பத்து ரூபாய் செலவில் ஒரு பிரபல அரசியல் தலைவரின் திருமணம் முடித்தது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? இன்றைய அரசியலில், மா.செ முதல் மாநில அமைச்சர்களின் 'இல்ல திருமண' விழாக்களில் பணம் படும் பாடு நாம் எல்லோரும் அறிந்ததே. ஆனால் தோழர். ஜீவா அவர்கள் வெறும் பத்து ரூபாயில் தன் திருமணத்தை நடத்தி முடித்து இருக்கிறார்.
தனது திருமணத்திற்கு மிகவும் நெருக்கமான பத்துக்கும் உட்பட்ட தோழர்களை மட்டும் அழைத்து அவர்களில் ஒருவரிடம் ஒரு பத்து ரூபாயை கொடுத்து இரண்டு மல்லிகைப்பூ மாலை மீதமுள்ள பணத்திற்கு 'சாக்லேட்' மிட்டாய்களையும் வாங்கி வர சொல்லி, மணமக்கள் அந்த மல்லிகைபூ மாலையை மாற்றிக்கொண்டு அங்கிருந்தவர்களிடம் கையில் ஆளுக்கு ஒரு சாக்லேட் கொடுத்து அவ்வளவுதான் திருமணம் முடிந்து விட்டது எல்லோரும் போகலாம் என்றாராம்.
ஒரு முறை திரு. ஜீவாவும், காம்ரேட் ஒருவரும் மதுரைக்கு கட்சிக்காக நிதி சேர்க்கும் பொருட்டு சென்று திருச்சி திரும்பிய போது இரவு நேரமாகி விட்டதாம். திருச்சி ரயில் நிலையத்தில் சென்னை ரயிலுக்காக காத்திருந்த நேரத்தில் அவருடன் வந்திருந்த தோழர், காம்ரேட், காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடவில்லை. வயிறு பசிக்கிறது. ஏதாவது வாங்கி சாப்பிடலாமா என கேட்டிருக்கிறார்.
அதற்கு திரு ஜீவாவோ, ஓ சாப்பிடலாமே. எவ்வளவு பணம் வச்சிருக்கே என கேட்டாராம். பணமா, என்னிடம் ஏது காம்ரேட். உங்களிடம் தான் வசூலித்த பணம் நிறைய இருக்கே. சாப்பாடுக்கு தானே, அதிலிருந்து வாங்குவோமே என்று திரும்பி கேட்டாராம். அதற்க்கு திரு ஜீவா அவர்கள், இதோ பார். அது மூட்டை தூக்கி பிழைப்பவனும், வண்டி இழுத்து பிழைப்பவனும் கட்சிக்காக கொடுத்தது. அதிலிருந்து ஒரு சல்லி காசு நாம் எடுக்க கூடாது. என்னிடமும் வேறு பணமில்லை. ஒரு இரவு தானே, பொறுத்துக்கொள். சென்னை சென்றதும் என் வீட்டில் பழைய சாதம் இருக்கும். இரண்டு பெரும் சாப்பிடுவோம் என்றாராம். அந்த அளவிற்கு திரு ஜீவா அவர்கள் எளிமையையும் அரசியலில் நேர்மையையும் கடைபிடித்தவர். ஹ்ம்ம்...கனவில் தான் இத்தகையவர்களை நாம் இனி காண முடியும்.
பின்னாளில் திரு. ஜீவா அவர்களின் மகளுக்கு திருச்சியில் திருமணம் நடந்த போது (திரு. ஜீவா அவர்கள் மறைவிற்கு பின்) பேசிய தந்தை பெரியார், ஜீவா இருந்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இத்திருமணம் நடந்திருக்காது, நடத்த விட்டிருக்க மாட்டார். நாம் அனைவரும் ஜீவாவின் வீட்டு திருமணத்தை சிறப்பாக நடத்தி இருக்கிறோம் என்று பெருமை பட்டுக்கொண்டாராம். இத் திருமணத்தில் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா, கலைஞர் உட்பட அனைத்து தலைவர்களும் கலந்து கொண்டு ஜீவாவின் இல்ல திருமணத்தை சிறப்பித்துள்ளார்கள்.
