உங்களில் யார் பிரபு தேவா
விஜய் டிவி நடத்தும் உங்களில் யார் பிரபு தேவா - சீசன் டூ முடிவை நெருங்கி கொண்டிருக்கிறது . டிவிக்கள் ஒவ்வொன்றிலும் பாட்டு நிகழ்சிகள், டான்ஸ் நிகழ்சிகள் உள்ளன ஆனால் விஜய் டிவி போல பலரும் பார்க்கும் விதமாய் சண், கலைஞர், ஜெயா போன்ற டிவிக்களால் செய்ய முடிவதில்லை என்பதே நிஜம் !
ஒய்ல்ட் கார்டில் கண்ணை கட்டி கொண்டு ஒருவர் செட் முழுதும் போய் ஆடினார். அவ்வப்போது லேசாய் தடுமாறினாலும் அருமையான ஆட்டம் ! நாங்கள் எப்போதுமே இந்த நிகழ்ச்சியை தொடர்ந்தேல்லாம் பார்ப்பதில்லை. சானல் மாற்றி மாற்றி பார்க்கிறது தான். அதனால் அன்று மற்றவர்கள் ஆடியதை அதிகம் பார்க்கலை
இந்நிகழ்ச்சி பிரபலம் என்றாலும் சூப்பர் சிங்கர் அளவு ஹிட் ஆகலை என்று தான் சொல்லணும்
அமில மழை பொழிந்த நாஞ்சில் சம்பத்
ம.தி.மு.க வில் வைக்கோவிற்கு அடுத்த இடம் என்று கருதப்பட்ட நாஞ்சில் சம்பத்திற்கும் வைக்கோவுக்கும் இடையே மோதல் வலுத்துள்ளது. இதையடுத்து சன் டிவி நாஞ்சில் நாஞ்சில் சம்பத்திடம் விரிவான பேட்டி எடுத்தது. வைக்கோவின் மினியேச்சர் போலவும், சிராக்ஸ் போலவும் தோற்றமும், பேச்சும் கொண்ட அவர் பேசியதிலிருந்து சில பகுதி:
- அஞ்சு வருஷம் திட்டி விட்டு, நான்கு சீட் அதிகம் என்றதால் கடைசி நேரத்தில் அணி மாறியவர் வைகோ. அவர் எந்த கட்சியுடன் சேர்வது என்று கடைசி நிமிடம் வரை தடுமாறியதால் தான் நாங்களும் ஒவ்வொரு தேர்தலிலும் தடுமாற வேண்டியிருந்தது.
- தேர்தலின்போது நடந்த ஒரு திருமணத்தில் என்னை தனி அறைக்கு அழைத்து சென்று " ஸ்டாலினை முதல்வராக்க நான் உழைக்கணுமா?" என்று பேசியவர் வை.கோ.
- இந்த கட்சிக்காக வைகோவை விட அதிகம் உழைத்தவன் நான். அதிகம் பேரை ஈர்த்தவன் நான். நானாக கட்சியை விட்டு விலக மாட்டேன் அந்த பழி சொல் எனக்கு வேண்டாம். அவராக வேண்டாமானால் என்னை நீக்கட்டும்.
- அவரை விட மிக அதிககூ ட்டங்களில் என்னை பேச அழைக்கிறார்கள். தன்னை விட இன்னொருவர் அதிக புகழ் பெறுவது பிடிக்காமல் அவர் செய்யும் செயல் தான் இது
- நாஞ்சிலை கொளுத்தியது போல் இதையும் கொளுத்துங்கள் என்று சர்ச்சைக்குரிய புத்தகம் பற்றி பேசுகிறார் என் மீது இவ்வளவு வன்மம் அவருக்கு உண்டு என இப்போது தான் தெரிகிறது. இப்படி வன்மத்துடன் உள்ளவரை எப்படி என் மகள் கல்யாணத்துக்கு அழைக்க முடியும்? அதனால் தான் அழைக்க வில்லை
- என் வீட்டார் என்னை எந்த கட்சியிலும் சேராதே. இலக்கிய பணி மட்டும் செய் என்கிறார்கள். 18 வருடமாய் எந்த சொந்தகாரர் கல்யாணம், சாவுக்கும் செல்லாமால் கட்சி, கட்சி என்று இருந்து விட்டேன். நான் இறந்தால் எந்த சொந்த காரரும் வர மாட்டார் கட்சி காரர்கள் வந்தால் தான் உண்டு
நிற்க விரைவில் நாஞ்சில் சம்பத் தாய் கழகத்தை அடைவார் என்று நம்பப்படுகிறது. நிச்சயம் தாய் கழகத்துக்கு ஒரு நல்ல பேச்சாளர் கிடைப்பார். எதிர் கட்சியாக இருக்கும்போது இத்தகைய பேச்சாளர்கள் மிக உதவியாக இருக்கும் !
