Monday, March 11, 2013

தொல்லைகாட்சி -சுருளி ராஜன்- வாணி ஜெயராம்- சூப்பர் சிங்கர்

சீரியல் பக்கம்: கனா காணும் காலங்கள் - கல்லூரியின் கதை

எந்த சீரியலும் பார்ப்பதில்லை. ஆனால் சேனல் மாற்றும் போது சில அழகான பெண்மணிகள் கண்ணில் பட்டால், அங்கேயே சற்று இளைப்பாறுவது உண்டு. அப்படி தான் கனா காணும் காலங்கள் - கல்லூரியின் கதையில் அவ்வப்போது லேண்ட் ஆகிறேன்.

பூஜா என்ற டிவி நடிகை இதில் டீச்சர் ஆக வருகிறார். எந்த பூஜாவா? ஆமாங்க இந்த பூஜாக்கள் தொல்லை தாங்க முடியல.. ஏகப்பட்ட பேரு இருக்காங்க உங்க குழப்பம் போகணும்னு யார்ன்னு இங்கே தந்திருக்கேன் பாருங்க




ஜோடி நம்பர் சீசன் ஒன்னில் டைட்டில் ஜெயிச்சார் ; அப்புறம் வேற சில சீரியல் கூட நடிச்சார் போல ( என் மாமியாரை கேட்டால் ஒன்று விடாம அவர் நடிச்ச எல்லா சீரியல் பேரும் சொல்லுவாங்க )

இவருக்கு கல்யாணம் ஆன பின், ஒரேயடியாக கல்லூரி ப்ரபசர் ஆக்கிட்டாங்க. ம் கொடுத்து வச்ச பசங்க !

மறக்க முடியுமா- சுருளி ராஜன்

கேப்டன் நியூஸ் என்று ஒரு புதிய சானல் வருகிறது. (நம்ம கேப்டனின் டிவி தான். தேர்தல் சமயத்தில் பயன்படும் என துவங்கி உள்ளார் போல..)

அதில் " மறக்க முடியுமா" என ஒரு நிகழ்ச்சி. மறைந்த நடிகர்கள், பாடகர்கள் பற்றி நினைவு கூர்கிறார்கள்.

நான் பார்த்த வாரம் - சுருளி ராஜன் பற்றி பேசினார்கள். 15 வருடம் தமிழ் திரை உலகை கலக்கிய சுருளி - ஒரு காலத்தில் கமல், ரஜினி, சிவாஜி என அனைத்து டாப் ஹீரோக்கள் படத்திலும் தவறாது இடம் பிடித்துள்ளார்.

1980- ல் தனது 40 வது வயதில் குடி பழக்கத்தால் அவர் இறந்துள்ளார். அந்த வருடம் மட்டும் அவர் நடித்த படங்கள் 50 ரிலீஸ் ஆனதாம். 82 ஆம் ஆண்டு வரை அவரின் பல படங்கள் ரிலீஸ் ஆகி கொண்டே இருந்ததாம் !

இப்படி காரியரில் பீக்கில் இருக்கும் போது இறக்கும் நடிகர்கள் அரிது தான் என நினைக்கிறேன் ! அடுத்த வாரம் பின்னணி பாடகி ஸ்வர்ணலதா பற்றி என்று முன்னோட்டம் காட்டினார்கள். முடிந்தால் பார்க்கணும் !

பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி - 1

CNN IBN -ல் சாதித்த இந்திய பெண்களுக்கு பரிசுகள் தந்தனர்
ஐஸ்வரியா ராய் மற்றும் கெளதம் கம்பீர் சிறப்பு விருந்தினர்களாக அனைவருக்கும் பரிசுகள் தந்து உரையாடினர்

கார்த்திகா என்கிற தமிழ் பெண் விருது கிடைத்து பேசும் போது " நான் ஏழை தான். ஏழைகள் சிந்தனை சின்ன அளவில் தான் இருக்கும் என்கிறார்கள். அது தவறு. இந்த நாட்டின் பிரதமர் ஆகவேண்டும் என்பது என் கனவு. மனிதர்களை தயவு செய்து அவர்கள் வைத்துள்ள பணத்தை வைத்தோ, அவர்களது பாலினத்தை ( Gender ) வைத்தோ எடை போடாதீர்கள்" என கம்பீரமாக பேசினாள். 