எளிமைக்கு பெயர் பெற்ற கர்மவீரர் காமராஜ், மரியாதைக்குரிய கக்கன் போன்று தோழர் ஜீவாவும் ஒருவர். தமிழ் மீது தீராத ஆர்வம் கொண்டிருந்த ஜீவா அவர்கள், தூய தமிழில் பேசவும் எழுதவும் வேண்டும் என விரும்பியவர். அதனாலேயே தன பெயரை 'உயிரின்பன்' என மாற்றிக்கொண்டார். இன்று தமிழ் தமிழகத்தின் அலுவல் மொழியாக ஆவதற்கும், தமிழ் வழிக் கல்வியை கொண்டு வருவதற்கும் அவர் ஒரு முக்கிய காரணம் என கூறலாம். 'தாமரை' என்ற தமிழ் இலக்கிய இதழையும் அக்காலத்தில் அவர் தொடங்கி நடத்தி வந்தார்.
சுய மரியாதை சுடரான திரு ஜீவா அவர்களிடம் தந்தை பெரியார் அவர்கள் பகத்சிங்கின் Why I am an atheist என்ற புத்தகத்தை தமிழில் மொழி பெயர்க்க கோரி இருந்தார். அதை ஏற்று அப்புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்த காரணத்திற்காக (அப்புத்தகம் முதன் முதலில் மொழி பெயர்க்கப்பட்டது தமிழில் தான்) அப்போதைய ஆங்கில அரசு பெரியார் மற்றும் திரு ஜீவா அவர்களை சிறையில் தள்ளி, விடுதலை வேண்டும் என்றால் மன்னிப்பு கடிதம் எழுதி கொடுக்க கூறியது. இதை அடுத்து தந்தை பெரியார் அவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து விடுதலை ஆனார். ஆனால் தன்மான சிங்கம் திரு ஜீவா அவர்கள் நான் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று சிறையில் தண்டனை காலம் முடிந்தே வெளியேறினார். இவ்வாறு ஜீவாவின் சிறப்புகளை அடுக்கி கொண்டே போகலாம்.
திரு. ஜீவா அவர்களுக்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உண்டு. திருமதி. பத்மாவதி ஜீவானந்தம் அவர்களும் பல வருடங்களுக்கு முன்னரே இயற்கை எய்தி விட்டார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் முதல் மந்திரியாக இருந்த போது யாரோ பத்மாவதி அம்மையாரை பிடிக்காதவர்கள் அவர்களை பற்றி புகார் ஒன்றை தட்டி விட, அது அண்ணாவிடம் போய் சேர்ந்திருக்கிறது. யார், என்ன வென்று விசாரித்து தெரிந்து கொண்ட அண்ணா அவர்கள், ஜீவா அவர்கள் நினைத்திருந்தால் எப்படி எல்லாமோ வாழ்ந்திருக்கலாம். ஆனால் கடைசி வரை அப்பழுக்கில்லாமல் வாழ்ந்து மறைந்தவர் அவர். அவர் குடும்பத்தில் ஒருவர் மீது உண்மையிலேயே புகார் இருந்தால் கூட அதை இந்த அரசு உப்பு மிளகாய் கணக்கில் சேர்த்து விடும். ஒன்றும் குடி முழுகி போய் விடாது என்று திருப்பி அனுப்பி விட்டாராம்.
எல்லோரையும் தன் பேச்சு திறமையால் ஈர்த்த, தன் வாழ்நாள் முழுதும் ஏழை எளிய, தொழிலார் வர்கத்திற்க்காக போராடி, காந்திய வழியில் எளிமையை கடை பிடித்தும், பெரியார் வழியில் தாழ்த்தப்பட்டோருக்காக குரல் கொடுத்தவரும், கம்யூனிசத்தை ஒடுக்கப்பட்டோருக்காக வளர்த்து சென்ற தோழர். திரு ஜீவா அவர்கள் ஜனவரி 18, 1963 அன்று தாம்பரத்தில் உள்ள தன் எளிய வீட்டிலேயே வீர மரணம் அடைந்தார். சுமார் இரண்டு லட்சம் மக்கள் அவருடைய இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனராம்.