வைக்கோ ஏன் இவரை புறக்கணிக்கிறார் என்பது புரியவில்லை வை. கோ விற்கு இதே விஷயத்தில் வேறு வெர்ஷன் பதில் இருக்க கூடும் !
ரோடில் செயினை திருடிய போலிஸ் ஏட்டு
சண் நியூஸ் செய்தியில் காட்டிய செய்தி இது (இத்தகைய செய்தி ஜெயா டிவியிலா வரும்?) மதுராந்தகத்தில் சாலையில் நடந்து வந்த ஒரு பெண்ணின் கழுத்தில் இருந்து ஏழு பவுன் செயினை அறுத்து கொண்டு தப்ப முயற்சித்துள்ளார் ஒருவர். அந்த பெண்மணி அந்த திருடர் வந்த பைக்கை விடாமல் பிடித்து கொண்டு ஓட விடாமல் தடுத்துள்ளார். சாலையில் இருவருக்கும் பெரும் சண்டை நடந்துள்ளது. அப்போது அந்த வழியே போலிஸ் வர, அவர்கள் முதலில் புருஷன் பெண்டாட்டி சண்டை என நினைத்துள்ளனர் அப்புறம் இந்த பெண் செயினை அறுத்துகிட்டு ஓடுறார் திருடன் திருடன் என கத்தவும், போலிஸ் அந்த திருடனை வந்து பிடித்துள்ளது
" நான் போலிஸ் ஏட்டுயா; விட்டுடுங்க " என கெஞ்சியுள்ளார் அவர். விடாமல் கைது செய்து ஸ்டேஷன் அழைத்து சென்றால் நிஜமாவே அவர் போலிஸ் ஏட்டு தான் என்று தெரிந்துள்ளது. டிவி யில் காட்டும் போது அவரது முகத்தை முழுதும் மறைத்து காட்டினர் போலீசார் ! (தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும் அல்லவா?)
யாராச்சும் திருடன் வந்தா போலிஸ் கிட்டே போகலாம் அந்த போலிசே திருடன் ஆனா நாம யார் கிட்டே போறது ?
டிவி யில் பார்த்த படம் : Taken
எல்லாரும் இப்போது ரிலீஸ் ஆன Taken - II பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது நாங்கள் அதன் முதல் பார்ட் இப்போதான் ஸ்டார் மூவிஸில் பார்த்தோம்.
அட இந்த கதையை நாம முதல்லேயே பாத்திருக்கோமே ! நம்ம கேப்டன் இயக்கி நடிச்ச விருதகிரி இதே கதை தானே என தோணியது. சும்மா சொல்லக்கூடாது கேப்டன் பல சீன் டிப்பி காப்பி அடிச்சிருக்கார்
ஹீரோவின் டீன் ஏஜ் பெண்ணை ஒரு கூட்டம் கடத்தி விற்க பார்க்க, ஹீரோ பல தடைகளை தாண்டி எப்படி மீட்டார் என்பது தான் கதை. முழுக்க முழுக்க ஆக்ஷன் படம். தெரிந்த கதை என்றாலும் gripping ஆக இருந்தது பார்க்க.
ஸ்டார் மூவிஸில் படம் பார்ப்பதில் ஒரு நல்ல விஷயம். விளம்பரம் போடும்போது மறுபடி படம் வர எவ்வளவு நிமிடம் ஆகும் என சைடில் தெரியும் அதை பொறுத்து நாம் மற்ற சானல் போய்விட்டு ஜாலியா வரலாம் !
பிளாஷ்பேக் : ரயில் சிநேகம்
சண் டிவியில் முதன் முதலில் சீரியல் என்று ஆரம்பித்த போது பாலச்சந்தர் செய்த தொடர் ரயில் சிநேகம். நிழல்கள் ரவி, இந்திரா நடித்தது. "ரயில் சிநேகம் ..ரயில் சிநேகம் " என்று ஜேசுதாஸ் பாடும் பாடல் இன்றும், ஒரு வரி விடாமல் நியாபகம் இருக்கிறது. குழந்தையை வைத்து கொண்டு பாடும் " இந்த வீணைக்கு தெரியாது" கூட மிக அழகான இன்னும் பலர் விரும்பி கேட்கும் பாடல் தான்.
