Monday, February 11, 2013

தொல்லைகாட்சி - குஷ்பூ - ஜோடி பொருத்தம் - டாடி ஒரு சந்தேகம்

டாடி ஒரு சந்தேகம் 

ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி " டாடி ஒரு சந்தேகம்" ; ஒரு அப்பா - மகன் இருவரும் பேசி கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க.

மகனாக - சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் " டாடி ஒரு சந்தேகம்" என எடக்கு மடக்காய் எதோ ஒரு கேள்வி கேட்கிறார்

உதாரணத்துக்கு :

" டாடி சண்டே சினிமா போகலாம் டாடி "

" வேணாம்பா சண்டே தியேட்டர் ஹவுஸ் புல் ஆயிருக்கும் "

" டாடி ஒரு சந்தேகம் .. தியேட்டர்- புல் ஆனா, தியேட்டர் புல் - னு தானே சொல்லணும்? ஏன் ஹவுஸ் புல்னு சொல்றாங்க?"

இன்னொரு முறை: " பெண்களுக்கு மட்டும் மிஸ், மிஸ்ஸஸ் என ரெண்டு விதமா கூப்பிடுறாங்களே, ஆண்களை மட்டும் கல்யாணம் ஆன பின்னும் கூட மிஸ்டர் என்றே கூப்பிடுறாங்களே ஏன் டாடி?"

அவ்வப்போது மொக்கை போட்டாலும் கூட சின்ன பசங்களுக்கு இந்த ஜோக்குகள் பிடிக்கிறது ! அடிக்கடி பார்க்கிறார்கள் !

பிளாஷ் பேக் - ஜோடி பொருத்தம்

சன் டிவி துவங்கிய காலத்தில் வந்தது " ஜோடி பொருத்தம்". ரெகோ என்கிற பெயர் கொண்ட தொகுத்து வழங்கும் நபர் வெய்யில் காலத்திலும் கோட், டை எல்லாம் கட்டி கொண்டு கணவன் - மனைவியை கேள்வி கேட்பார்.  வந்த புதிதில் மிக நன்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி. ஒரு நேரத்தில், வெளியூர்களில் மேடையில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள். திருச்சியில் அப்படி நடக்க (அப்போது எனக்கு கல்யாணம் ஆகலை) அந்த பக்கம் சென்றபோது கூட்டம் நிரம்பி வழிந்தது. உள்ளே நுழைய கூட இடம் இல்லை !

ரெகோ கேள்விகள் கேட்பதும் சரி குழப்பி விடுவதும் சரி புத்திசாலி தனமாக இருக்கும். அவர் இந்த நிகழ்ச்சி தவிர அநேகமாய் வேறு நிகழ்ச்சி செய்த மாதிரி நினைவில்லை. அதன் பின் ரெகோ என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை

இது மாதிரி நிகழ்ச்சி இப்போது ஒரு சின்ன டிவி யில் வருகிறது ஆனால் அந்த அளவு பாப்புலர் ஆகலை. சன் டிவி மீண்டும் இந்த கான்சப்ட் கையில் எடுக்கலாம் !

டிவி செய்திகளில் குஷ்பூ பிரச்சனை 

குஷ்பூ மீது திருச்சியில் செருப்பு எறிந்ததும், சென்னையில் அவர் வீடு தாக்கப்பட்டதும் இணையத்தில் மட்டுமல்ல, டிவி செய்திகளிலும் 2 நாள் பெரிதாய் ஓடியது. அம்மணி பேட்டி படித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு சற்று கோபம் வரும்படி தான் இருந்தது. (விகடனில் பேட்டி எடுத்தவர் கைவண்ணம் எந்த அளவோ தெரியவில்லை )



முன்பு கோவில் கட்டிய திருச்சியிலேயே, இன்று செருப்பும் எறிந்தனர் என முகநூலில் குறிப்பிட்டார் பதிவர் வீடு சுரேஷ் குமார் ! வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபமணமாகிறது பாருங்கள் !

