Wednesday, March 13, 2013

வானவில்- சென்னை சிக்னல் -கருத்து கந்தசாமி - என்னோடு வா வா

ஆஸி அணியும் கருத்து கந்தசாமிகளும் 

இந்தியாவில் டூருக்கு வந்த ஆஸி அணி அடித்த சமீபத்திய கூத்து நகைப்பிற்குரியது. சென்ற டெஸ்ட் மேட்ச் தோற்ற பின் " ஏன் தோற்றோம்?" என 3 காரணங்கள் எழுதி தர சொன்னாராம் கோச். 12 வீரர்கள் எழுதி தர, 4 பேர் எழுதி தரலியாம். அவர்கள் அடுத்த மேட்சில் ஆட முடியாது என கோச் மற்றும் கேப்டன்  அறிவித்து விட்டனர் . இந்த நால்வரில் ஆஸி அணியில் உருப்படியாய் விளையாடிய ஒரே வீரரான பாட்டின்சனும் உண்டு.

கிரிக்கெட் வீரர்கள் நன்கு விளையாடலை என்றோ, டிரைனிங் சரியாய் வர வில்லை என்றோ அணியை விட்டு நீக்கலாம்; கருத்து சொல்ல வில்லை என்று நீக்குவதெல்லாம் டூ மச். எல்லாரும் கருத்து கந்தசாமியாய் இருந்து விட முடியுமா? சிலருக்கு ஆட மட்டும் தான் தெரியும்; கருத்து சொல்ல தெரியாது என்றால் அது தவறா? ஒரு 15 பேர் உள்ள குழுவினர் -ஒரு மீட்டிங் போடுகிறார்கள். குறிப்பிட்ட விஷயம் பற்றி கருத்து கேட்டால் அங்குள்ள 15 பேருமா பேசி விடுவார்கள்? யாருக்கு பகிர கருத்து இருக்கோ அவர்கள் தானே பேசுவார்கள்?

ஸ்கூலில் ஹோம் வொர்க் செய்யா விடில் மிஸ் தண்டனை தருவது மாதிரி இருக்கு. அங்கு கூட ஹோம் வொர்க் செய்ய விடில் அந்த  வகுப்பிற்கு வெளியே நிறுத்துவார்கள். அடுத்த ஒரு வாரத்துக்கு நீ பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் என்று சொல்ல மாட்டார்கள்.

இப்போ இருப்பதே 12 பேர் மட்டும் தான் ! 5 நாள் டெஸ்ட் மேட்ச்சில் ஒரு சிலருக்கு அடி பட்டால் யார் பீல்டிங் செய்வார்களாம்? 4 பேருக்கு பதில் 6 பேர் எழுதி தராமல் இருந்திருந்தால் 10 பேரை வைத்து கொண்டு ஆடியிருப்பார்களா என பல கேள்விகள் எழுகின்றன

ஒரு காலத்தில் அசைக்க முடியாத வலுவுள்ள அணியாக இருந்த ஆ ஸியின் வீழ்ச்சி ஒரு பக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும், ஏனோ இன்னொரு புறம் வருத்தமாகவும் உள்ளது

அழகு கார்னர்

மாடர்ன் டிரஸ், புடவை என எல்லா உடைகளிலும் அழகு ! சினிமாவை விட டிவியில் நடுவராய் வந்தபோது "இம்புட்டு அழகா?" என வியக்க வைத்தவர்.



அழகு + திறமை இருந்த அளவுக்கு பெரிதாய் சாதிக்காமல் பீல்டை விட்டு விலகியது சற்று வருத்தமே

சென்னையில் சிக்னல் எந்த வரிசையில் கிளியர் ஆகிறது ?

சமீபத்தில் தான் இதனை கவனித்தேன். உங்களில் எத்தனை பேருக்கு இது தெரியும் என அறியேன்.

ஒரு 4 முனை சிக்னலில் நிற்கிறோம். அங்கு நமது சிக்னல் எத்தனை நொடிகளில் கிளியர் ஆகும் என்று காட்டும் கடிகாரம் இருந்தால் சரி. அது இல்லாவிடில், நமக்கு எப்போது பச்சை சிக்னல் கிடைக்கும் என்று அறிய ஒரு எளிய வழி..

