Sunday, March 17, 2013

எதிர்நீச்சல்- By அனிருத் பாடல்கள் எப்படி ..

ஞ்சை சென்றபோது நம் ப்ளாகை தொடர்ந்து வாசிக்கும் அண்ணன் மகன் சுந்தர் கேட்டான் " சித்தப்பா. ஏன் இன்னும் எதிர்நீச்சல் பாட்டு பத்தி எழுதவே இல்லை? "

" இன்னும் கேட்கலைப்பா "

" கேட்டு பாருங்க; அசத்தலா இருக்கு. பசங்க எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு "

ஊருக்கு வந்த பின் முதல் வேலையாய் டவுன் லோடு செய்து கொண்டு கேட்க ஆரம்பித்தேன். நாலஞ்சு வாரமா அலுக்காம கேட்டுகிட்டே இருக்கேன்

அனிருத் .. நிச்சயம் ஒன் பிலிம் ஒண்டர் அல்ல ! சூப்பரா அசத்திருக்கார் தம்பி !



இந்த ஆல்பம் முழுக்க அனிருத் சில எளிமையான அடிப்படை விஷயங்களை சரியாக செய்திருக்கிறார். ஒரு பாட்டுக்கு அட்டகாசமான மெட்டு, துள்ளல் இசை தான் முக்கியம். அத்தோடு ஒரு செம கேட்ச்சி மியூசிக்கை பிடித்து கொண்டு அதை பாட்டு முழுதும் அடிக்கடி வர வைத்தால் நம்மை அறியாமல் அந்த பகுதியை ரசிக்க ஆரம்பித்து விடுவோம். இதை விடாப்படியாக பிடித்து கொண்டார் அனிருத்.

பாடல் வரிகள் பெரிதாய் கவர வில்லை. (பலவற்றை எழுதியது தனுஷ் அனிருத் & கோ) நா. முத்து குமார் போன்றோரிடம் சென்றிருந்தால் இன்னும் மீனிங் புல் பாட்டுகள் வந்திருக்கும்..

பூமி என்னை சுத்துதே

பாடல்: தனுஷ் 
பாடியது: அனிருத் 

ஆல்பத்தில் எடுத்த எடுப்பில் நம்மை கவரும் பாட்டு இது.

ரவுசு செய்து வாழும் ஹீரோ தன்னை பற்றி பாடும் பாட்டு இப்படி செல்கிறது

டேமேஜான பீசு நானே ;
ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்

என்னோட பேரு சீரானதே
என்னோட பாதை நேரானதே
ஜீரோவும் இப்ப நூறானதே
அட நூறானதே

பாட்டில் வரிகள் எல்லாம் சாதாரணம் தான். ஆனால் அட்டகாசமான பீட்டு ரவுண்டு கட்டி அடிக்கிறது. கால்கள் தாளம் போடுவதை தடுக்கவே முடியாது

ஜாலியாக போகும் சரணத்தில் சற்று நிறுத்தி மெலடிக்கு மாற்றி "எங்கேயோ போகும் காத்து இப்ப என் ஜன்னல் பக்கம் வீசும் " என்று பாடம் இடம் அழகு. உடனேயே ஒரு ப்ளூட் வந்து மனதை கொள்ளை அடிக்கிறது



செம ஜாலியான பாட்டு. பிடிக்காமல் போகாது கேட்டு பாருங்கள்
***
சத்தியமா நீ எனக்கு தேவையில்லை

பாடல்: துரை செந்தில் குமார் 
பாடியது: தனுஷ் 

சத்தியமா நீ எனக்கு தேவையில்லை
பத்து நாளா சரக்கடிச்சேன் போதையே இல்லை..

என பாட்டு பாஸ்ட் பீட் டப்பாங்குத்தாய் ஆரம்பிக்கும் போது அதிகம் கவரா விட்டாலும் சரணத்தில் அசத்தி விடுகிறார் அனிருத்.