சூப்பர் சிங்கர் -4

மீண்டும் துவங்கியுள்ளது இன்னொரு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் முதல் கட்ட தேர்வுகளை இப்போது காட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ஸ்ரீ லேகா & தேவன் நீதிபதிகளாக இருக்க, இன்னொரு பக்கம் ஷைலஜா &புஷ்பவனம் குப்புசாமி !  ஸ்ரீ லேகா டீம் செம ஸ்ட்ரிக்ட் ஆக இருந்து, பலரையும் நிராகரித்து தள்ளினர். ஷைலஜா & புஷ்பவனம் ஓரளவு லீனியன்ட் ஆக இருந்தனர். ஆக பாட வருபவர்கள், யாரிடம் போய் பாடுகிறார்களோ அதை பொறுத்தே அடுத்த லெவல் செல்வது முடிவாகிறது ! ஹும் :(

மற்றபடி துவக்கம் எப்பவும் ஸ்லோ தான்.

டிவியில் பார்த்த படம் - உயிரே 

15 வருடத்துக்கு முன் வந்து தமிழில் தோல்வியையும், ஹிந்தியில் சுமாரான வெற்றியையும் பெற்ற,  தீவிரவாதத்தின் வேரை காட்ட முயன்ற மணிரத்னம் படம்.

இப்படத்தில் இன்னும் நினைவில் இருப்பது "நெஞ்சினிலே..நெஞ்சினிலே " பாட்டில் அழகால் அசத்தும் ப்ரீத்தி ஜிந்தா தான் ! படம் வந்த போது என் நண்பர்கள் வட்டத்தில் பலருக்கும் ப்ரீத்தி பைத்தியம் பிடித்து ஆட்டியது. அழகான கன்ன குழியுடன் மனதை கொள்ளை அடித்த ப்ரீத்தி முன், எப்போதும் சோகமாய் இருக்கும் மனீஷா எடுபடவில்லை.

ஒற்றை வார்த்தை வசனம், இருட்டில் காட்சிகள், பாட்டிகள் நடனம் என மணிரத்னத்தின் எல்லா க்ளிஷேக்களும் உண்டு !

மனைவியும் மகளும் இதுவரை பார்த்ததே இல்லை என ஆர்வமாய் பார்த்தனர். முக்கால் வாசிக்கப்புறம்,  தீவிர வாதம் பற்றி தீவிரமாய் பேச ஆரம்பிக்க, வெறுத்து போய் சானல் மாற்றி விட்டனர்.

மீண்டும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி 

4-3-2-1 என கொஞ்ச நாளா சஸ்பென்ஸ் வைத்து கொண்டிருந்தார்களே அது " நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி ப்ரோமோ" விற்கு தான் என இந்த வார இறுதியில் தெரிய வந்தது

பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்குகிறார் - 4 ஆப்ஷன் - 3 லைப் லைன்- நாம ரெண்டு பேரு- ஒரு கோடி என அவர் பேசும் பஞ்ச் டயலாக் ப்ரோமோ அடுத்த சில வாரம் பல முறை கேட்க போறோம் !

CCL கிரிக்கெட்

சினிமா ஸ்டார்கள் ஆடும் CCL கிரிக்கெட் மறுபடி துவங்கி உள்ளது. சென்ற முறை சன் டிவி இவற்றை ஒளி பரப்பியது. இம்முறை விஜய் டிவி உரிமை வாங்கியுள்ளது போலும்.

துவக்க விழாவில் சல்மான் கான், பிரணிதா, பூர்ணா உள்ளிட்ட பலர் வந்து டான்ஸ் ஆடினர். CCL மேனஜிங் டைரக்டர் " சினிமா நட்சத்திரங்களிடம் நான் கேட்பது ஒன்று மட்டும் தான். IPL ஐ விட அதிகமாக இதை எப்படியேனும் பிரபலமாக்கி விடுங்கள் " என்றார். அடேங்கப்பா !

நம் சென்னை அணி வீரர்கள் மிர்ச்சி சிவா, விஷ்ணு, விக்ராந்த், ஆர்யா, சாந்தனு போன்றோர் இன்னொரு விஜய் டிவி  நிகழ்ச்சியில் ஜாலியாக பேசினர். ஒருவரை ஒருவர் காலை வாரும் நட்பும் காமெடியும் நன்றாய் இருந்தது.

