Sunday, February 10, 2013

விஸ்வரூபம் ஏமாற்றியதா ? விமர்சனம்

ண்டேன் விஸ்வரூபத்தை !

சென்னை தியேட்டர்களில் புக்கிங் துவங்கி அடுத்த சில மணியில் நாலு நாள் ஷோ ஹவுஸ் புல் என்பதால், எங்க ஏரியா தியேட்டரிலேயே பார்க்கும் படி ஆனது.


கதை? அது இந்நேரம் இணையம் பக்கம் வரும் அனைவருக்கும் மனப்பாடமாய் தெரிந்திருக்கும்.

இவ்வளவு பிரச்சனை இல்லா விடில் படம் மிக சாதாரணமாய் ஓரிரு வாரத்தில் காணாமல் போயிருக்கும். இப்போது நடந்த பிரச்சனையில், கமல் தன்னந்தனியாய் நிற்க, கமல் ரசிகர்களை தாண்டி, இன்னும் பலரும் " 50 வருடமாய் நம்மை entertain செய்யும் கமலுக்கு நாம் செய்யும் மிக சிறிய மரியாதை தியேட்டரில் இப்படத்தை பார்ப்பது தான் " என சத்யம் ஐநாக்ஸ் போன்ற அரங்குகளை நிறைக்கிறார்கள்.

மற்ற ஊரில் ரிலீஸ் ஆகி 10 நாள் கழித்து வெளி வரும்போது, பெட்டிக்குள் முடங்கி விடும் அபாயம் இருந்தாலும் இப்படம் அந்த லிஸ்ட்டில் சேராது.

இருப்பினும் மல்டிபிளக்ஸ் தாண்டி மற்ற இடங்களில் படம் ஓடுவது சந்தகமே !
**********
முதல் 20 நிமிடம் அட்டகாசம். படம் துவங்கி 2 நிமிடத்துக்குள் ஒரு முழு படத்துக்கான கதையை சொல்லி செல்கிறார். (கள்ள காதல்- மனைவி கணவனை துப்பறிதல் ). "உன்னை காணாத" பாடலில் பல பெண்கள் ஆடும்போதும், கமல் பிரேமில் இருந்தால் அவர் நடனத்தை மட்டும் தான் பார்க்க தோன்றுகிறது என்னா நளினம் !


கமலை கட்டி வைத்து உதைக்கும் போது அவர் எடுக்கும் விஸ்வரூபம் அதகளம் ! ஸ்லோ மோஷனில் போடும்போது கமல் ரசிகர் அல்லாதவரும் கூட ரசித்தே ஆகவேண்டும் ! சூப்பர் ஹீரோ - வாக அட்டகாசமாய் எஸ்டாப்ளிஷ் ஆகும் காட்சி இது.

ஆப்கன் காட்சிகள் எடுத்த இடங்கள் பார்க்க பிரமாண்டமாய் உள்ளன. நிஜமாவே அங்கு போய் எடுத்தனரா என்று யோசிக்க வைக்கும் அளவு துல்லியம். ஆனால் அந்த பிரம்மாண்டத்துக்கு மேல் அந்த காட்சிகளில் பெரிதும் சுவாரஸ்யம் இல்லை. சாதாரண ரசிகனுக்கு அங்கு என்ன நடக்கிறது என்பதே புரியாது (இந்த படம் புரிய சற்று உலக அரசியல் தெரிய வேண்டும் என கமல் சொன்னது இந்த காட்சிகளை தான் போலும் ). விறுவிறுவென செல்ல வேண்டிய இந்த பகுதி மிக மெதுவாக நகர்கிறது. பலரும் அரபிக்கில் பேசுவது ஒரு பக்கம் உறுத்த, ஆப்கானில் இருக்கும் சிலர் தமிழில் பேசுவதும் கூட உறுத்தவே செய்கிறது. இந்த படத்தை புரிந்து கொள்ள/ ரசிக்க மொழி ஒரு பெரிய தடையாய் இருக்கிறது :(