" உன் அம்மாவிடம் ஏதேனும் பேசணுமா ? " என ஐஸ்வரியா ராய் கேட்க " அம்மா - உன்னால் தான் நான் படிக்க முடிந்தது. என்னை வீட்டில் வைக்காமல் படிக்க வைக்க அனுப்பிய முடிவை நீ தான் எடுத்தாய். அதற்கு நன்றி. அதனால் தான் நான் இன்று நிற்கிறேன் " என்று தமிழில் பேசி அசத்தினாள்.

நெகிழ்வான நிகழ்ச்சியாக இது இருந்தது

பெண்கள் தின சிறப்பு நிகழ்ச்சி - 2

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் கே. வி. தங்கபாலு நிர்வகிக்கும் மெகா டிவி  யில் பெண்கள் தினத்தை முன்னிட்டு 5 ஆண்டுகளாக சாதனை பெண்களுக்கு விருது தருகிறார்களாம்.

இவ்வருடம் வாணி ஜெயராம்க்கு வாழ் நாள் சாதனையாளர் விருது தர, அவரது அற்புத பாடல்களில் பலவற்றை காட்டினார்கள். அவர் இந்த 75 வயதில் மிக அருமையாக சில பாடல்களை பாடி காட்டினார். பாடல் வரிகளை தப்பு தப்பாக பாடும் இளம் தலைமுறை போலன்றி முப்பதுக்கும் மேற்பட்ட பாட்டுகளை மனப்பாடமாய் அடுத்தடுத்து பாடியது ஆச்சரிய பட வைத்தது

இந்த நிகழ்ச்சியை நான் பார்த்ததில், இதை வாசிக்கும் - உங்களுக்கு ஒரு கஷ்டமிருக்கு.. .. வாணி ஜெயராம் பாடல்கள் பற்றி மட்டுமே ஒரு தனி பதிவு எழுத ஆசை வந்துடுச்சு (ஒடுங்க.. ஒடுங்க.. அது உங்களை நோக்கி தான் வருது )

டிவியில் வரும் சினிமா விளம்பரங்கள் 

என்ன ஆச்சு தமிழ் சினிமாவுக்கு? ஒவ்வொரு சானலிலும் பத்துக்கும் மேற்பட்ட சினிமா விளம்பரங்கள் காட்டிய வண்ணம் உள்ளனர். மதில் மேல் பூனை, ஒன்பதுல குரு உள்ளிட்ட படங்கள் மிக அதிக முறை காட்டினாலும், இன்னும் பெயர் நினைவில் வைத்து கொள்ள முடியாத எத்தனையோ படங்களும் கூட வருகிறது.

டிரைலர் பார்க்கவே கண்ணை கட்டுதே ... நம்ம உண்மை தமிழன் மற்றும் கேபிள் போன்றோர் எப்படி தான் இந்த படங்களை பார்க்கிறார்களோ.. தமிழ் சினிமா இயக்குனர்கள் இவர்களுக்கு ரொம்பவே கடமை பட்டுள்ளனர் !

பிளாஷ் பேக் : எதிரொலி (வாசகர் கடிதம்)

தூர்தர்ஷனில் வாசகர் எழுதும் கடிதங்களை ஒரு பெண்மணி வாசிக்க, நிலைய இயக்குனர் அதற்கெல்லாம் பதில் சொல்லுவார்.. குவிந்து கிடக்கும் கடிதங்களை பார்த்தால் பிரமிப்பா இருக்கும். குறைஞ்சது ஆயிரம் லெட்டராவது கிடக்கும். ஏற்கனவே அவற்றை வாசித்து விட்டு, தங்களால் எதற்கு பதில் சொல்ல முடியுமோ அதை மட்டுமே அந்த பெண்மணி வாசிப்பார். பலவும் " அருமை; அற்புதம்; " என்று இருக்கும். அரிதாய் சில சந்தேகங்கள் வர, அப்போ மட்டும் முகம் முழுக்க மேக் அப் போட்ட நம்ம நிலைய இயக்குனர் பதில் சொல்றேன் என அறுத்து தள்ளுவார்.