உங்களுக்கு இடப்புறம் உள்ள சாலையிலிருந்து வாகனங்கள் இப்போது சென்று கொண்டிருக்கிறது என்று வையுங்கள். அதற்குடுத்து அவர்களுக்கு இடப்புறம் உள்ள சாலை (அதாவது உங்களுக்கு நேர் எதிர் சாலை); இறுதியாக அவர்களின் இடப்புறம் உள்ள சாலையின் வாகனங்கள் சென்று கடைசியாக உங்கள் சாலைக்கு பச்சை விளக்கு வரும்.

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் உங்களுக்கு வலப்புறம் உள்ள சாலையில் உள்ள வாகனங்கள் சென்ற பின் அடுத்து உங்கள் சாலைக்கு பச்சை சிக்னல் கிடைக்கும். உங்கள் வலப்பக்கம் உள்ள சாலை வாகனங்கள் செல்ல துவங்கி கொஞ்ச நேரம் கழித்து நீங்கள் எஞ்சின் ஆன் செய்தால் போதுமானது

இதுவெல்லாம் ஒரு மேட்டரா; அதான் எனக்கு தெரியுமே என்று சொல்லாதீர்கள். இத்தனை வருடமாய் இது தெரியாமல் இருக்கும் என்னை மாதிரி ஆசாமிகளும் ஆங்காங்கு இருக்க கூடும் !

என்னா பாட்டுடே !

மனதுக்கு பிடித்த பாடல் கேட்காமல் நாட்களில் ஒன்று கூட கழியாது. வீடோ, அலுவலகமோ வேலை செய்யும் போது பாட்டு ஒலித்து கொண்டே இருக்க வேண்டும். படிக்கிற காலத்திலிருந்தே இது வழக்கமாகி போய் விட்டது

தினம் கணினியில் பாடல் ஒலிக்க வைக்கும் போது நீதானே என் பொன் வசந்தத்தில் வரும் " "என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன்" - என்கிற பாட்டை தான் சில மாதங்களாக முதலில் கேட்கிறேன் .

பாடல் துவங்கும் பல்லவி அப்படியே ஒரு கிறித்துவ பாடலின் சாயல் என்றாலும், வளைந்து நெளிந்து செல்லும் சரணம் சான்சே இல்லை.. அசத்தல் !



திரையில் பார்க்கும் போது சமந்தாவின் சிரிப்பும் அழகும் கூட அலுக்காமல் இப்பாட்டை பார்க்க வைக்கிறது. நீங்களும் ஒரு முறை கண்டு ரசியுங்கள்

சென்னை ஸ்பெஷல் - புத்தக கடைகள்

சிவா விஷ்ணு ஆலயத்துக்கு எதிரே உள்ளது இந்த பழைய புத்தக கடை. இங்கு ஆங்கில சுய முன்னேற்ற மற்றும் மேனேஜ்மன்ட் புத்தகங்கள் - பாதி விலைக்கு கிடைக்கிறது.

பழைய புத்தகங்கள் சில நேரம் ஒரிஜினல் இல்லாமல் அதன் பைரேட்டட் வெர்ஷன் புத்தகமாக இருக்கும் என நினைக்கிறேன் !


இங்கு மட்டுமல்ல, பாண்டி பசாரிலும் இத்தகைய புத்தக கடைகள் பல உண்டு.. பைரேட்டட் வெர்ஷன் படிப்பது சரியா என்று கேள்விக்குள் நான் செல்வதில்லை... விலை உயர்ந்த ஆங்கில புத்தகங்கள் இப்படி படித்தால் தான் உண்டு.

போஸ்டர் கார்னர் 



வலைப்பதிவர் பக்கம் 

சமஸ் என்கிற பெயரில் எழுதி வரும் நண்பரின் வலை பதிவு இது. சாப்பாட்டு புராணம் என்று பல ஊர்களின் ஸ்பெஷல் சாப்பாட்டுகளை மிக சுவையாக எழுதுகிறார் 

குறிப்பாக எங்கள் ஊர் நீடாமங்கலத்தின் பால் திரட்டு பற்றி அவர் எழுதியுள்ளதை வாசியுங்கள் ! நீடா பற்றி அழகாய் வர்ணித்துள்ள சமஸ் அவர்களுக்கு நன்றி !

