Friday, March 15, 2013

உணவகம் அறிமுகம் - வசந்தபவன் திருநெல்வேலி

திருநெல்வேலி சென்று நாங்கள் இறங்கும் போது மணி மதியம் மூன்று. நாகர்கோவிலில் இருந்து கிளம்பும் போது மதியம் ஒண்ணரை. அப்போதே சாப்பிட்டு விட்டு பஸ் ஏறலாம் என்றால், " சாப்பிட்டு விட்டு பஸ்ஸில் ஏறினால் நல்லாருக்காது ; அங்கு போய் சாப்பிடலாம்" என மனைவி மற்றும் மகள் கூறி விட்டனர்

திருநெல்வேலியில் நண்பன் வேங்கடப்பன் வந்து காரில் அழைத்து கொள்வதாக சொல்லியிருந்தான். சாப்பிட வில்லை என்றால் வீட்டில் சமைப்பார்கள் என்பதால், சாப்பிட்டு விட்டு ஏறியதாக அவனிடம் பொய் சொல்லியாச்சு. திருநெல்வேலி வந்த இறங்கியதும் பசி வயிற்றை கிள்ளியது



கன்யாகுமரியில் சாப்பிட்டு மோசமான அனுபவம் இருந்தமையால் பஸ்ஸில் வரும்போதே அருகில் விசாரித்து வைத்திருந்தோம் " பஸ் ஸ்டாண்ட் அருகில் இருக்கும் வசந்த பவன் செல்லுங்கள்" என கூறியிருந்தனர். இறங்கியதும் நல்ல ஹோட்டல் என மறுபடி விசாரித்த போதும் அதே ஹோட்டல் பெயரே சொல்லப்பட்டது.

நல்லவேளையாக சாப்பாடு காலியாகமல் இருந்தது. நாங்கள் சாப்பாடு சாப்பிட, பெண் மட்டும் டிபன் சாப்பிட்டாள் (அவள் பரோட்டா சாப்பிடும் போது மட்டும் பாதி பிடுங்கி விட்டேன் ).

பஸ் ஸ்டாண்ட் உள்ளே மற்றும் அதன் அருகே இருக்கும் ஹோட்டல்கள் தரத்தில் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. முக்கிய காரணம் அவர்களுக்கு ரெகுலர் கஸ்டமர்கள் வர போவதில்லை. எல்லாமே எப்போதோ ஒரு முறை வருவோர் தான். ஆனால் அதனை மீறி இங்கு சாப்பாடு அட்டகாசமாய் இருந்தது


50 ரூபாய்க்கு - அற்புதமான சாம்பார் (ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வித்யாசம் இருக்கு; இங்கே உள்ள சாம்பார் தனி ருசி ), இரண்டாம் முறை கேட்டு வாங்கி சாப்பிடும் அளவில் மோர் குழம்பு, ரசம், ருசித்து சாப்பிட காய்கறிகள் என அட்டகாசமாய் இருந்தது. கொடுத்த 50 ரூபாய்க்கு செம வொர்த் !

நிற்க. மகள் சாப்பிட்ட பரோட்டாவிற்கு வருகிறேன். மதிய நேரம் அங்கிருந்த பலரும் ஒன்று லஞ்ச் அல்லது பரோட்டா சாப்பிட்டு கொண்டிருந்தனர். அதற்கான குருமா ஸ்மெல் " வா வா " என்று அழைத்தது. பெண்ணிடமிருந்து பாதி பரோட்டா கேட்டு வாங்கி நிறைய குருமா ஊற்றி சாப்பிட்டு பார்த்தேன்.. அடடா ! டேஸ்ட் .. ஏ ஒன் ! பாதி பரோட்டா தர பெண் அழுது தீர்த்தாள் . ரெண்டும் அவளே சாப்பிடணுமாம் !

