Thursday, March 7, 2013

ஹரிதாஸ் - விகடன் தந்த 45 மார்க் சரியா? விமர்சனம்

பெரும்பான்மை பத்திரிக்கைகள் மற்றும் பதிவர்களிடம் நல்ல ஒபினியன் வாங்கிய ஹரிதாஸ் சற்று தாமதமாக தான் பார்க்க முடிந்தது

கதை

ஹரி என்கிற இளைஞன் தன் வாழ்க்கையை நம்மிடம் சொல்வதாக படம் துவங்குகிறது.

ஹரியின் தந்தை கிஷோர் ஒரு என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட். கஜினி படத்தில் வில்லனாக வருவாரே - அவரையும், அவர் கூட்டத்தையும் போட்டு தள்ளுவதை லட்சியமாக கொண்டுள்ளார் (ஏன் துவக்கம் முதல் அவர்களை போட்டு தள்ளுகிறார்; அவர்கள் என்ன குற்றம் செய்தனர் என்று தெளிவான விளக்கம் இல்லை; உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள்)

ஆட்டிசம் பாதித்த ஹரியின் தாயார் பிரசவத்தின் போதே இறந்து விட, பாட்டி தான் வளர்க்கிறார் அவர் இறந்த பின் ஹரி தந்தை வசம் வளர்கிறான்

வேலைக்கு லாங் லீவு போட்டு விட்டு ஹரியின் வாழ்க்கைக்காக மெனக்கெடுகிறார் தந்தை. பல மாதங்கள் ஆகியும் ஹரியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை. ஹரியை எந்த துறையில் அவர் ஈடுபடுத்தினார்; வில்லனை வீழ்த்தினாரா, வில்லன் ஹீரோவை வீழ்த்தினாரா என்பதை இறுதி பகுதி சொல்கிறது

பாசிடிவ் பாயிண்ட்ஸ்



படத்தின் பெரும் பிளஸ் ஆட்டிசம் பாதித்த சிறுவன் அதிலிருந்து மீண்டு சாதிப்பது என்கிற பாசிடிவ் விஷயம் தான். ஆட்டிசம் மட்டுமல்ல, ஸ்பெஷல் சில்ட்ரன் பலரின் பெற்றோர் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பார்கள். சில சொட்டு கண்ணீர் விடாமல் அவர்களால் இருக்க முடியாது

ஆட்டிசத்தில் நிச்சயம் பல விதம்/ அதன் தீவிர தன்மை பொறுத்து உண்டு. தாரே ஜாமீன் பர் கூட இதே போல மாற்று திறனாளி குழந்தை பற்றி பேசிய படம் தான் (அங்கு டிஸ்லெக்ஸியா).

செண்டிமெண்ட் சீன் என்றால் கண்ணை கசக்கும் அய்யாசாமி மாதிரி ஆட்களை நெகிழ வைக்கும் காட்சிகள் பல உண்டு

- சிறுவன் குதிரை பந்தயத்தை முதலில் பார்க்கும் காட்சி - அதை  பார்த்து விட்டு அவன் ஓடுவது - அப்போது கிஷோர் முகத்தில் தெரியும் மகிழ்ச்சி - நிறைவு - அட்டகாசம் !

- ஓட்ட பந்தயம் தான் அவன் வாழ்க்கை என்று முடிவானாலும், அதில் அவன் சோபிக்க முடியாமல் இருக்கும் போது, கோச் ராஜ் கபூர் " இவன் 100 மீட்டர், 200 மீட்டர் ஓடுற ஆள் இல்லை. மாரத்தான் ஓடுற ஆள் " என்பது இன்னொரு நெகிழ்வான இடம். உண்மையில் இத்தகைய குழந்தைகளுக்கு எனர்ஜி லெவல் மிக அதிகமாக இருக்கும். மாரத்தான் என்பது மிக சரியான சாய்ஸ்.