காத்துல பறக்கும் பஞ்சு
காதலில் வெடிக்கும் நெஞ்சு
பொண்ணுங்க மனசு நஞ்சு
மொத்தம் எத்தனை ரவுண்டுடா ? அஞ்சு

என்று செல்லும் வரிகள் இளைஞர்களை கவர போவதில் எந்த சந்தேகமும் இல்லை.

சரணத்தை ஒரே மாதிரி இன்றி வெவ்வேறு ஸ்பீடில் திருப்பி திருப்பி கொண்டு போகிறார் அனிருத்.. அட்டகாசம் !



படத்தில் கதை என்ற வஸ்த்துவும், திரை கதையும் நன்றாக இருந்து விட்டால் தியேட்டரில் இந்த பாட்டுக்கு இளைஞர்கள் டான்ஸ் ஆடுவது உறுதி !
***
நிஜமெல்லாம் மறந்து போச்சு

எழுதி பாடியவர்: தனுஷ் 

கொஞ்சம் சுமாரான பாட்டு. இப்போதைக்கு எனக்கு அதிகம் பிடிக்கலை. காதல் வசப்பட்ட ஹீரோ தனியாக பாடும் பாட்டு இது. ஆங்கில பாடலையும் சற்று மிக்ஸ் செய்து வடித்திருக்கிறார் இந்த பாட்டை.



ஏனோ சில இடங்கள் மட்டுமே பிடிக்கிறது. ஒரு வேளை நன்கு படமாக்கப்பட்டிருந்தால் பிடிக்கலாம்
***
எதிர் நீச்சலடி

பாடல்: வாலி 
பாடியவர்கள்: ஹனி சிங், அனிருத் அகிலன், ஹிப் ஹாப் தமிழா 

வாலி எழுதிய பாட்டு

நாளை என்றும் நம் கையில் இல்லை
நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே
என்றால் கூட போராடு நண்பா

என்று படத்தின் டைட்டில் வரியையும், (எதிர் நீச்சல்) அதன் உள்ளர்த்தத்தையும் (போராடு .. வெற்றி நிச்சயம் ) சொல்லி செல்லும் பாட்டு

சில இடங்கள் நன்றாக இருக்கு. சில இடம் சற்று சுமார்.இளைஞர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நினைக்கிறேன்



ஹுசைன் போல்ட், ஒலிம்பிக்ஸ் என்றெல்லாம் செல்லும் பாட்டில், டப்பாங்குத்து தான் மறுபடி ரசிக்க வைக்குது
**********
உன் பார்வையில்

பாடல்: துரை செந்தில் குமார் 
பாடியது: அனிருத் 

ஒண்ணரை நிமிடமே ஒலிக்கும் ரொம்ப சின்ன பாட்டு தான்.



முதல் சில வரிகளை பாடி முடித்ததும் இசை மட்டும் தான் வருகிறது. ஆனால் அந்த இசை.. அடடா. அட்டகாசம் ! ப்ளூட் உடன் கூடிய அந்த இசையை அவசியம், அவசியம், அவசியம்...... கேளுங்கள்.. இந்த சின்ன பையன் சாதாரண ஆள் இல்லை என தெரியும். அசத்தல் !

வெளிச்ச பூவே வா

பாடியவர்கள்: மோஹித் சவுஹான், ஸ்ரேயா கோஷல்
பாடல்: வாலி 




தலைவி ஸ்ரேயா கோஷல்க்கு இன்னொரு சிக்சர் இந்த பாட்டு !

"மின்வெட்டு நாளில் இங்கே மின்சாரம் போல வந்தாயே " என தமிழக நிலையை சொல்லும்படி சற்று சுமாராய் ஆரம்பித்தாலும் போக போக சொல்லி அடிக்கிறார் அனிருத். டூயட் தம்பியின் கோட்டை அல்லவா?



மெலடி + அட்டகாச மெட்டு + அசத்தும் பின்னணி இசை .. என மற்றொரு அசத்தல் பாட்டு 
****
முழுக்க முழுக்க யூத்துக்கான ஆல்பம் இது. ஆல் ஓல்ட் பீபில். டூ ஸ்டேப் பேக் ....!

