, 2013

வேலைக்கு செல்லும் பெண்கள் - சில பிரச்சனைகள்- சில தீர்வுகள் !

களிர் தினத்தை முன்னிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன், பதிவெழுத வந்த புதிதில் எழுதிய இப்பதிவை மீள் பதிவு செய்கிறேன்.உங்களில் பலர் இதனை வாசித்திருக்க வாய்ப்பு குறைவு தான் !

நிற்க மீள் பதிவிற்குள் போகும் முன் சில வரிகள்...

பெண்களின் அழகை வர்ணித்தும், அவ்வப்போது அவர்களை கிண்டல் செய்தும் எழுதுவதை வீடுதிரும்பல் வாசிப்போர் கவனித்திருக்கலாம். அது ஜாலிக்கு - என்றாலும், பெண்கள் பற்றிய எனது கருத்து முற்றிலும் வேறு விதமானது.
பெண்கள் மீது எனக்கு மிகுந்த அன்பும், ஏராள மரியாதையும், சற்று பரிதாபமும், சிநேகமும் எப்போதும் உண்டு 

அன்பு - அவர்கள் எப்போதும் அன்பால் நிறைந்தவர்கள் - குடும்பத்தில் அன்பை வாரி வாரி வழங்குபவர்கள் என்பதால்

மரியாதை - பெரும்பாலான பெண்கள், ஆண்களை விட பல மடங்கு ஒழுக்கத்திலும் குடும்பத்தின் மீதுள்ள அக்கறையிலும் சிறந்தவர்கள் எனபதால் ( பல ஆண்கள் இதற்காக என்னை எதிர்க்க கூடும். ஆனால் யோசித்து பாருங்கள்: ஆண்களில் சிகரெட், குடி, பல பெண் சகவாசம் போன்ற ஏதாவது ஒரு குணமேனும்  இல்லாதோர் 10 % தான் இருக்க கூடும்; பெண்களில் அத்தகைய குணங்கள் கொண்டோர் 10 % க்கும் குறைவாய் இருப்பர் என நினைக்கிறேன்)

பரிதாபம் - வேலைக்கு சென்ற பின்னும் அவர்கள் சுமக்கும் குடும்ப சுமை - பிரசவம் தொடங்கி வயதான பின் வரும் எலும்பு தேய்வு வரை உள்ள உடல் ரீதியான சோதனைகள்- இன்றும் பல குடும்பங்களில் பெரிய முடிவுகளை எடுக்க முடியாமல் இருக்கும் நிலை ....

சிநேகம்-பெண்களோடு எனக்கு எப்போதும் சண்டை வருவதில்லை. பெரும்பாலும் ஒத்து போய் விடும் வீட்டம்மா கூட சொல்லுவார் " லேடிஸ் கூட உங்களுக்கு எந்த பிரச்னையும் வராது; ஈசியா ஒத்து போயிடும். சண்டை வந்தா அது அநேகமா ஆண்கள் கூட தான்"

நிற்க.

தாயாக, சகோதரியாக, மகளாக, சிநேகிதியாக எங்களுக்கு அன்பையும், கரிசனத்தையும் வாரி வாரி வழங்கும் அனைத்து பெண்களுக்கும் இனிய பெண்கள் தின வாழ்த்துகள் !

வணங்குகிறேன் தோழிகளே ! இந்த நாளும், இவ்வருடமும் உங்களுக்கு இனிமை உடையதாகட்டும் !

நிறைய பாராட்டியாச்சு.. அப்படியே இந்த ஷாப்பிங் பில்லை இவ்வருடமாவது கம்மி பண்ணறது பத்தி கொஞ்சம் டீப்பா யோசிங்க :)
*************************
வேலைக்கு செல்லும் பெண்கள்

ந்த தலைப்பில் ஒரு பதிவு எழுத ரொம்ப நாளாகவே எண்ணம். இன்று தான் சாத்தியமாகியிருக்கிறது. என் மனைவி மற்றும் அக்கா வேலைக்கு செல்பவர்கள். மேலும் நெருங்கிய உறவுகளில் ஹவுஸ் வைப், பார்ட் டைம் வேலை பார்ப்பவர்கள் என பல வித பெண்களையும் கவனித்துள்ளேன். இப்படி கவனித்ததன் தொகுப்பே இக்கட்டுரை.

*******************************************
முதலில் ஒரு கணவன், மனைவி, குழந்தை என்ற சிறு குடும்பத்தில் அதே தலைப்புகளில் மூவரும் எப்படி பாதிக்க படுகிறார்கள் என பார்த்து விடலாம்.