- இறுதி காட்சியில் பையன் ஓடும் மாரத்தான், அதன் நிறைவு அனைத்துமே touching !

படத்தின் மிக பெரிய பிளஸ் கிஷோர் மற்றும் சிறுவன் ஹரியாக வரும் பிரிதிவிராஜ் இருவரின் நடிப்பு.



சிறுவன் வசனமே இன்றி, கை விரல்களிலும், முக பாவனையிலுமே அசத்துகிறான்.

கிஷோர் - அற்புதம் ! Bald -ஆக உள்ள பலர் காம்ப்ளக்ஸ் உடன் இருப்பதை கண்டுள்ளேன். ஆனால் தலையில் முக்கால் வாசி முடி கொட்டிய கிஷோர், சினிமா துறையில் அடைந்துள்ள வளர்ச்சி - அழகுக்கும் வெற்றிக்கும் சம்பந்தமில்லை என்பதை காட்டுகிறது. எப்போதும் இறுகிய முகத்துடன் இருந்தாலும், சிறுவனுடன் பழகும் காட்சிகளில் தந்தையாக ஜொலிக்கிறார். ஒவ்வொரு 30 பிளஸ் இளைஞனுக்கும் தன் குழந்தை மற்றும் தந்தை நினைவை வர வைத்து விடும் இவர் பாத்திர படைப்பும், நடிப்பும் !

சூரி சிரிக்க வைக்கிறார். ஓம குச்சி என்ற பெயரில் வரும் குண்டு சிறுவனும் கவனம் ஈர்க்கிறான்

வசனம் சில இடங்களில் நச். சில இடங்களில் சினிமாட்டிக்

ஒளிப்பதிவும், அழகான பின்னணி இசையும், சரியான நடிகர்களை தேர்வு செய்ததும் படத்திற்கு ஒரு நல்ல பீல் வர வைத்து விடுகிறது

விகடனில் படத்துக்கு 45 மார்க் தந்திருந்தனர். ரொம்ப சரியான கணிப்பு அது. உண்மையில் படத்தின் சில குறைகள் தான் 5 மார்க்கை குறைத்து விட்டன இல்லாவிடில் 50 மார்க் வாங்க வேண்டிய படம் இது

அப்படியென்ன குறைகள்?

சின்ன விஷயம் துவங்கி - பெரியது வரை பல லாஜிக் மீறல்கள் - (எந்த பள்ளியில் டீச்சர் அருகில் வருவதை பார்த்த பின்னும் மரத்தில் அல்லது சுவற்றில் படுத்து கொண்டு மாங்காய் சாப்பிடுவான் சிறுவன்? விபத்தில் சிக்கி - காயமடைந்த பின்னும் ஹீரோ போடும் சண்டை- சரியான காரணம் இன்றி கிளைமாக்சில் நண்பர்கள் மொபைலை சுவிட்ச் ஆப் செய்வது, etc )

ஸ்னேஹா - பாத்திரம் ஆரம்பத்தில் அழகாய் இருந்தாலும் போக போக செயற்கையாகி விடுவது.

பையன் புகழ் பெற்ற பெரிய ஆளாகிறான் என முதல் காட்சியிலேயே காட்டி விடுவது

என்கவுன்ட்டரை நியாயப்படுத்துவது/ பெரிது படுத்துவது

அனாவசிய குத்து டான்ஸ் .........

என ஆங்காங்கு சில குறைகள் இருந்தாலும் நிச்சயம் இது ஆதரிக்க வேண்டிய ஒரு படம் தான்.

அதற்கு முக்கிய காரணம் - படம் தரும் நம்பிக்கை - மற்றும் மாற்று திறனாளிகள் மேல் தெரிகிற அக்கறை !

ஹரிதாஸ் - அவசியம் பார்க்க வேண்டிய படம் !