20 வருடத்துக்கு மேல் நீடாமங்கலத்தில் வசித்தவன் என்ற முறையில் சில வரிகள் :

நாங்கள் அதனை பால் திரட்டு என்று சொல்ல மாட்டோம். பால் கோவா என்றே கூறுவோம். எங்கள் ஊரில் கூட்டுறவு பால் வழங்கும் சொசைட்டி அருகே தான் இதனை தயார் செய்வார்கள். கல்லூரியில் படிக்கும் போதும் சரி, வேலைக்கு சென்ற பின்னும் சரி ஒவ்வொரு முறை ஊருக்கு செல்லும் போதும் அம்மா தயாராக இதனை வாங்கி வைத்திருப்பார். மீண்டும் ஊருக்கு கிளம்பும் போது என் அறை நண்பர்கள் சாப்பிட சில பாக்கெட்டுகள் வாங்கி கொடுத்தனுப்புவார்.

எங்க ஊர் புகழ் பெற்ற ஆலங்குடி கோவில்க்கு மிக அருகில் உள்ளதால், எப்போதேனும் ஆலங்குடி அல்லது மன்னை செல்லும்போது இந்த பால் திரட்டையும் ஒரு முறை ருசி பாருங்கள். ஒரு முறை சாப்பிட்டால் வாழ் முழுதும் அதன் சுவை மறக்காது !

32 comments:

  1. ஆஸி "சரியான போட்டி" என்று இல்லாமல் இருப்பதால் விறுவிறுப்பில்லை...

    நல்ல தள அறிமுகம்...

    ReplyDelete
  2. ஒரு நேரத்தில் ஆஸ்ட்ரேலியா அணியில் பாதி பேர் லெஜண்ட்களாக இருந்தனர், ஹெய்டன், லேங்கர், கில்க்ரிஸ்ட், பாண்டிங், ஸ்டீவ் வாஹ், வார்ன், மெக்ராத் என்று.

    அது போன்ற காம்பினேஷன் அமைவது பல வருடங்களுக்கு ஒரு முறைதான். அதனால்தான் இன்னமும் தற்போதைய அணி தடுமாறிக்கொண்டிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. கரக்ட் தான் ரகு நன்றி

      Delete
  3. வானவில் சுவாரசியம்.

    //கிரிக்கெட் வீரர்கள் நன்கு விளையாடலை என்றோ, டிரைனிங் சரியாய் வர வில்லை என்றோ அணியை விட்டு நீக்கலாம்; கருத்து சொல்ல வில்லை என்று நீக்குவதெல்லாம் டூ மச்.//

    டூ மச் தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ராம்வி நன்றி

      Delete
  4. பயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....

    ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

    கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

    ReplyDelete
  5. பயனுள்ள மென்பொருள்களை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள் .....

    ஒரிஜினல் AVG Internet Security 2013 மென்பொருள் ----- http://mytamilpeople.blogspot.in/2013/01/avg-internet-security-2013-free-download.html

    கோப்புகளை அதிவேகமாக பதிவிறக்கம் செய்ய! ----- http://mytamilpeople.blogspot.in/2013/02/internet-download-manager-v614-build-5.html

    ReplyDelete
  6. ஆமா பாஸ் ஆஸி கிரிக்கெட் வாரியம் செய்யும் நடவடிக்கைகள் அனைத்தும் நமது தமிழக முதல்வர் நடவடிக்கை போல உள்ளது

    ReplyDelete
    Replies
    1. நன்றி சக்கர கட்டி

      Delete
  7. ஆஸி வீரர்கள் நீக்கத்தைப் பற்றி ஊடகங்களில் நிறைய விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன (குறிப்பாக முன்னாள் வீரர்களிடமிருந்து).ட்விட்டர்களுக்குப் பெருங்கொண்டாட்டம்.

    ஆனால் இது வெறும் கருத்து கூறாதது மட்டுமல்ல; தொடர்ந்து ஒத்துழைக்காமல் இருந்தது தான் காரணம் என்று க்ளார்க் விளக்கமளித்துள்ளார். பட்டின்சன்-இன் மன்னிப்பு/விளக்கமும் இதை நிரூபிக்கிறது. ஆஸ்த்ரேலிய போர்டும் இதற்கு ஆதரவளித்துள்ளது. நிற்க!