நிழல்கள் ரவியின் பெண்ணாக வளரும் இந்திராவிற்கு திடீரென அவர் தன் தந்தை இல்லை என தெரிய வருகிறது. அப்போ நிழல்கள் ரவி ஏன் அவரை வளர்க்கிறார் என சொல்வது தான் ரயில் சிநேகம்.
ஒரு நாள் போதுமா?
விஜய் டிவியின் மியூசிக் அவார்ட்சில் நிகழ்ச்சி துவக்கி வைத்து " ஒரு நாள் போதுமா? " பாட்டை முழுமையாய் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா. ஏறக்குறைய நிஜ பாட்டை கேட்கும் விதத்திலேயே இன்றும் அவர் பாடுவது ஆச்சரியமாய் இருந்தது. ஜானகி, சுசீலா, டி.எம். எஸ் போன்றோர் குரலில் மிக அதிக நடுக்கமும் முன்பு போல் இப்போது பாட முடியாததையும் காண்கிறோம். ஆனால் இவரால் எண்பது வயதுக்கு மேலும் எப்படி அருமையாய் பாட முடிவதுடன், குரலும் அப்படியே இருக்கிறது ?
இக்கேள்விக்கு ஒரு விடை தான் இருக்கமுடியும் ! பயிற்சி ! விடாமல் தினம் பயிற்சி மேற்கொள்கிறார் என நினைக்கிறேன்.
நம் வாழ்க்கைக்கும் இது பொருந்தும் தானே ! நாம் மனதில் கொண்ட லட்சியத்திற்கு தினம் உழைத்தால், பயிற்சி எடுத்தால், நினைத்ததை அடைய முடியும் தானே !
இதே நிகழ்ச்சியில் சென்ற வருட சிறந்த ஜாலி பாட்டாக ஒசத்தி படத்தின் "கலாசலா" தேர்ந்தெடுத்து அதற்கு டி ராஜேந்தருக்கு விருது குடுத்தனர் தனக்கு சிறந்த பாடகர் விருது தந்தது அவருக்கே நம்ப முடிய வில்லை. மேடையில் அவர் பேசியதும், பாடி ஆடியதும் செம ஜாலியா, காமெடியா இருந்தது !
***
வல்லமை இணைய இதழுக்காக எழுதப்பட்டது.

வாரம் ஒரு பகுதி மட்டுமே வரும் இந்த தொடரை எவ்வளவோ பேர் விரும்பி பார்த்தோம். நல்ல சினிமா பார்க்கிற சந்தோசம் அப்போது இந்த சீரியலில் கிடைத்தது !
விஜய் டிவியின் மியூசிக் அவார்ட்சில் நிகழ்ச்சி துவக்கி வைத்து " ஒரு நாள் போதுமா? " பாட்டை முழுமையாய் பாடினார் பாலமுரளி கிருஷ்ணா. ஏறக்குறைய நிஜ பாட்டை கேட்கும் விதத்திலேயே இன்றும் அவர் பாடுவது ஆச்சரியமாய் இருந்தது. ஜானகி, சுசீலா, டி.எம். எஸ் போன்றோர் குரலில் மிக அதிக நடுக்கமும் முன்பு போல் இப்போது பாட முடியாததையும் காண்கிறோம். ஆனால் இவரால் எண்பது வயதுக்கு மேலும் எப்படி அருமையாய் பாட முடிவதுடன், குரலும் அப்படியே இருக்கிறது ?
இக்கேள்விக்கு ஒரு விடை தான் இருக்கமுடியும் ! பயிற்சி ! விடாமல் தினம் பயிற்சி மேற்கொள்கிறார் என நினைக்கிறேன்.
நம் வாழ்க்கைக்கும் இது பொருந்தும் தானே ! நாம் மனதில் கொண்ட லட்சியத்திற்கு தினம் உழைத்தால், பயிற்சி எடுத்தால், நினைத்ததை அடைய முடியும் தானே !
இதே நிகழ்ச்சியில் சென்ற வருட சிறந்த ஜாலி பாட்டாக ஒசத்தி படத்தின் "கலாசலா" தேர்ந்தெடுத்து அதற்கு டி ராஜேந்தருக்கு விருது குடுத்தனர் தனக்கு சிறந்த பாடகர் விருது தந்தது அவருக்கே நம்ப முடிய வில்லை. மேடையில் அவர் பேசியதும், பாடி ஆடியதும் செம ஜாலியா, காமெடியா இருந்தது !
