Sunday, March 24, 2013

உணவகம் அறிமுகம் திருநெல்வேலி : A -1 ஹோட்டல்

ண்பர் வேங்கடப்பன் குடும்பமும் நாங்களும் செமையாய் சுற்றி விட்டு நெல்லை வர, அதன் பின் சமையலை ஆரம்பித்தால், சோர்வாக இருக்கும் - ஹவுஸ் பாஸ்களுக்கு கஷ்டம் ; So இரவு சாப்பாடை பார்சல் வாங்க முடிவு செய்தோம்.

உணவகம் அறிமுகம் தொடர்ந்து எழுதுபவன் என வேங்கடப்பன் நல்ல ஹோட்டலுக்கு அழைத்து செல்ல வேண்டுமென்பதில் குறியாக இருந்தான். அதன்படி நாங்கள் சென்றது - A -1 ஹோட்டல். அட ஹோட்டல் பெயரே அது தாங்க !

திருநெல்வேலி டவுனில் பெருமாள்புரம் ரவுண்டானா அருகே உள்ளது இந்த ஹோட்டல். உரிமையாளர் இங்குள்ள கார்பரேஷன் கவுன்சிலர் என்று அறிகிறேன்

மாலை மட்டுமே திறந்திருக்கும் இந்த கடையின் ஸ்பெஷாலிட்டி ஹீ ஹீ நம்ம புரோட்டா தாங்க !



அமர்ந்து சாப்பிட இடம் 10 X 10 அளவில் ! புரோட்டா போட, பார்சல் கட்டி கேஷ் வாங்க முன்புறம் இன்னொரு 10 X 10 இடம் அவ்வளவு தான் கடை !

உள்ளே உட்கார சிறிதும் இடமில்லை. ஹவுஸ் புல் !  சாப்பிடுவதற்கு சமமாக பார்சல் வாங்கி போகும் கூட்டம் இன்னொரு பக்கம்.

வீச்சு பரோட்டா, கொத்து பரோட்டா, சிக்கன் 65 என நிறைய பார்சல் வாங்கி கொண்டு கிளம்பினோம். 

நீங்கள் செல்லும்போது "சாதா குருமா" வுடன் ஸ்பெஷல் குருமாவும் தாங்க என உரிமையாய் கேட்டால் மட்டும் இன்னொரு வகை குருமா கொடுப்பார்கள். முதல் குருமா அருமை என்றால் இரண்டாம் குருமா தாறு மாறு !



வீட்டுக்கு வந்து பார்சல் எல்லாவற்றையும் பிரித்து குருமாவை தனித் தனி பாத்திரத்தில் ஊற்றி விட்டு நிமிர்ந்தால் சிக்கன் 65 பாதி காலி. பசங்க புகுந்து விளையாடிட்டாங்க அட பாவிகளா. எங்களுக்கும் குடுங்கடா என வாங்கி சாப்பிட வேண்டியாதாயிற்று.

பரோட்டாவை பிய்த்து போட்டு குருமாவை ஊற்றி சாப்பிட்டோம். அடடா சான்சே இல்லை. சொர்க்கம் ! சூப்பர் டேஸ்ட் என்பதால் சற்று அதிகம் சாப்பிடுற மாதிரி ஆகிடுச்சு.

நிற்க. பரோட்டா, சிக்கன் 65, கொத்து பரோட்டா என பல வகை உணவுகள் 6 பேருக்கு வாங்கியும்,  வயிறு நிரம்ப சாப்பிட்ட பின்னும் பில் 300 ரூபாயை தாண்ட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது !

நெல்லை காரர்கள் கொடுத்து வைத்தவர்கள் !
****************
மேலதிக தகவல்கள் :

உணவகம் பெயர்: A -1 ஹோட்டல்

முகவரி: பெருமாள் புரம் ரவுண்டானா அருகில், திருநெல்வேலி  

நேரம்: மாலை மட்டும்

ஸ்பெஷல்: பரோட்டா, வீச்சு, கொத்து பரோட்டா சிக்கன் 65, மஜ்ரா சிக்கன், ஜிஞ்சர் சிக்கன்

18 comments:

  1. A 1...

    300 ரூபாய் - நெல்லைகாரர்கள் கொடுத்து வைத்தவர்கள் தான்...

    ReplyDelete
  2. ஏன்... ஏன்...சார் இப்படி படங்கள காட்டி பசிய கெளப்புறீங்க பத்தாயிரம் கிலோமீட்டர் பறந்து வந்து சாப்பிட வச்சுருவீங்க போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அடடா அப்படியா விமல்?

      Delete
  3. பார்த்தாலே ஒரு பிடி பிடிக்கத் தோணுது. தாறுமாறு என்றால் அருமையை விட பெட்டர்னு அர்த்தமா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அப்பாதுரை; Outstanding என்பதை சென்னை காரர்கள் எங்க பாஷையில் அப்படி சொல்லுவோம் :)

      Delete
  4. கவர்ந்து இழுக்கிறது படங்கள் மோகன். பரோட்டாவின் மேன்மை படத்திலேயே தெரிகிறது.

    ReplyDelete
    Replies
    1. ஆம் ஸ்ரீராம் சார் நன்றி

      Delete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. அய்யா வணக்கம்.
    கட்டுரையின் முற்பகுதியில் பெருமாள்புரம் ரவுண்டானா திருனல்வேலி டவுண் என குறிபிடப்பட்டுள்ளது ; பிற்பகுதியில் பெருமாள்புரம் ரவுண்டானா திருனல்வேலி எனக்குறிப்பிடப்பட்டுள்ளது,கொஞ்சம் குழப்பமாக உள்ளது. சரியான முகவரி கொடுத்தால்
    நாங்களும் ஒரு பிடி பிடிக்கலாமே.

    கே.எம்.அபுபக்கர்.

    ReplyDelete
    Replies
    1. திருநெல்வேலியா, திருநெல்வேலி டவுனா என தெரியலை மன்னிச்சுக்குங்க. பெருமாள் புறம் ரவுண்டானா ஒன்று தானே இருக்கு? அதற்கு பக்கத்தில் இருக்கு கடை

      Delete
  7. சிக்கன் 65 கலரு கண்ணுல அடிக்குது , ஏன் சார் chicken 65 கலர் ( டை) போடுரங்கனு தெரியவில்லை !பரோட்டா சுப்பர் பார்த்தாலே தெரியுது

    ReplyDelete
  8. பாளையங்கோட்டை என்றால் - திருநெல்வேலி இல்லியா? என்னமோ போங்க சார் :)

    ReplyDelete
  9. எனக்கும் பெருமாள்புரம் தான்.
    A1 ஹோட்டல் நல்ல பெயர் வாங்கிவிட்டது.
    ஆனால் புரோட்டாதான்.. ஒரு CDஐ விட சிறியதாக இருப்பதை ஜீரணிக்கமுடியவில்லை..

    ReplyDelete
  10. பரோட்டாவை பிய்த்து போட்டு குருமாவை ஊற்றி சாப்பிட்டோம். அடடா சான்சே இல்லை. சொர்க்கம் ! சூப்பர் டேஸ்ட் என்பதால் சற்று அதிகம் சாப்பிடுற மாதிரி ஆகிடுச்சு.

    உங்கள் பதிவில் எனக்கு பிடித்த அம்சம் - மனதார்ந்த பாராட்டுகள்.
    நன்றி.
    வாழ்த்துகள்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...