18 comments:

  1. அண்ணே இன்னைக்கே போயி பார்க்கணும்னே எனக்கு தள்ளி போயிகிட்டே இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்கர கட்டி அவசியம் பாருங்க

      Delete
  2. //தாரே ஜாமீன் பர் கூட ஆட்டிசம் பற்றி பேசிய படம் தான்.//

    அது ‘டிஸ்லெக்ஸியா’ இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்ல? மாத்திடுறேன் :) நன்றி லக்கி

      Delete
    2. ஏன் ஞாபகம் இருக்குன்னா, அந்த படம் பார்த்த தாக்கத்திலிருந்தபோது அதே பிரச்சினை இருந்து அதை வென்றவர் ஒருவரை சந்தித்திருந்தேன். அவரைப்பற்றி ஒரு கட்டுரை கூட எழுதியிருந்தோம் : http://www.luckylookonline.com/2009/10/blog-post_31.html

      Delete
  3. சினேகாவிற்கு நடிக்க வாய்ப்பில்லையா? அவரின் நடிப்பு பிடிக்குமாதலால் இது போன்றதொரு கதையில் அவரை எதிர்பார்த்தேன்... இன்னம் பார்க்கல ....

    ReplyDelete
    Replies
    1. பாருங்க மேடம் நல்லா தான் நடிச்சிருக்கார் போக போக பாத்திரம் சற்று செயற்கையாய் எனக்கு தோன்றியது

      Delete
  4. மிகப்பெரிய பிரச்சனையை வைத்து எப்படியோ படம் (பணம்) பண்ணி விட்டார்கள்...

    மிகப் கொடுமையான குறைபாடு... (நோய் அல்ல)

    எழுதிக் கொண்டே போகலாம்... அதை விட திரு. யெஸ்.பாலபாரதி அவர்களின் தளத்தில் முழு விவரங்கள் உண்டு...

    முகவரி : http://blog.balabharathi.net/

    மேலும் அறிய கீழே உள்ள இணைப்பில் சென்று, தரவிறக்கியும் படிக்கலாம்...

    https://docs.google.com/file/d/0BzfUmo1CVqraMEd2VENpMHBDUFU/edit

    இந்தக் கட்டுரை பலருக்கும் உதவும்... முக்கியமாக பெற்றோர்களுக்கு...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார்.. கூகிள் பிளஸ்சில் பகிர்ந்தமைக்கும்

      Delete
  5. கண்டிப்பாக படம் பார்க்க வேண்டும் ஏனென்றால் எனக்கு கிஷோரின் கண்கள் ரொம்ப பிடிக்கும்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? நன்றி உமா

      Delete
  6. நல்லதொரு படம் பற்றிய நிறைவான விமர்சனம்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ் மகிழ்ச்சி

      Delete
  7. ஸ்பெஷல் சில்ட்ரன் பலரின் பெற்றோர் இந்த படத்தை நிச்சயம் ரசிப்பார்கள். சில சொட்டு கண்ணீர் விடாமல் அவர்களால் இருக்க முடியாது

    yes mohan sir

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரவணன் நன்றி

      Delete
  8. ம்...ம்... படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்களா?
    பார்த்துடலாம்.
    ஸ்பெஷல் குழந்தைகளுக்கு மட்டுமல்ல; அவர்களைப் பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கும் மற்றவர்களுக்கும் இந்தப் படம் ஒரு சின்ன விழிப்புணர்வு ஏற்படுத்தும் என்று நம்புவோம்.

    ReplyDelete
  9. already have thought of watch this movie... but still I didn't gett chance .. thanks for ur positive review...

    ReplyDelete
  10. நல்ல விமர்சனம். ஊக்குவிக்க வேண்டிய ஒரு படம். படம் வேகமாகச் செல்வதற்கு எடிட்டரின் கைவண்ணம் ஒரு காரணம்( ராஜா முகமது). ஸ்நேகாவின் நடிப்பு, கதாபாத்திரம் எனக்கு பிடித்திருந்தது. தொடரட்டும் உங்கள் பணி!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...