    ஆஸ்த்ரேலியா அணியில் இது போன்று ஒழுக்க நடவடிக்கை எடுப்பது இதுவே முதல் முறை அல்ல. சிமண்ட்ஸ் மீது இது போன்று ஒழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. (அப்பொழுது சரியான replacements இருந்தது; ஒரே விளையாட்டு வீரர் என்பதால் கூட இருக்கலாம். 80-களில் தென்னாப்பிரிக rebel பயணத்தின் போது இது போன்ற ஒழுங்கு நடவடிக்கை ஆஸ்த்ரேலிய கிரிகெட்டால் எடுக்கப்பட்டது. அப்பொழுதும் அணியின் நிலைமை கிட்டத்தட்ட இதே போல் தான் (அனுபவமில்லாத இளம் வீரர்கள்). பார்டர் அந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்தி இளம் வீரர்களைத் தயார்படுத்தி ஒரு வெற்றி அணியாக மாற்றினார்.

    க்ளார்க் இந்த வாய்ப்பை எப்படிப் பயன்படுத்தப் போகிறார் என்பதும் அதற்கு அணியின் மற்ற உறுப்பினர்கள் எப்படி respond செய்யப் போகிறார்கள் என்பது தான் கவனிக்கப்பட வேண்டியது.



    ReplyDelete
    Replies
    1. விரிவான உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சீனி.

      Delete
  8. ஆஸ்திரேலிய அணியிலும் கோஷ்டி பூசல்! வாட்ஸ்ன-கிளார்க் இடையே பனிப்போர்! இதுதான் நீக்கத்திற்கு உண்மையான காரணம்! நல்லதொரு பகிர்வு! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க சுரேஷ் நன்றி

      Delete
  9. //இறுதியாக அவர்களின் இடப்புறம் உள்ள சாலையின் வாகனங்கள் சென்று கடைசியாக உங்கள் சாலைக்கு பச்சை விளக்கு வரும். // சோளிங்கநல்லூர் சிக்னலை ஸ்கெட்ச் போட்டு பார்த்தேன், அப்படி வரவில்லை, இருந்தும் பெரும்பான்மை அப்படி இருக்கும் போல

    சமஸ் விகடனில் நிருபரகா இருந்தவர்.. தற்போது புதிய தலை முறையில்

    ReplyDelete
    Replies
    1. //உங்களுக்கு வலப்புறம் உள்ள சாலையில் உள்ள வாகனங்கள் சென்ற பின் அடுத்து உங்கள் சாலைக்கு பச்சை சிக்னல் கிடைக்கும். //

      இதை கவனித்தீர்களா சீனு ? நான் ஏழெட்டு சிக்னலில் கவனித்து விட்டு அப்புறம் தான் எழுதினேன்

      Delete
    2. ////உங்களுக்கு வலப்புறம் உள்ள சாலையில் உள்ள வாகனங்கள் சென்ற பின் அடுத்து உங்கள் சாலைக்கு பச்சை சிக்னல் கிடைக்கும். //
      இதை கவனித்தீர்களா சீனு ? நான் ஏழெட்டு சிக்னலில் கவனித்து விட்டு அப்புறம் தான் எழுதினேன்//
      மேல் சொன்னது இரு நிலைகளில் சாத்தியம் உள்ளது (சோளிங்கநல்லூர் சிக்னலில், மற்றவை எல்லாம் எதிரும் புதிருமானது )
      சோளிங்கநல்லூரில், நான் மேடவாக்கத்தில் இருந்து வரும் சாலைக்கு எதிர்புற சாலையில் உள்ள வாகனங்களுக்கு பச்சை விழுந்து அவர்கள் சென்ற பின் அவர்களுக்கு எதிர்புற சாலையான எங்களுக்கு சிக்னல் கிடைக்கும்... எதிர்புறத்தில் வலமும் இடமும் கிடையாதே சார்....
      எங்களுக்குப் பின் எங்களின் இடப்புறம், அதன் பின் அவர்களின் எதிர்புறம், அதன் பின் அவர்களின் வலப்புறம், அதன் பின் அவர்களின் எதிர்புறமான நாங்கள். மீண்டும் சுழலும் :-)
      ஒன்றை கவனித்தீர்களா வலமும் இருக்கிறது, இடமும் இருக்கிறது. எதிரும் இருக்கிறது