டிவி வந்த காலத்தில் தூர்தர்ஷனில் வரும் எல்லா நிகழ்சிகளையும் பார்த்தாக வேண்டிய கட்டாயத்துக்கு பார்த்த நிகழ்ச்சி.. இன்னும் வருதா என தெரியலை !

சூப்பர் சிங்கர் கார்னர் 

கடந்த வாரம் Zonal லெவலில் பெஸ்ட் பாடகர்களாக வந்தவர்கள் பாடினார்கள். உண்மையில் அந்த கேட்டகரியில் பலரும் செம அட்டகாசமாய் பாடினார்கள் என்று தான் சொல்லணும்.

ஐந்து ஜட்ஜ்கள் அமர்ந்து தங்களுக்குள் பேசியவாறும், சிரித்தவாறும் கேட்கிறார்கள். நன்கு பாடுகிறார் என நாம் நினைக்கும் போதே தேவன் ரொம்ப சீக்கிரம் ரெட் பட்டனை அழுத்துகிறார். அவரை பார்த்துட்டு அடுத்த நொடி அடுத்து சுபா அல்லது சௌமியா ரெட் அழுத்திடுறாங்க. ஏன் செலெக்ட் ஆகலை என்பதற்கு காரணம் சொல்றோம் என நல்லா டிஸ்கரேஜ் பண்ணி அனுப்பிடுறாங்க.

பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்....விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !
****
அண்மை பதிவுகள்

பாலாவின் பரதேசி பாடல்கள் - எப்படி ?

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் - ஒரு பார்வை

29 comments:

  1. பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்....விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை //

    உண்மை உண்மை பாடகர் தேவன் செய்வது ஓவர்

    ReplyDelete
    Replies
    1. பிரேம் : பலரும் தேவன் மீது தான் காண்டா இருக்கோம்

      Delete
  2. எதிரொலி நிகழ்ச்சில அடுத்தவாரம் என்ன படம் போடுவங்கன்னுச் சொல்லுவங்களே! அதுக்காக மட்டும் பார்த்த ஞாபகம் :))

    ReplyDelete
  3. . //அவரை பார்த்துட்டு அடுத்த நொடி அடுத்து சுபா அல்லது சௌமியா ரெட் அழுத்திடுறாங்க. ஏன் செலெக்ட் ஆகலை என்பதற்கு காரணம் சொல்றோம் என நல்லா டிஸ்கரேஜ் பண்ணி அனுப்பிடுறாங்க.

    பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்....விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !//

    முறையாக பாட்டு பாட கற்றுக்கொண்டவர்களுக்கும் காதால் கேட்டு அதன் வழியாகவே தானே பாடிப் பாடி கற்றுக்கொண்டவர்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கும். அதை கேட்கும்பொழுதே உணரலாம். குரல், தாளம், ச்ருதி, கமகம், பிரயோகம், வார்த்தைகளின் தெளிவான உச்சரிப்பு, இசை இலக்கணம் கடைசியாக.
    இவை அத்தனையும் இருக்கும் இளம் பாடகர்கள் கிடைப்பது அரிதே. இதில் குரல் ஒன்று தான் நமக்குக் கிடைத்த வரம். மிச்ச அத்தனையும்
    தீவிர பயிற்சி மூலம் கற்றுக்கொள்ள இயலும்.

    இந்தக்குரலுமே சாதனை என்று சொல்லும் பயிற்சியினால் ஒருவாறு மாற்றிக்கொள்ள இயலும். தினம் ஒருவரால் ஒரு மணி நேரமாவது
    நன்றாக உரத்த குரலில் பாடி ப்ராக்டிஸ் செய்யும் உறுதி எடுத்துக்கொள்ள இயலுமாயின் யாருமே இந்த இசைத் துறையில் முன்னேற இயலும்.
    நம்மில் பலர் பாத் ரூம் சிங்கர்ஸ் டைப். பலர் முன்னே பாடுவதற்கு ஷைனஸ் . அதன் காரணமாகவே பாட்டில் முன்னுக்கு வர இயல்வதில்லை.