கணவன்

இருவர் வேலை பார்ப்பதால் குடும்பத்துக்கு பண வரவு அதிகரிக்கிறது. சொந்த வீடு, கார் என ஒரு வசதியான வாழ்க்கை வாழ முடிகிறது.

நிறைய ஆண்களுக்கு "நம் வேலை என்றாவது போய் விட்டால்?" என்ற பயம் உண்டு. இந்நிலையில் மனைவி வேலை பார்ப்பது சற்று தைரியம் தருகிறது. வேலை போனால் கூட சில மாதம் எப்படி குடும்பம் நடத்துவது என்ற கவலை வேண்டாம் என்று !

வீட்டு வேலை அதிகரிக்கிறது. கடந்த ஜெனரேஷன் வரை சமையல் போன்றவை பெண்கள் விஷயம் என நினைத்த ஆண்கள் இன்று வீட்டு வேலை அவசியம் செய்ய வேண்டி உள்ளது. இந்த விஷயத்தில் வீட்டுக்கு வீடு பெரிதும் மாறுபடுகிறது. ஒரு பக்கம் சமையல், வீட்டு வேலை, குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தருதல் போன்றவை பெண்கள் செய்ய வேண்டியது, அவர்கள் வேலைக்கு போனால் என்ன, போகாட்டால் என்ன என்ற ரீதியில் இருக்கும் ஆண்களும் உள்ளனர். (நல்ல வேலை இவர்கள் குறைவான சதவீதம் என நினைக்கிறேன்). காலை நேரத்தில் முழு சமையலும் தானே முடித்து (மனைவி குழந்தையை கிளப்பும் வேலை மட்டும் செய்வார்) மனைவிக்கு டிபன் பாக்ஸ்யில் போட்டு தந்து பின் அலுவலகம் செல்லும் ஆண்களும் உள்ளனர் (இவர்களும் மிக குறைவே). கணவன் ஓரளவு வீட்டு வேலையை பங்கிட்டாலும், பெரும்பாலான முக்கிய வேலை பெண்கள் தான் செய்கிற குடும்பங்கள் தான் நிறைய உள்ளன. (எங்கள் குடும்பம் உள்ளிட்ட பெரும்பாலான வீட்டில் இந்த கதை தான்).

முன்பு இருந்தது போல் ஆண்கள் பெண்கள் மீது அதிகாரம் (dominate) செய்ய முடிவதில்லை. பொருளாதார சுதந்திரம் வந்த பின், பெண்களை சமமாக நடத்துவது இயல்பான ஒன்றாக ஆகி வருகிறது (இன்னும் பெண்களுக்கு முழு சுதந்திரம் கிடைக்க வில்லை என்பது வேறு விஷயம்..)

மொத்தத்தில் கணவனை பொறுத்த வரை வீட்டு வேலை ஓரளவு அதிகரிப்பது தவிர பெரிய பாதிப்பு இல்லை.

குழந்தை(கள்)

சென்ற தலை முறை குழந்தைகள் பார்க்காத விளையாட்டு பொருட்கள், உடை போன்றவை அவர்களுக்கு கிடைக்கின்றன. அவர்கள் பெரிதும் தவற விடுவது தாயின் அரவணைப்பு தான். “ஒன்று அம்மா வேலைக்கு போகிறார். வீட்டுக்கு வந்தால் அடுப்படி” , வளர்ந்த குழந்தை எனில், “ இருக்கும் கொஞ்ச நேரம் பள்ளி பாடம் பற்றி பேசுகிறார்” . நமது தலை முறையில் தாயிடம் கிடைத்த அன்பும், அரவணைப்பும் இந்த தலை முறை குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை! இது ஒரு வருத்தமான விஷயம் தான்.

அந்த குடும்பத்துடன் யாராவது ஒரு தாத்தா, பாட்டி இருந்தால் தாயிடம் கிடைக்காத அன்பும் கவனமும் தாத்தா, பாட்டியிடமிருந்து ஓரளவு கிடைக்கிறது.



ஆனால் பாதி குடும்பங்கள் தான் தாத்தா, பாட்டியை தங்கள் வீட்டிலேயோ அல்லது அவர்கள் வீட்டுக்கு அருகிலோ வசிக்கின்றனர். பலர் கிரீச் , வீட்டோடு வேலை ஆள் என்று சமாளிக்கன்றனர்.

