Tuesday, March 12, 2013

ஆதி பகவனும், லைப் ஆப் பையும்

லைப் ஆப் பை

லைப் ஆப் பை சமீபத்தில் தான் பார்த்தேன். என்னாது சிவாஜி செத்துட்டாரா என்று கேட்காமல் மேலே படியுங்கள்.

சிறந்த இயக்குனருக்கான விருது உட்பட 4 ஆஸ்கர் விருதுகளை வென்ற லைப் ஆப் பை கதை மிக சுருக்கமாக...



பை என்கிற இளைஞன் தன் வாழ்க்கையில் சந்தித்த வித்தியாச அனுபவம் பற்றி பகிர்கிறான்.

Zoo நடத்தும் தந்தை நஷ்டத்தில் செல்வதால் அதனை மூடி விட்டு விலங்குகளை வெளிநாட்டிற்கு விற்க கப்பலில் கொண்டு செல்கிறார். அனைத்து விலங்குகளுடன் அவர்கள் குடும்பமும் பிரயாணிக்க, சூறாவளி வந்து பெரும்பாலானோர் இறக்கிறார்கள்.

சிறுவன் பை மட்டும் தப்பி ஒரு சிறு படகில் இருக்க, அந்த படகிற்கு ஒரு புலி, வரிக்குதிரை, குரங்கு & கழுதைப்புலி வந்து சேர்கிறது. கடல் வழியே வேறு யாரும் வந்து காப்பாற்றும் வரை அந்த படகிலேயே இருக்கும் நிலை. புலி மற்ற விலங்குகளை கொன்று, கொஞ்சம் கொஞ்சமாக சில நாட்களில் தின்று விடுகிறது. இனி மிஞ்சி இருப்பது பை மட்டும் தான்.

சிறுவன் பை எப்படி தப்பிக்கிறான் - புலி என்ன ஆனது எனபதை அவசியம் படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.



சாதாரணமாக தான் துவங்குகிறது படம். அந்த சூறாவளிக்கு பின் தான் சீட்டின் நுனிக்கு வந்து விடுகிறோம். முதலில் பை தப்பிக்க வேண்டும்; அந்த புலி எப்படியேனும் சாக வேண்டும் என்று எண்ணும் நாம், போக போக, புலி உயிர் தப்ப வேண்டும் என்று நினைக்க வைப்பது அழகான திரைக்கதை உத்தி. பை-யின் மனநிலை எதுவோ அதுவே பார்வையாளனின் விருப்பமாகவும் உள்ள மாதிரி படத்தை அழகாய் கொண்டு செல்கிறார் இயக்குனர்.

உடல்நிலை சரியில்லாத புலியை மடியில் போட்டு கொண்டு சிறுவன் அமர்ந்திருப்பது நெகிழ்வான இடங்களில் ஒன்று.

பல காரணங்களுக்காக லைப் ஆப் பை - ஒரு வித்தியாச அனுபவத்தை தருகிறது. ஆங்கில படத்தில் இந்திய நடிகர்கள் பலரும் இருக்கிறார்கள் - பாண்டிச்சேரியில் கதை துவங்குகிறது - ஆங்காங்கு தமிழில் வேறு பேசுகிறார்கள்.

படம் சொல்ல விரும்பும் ஆதாரமான செய்தி - சக உயிர்களிடம் செலுத்த வேண்டிய அன்பும், "Never, never, never Give up - ":attitude -ம் தான்.

அவசியம் பாருங்கள் லைப் ஆப் பை !
****************

ஆதி பகவன்

முதல் நாளே படம் பார்த்த பதிவர்கள் நொந்து புலம்பிட்டாங்க. அதுக்காக நாம பார்க்காம விட்டுட முடியுமா?

ஒரே மாதிரி உருவம் கொண்ட இருவர் - ஒருத்தன் நல்லவன் - இன்னொருத்தன் கெட்டவன். கெட்டவனை போலிஸ் போட்டு தள்ள துடிக்க, அவன் நல்லவனை அந்த வலைக்குள் மாட்டி விட்டு தப்பி கொள்ள பார்க்கிறான். வழக்கம் போல கடைசியில் வாய்மை (!!) வெல்கிறது !