    ஆயிரம் பேரை கொன்றால் தான் அரை வைத்தியன் என்று கேள்விப்பட்டதில்லையா ? அது போல் தான் ஆயிரம் கழுதைகளையும்
    விரட்டியடித்தபின்புதான் ஒருவன் அரை பாடகன் என்ற பெயர் வாங்க முடியும்.

    இத்தனை சொன்ன பிறகும் நீங்கள் எழுதியதை அப்படியே நானும் வழி மொழிகிறேன். அந்த மூன்று பேரில் இருவருக்கு இன்னும் கொஞ்சம்
    நாசூக்கு தேவை. பார்ட் வித் டிக்னிடி அன்ட் க்ரேஸ் என்று சொல்வார்கள். அது இருந்தால் நல்லது.

    சுப்பு தாத்தா.

    ReplyDelete
    Replies
    1. மிக விரிவான அசத்தல் விமர்சனத்துக்கு நன்றி சுப்பு சார்

      Delete
  4. தேவன் பாடுறதே மொக்கையா இருக்கும் இதுல இவரு ஜட்ஜாமா?

    ReplyDelete
    Replies
    1. கரீட்டா சொன்னீங்க சக்கர கட்டி

      Delete
  5. மண்டையை பொளக்கும் வெயில் அடிக்கும் சென்னைல கழுத்தை சுத்தி ஸ்கார்ப்/மப்ஃலர் போட்டுண்டு இருட்ரான ஸ்டூடியோகுள்ள கருப்பு கண்ணாடி போட்டுண்டு தேவன் பண்ணர ரவுசு தாங்கமுடியலை! நீதிபதியா வரவங்களுக்கு முதல்ல அடக்கமும் வார்த்தைல பணிவும் முக்கியம்!

    ReplyDelete
    Replies
    1. தேவன் பற்றிய உங்கள் வர்ணனை அருமை தக்குடு :)

      Delete
  6. வழக்கமான பொழுதுபோக்கான பதிவு...
    எனக்கும் விஜய் டிவி ஜட்ஜங்க மீது சில நேரங்களில் கோபம் வருது.. நல்லா பாடுகிறார்கள் ஆனால் சுதி இல்ல.. தாளம் இல்ல வைரஸ் இல்ல அப்படின்னு ரிஜக்ட் செய்யுராங்க.. நல்ல குரல் வளம் உள்ளவர்களையும் திருப்பி அனுப்புகிறார்கள்..
    அந்த போட்டியாளர்கள் முகத்தை பார்க்க பாவமாக உள்ளது...
    7சி தொடர் பார்க்கிரிங்களா ங்ணா..
    அந்த தொடர் ஏன்னா அப்படி போகுது.. ஆரம்பத்தில் இருந்த ஜாலி இப்ப இல்ல போர் அடிக்குது... இத எப்படி அந்த இயக்குனர்கிட்ட சொல்ரதுண்னு தெரியல அவர பார்த்தா கொஞ்சம் சொல்லிடுங்ணா
    காலை வணக்கம்...
    திங்களகிழமை அதிகாலையிலே கெட்ட செய்திதான் என்னை வரவேற்றது ஹும இன்று எப்படி இருக்க போகுது ண்ணு தெரியல

    ReplyDelete
    Replies
    1. 7 சி பார்க்கலை தம்பி. ஆபிஸ் விட்டு வரவே நேரமாகிடும் ; பெரும்பாலும் சீரியல் பார்ப்பதில்லை

      Delete
  7. பல நிகழ்ச்சிகளின் நிறைகுறைகளை அறிந்தேன்...

    ReplyDelete
  8. கேப்டன் நியூஸ் சேனல் ரொம்ப நாளா இருக்கே...