குழந்தைகள் இவை எல்லாவற்றுக்கும் பழகி விடுகின்றனர் என்பது தான் ஆச்சரியமான விஷயம் !!அவர்களுக்கு அம்மா வேலைக்கு போவதால் கிடைக்கும் சுகங்களும் வேண்டும், இன்னொரு பக்கம் அம்மா வீட்டோடு இருந்தால் நல்லது என்றும் பலர் நினைக்கின்றனர்.

மனைவி

மிக முக்கியமான நபர். இவரை மட்டும் பிளஸ் மைனஸ் என அலசுவோம்

பிளஸ்

அவர்களுக்கு கிடைக்கும் பொருளாதார சுதந்திரம் . (ஆனால் பல நேரம் அதனை அவர்களால் முழுதாய் அனுபவிக்க முடிகிறதா என்பது ஒரு கேள்வி குறி தான்.)

அவர்கள் படித்த படிப்பு வீணாகாமல் வேலை பார்க்கிறார்கள். அவர்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது.

பாதி வாழ்வில் கணவன் இறந்தாலோ அல்லது மண முறிவு ஏற்பட்டாலோ சுயமாய் வாழ முடிகிறது.

வேலைக்கு போகும் பெண்கள் சற்று மூச்சு விடவும், நிம்மதியாய் மனம் விட்டு சிரிக்கவும் முடிவது அலுவலகத்தில் தான். வீட்டில் அதற்கு நேரம் இல்லை.

படித்து விட்டு வீட்டில் சும்மா இருப்பதால் சிலருக்கு வரும் மன அழுத்ததிலிருந்து தப்பிக்கிறார்கள்

மைனஸ்

முக்கிய மைனஸ்.. பெண்கள் வேலை பார்ப்பதால் அவர்கள் வேலை பளு மிக மிக மிக அதிகம் ஆகிறது. பெண் என்பதால் பெரிய சலுகை அலுவலகத்தில் கிடைப்பதில்லை. (அதிக பட்சம் அலுவலகம் முடிந்து ஓரளவு சீக்கிரம் வீட்டுக்கு கிளம்பலாம்; இதுவும் சில கம்பனிகளில் நடப்பதில்லை). வீட்டில் கணவன் நினைத்தால் வேலை செய்வான்; இல்லா விட்டால் டிவி பார்ப்பான்; பேப்பர் படிப்பான்; மிக தாமதமாக எழுந்து நேரே கிளம்பி செல்வான். ஆனால் பெண் மட்டும் ஒவ்வொரு நாளும் விதி விலக்கே இல்லாமல் சீக்கிரம் எழுந்து அனைத்து வேலைகளும் செய்ய வேண்டும். இது அவர்களுக்கு மிக பெரிய உடல் மற்றும் மன சுமையை தருகிறது.

பொதுவாகவே பெண்களுக்கு மூட்டு வலி போன்றவை நாற்பது வயதுக்கு மேல் வந்து விடுகிறது. அவர்களுக்கு கால்சியம் குறை பாடு மிக எளிதாய் வரும். இதனால் எலும்பு தேய்வு, பல பாகங்கள் வலி நிறைய பேருக்கு வருகிறது. அதீத வேலையால் சீக்கிரம் பல நோய்கள் வருவது ஒரு பெரிய பிரச்சனை

நான் கவனித்த வரை வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு செல்பவரை பார்த்து " இவரை போல் நாம் போக முடியலையே!" என ஏங்குகின்றனர். வேலைக்கு போகும் பெண்களில் சிலர் வீட்டில் இருக்கும் பெண்களை பார்த்து இவர்கள் போல் நாம் இருக்க முடியலையே என நினைக்கின்றனர்.
****** *****************
என்னை பொறுத்த வரை, வீட்டில் யாரேனும் பெரியவர்கள் இருந்தால் பெண்கள் வேலைக்கு செல்வது எளிது. பெரியவர்கள் கூட இருப்பது, இன்றைய நிலையில் பல காரணங்களால் கஷ்டமான ஒன்றாக உள்ளது. ( சில நேரம் வயதானவர்களுக்கும் சேர்த்து வேலை செய்வதால், வேலைக்கு செல்லும் பெண்ணின் வேலை இன்னும் அதிகரிக்கிறது!)