ஆரம்பிக்கும் போது எல்லாம் பரவால்லை என்கிற மாதிரி தான் இருந்துச்சு. சமீபத்தில் வெளி வந்த ஹிந்தி படமான ஸ்பெஷல் 26 மாதிரி ஜெயம் ரவி - போலி சி. பி. ஐ ஆபிசரா வர்றார். அப்புறம் தாதா வேலை பார்க்கிறார். நீத்து சந்திராவை பார்த்ததும் காதலிக்கிறார். இடைவேளை வரை ஓரளவு சகிச்சுக்கலாம். எதோ சுவாரஸ்யமான முடிச்சு போல காட்டி இடைவேளை விட்டாலும் அதுக்கு பிறகு சொதப்புறாங்க பாருங்க.. ..



ஜெயம் ரவியை பார்க்கும் போதெல்லாம் இந்த படத்தை நம்பி 2 வருஷம் வீணடிச்சாரே என்ற நினைப்பு தான் வருது. பகவான் பாத்திரத்தில் ரொம்ப கஷ்டப்பட்டு நடிச்சாலும் எல்லாமே விழலுக்கு இரைத்த நீர்.

நீத்து சந்திரா.. வாரே வா என ஆரம்பத்தில் சொக்கி போக வைத்தாலும், போக போக - பிடிக்காமல் போய் விடுகிறது. தம்மும் தண்ணியுமாய் இருக்கிறார் என்பதல்ல வேறு என்ன காரணம் என யோசிச்சிக்கிட்டே இருக்கேன்

பாடல்கள் ரொம்ப ரொம்ப சுமார் ...அதுவும் படம் முடியும் நேரத்தில் ஒரு பாட்டு போட்ட அமீரை கட்டி வச்சு அந்த பாட்டை நூறு தடவை பார்க்க வைக்கணும்

நெகடிவ் பாத்திரத்தில் வரும் பகவான் செய்யும் வேலைகளும் சரி நடவடிக்கையும் சரி ரொம்ப காமெடியா இருக்கு. அவரை பார்த்து எல்லாரும் நடுங்குறாங்க என்பது நம்புற மாதிரியே இல்ல !

எனக்கு தெரிஞ்சு ஒரு தமிழ் படத்தின் கிளைமாக்சில் ஹீரோ Vs ஹீரோயின் முழு நீள சண்டை போட்டது இந்த படத்தில் தான் இருக்கும்.

படம் முடியும் போது ரெண்டாவது பார்ட்டுக்கு வேறு ஒரு பிட்டை போடுறார் அமீர் - பாவங்கண்ணா - தயாரிப்பாளர் அன்பழகன்க்கு - ஜூஸ் கடையாவது மிஞ்சட்டும் - விட்டுடுங்க !

ஆதி பகவன்- A படம் என்பதால் டிவி யில் போட மாட்டாங்களாம். தியேட்டரிலோ, சி டி யிலோ பார்க்காதவர்கள், இந்த படத்தை என்றும் பார்க்க போவதில்லை என்பதால் க்ரேட் எஸ்கேப் !

22 comments:

  1. நான் இன்னும் லைப் ஒப் பை பார்கல பாஸ் ஆதி பகவன்ல மாட்டிட்டேன் ஆமா பாஸ் நீங்க சொன்ன மாறி இடைவேளை ல விஷயம் இருக்குற மாறி இருந்துச்சு ப்ச் ஆனா ஏமாந்துட்டோம் அப்பு படத்துல்ல பிரகாஷ் ராஜ்கு சூப்பரா செட் ஆச்சு ஜெயம் ரவிக்கு செட் ஆகல

    ReplyDelete
    Replies
    1. அந்த கொடுமையை நீங்களும் அனுபவிசீன்களா சக்கர கட்டி :(

      Delete
  2. லைப் அப் பை 3dயில் பார்த்தேன் அருமையான அனுபவம், உங்களது அறிவுரைப்படி ஆதி பகவன் கிரேட் எஸ்கேப்.