    தூர்தர்ஷன் எதிரொலி நிகழ்ச்சியில் யு எம் கண்ணன் பிரபலம்! இப்போ காற்றினிலே வரும் கீதம் நிகழ்ச்சியை அதே பொதிகையில் பண்றாரே... அவரே!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? பார்க்க முயல்கிறேன் ஸ்ரீராம் சார் நன்றி

      Delete
  9. எதிரொலி நிகழ்ச்சி இப்பொழுதும் வந்து கொண்டு இருக்கின்றது. கடிதங்கள் குறைந்தாலும், இன்றும், பல நேயர்கள், போதிகையுடன் தொடர்பு வைத்துள்ளனர்


    பொழுது போக்கு அம்சங்கள் நீங்கலாக, பல பயனுள்ள நிகழ்ச்சிகளைத் தருவது பொதிகை தொலைகாட்சி மட்டும்தான். மதியம் 1200 மணிக்கு தினமும் வரும் நேரடி ஒலிபரப்பு மிகவும் பிரபலம் / பயனுள்ளது.

    சனிக்கிழமை இரவு 1010 முதல் இரவு 1110 வரை இருக்கும் ஸ்போர்ட்ஸ் QUIZ மிகவும் பிரபலம். இதுவும் நேரடி ஒளிபரப்பே. துபாய், சிங்கப்பூர், இலங்கை என்று பிற நாட்டில் இருந்து கூட நேயர்கள் நேரடியாக பங்கேற்கின்றனர். இந்த நிகழ்ச்சி கடந்த 12 ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றது. 75% ஆங்கிலம், 25% தமிழ் கலந்தது இந்த Sports Quiz நிகழ்ச்சி.

    ReplyDelete
    Replies
    1. ஸ்போர்ட்ஸ் குவிஸ் பற்றி ஒரு முறை நானும் எழுதுகிறேன்

      Delete
  10. //பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்....விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !//

    மிகச் சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
  11. அப்போது எதிரொலியும் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்தோம்...:)

    எதிரொலி நிகழ்ச்சி போல் என் பள்ளி நாட்களில் நகைச்சுவை நாடகம் ஒன்று நானும் இன்னொரு மாணவனும் சேர்ந்து நடித்தோம். தலைப்பு - பேப்பரை எப்படியெல்லாம் கிழிப்பது என்று! நான் சீரியஸாக கேட்க அந்த மாணவன் செய்முறையை விளக்குவார்...:))

    சூப்பர் சிங்கரில் தேவன் சட்டென்று ரெட் பட்டனை அழுத்தி விடுவது எனக்கும் தோன்றியது... ஷைலஜா சற்று ஆறுதலாக பேசி நிராகரிக்கிறார்.

    ReplyDelete
    Replies
    1. மலரும் நினைவுகளுக்கு நன்றி கோவை 2 தில்லி

      Delete
  12. ம்ம்ம்.. தொலைக்காட்சி பார்க்க இப்பவும் நேரமிருக்கிறதா மோகன்.... சீரியஸா ஒரு டவுட்... :)

    ReplyDelete
    Replies
    1. வெங்கட்.. நோ யூ ஆர் மை பெஸ்ட் பிரன்ட் ... :))

      Delete
  13. பாடகர்களுக்கு பயிற்சி தருவது இருக்கட்டும்....விஜய் டிவி இந்த ஜட்ஜ்களுக்கு மனிதர்களிடம் எப்படி பேசுவது என கொஞ்சம் டிரைனிங் தந்தால் தேவலை !

    super tips

    எவ்வளவு தான் பார்பீங்க எங்கதான் உங்களுக்குமட்டும் டைம் கிடைக்குது திறமைதான் எல்லா விஷயமும் பகிர்வும் நல்ல இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மலர் பாலன் மகிழ்ச்சி நன்றி

      Delete
  14. சூப்பர் சிங்கரை விடாம பார்க்கறீங்க! என்னால முடியலை! எதிரொலி! மகா அறுவையான நிகழ்ச்சி! வீட்டில் அனைவரும் பார்த்து நக்கல் பண்ணிக் கொண்டிருப்போம்! நினைவூட்டியதற்கு நன்றி!

    ReplyDelete
  15. பூஜா! எனக்கும் பிடித்த டீவி நடிகை! மீண்டும் நடிக்க வந்து விட்டாரா? ஒரு சமையல் நிகழ்ச்சியில் விஜய் டீவியில் பார்த்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அப்படியா நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...