பெரியவர்கள் உடன் முடியாத நிலையில் பெண்கள் முழு நேர வேலையாக இல்லாமல் ஒரு நாளைக்கு 4 அல்லது 5 மணி நேரங்கள் செய்ய கூடிய வேலை செய்வது பல விதங்களில் பயன் தரும். பெண்கள் வேலைக்கு செல்வதால் கிடைக்கும் பெரும்பாலான பலன்கள் கிடைத்து விடும். மேலும் அவர்களுக்கு சற்று ஓய்வும் குழந்தைகளை பார்த்து கொள்ளவும் முடியும்.
**
பெண்கள் வேலைக்கு செல்வதை தவிக்கவே முடியாத இன்றைய சூழலில், ஆண்கள் அவர்களின் வேலைகளில் முடிந்தவற்றை தாங்கள் எடுத்து உதவுவது இந்த பிரச்சனைக்கு ஒரு நல்ல தீர்வாக இருக்க முடியும்! இது பற்றிய புரிதலும் இதனை நோக்கிய ஆண்களின் செயல்களும் இன்றைய அவசிய தேவை !!
****** *****************
டிஸ்கி : ஒரிஜினல் பதிவையும்,  இன்றைய பிரபல பதிவர்கள் பலர் பின்னூட்டத்தில் செய்த விறு விறு விவாதத்தையும் இங்கு வாசிக்கலாம் !

23 comments:

  1. இன்று மட்டுமல்ல... என்றும்....

    ...

    ...


    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. // ******
    அதிசயமாய் வீடுதிரும்பலில் நம்ம ஹவுஸ் பாஸ் படம் ; அவர் யார் என்பது சஸ்பென்ஸ் :) தெரிந்தவர்கள் தயவு செய்து சொல்ல வேண்டாம் :)
    ****** //

    உங்கள் முதுகுக்கு பின்னால் இருப்பவர் தானே !

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்கண்ணா

      Delete
  3. முன்னர் வாசித்து, கருத்தும் பகிர்ந்திருக்கிறேன். இன்றைய தினத்துக்குப் பொருத்தமான பகிர்வு.

    /அவர் யார் என்பது சஸ்பென்ஸ் :) /

    இதிலெல்லாமா சஸ்பென்ஸ் வைப்பார்கள்:)? இடது ஓரத்தில் இருக்கும் திருமதி மோகன் குமாருக்கும், தோழியர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. மேடம் : ஹவுஸ் பாசுக்கு போட்டோ போடுவது பிடிப்பதில்லை அதான் முகநூலில் கூட போடுவதில்லை; இந்த பதிவில் போட்டோ போட்டது பார்த்து விட்டு டோஸ் விழுந்தது. அந்த போட்டோவை எடுத்து விடுகிறேன்

      Delete
  4. Good Post...
    மகளிர் தின வாழ்த்துகள், அனைவருக்கும் !!!


    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்கரன்

      Delete
  5. 'வீடு திரும்பல்' வாசிக்கும் மகளிர்க்கு எனது மகளிர் தின வாழ்த்துகள்!

    ******************

    //இதிலெல்லாமா சஸ்பென்ஸ் வைப்பார்கள்:)? இடது ஓரத்தில் இருக்கும் திருமதி மோகன் குமாருக்கும், தோழியர் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!//

    ராமலக்ஷ்மி மேடம் சொல்வதுதான் சரி! இதிலெல்லாம் சஸ்பென்ஸ் வேண்டாம் சார்.

    தங்கள் மனைவிக்கும், மகளுக்கும் நல் வாழ்த்துகள் சார்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைதி அப்பா

      Delete
  6. நல்ல மீளப் பதிவு. உங்களோடு சேர்ந்து நானும் மகளீர் தின வாழ்த்து கூறுகிறேன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவியாழி ஐயா நன்றி

      Delete
  7. நல்ல பகிர்வு.

    அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  8. நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுரேஷ் வாங்க; நன்றி

      Delete
  9. நல்ல பதிவிற்கு நன்றி

    ReplyDelete
  10. வாங்க மேடம் நன்றி

    ReplyDelete
  11. அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  12. வேலைக்குச் செல்லும் பெண்களைப் பார்த்து வீட்டில் இருப்பவர்கள் பொறாமைப் படுவதும், வீட்டில் இருப்பவர்களைப் பார்த்து இவர்கள் பெருமூச்செறிவதும் 'அக்கரைப் பச்சை' தான்.

    உங்கள் திருமதிக்கும், அத்தனை பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. நல்லதொரு பகிர்வு.

    ReplyDelete
  14. நல்லதொரு பதிவு மோகன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...