    ReplyDelete
    Replies
    1. ரைட்டு கும்மாச்சி

      Delete
  3. பல பேருக்கு உதவி செய்யும் உங்கள் நல்ல மனசுக்கு என்னுடைய பாராட்டுக்கள்......

    நன்றி,
    மலர்
    http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

    ReplyDelete
  4. விமர்சனங்களை படிச்சத்துக்கு அப்புறமும் ஆதி பகவன் பாத்தீங்களா? தலைவா யூ ஆர் ரியலி கிரேட்..

    ReplyDelete
    Replies
    1. ஹூம் ரைட்டுங்கோ

      Delete
  5. லைப் ஒப் பை நான் பாத்துட்டேன் எனக்குப்பிடித்துவிட்டது படம்வருவதற்குமுன்னர் கடலில் தப்பும் சிறுவன்,மிருகங்களை யார் உட்கார்ந்துபார்ப்பார்கள் என்று சிலர் விமர்சனம்செய்துவிட்டார்கள் ஆனால் படம் நன்றாகத்தான் இருந்தது ஆதிபகவன் பாக்குமளவிற்கு என் மனதில் தைரியம் இல்லாததால் நான் பார்க்கவில்லை ஐ ஆம் ஹார்ட் பேஸண்ட்

    ReplyDelete
    Replies
    1. //ஆதிபகவன் பாக்குமளவிற்கு என் மனதில் தைரியம் இல்லாததால் நான் பார்க்கவில்லை ஐ ஆம் ஹார்ட் பேஸண்ட்//

      ஹா ஹா ரைட்டு

      Delete
  6. 1) பார்க்க வேண்டும்...

    2) நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் விமர்சனத்துக்கு நன்றி

      Delete
  7. திண்டுக்கல் தனபாலன் அவர்கள் சொன்னதை நானும் வழி மொழிகிறேன்....:)

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரோஷினி அம்மா

      Delete
  8. aathi bagavan padam innum engae oduthu??? entha theatre la partheenga...???nae

    ReplyDelete
    Replies
    1. தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பார்கள்; நமக்கு வாய்த்த தம்பி ஜெட்லி இருக்காரே !!!

      Delete
  9. லைப் ஆப் பை இன்னும் பார்க்கல 3டி ல வந்தபோது எங்கள் ஊரில் எடுக்கல....
    சிடி நல்ல பிரிண்ட் இன்னும் எங்க ஊர் கடைக்கு வரல... நிச்சயம் அந்த படத்த பார்கனும் சிடி கிடைத்தால் வாங்கி தரவும் பணம் உங்கள் கணக்கில் வரவு வைக்கபடும்... அல்லது உங்களுக்கு விறுப்ப முறையில் வழங்கப்படும்...

    ஆதிபகவன் பத்தி எல்லோரும் தண்டோரா போட்டதால் சிடி கிடைத்தும் பார்க்காமல் எஸ்கேப்

    ReplyDelete
    Replies
    1. எந்த ஊரில் இருக்கீங்க கார்த்திக்? முகவரி அனுப்புங்கள் அனுப்புறேன் :)

      Delete
  10. லைப் ஆப் பை ! பார்க்க வேண்டும் என்று ஆவலை தூண்டி விட்டீர்கள்! ஆதிபகவன் அதற்கு எதிர்ப்பதமாக அமைந்த படம்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ; மகிழ்ச்சி சுரேஷ்

      Delete
  11. லைஃப் ஆஃப் பை பார்க்க நினைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  12. லைப் ஆப் பை படத்தில் ஒன்று சொல்லவேண்டும். கொஞ்சம் கொஞ்சம் வரும் தமிழ் எவ்வளவு கேவலமாக இருக்கிறது! சாதாரண தமிழ் பேசும் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை? தபு பேசும் தமிழ் எல்லாம் பெரும் கொடுமை!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...