நீயா நானாவில் கல்லூரி மாணவர்கள்

கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவது நீயா நானாவிற்கு புதிதல்ல ! இன்றைய கல்லூரி மாணவர்களுக்கு சமூக பிரச்சனைகள் எந்த அளவு புரிகிறது என்ற தலைப்பில் கல்லூரி மாணவர்கள் ஒரு புறமும், அந்த பிரச்சனைகளுக்காக போராடி வரும் கள பணியாளர்கள் மறுபுறமும் இருந்தனர்.

சரியோ தவறோ இன்றைய இளைய தலைமுறை பல விஷயங்களில் ஒத்த கருத்து கொண்டுள்ளது தெரிகிறது. கூடங்குளம் அணுமின் நிலையம் துவங்கப்படவேண்டும் என்பதும் சரி சாதி வாரி இட ஒதுக்கீடு தேவையில்லை என்பதும் சரி மாணவர்களின் ஏகொபித்த கருத்தாய் இருந்தது. ஆனால் மாணவர்களை பல நேரம் அவர்கள் சொல்ல வருவதை முழுமையாய் சொல்ல விடாமலும், சொன்ன போது அதை எள்ளி நகையாடியும் எதிர்கொண்டது பார்க்க நன்றாக இல்லை !

"படிக்கிற காலத்தில் படிப்பையும் பின் வேலைக்கு செல்வதையும் மட்டுமே கவனி " என சொல்லி சொல்லி பெற்றோரும் பள்ளியும் வளர்த்தால், மாணவன் என்ன தான் செய்வான்? அவனுக்கு இன்றைக்கு படிப்பே மாபெரும் சுமையாய் அழுத்தி கொண்டிருக்கிறது !

மேலும், எதிர் பக்கம் சமூக பிரச்சனைகளை பேசுவோர் ஒவ்வொருவரும் குறிப்பிட்ட ஒரு பிரச்சனை பற்றி மட்டும் தான் பேசினர். அதாவது ஒவ்வொரு விஷயங்களை பற்றியும் ஒவ்வொருவர் தான் ஆழமாக பேசினர். 40 - 50 வயது கொண்ட அவர்களுக்கே தாங்கள் எந்த பிரச்சனைக்கு போராடுகிறோமோ அதனை பற்றி மட்டும் தான் முழுமையாய் தெரிகிறது; மற்ற பிரச்சனைகளில் கருத்து இல்லை. ஆனால் இளைஞர்களை மட்டும் எல்லா விஷயத்திலும் கருத்து கந்தசாமிகளாக இருக்கணும் என எதிர்பார்ப்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? ஹூம் :(

14 comments:

  1. //உயிரே//

    என் வாழ்க்கையிலேயே காலேஜ் கட் அடிச்சு , முதல் நாள், முதல் ஷோ பார்த்த படம். இனிமே இந்த மாதிரி பார்க்கக்கூடாதுன்னு முடிவு செய்ய வைத்த படமும் கூட.

    ReplyDelete
  2. இதுல வர்ற ஒரு நிகழ்ச்சியையும் நான் பார்க்கலியே?!

    ReplyDelete
    Replies
    1. க்கும்; சகோதரியான உங்களுக்கும் சேர்த்து நாங்க பாக்குரோமுள்ள :)

      Delete
  3. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் நல்லதொரு அலசல்.

    ReplyDelete
  4. நீயா நானா வில் இளைய தலைமுறையின் பிரதி நிதிகளைப் பார்த்த போது கொஞ்சம் வருத்தம் .... அவர்களின் அழுத்தம் அப்படி யாரை நொந்து கொள்வது?