      Delete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete
  11. அழகு கார்னரில் (சென்டரில்) உள்ள படம் அழகோ அழகு. ஆனால், அவர் பெயரையும் சேர்த்து போட்டால் என்ன? அப்பதான் எனக்கெல்லாம் அவர் யாரென்று தெரியும். சத்தியமா எனக்கு அவர் பெயர் தெரியாது. நம்புங்க. ஆனால் பார்த்த மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. ண்ணா .. பூஜா ண்ணா ..

      Delete
  12. அழகு கானர் எங்கள் நாட்டுப் பெண். இந்திய சினிமாக்களுக்குப் பின் எங்கள் நாட்டுப் படங்களில் நடித்தார் . இபபொழுது நடிக்கின்றாரா தெரியவில்லை.

    வானவில் பல தகவல்களுடன் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதேவி. சரியாய் சொன்னீங்க உங்கள் ஊர் தான் அவர்

      Delete
  13. பால் திரட்டு சாப்பிட்டு பார்க்க ஆசை வந்து விட்டது.

    என்னோடு வா வா...சிறப்பான பாடல்.

    சிக்னல் நல்ல விஷயம்.

    ReplyDelete
    Replies
    1. ஆலங்குடி பக்கம் வரும்போது எங்க ஊருக்கு வாங்க ரோஷினி அம்மா பால் திரட்டு அங்கு தான் சாப்பிட முடியும்

      Delete
  14. 'Signal'... what do you mean ? How does it look like ? what's the purpose of it ? Where do we buy and how much each costs ? -- Thanks in anticipation of answer(s)

    ReplyDelete
    Replies
    1. அடேய்.. தம்பின்னு பாக்குறேன்.. இல்லை.. கையை புடிச்சு கடிச்சு புடுவேன்..

      Delete
  15. ஆஸ்திரேலிய அணியில் வீரர்கள் நீக்கப்பட்டது சரியே . நாம் தான் கருத்து கந்தசாமிகள், அவர்களல்ல . அவர்கள் செயல் வீரர்கள் . நாம ஒரு மேட்ச் வின் பண்ணிட்டாலோ , ஒரு கப் வின் பண்ணிட்டாலோ அடுத்த பத்து பதினஞ்சு வருசத்துக்கு அதையே பேசிட்டு இருப்போம் . ஒரு மேட்ச் ல நல்லா விளயாண்டதுக்காகவே ஒரு வீரர் பல வருடங்கள் இந்திய அணியில் நீடிக்கலாம் .ஆனா இந்த பருப்பெல்லாம் ஆஸ்திரேலியாவுல வேகாது .

    நல்லா விளையாண்டா , ஒழுக்கமா இருந்தா உள்ள இல்லனா வெளிய . அவ்ளோதான் .
    இதெல்லாம் இந்தியன் கிரிகெட் போர்டுல நெனச்சு கூட பாக்கமுடியாது . அரசியல் , மத,இன,ஜாதி சாயம் பூசிவிடுவார்கள் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விரிவான கருத்துக்கு நன்றி நண்பரே

      Delete
  16. ஆலங்குடி...... புதுக்கோட்டை பக்கத்தில் இருக்கே அந்த ஆலங்குடியா?

    ReplyDelete
    Replies
    1. இல்லீங்க மேடம்; இது கும்பகோணம் மற்றும் மன்னார்குடிக்கு நடுவே உள்ள ஊர்

      Delete
  17. Hi
    I think most of the signals will open in clockwise direction.(In India)

    ReplyDelete
    Replies
    1. நான் 10 வரியில் சொன்னதை சிம்பிளா சொல்லிட்டீங்க ரொம்ப சரி; நன்றி mogan

      Delete
  18. i have visited kumbakonam often and alangudi few times but never new about this Paal kova, i thought that paal kova is famous in srivilliputtur. Next time when i visit i will try ... is it available everywhere or is there any specific shop ,like iruttu kadai in tirunelveli

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...