***
வல்லமை இணைய இதழுக்காக எழுதப்பட்டது.
உங்கள் பகிர்வு மூலம் தான் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ள முடிகிறது... 16 hours Power cut (மின்சாரம் பகல் நேரத்தில் மூன்று மணி நேரம் மட்டும்...)
ReplyDeleteஅடுத்த வாரம் முதல் 9am to 6pm மின் வெட்டு என தகவல்...!
நன்றி...
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் தனபாலன் சார்
Deleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மோகன்.
ReplyDeleteநன்றி ஜெயதேவ். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
Deleteரயில் சிநேகம் தொடர் 1990ல் தூர்தர்சனில் வந்தது. http://en.wikipedia.org/wiki/K._Balachander#Television_serials
ReplyDeleteஅப்படியா? சரியா நினைவில்லை நன்றிங்க Baskaran Kannusamy
Deleteநாஞ்சில் சம்பத் மகளின் திருமணப் பத்திரிக்கை வைகோவுக்குக் கொடுத்தது சமீபத்தில் ஏதோ ஒரு பத்திரிகையில் படித்தேன். தொலைக்காட்சியில் மாற்றிச் சொல்லியிருக்கிறார் போலும்!
ReplyDeleteமறுபடியும் படம் எவ்வளவு நேரத்தில் ரெஸ்யூம் என்று வேறு சில சேனல்களிலும் உண்டு - தமிழ்ச் சேனல்களில் அல்ல!
தீபாவளி வாழ்த்துகள்.
நன்றி ஸ்ரீராம் சார். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
Deleteபலகாரம்லாம் செய்யாம டிவி முன்னாடி என்ன வேலைன்னு உங்க ஹவுஸ் பாஸ் சவுண்ட் குடுக்குறது காதுல விழலியா? போங்க போய் பலகாரம்லாம் சுடுற வேலையை பாருங்க சகோ
ReplyDeleteஉங்களுக்கும், உங்க குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteநன்றி உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ராஜி
Deleteரயில் சிநேகம் பாலச்சந்தர் தொடர் முதலில் சென்னை தொலைக்காட்சியில் 1988 ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. சன் டிவியில் பின்பு மீண்டும் ஒளிபரப்பு ஆகியிருக்கலாம் .
ReplyDeleteஅப்போது சென்னை தொலைக்காட்சியில் எந்த தொடரும் வாரம் ஒரு முறைதான் வரும் . 13 வார உச்ச வரம்பு இருந்தது.
அதேபோல் சென்னை தொலைக்காட்சியில்தான் முதன் முதலில் நெடுந்தொடரும் ஒளிபரப்பாகியது - விழுதுகள் தான் முதல் நெடுந்தொடர் - 1995 இல் ஆரம்பித்து 1997 இல் முடிவடைந்தது .
நண்பர்கள் அனைவருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள் ஜெய்
Deleteஅனைத்து தகவல்களும் சிறப்பு! ரயில் சிநேகம் அருமையான தொடர்! இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!
ReplyDelete
Deleteஇனிய தீபாவளி வாழ்த்துகள் சுரேஷ்
அந்த பேட்டியை நானும் பார்த்தேன்.வைகோ ஏன் இருக்கிற ஒருவரையும் பகைத்துக் கொள்கிறாரோ.கட்சியை விட்டுவிட்டு வைகோ கூட இலக்கிய பணி செய்யப் போகலாம்.
ReplyDeleteமுரளி சார் :))
Deleteமோகன்...உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி ரெவெரி. உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
Deleteஉங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
ReplyDeleteஉங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"
இனித்திடும் இந்த இனிய தீபாவளித் திருநாளில் உங்கள் விருப்பங்கள்
எல்லாம் கைகூடி வந்து
என்றென்றும் சந்தோசமாக இருக்க வாழ்த்துக்கள்..
தித்திக்கட்டும் இனிய தீபாவளி உங்கள் வாழ்க்கையில்
நன்றி உங்களுக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்
Delete
ReplyDeleteதங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.
எனது இதயங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்
நன்பர் அவர்களுக்கு தீபாவள் திருனாள் வாழ்த்துகள்.
ReplyDeleteஅடிக்கடி.சண் டி.வி என்பதை சன் டி.வி என்று திருத்தி இனிவரும் பதிவில் வெளியிடவும். நன்றி.
ரயில் ஸ்னேகம் - விரும்பிப் பார்த்த ஒரு தொடர். சில நாட்களுக்கு முன் யூவில் சில பகுதிகள் பார்த்தேன்! :)
ReplyDelete