அனிருத் மேல் ஆண்ட்ரியா விஷயத்தில் நமக்கு சற்று பொறாமை ( !!) இருந்தாலும், எதிர் நீச்சல் பாட்டு கேட்டபின் " பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்" என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது !

இவ்வருடத்தின் சூப்பர் ஹிட் ஆல்பங்களில் ஒன்று எதிர் நீச்சல்.. கேட்டு ரசியுங்கள் !
****
அண்மை பதிவு:

தொல்லை காட்சி - நீயா நானா - பரதேசி படக்குழு - ஷீக்கர் தவன்

பரதேசி - தமிழில் ஒரு உலக படம் - சல்யூட் பாலா !

உணவகம் அறிமுகம் : திருநெல்வேலி வசந்த பவன்

13 comments:

  1. //அனிருத் மேல் ஆண்ட்ரியா விஷயத்தில் நமக்கு சற்று பொறாமை ( !!) இருந்தாலும், எதிர் நீச்சல் பாட்டு கேட்டபின் " பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்" என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது !//

    ஹா ஹா கலக்கலுங்க

    ReplyDelete
  2. இரண்டு பாடல்கள் ஒரே இசை கொண்டதை கவனித்தீர்களா ?3 பட பாடல் போலவும் சில உண்டு

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? எந்த 2 பாட்டு பிரேம்; கவனிக்கலை சொல்லுங்க

      Delete
  3. ரஜினி கொடுத்த அட்வைஸை பின்பற்றினால் அனிருத் ஒரு ரவுண்ட் வருவார்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  4. பூமி என்ன சுத்துதே - தற்போதைய மோஸ்ட் ஃபேவரைட்

    //அனிருத் மேல் ஆண்ட்ரியா விஷயத்தில் நமக்கு சற்று பொறாமை ( !!) இருந்தாலும், எதிர் நீச்சல் பாட்டு கேட்டபின் " பல்லு இருக்கவன் பக்கோடா சாப்பிடுறான்" என ஆறுதல் பட்டுக்கொள்ள வேண்டியுள்ளது//

    ஹும்ம்ம் :))

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை ஹூம் உடன் விட்டீங்க ; எப்பவும் போட்டிக்கு வருவீங்களே :)

      Delete
  5. நான் இளையராஜாவின் ரசிகன். ஆனாலும் இந்த சிறுவன் 3 படத்தின் பின் இசையில் வயோலின் பயன் படுத்திய விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. நல்ல எதிர்காலம் உண்டு இசையில் மட்டும் கவனம் செலுத்தினால்.

    ReplyDelete
    Replies
    1. //இசையில் மட்டும் கவனம் செலுத்தினால்//

      விடுங்க ஹரி .. கலைஞர்கள் அப்படி தான் இருப்பாங்க :)

      Delete
  6. என்ன அண்ணே தஞ்சை சொல்லாம வந்துடு போயிட்டிங்க வந்து பார்த்து இருபென்லன்னே

    ReplyDelete
    Replies
    1. நீங்க தஞ்சாவூரா சக்கர கட்டி? எனக்கு தெரியவே தெரியாது; அடிக்கடி வருவேன் அடுத்த முறை வரும்போது சொல்கிறேன்; பார்ப்போம். உங்கள் மெயில் ஐ டி தெரியாது சொல்லுங்க

      Delete
    2. nabsafi@gmail.com ph no 7845349195

      Delete
  7. பாடல்களை இன்னும் கேட்கவில்லை! தரவிறக்கம் செய்து கேட்டுப் பார்க்கிறேன் மோகன்.

    ReplyDelete
  8. கணனியில் அழிந்த கோப்புக்களை துல்லியமாக மீட்டெடுப்பதற்கு ----- http://mytamilpeople.blogspot.in/2013/03/recover-deleted-files-from-hard-disk.html

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...