சென்னையில் இருக்கும் பிராமண பெண்கள் கூட பிராமண பாஷை பேசுவதில்லை. பேசுவோரும் கூட, தங்கள் வீட்டில் இருப்பாரோடு அப்படி பேசுவார்களே ஒழிய, பூஜா குமார் மாதிரி பார்க்கும் அனைவரிடமும் அதே பாஷை பேசி கொண்டிருக்க மாட்டார்கள். (மத்த படி பூஜா குமார் நைஸ் )

பல பெண்கள் இருக்கையில்  " சிக்கனை - பாப்பாத்தி டேஸ்ட் பண்ணி பாத்துட்டு உப்பு காரம் சரியா இருக்கான்னு சொல்லட்டும் " என்கிறார் கமல். ஜார்ஜ் புஷ் படம் வைத்து சுட்டு பழகுவது ஒரு புறம் என்றால், "அமெரிக்கர்கள் பெண்கள், குழந்தைகளை சுட மாட்டார்கள் " என்று சொன்ன அடுத்த நொடி அந்த ஏரியா மீது அமேரிக்கா குண்டு போட்டு விட்டு போகிறது . ஆக , இந்த படத்தை இஸ்லாமியர்கள் மட்டுமல்ல - பிராமின்கள், அமெரிக்கர்கள் என பலரும் எதிர்க்க வாய்ப்புண்டு.

ஆங்காங்கு கத்திரி வைத்த விளைவா, திரைக்கதையே அப்படி தானா.. சில விஷயம் புரியது சில புரிவதில்லை. அதுவும் முடிவு திடீரென வந்த மாதிரி இருக்கிறது

கமல் இப்படம் எடுத்து கொண்டிருக்கும் போதே " ஓரு படத்துக்கு மேல் விஷயம் இருக்கு" என பாதி விஷயங்கள் அடுத்த பாகத்திற்கு ஒதுக்கி விட்டார் போலும். அது தான் பிரச்சனையே !

டெக்னிக்கலி படம் டாப் கிளாஸ். எந்த சந்தேகமும் இல்லை

ஆனால் ஆரம்பத்தில் இருந்த ஜோர், எதிர்பார்ப்பு எல்லாம் போக போக நீர்த்து போய் விடுகிறது

கமலுக்கு படம் ரிலீஸ் ஆகாவிடில் கடைசி சொத்து வரை இழக்கும் ரிஸ்க் இருந்தது ; அதிலிருந்து அவர் தமிழக மக்களின் ஆதரவால் மீண்டது வரை மகிழ்ச்சி

மற்றபடி, இன்னொரு பாகம் வேண்டாம் கலை ஞானி ! முதல் பாகம் பார்த்தவர்களில் பாதி பேர் கூட அதனை ஆதரிக்க மாட்டார்கள் !

முழுசாய்  விஸ்வரூபம் எடுக்கலை !

****
தொடர்புடைய பதிவுகள்  



28 comments:

  1. //சென்னையில் இருக்கும் பிராமண பெண்கள் கூட பிராமண பாஷை பேசுவதில்லை. பேசுவோரும் கூட, தங்கள் வீட்டில் இருப்பாரோடு அப்படி பேசுவார்களே ஒழிய, பூஜா குமார் மாதிரி பார்க்கும் அனைவரிடமும் அதே பாஷை பேசி கொண்டிருக்க மாட்டார்கள்.//
    Did not you hear the comments of judges in supersinger. You can feel the accent of Brahmins in their comments.

    ReplyDelete
    Replies
    1. ஆம், சரி தான். ஆனால் அலுவலகம் மற்றும் தெருவில் எத்தனையோ பிராமின் பெண்களுடன் பழகுகிறேன். யாரும் அப்படி பேசுவதில்லை. மேலும் படத்தில் பூஜா அமெரிக்காவில் இருக்கும் பெண் !