    ReplyDelete
    Replies
    1. ஆம் நன்றி எழில்

      Delete
  5. அன்றைய நீயா-நானாவில் கலந்துகொண்ட சமூக ஆர்வலர் ஷாநவாஸின் ஃபேஸ் புக் பதிவு:
    http://www.facebook.com/ajax/sharer/?s=2&appid=2305272732&p%5B0%5D=100001322605379&p%5B1%5D=1358387

    அந்தப் பதிவிலிருந்து சில வரிகள்:

    ”....சமூக செயற்பாட்டாளர்கள் ஒவ்வொருவருமே அவ்வாறு இயங்கி வருகின்றனர். ஆனால், எங்கள் கருத்துக்கள் இந்த இளைய சமூகத்திடம் சென்று சேர்வதில்லை. இவர்களுக்கு எதைக் கொடுக்க வேண்டும்; எதைக் கொடுக்கக் கூடாது என்பதில் ஊடகங்கள் முன்முடிவோடு செயல்படுகின்றன. ஊடகங்கள் சொல்வதையே இவர்களும் உலகம் என்று நம்புகின்றனர். அதுதான் பிரச்சனை’ என்றேன்.

    பெரியாரியம், அம்பேத்கரியம், மார்க்சியம், சிறுபான்மை அரசியல், இந்துத்துவ எதிர்ப்பு என்று என்னென்னவோ நாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவை எதிலுமே தொடர்பற்ற ஒரு தலைமுறை நாம் வாழும் காலத்திலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை கவனிக்காமலேயே இருக்கிறோம்.

    ‘நாம் சுமக்க வேண்டிய சுமைகளும், கடக்க வேண்டிய தூரங்களும் மிக மிக அதிகம்’ என்ற சிந்தனையே, ‘நீயா நானா’ அரங்கை விட்டு வெளியேறும்போது எனக்கு ஏற்பட்டது.”

    இன்னொருவரின் கருத்து: “...பல கல்லூரிகளில் கேமராக்கள் கண்காணிக்கின்றன, டாய்லெட் தவிர நூலகம், வகுப்பு, வராந்தா, நுழைவாயில் என முழுவதும் கண்காணிப்பில் உள்ளன, இதை தான் இன்றைய பெற்றோர்களும் கூட எதிர்பார்க்கிறார்கள், அவர்களையும் கூட குற்றம் சொல்ல முடியாது, நண்பன் படத்தில் வெங்கட் டின் அப்பா சொல்வார், என் வாழ்வின் மொத்த சேமிப்பையும் இவன் படிப்பில் தான் முதலீடு செய்துள்ளேன் என அது தான் இன்றைய நடுத்தர மற்றும் ஏழை குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளின் நிலை, எனவே அவர்கள் படிப்பை தாண்டி சிந்திக்கமாட்டார்கள், முடியாது. ....”

    ReplyDelete
  6. ஷாநவாஸின் கருத்தை இங்கு பதிந்ததற்குக் காரணம், நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மாணாவர்களில் “எடிட் செய்யப்படாத பங்களிப்பைக்” கண்டவரின் கருத்து என்பதாலேயே.

    நீங்கள் சொன்னது சரியே: //"படிக்கிற காலத்தில் படிப்பையும் பின் வேலைக்கு செல்வதையும் மட்டுமே கவனி " என சொல்லி சொல்லி பெற்றோரும் பள்ளியும் வளர்த்தால், மாணவன் என்ன தான் செய்வான்? //

    ஆனால், பல்வேறு செய்தித்தாள்கள் வாசிக்காமல், ஃபேஸ்புக்-ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வருவதுமட்டுமே உண்மைச் செய்தி என்று நம்புபவர்களாகவும் இன்றைய மாணவர்கள் பலர் இருக்கீறார்கள் என்பதும் உண்மை.

    ReplyDelete
    Replies
    1. விரிவான கருத்துக்கு நன்றி ஹுசைனம்மா

      Delete
  7. குஷ்பூவுக்குக் கோவில் கட்டியது மதுரையில் இல்லையோ?


    ReplyDelete
    Replies
    1. திருச்சி தான் ஸ்ரீராம் சார்; நாங்கள் படித்த காலத்தில் நடந்ததால் தெரியும்

      Delete
  8. டாடி எனக்கொரு டவுட் நீங்க சொல்லியிருப்பது போல அப்பப்ப மொக்கைன்னாலும் பல சமயம் நல்லா இருக்கு. பசங்க்களுக்கு பிடிச்சிருக்கு. இப்ப அதே பாணியில அடிக்கடி டவுட்டு கேட்க ஆரம்பிச்சிருக்கறதுதான் சைட் எஃபக்ட். :( :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...