சில இடத்தில் மட்டும் தான் சாப்பிட்டு முடித்து விட்டு பில் தந்து விட்டு வரும்போது மிக நிறைவாய் கொடுத்த காசு வொர்த் என்ற எண்ணம் வரும்.. அது திருநெல்வேலி வசந்த பவனில் வந்தது !
****
மேலதிக தகவல்கள் 

உணவகம் பெயர்: வசந்த பவன்

இடம்: பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி

ஸ்பெஷல்: மதிய உணவு மற்றும் பரோட்டா

19 comments:

  1. //அவள் பரோட்டா சாப்பிடும் போது மட்டும் பாதி பிடுங்கி விட்டேன் //

    நடிகர் சூரிக்கு நீங்கதான் டஃப் ஃபைட் குடுப்பீங்கன்னு நினைக்கிறேன் :))

    ReplyDelete
  2. அவ்வளவு தூரம் போயிட்டு, புரோட்டா ஸ்பெசல் வைரமாளிகைல சாப்பிடாம வந்துட்டீங்களே :)
    சென்னைல அவங்க ப்ராஞ்ச் ஒன்னு இருந்துச்சு. ரஷ்யன் கல்ட்ரல் செண்டர்க்குள்ள.. இப்போ இருக்கான்னுத் தெரில.. ட்ரை பண்ணிப் பாருங்க

    ReplyDelete
    Replies
    1. அடடா இதெல்லாம் முதல்லேயே சொல்றதில்லியா ees?

      சென்னையில் முயற்சி செஞ்சுடலாம் :)

      Delete
  3. வசந்த பவனில் சாப்பிட்டு மகிழ்ந்த காலம்
    நினைவுக்கு வந்தது நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? நன்றி மகேந்திரன்

      Delete
  4. முன்னொரு பதிவில் உங்களுக்கு புரோட்டா பிடிக்கும் என்று சொன்ன ஞாபகம். அப்படீன்னா மகள் கிட்டேருந்து நீங்க பிடுங்காட்டித்தான் ஆச்சரியப்படணும் :-))

    நெல்லையப்பர் கோயில் எதிரிலும் ஒரு ஹோட்டல் இருக்குது. சரவணபவன்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. //மகள் கிட்டேருந்து நீங்க பிடுங்காட்டித்தான் ஆச்சரியப்படணும் //

      ஆஹா அமைதி சாரல் நீங்க ரொம்ப நல்லவங்க

      Delete
  5. ”இல்ல உனக்கு கணக்கு வரல! திரும்பி முதல்லேருந்து ஆரம்பி” அப்படின்னு சொல்லலியா! :)

    சில வருடங்களுக்கு முன் அங்கே சாப்பிட்டு இருக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அப்படியா ரைட்டு வெங்கட்

      Delete
  6. Anonymous5:41:00 AM

    Say No To Parotta - இனி பராத்தா சாப்பிட மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள்.

    நண்பர்களே இன்று தமிழகம் முழுவதும் ஒரு அத்தியாவசிய பொருள் போன்றே நிலை கொண்டுவிட்ட பராத்தா மனிதர்கள் உண்பதற்கான உணவுப் பொருளே அல்ல. தெரிந்தே நாம் நமது உடலுக்கு தீங்கிழைத்துக் கொண்டிருக்கிறோம். இன்றோடு இந்த பராத்தாவை உண்ண மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் கொள்ளுங்கள். பராத்தா எப்படி தயாரிக்கப்படுகிறது? அதன் தீங்கு என்ன என்பதை அறிய தொடர்ந்து படியுங்கள்...

    தமிழகம் முழுவதும் பரவலாகக் காணப்படுகிறது பரோட்டா கடை, அந்த பரோடாவும் ஊருக்கு ஊர் எத்தனை வகை, அளவிலும் சுவையிலும் எத்தனை வேறுபாடு? விருதுநகர் பரோட்டா, தூத்துக்குடி பரோட்டா, கொத்து பரோட்டா, சில்லி பரோட்டா, சொல்லும்போதே நாவில் நீர் ஊறுமே :-)

    பரோட்டா என்பது மைதாவால் செய்யப்படும் உணவாகும். இது தமிழகம் எங்கும் கிடைக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது ஏற்பட்ட கோதுமைப் பற்றாக்குறையால், மைதா மாவினால் செய்யப்பட்ட உணவுகள் தமிழகத்தில் பரவலாகப் பயன்படத் தொடங்கின; பரோட்டாவும் பிரபலமடைந்தது.

    மைதா மாவுல உப்பு போட்டு, தண்ணி விட்டு பிசைஞ்சு, அப்புறம் எண்ணெய் விட்டு, உருட்டி, ஒவ்வொரு உருண்டையையும் தட்டி, அடித்து, பெரிய கைக்குட்டை போல் பறக்க விட்டு, அதை அப்படியே சுருட்டி, திரும்ப வட்ட வடிவில் உருட்டி, தோசைக்கல்லில் போடுவார்கள்.