      Delete
  2. பலரும் " 50 வருடமாய் நம்மை entertain செய்யும் கமலுக்கு நாம் செய்யும் மிக சிறிய மரியாதை தியேட்டரில் இப்படத்தை பார்ப்பது தான் " என சத்யம் ஐநாக்ஸ் போன்ற அரங்குகளை நிறைக்கிறார்கள்.

    yes mohan sir

    ReplyDelete
    Replies
    1. வாங்க சரவணன் நன்றி

      Delete
  3. கமலை கட்டி வைத்து உதைக்கும் போது அவர் எடுக்கும் விஸ்வரூபம் அதகளம் !

    super performance and super scean

    ReplyDelete
  4. மற்றபடி, இன்னொரு பாகம் வேண்டாம் கலை ஞானி ! முதல் பாகம் பார்த்தவர்களில் பாதி பேர் கூட அதனை ஆதரிக்க மாட்டார்கள் !///


    உண்மை உண்மை சாமானிய ரசிகனை திருப்திபடுத்தாது இடைவேளை க்கு பின்பு வரும் காட்சிகள்

    ReplyDelete
  5. " 50 வருடமாய் நம்மை entertain செய்யும் கமலுக்கு நாம் செய்யும் மிக சிறிய மரியாதை தியேட்டரில் இப்படத்தை பார்ப்பது தான்
    >>
    சினிமாவை தள்ளி வைத்திருக்கும் நான், இந்த படத்துக்கு கூட்டி போக சொல்லி கேட்டேன். வீட்டில் எல்லாம் திட்டுதுங்க. இதை விட நல்ல படம்லாம் வந்துச்சு. அப்போலாம் சும்மா இருந்துட்டு இப்போ என்ன திடீர்ன்னு இந்த அடம்ன்னு?! கமலுக்காக இந்த முடிவுன்னு சொன்னால்.., அப்போ நீயும் சினிமா பைத்தியம்தான்ன்னு கிண்டல் பண்ணுதுங்க

    ReplyDelete
    Replies
    1. குழந்தைகள் கூட்டி செல்லாமல் தான் தியேட்டரில் பார்க்கணும் சகோ வன்முறை சற்று அதிகம்

      Delete
  6. Anonymous11:00:00 AM

    https://www.facebook.com/video/embed?video_id=286600748135153

    ReplyDelete
  7. Anonymous11:10:00 AM

    kamal has unnecessarily insulted Brahmin community and not muslims by inserting the dialogue ‘Pappathi Amma Chicken Taste Pannu’ and having her do that. Scene has no value add to the movie and looks like was inserted to convey a point.

    ReplyDelete
    Replies
    1. இதே வித கருத்து சென்னையில், எங்கள் அலுவலகம் மூலம் ஏற்கனவே வந்தது. பல பிராமணர்கள் படத்தை இதனால் புறக்கணிப்பதாக அலுவலகத்தில் பேசி கொண்டார்கள்

      Delete
  8. //சென்னையில் இருக்கும் பிராமண பெண்கள் கூட பிராமண பாஷை பேசுவதில்லை. பேசுவோரும் கூட, தங்கள் வீட்டில் இருப்பாரோடு அப்படி பேசுவார்களே ஒழிய, பூஜா குமார் மாதிரி பார்க்கும் அனைவரிடமும் அதே பாஷை பேசி கொண்டிருக்க மாட்டார்கள்//

    நீங்கள் சொல்வது தவறு.

    ReplyDelete
    Replies
    1. முதல் காமன்ட்டில் இதற்கு பதில் சொல்லிருக்கேன் சிவா

      Delete
    2. Anonymous1:50:00 AM

      NRIs speak that slang well..than indians. I have also enough experience with that environment from the childhood.

      Delete
    3. Anonymous1:51:00 AM

      Correction: ...than indian residents.