நன்றி: எனக்கு அரசியல் பற்றியும் அரசியல் தலைவர்களை பற்றியும் சிறு வயது முதல் சொல்லி வந்த என் தாய், தந்தைக்கு! மேற்கூறிய பல விசயங்கள் என் பெற்றோர் சொல்லி செவி வழி கேட்டதே.
***
தொடர்புடைய முந்தைய பதிவு :
தோழர் ஜீவா - ஏறினால் ரயில் - இறங்கினால் ஜெயில்
10 ரூபாய் திருமணம் இதற்க்கு முன் எங்கையோ படித்திருக்கிறேன் .இங்கு விரிவாக !
ReplyDeleteநன்றி பிரேம்.
Deleteதங்களின் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteUngalin vaalthukalakku vaalthukkal..
Deleteநன்றி தனபாலன்.
Deleteஜீவா வை பற்றிய மற்றுமொரு பதிவிற்கு நன்றி .
ReplyDeleteஜீவாவின் இயற்பெயர் சொரிமுத்து அய்யானார் என்றும். பின்பு தூய தமிழில் பெயரை மாற்றிக்கொண்டவர் , மேடைகளிலும் தூய தமிழிலே பேசியவர் , தான் போற்றும் ஒரு தமிழ் தலைவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க பேச்சுத் தமிழுக்கே திரும்பிவிட்டார் என - ஜீவா - வெளிச்சத்தின் விலாசம் புத்தகத்தில் படித்த நியாபகம் . ஏன் தன் பெயரை ஜீவானந்தம் என மாற்றிக்கொண்டார் என தெரியவில்லை . தெரிந்தால் சொல்லுங்களேன் .
ஆம், ஜீவா எப்போதுமே தூய தமிழில் பேச வேண்டும் என்ற ஆர்வம் உள்ளவர்.
Deleteநிச்சயமாக. அடுத்த முறை மணிக்குமார் அவர்களை (ஜீவாவின் மகன்) சந்திக்கும் போது எப்படி இந்த பெயர் வந்தது என்று கேட்டு சொல்கிறேன்.
நன்றி ஜீவன்சுப்பு
Deleteதோழர் ஜீவாவை பற்றி கேள்விப் பட்டு இருக்கிறேன்! இந்த பதிவில் அவரின் சீரிய குணங்களை அறிந்து கொள்ள முடிந்தது. இது போன்ற தலைவர்கள் கிடைக்க மாட்டார்களா என்று ஏங்க வைத்தது பதிவு! உங்களின் பெற்றோருக்கும் பகிர்ந்த உங்களுக்கும் மிக்க நன்றி!
ReplyDeleteநன்றி சுரேஷ்.
Deleteஇந்த பதிவை என் முக நூலில் பகிர்ந்து கொள்கிறேன்! தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்! பலரும் அரிய ஒர் வாய்ப்பாக மட்டுமே இதை பகிர்கிறேன்! நன்றி!
ReplyDeleteதங்கள் விருப்பம். நன்றி சுரேஷ்.
Deleteநல்ல பதிவு. இத்தகைய ஏழை பங்காளர்களின் பங்களிப்பு இப்போது இல்லாததே பெரிய இழப்புதான்.
ReplyDeleteசரியாக சொன்னீர்கள். நன்றி ரஹீம்.
Deleteஉயர்ந்த மனிதர்கள் வாழ்ந்தற்கு மற்றோர் உதாரணமாக திகழ்ந்த்வரோ இவரும் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteஆம். நன்றி poovizi.
Deleteபதிவிற்கு நன்றி ஆதிமனிதன்! மிக உயர்ந்த பெற்றோர் கிடைத்துள்ளார்கள்!
ReplyDeleteநன்றி உமா. நான் செய்த பாக்கியம்.
DeleteMohan.. yet another aspect of the society covered.. way to go..
ReplyDeleteThanks VVK.
Delete\\தங்களின் பெற்றோருக்கு வாழ்த்துக்கள்...பதிவிற்கு நன்றி ஆதிமனிதன்! மிக உயர்ந்த பெற்றோர் கிடைத்துள்ளார்கள்!//
ReplyDeleteநன்றி ரவி. நான் செய்த பாக்கியம்.
Deleteஒரு சிறந்த மனிதரைப் பற்றிய பகிர்வு - மிக நன்று நண்பரே.
ReplyDelete