    இப்போது பரோட்டாவின் மூலபொருளான மைதாவில் தான் பிரச்சனை தொடங்குகிறது.பரோட்டா மட்டும் இல்லாது இன்னும் பல வகை உணவு வகைகள் இந்த கொடிய மைதாவில் இருந்து தயாரிக்கப்படுகிறது ,நம் பிறந்த நாளை கொண்டாட வாங்கும் கேக் உட்பட .

    மைதா எப்படி தயாரிக்கிறார்கள் ?

    நன்றாக மாவாக அரைக்கப்பட்ட கோதுமை மாவு மஞ்சள் நிறத்தில் இருக்கும் அதை benzoyl peroxide என்னும் ரசாயனம் கொண்டு வெண்மையாக்குகிறார்கள்,அதுவே மைதா.

    Benzoyl peroxide நாம் முடியில் அடிக்கும் டையில் உள்ள ரசாயனம் .இந்த ரசாயனம் மாவில் உள்ள protein உடன் சேர்ந்து நீரிழிவுக்கு காரணியாய் அமைகிறது .

    இது தவிர Alloxan என்னும் ரசாயானம் மாவை மிருதுவாக்க கலக்கப்படுகிறது மேலும் Artificial colors, Mineral oils, Taste Makers, Preservatives , Sugar, Saccarine , Ajinomotto போன்ற உப பொருட்களும் சேர்க்கப்படுகிறது ,இது மைதாவை இன்னும் அபாயகரமாக்குகிறது .

    இதில் Alloxan சோதனை கூடத்தில் எலிகளுக்கு நீரிழிவு நோய் வரவைப்பதற்கு பயன்படுகிறது , ஆக பரோட்டாவில் உள்ள Alloxan மனிதனுக்கும் நீரிழிவு வர துணை புரிகிறது .

    மேலும் மைதாவில் செய்யும் பரோட்டா ஜீரணத்துக்கு உகந்தது அல்ல ,மைதாவில் நார் சத்து கிடையாது , நார் சத்து இல்லா உணவு நம் சீரான ஜீரண சக்தியை குறைத்து விடும்.

    இதில் சத்துகள் எதுவும் இல்லை குழந்தைகளுக்கு இதனால் அதிக பாதிப்பு உள்ளது , எனவே குழந்தைகளை மைதாவினால் செய்த bakery பண்டங்களை உண்ண தவிரப்பது நல்லது.

    Europe union,UK,China இந்த மைதா பொருட்கள் விற்க தடை விதித்துள்ளன.

    மைதா நாம் உட்கொள்ளும் போது சிறுநீரக கல், இருதய கோளாறு, நீரிழிவு போன்றவை வருவதற்கு பல வாய்ப்புகள் உண்டு . நமது அண்டை மாநிலமான கேரளத்தில் பரோட்டாவின் தீமைகள் குறித்து இப்போதே பிரச்சாரம் செய்ய தொடங்கிவிட்டனர்..மேலும் மைதாவை அதன் தீமைகள் குறித்து ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையும் சமர்ப்பித்துள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. மாசத்துக்கு ரெண்டு நாள் பரோட்டா சாப்பிட்ட பெருசு சார்; பரோட்டா சாப்பிடாட்டி ரொம்ப கஷ்டம்.. பதிவேழுதவும் தான் :)

      Delete
  7. அண்ணா,
    இடம்: பேருந்து நிலையம் அருகில், திருநெல்வேலி என்று போட்டு இருக்கீங்க,
    ஆனால் புதிய பேருந்து நிலையமா? பழைய பேருந்து நிலையமா என்று போடலியே?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை நமக்கு அம்புட்டு தூரம் தெரியாதுங்க

      நாகர் கோவிலில் இருந்து பஸ்ஸில் வந்தோம்; பஸ் கடைசியாய் இங்கு தான் நின்றது. அப்ப எது எந்த பஸ் ஸ்டாண்ட்? நீங்களே சொல்லுங்க

      Delete
  8. செல்லும் இடத்தில் உணவு குறித்து எச்சரிக்கை அவசியம். நல்ல இடத்தை தேர்வு செய்வது மிகவும் அவசியம். நல்ல பதிவு.

    ReplyDelete
  9. திருச்சியிலும் வசந்த பவனில் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  10. நிஜம் தான். திருநெல்வேலி வசந்த பவன் - பஸ் ஸ்டாண்டில் உள்ளது - சாப்பாடு அருமையாக, தரமாக இருக்கும்.
    நன்றி. வாழ்த்துகள்:

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...