      Delete
  9. //இருப்பினும் மல்டிபிளக்ஸ் தாண்டி மற்ற இடங்களில் படம் ஓடுவது சந்தகமே !//

    மிகச் சரியான கணிப்பு! பலர் அளவிற்கு அதிகமாகத் தூக்குகிறார்கள்... என்ன காரணமென்றே தெரியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதுரை அழகு

      Delete
  10. படம் உண்மையில் (தமிழைப் பொருத்தவரை) வித்தியாசமான முயற்சி.. உலகலாவிய படம்தான்.. ஆனால் ஆங்கிலத்தில் இதைப் போன்ற பல படங்கள் வந்திருக்கலாம்.. நம் தமிழில் இது வரை இத்தனை விசய ஞானத்துடன் எந்த படமும் வரவில்லை என்பதே என் எண்ணம்

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி கந்தனார்

      Delete
  11. என் பதில்...
    இந்த காலத்தில் யார் பிராமண பாஷை பேசுகிறார்கள் அல்ல எனபது விவாதம்...

    கதாநாயகி பூஜா குமார் அமெரிக்காவிலும் பிராமண பாஷை பேசுவார்; "என் படத்தின் கதாநாயகி" எப்பொழுதும் பிராமண பாஷை பேசுவார்! அதற்கென்ன? Case dismissed...!

    ReplyDelete
  12. Just a doubt, why a RAW agent is investigating a plot against US and why the US intelligence is totally unaware of it!!, another thing WHY RAW should infiltrate AQ?

    ReplyDelete
    Replies
    1. Same Q, raised in my MIND too..
      Couple of times, I expanded the term 'RAW' and confirmed that it's nothing to do with US.

      Kamal is 'over thinker' like his 'over acting' sense.

      Delete
  13. நல்ல விமர்சனம் மோகன், பெரும்பான்மை ரசிகர்களின் தீர்ப்பும் உங்கள் விமர்சனத்தை ஒட்டியே உள்ளது. திரைக்கதை சரியாக அமையவில்லை. இன்னமும் சற்று தெளிவாக, சுவாரசியமாக, வேகமாக அமைத்திருக்கலாம். ஒரு திரில்லர் கதைக்குரிய வேகமோ, பரபரப்போ இல்லாதது சற்று ஏமாற்றம்தான்.

    ReplyDelete
  14. முதல்பாதி பிடித்திருந்தது ஆனால் முடிவு சுவாரிஸ்யமாக இல்லை....வழக்கமாக கமல் படங்களில் பிராமின்களுக்கு ஏதாவது ஒரு விதத்தில்கடி விழும் இந்தபடத்தில் இறைச்சி மூலமாக கடி விழுந்திருக்கின்றதுபோலும்....அதுவும் சுற்றியிருக்கும் பெண்கள் எல்லோருமே பிராமணபாஸைதான் பேசியதாக எனக்கு நினைவு..

    ஒரு ஜிகாத்தியனின் மன நிலையை படத்தில் காட்டியிருப்பார்கமல்... நான் ஒன்னும் குழந்தையில்லைன்னு ஒரு குழந்தை சொல்லிட்டு போய்டும்..ஆனா தற்கொலைப்படையாளியா மாறின ஒரு ஜிகாத்தி..தான் போய் ஊஞ்சல்ல அமர்ந்திட்டுது...

    பார்ட் 2? பி.ஜே மீண்டும் கொதித்தெழுந்தால்போதும் என்று நினைக்கின்றேன்..ஒருவேளை இப்போதே எடுக்காத படத்திற்கு ஆர்ப்பாட்டம் செய்தாலும் செய்வார்கள்

    ReplyDelete
  15. நீங்க நிஜமாவே படம் பார்த்தீங்களா? :-)

    ReplyDelete
  16. அப்பாடா! ஒருத்தராவது என் பார்வையில் ஒத்துப் போகிறார்களே என்பதில் ஆனந்தம்!!!

    ReplyDelete
  17. உங்களுக்குள்ள மழுங்கல் மூளைகளுக்கெல்லாம் விஜயகாந்த் படங்கள்தான் லாயக்கு!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...