குளு மணாலியில் ஆங்காங்கு ஆறுகள் நிறைய உண்டு. அருகிலேயே மலைகள் வேறு. இவற்றை அடிப்படையாய் வைத்து ஏராளமான ஜாலி விளையாட்டுகள் இருக்கும். இவற்றை அவசியம் என்ஜாய் செய்ய வேண்டும். இத்தகைய இடங்களில் தான் இவற்றை செய்ய முடியும் என்பது ஒரு காரணம். மேலும் பகலிலேயே குளிரும் இந்த க்ளைமேட்டை முழுதாய் அனுபவிக்க இவை தான் உதவும்.
அப்படி நாங்கள் சென்றது தான் ரிவர் ராப்டிங் என்கிற இந்த விளையாட்டு. நாங்கள் மூன்று குடும்பங்கள் சேர்ந்து சென்றிருந்தோம். மிக சிறுவர்கள் இதில் விடுவதில்லை. ஆறு வயது வரை உள்ள சிறுவர்கள் மட்டும் வரவில்லை. இதனால் இவர்கள் கூட இருக்க இரு பெண்மணி மட்டும் தங்கி விட்டனர். (கடைசியில் அவர்களுக்கு மட்டும் அருகிலேயே ஒரு குட்டி ரவுண்ட் அடித்து தந்தார் படகு ஓட்டுனர்).

இந்த விளையாட்டுகளை ஜாலியாக ஆடுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் நம் பாதுகாப்பும் கூட ! எங்களுடன் வந்த ஜோஷி இந்த விஷயத்தில் மிக அக்கறையாய் இருந்தார். எல்லா சேப்டி விஷயங்களும் சரியாக இருக்கா, எங்களுக்கு படகு ஓட்டும் ஆள் இதற்கான லைசன்ஸ் வைத்திருக்காரா என்றெல்லாம் முழுதாய் சரி பார்த்த பின் தான் எங்கள் பயணம் துவங்கியது !
ஒவ்வொருவரும் சேப்டி உடை, நம் உடைக்கு மேல் அணிந்து கொள்ள வேண்டும் (ஒரு வேளை நீரில் விழுந்துட்டா? அதுக்கு தான் இந்த ஜாக்கிரதை உணர்வு !)
இந்த சவாரிக்கு அவர்கள் தங்கள் இஷ்டப்படி எக்கச்சக்கமாய் பணம் சொல்வார்கள். பேரம் பேசி குறைக்க வேண்டும். ஜோஷி தான் இந்த டிபார்ட்மென்ட் முழுக்க பார்த்து கொண்டார். பணம் தருவதுடன் நம் வேலை முடிஞ்சுது ! ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய் போல தந்த மாதிரி நினைவு. (உடைக்கும், படகு ஓட்டுனர் டிப்ஸ் எல்லாம் சேர்த்து).
அரை மணி நேர ரவுண்ட் என்பதால் அதிக தூரம் கூட்டி சென்றனர் படகு ஓட்டிகள்.
இரு படகுகளில் எங்கள் க்ரூப் சென்றது. முதல் க்ரூப் முன்னே போய் விட்டது.
சாதாரண ஏரிகளில் இந்த பயணம் செல்வதும், இங்கு செல்லும் ரிவர் ராப்டிங்கும் மிக மிக வித்யாசப்படும். ஆற்றின் நடுவே பாறைகள் இருப்பதாலும், சில இடங்கள் அதிக ஆழம் இருப்பதாலும் படகு மேலும் கீழும் அசையும். அப்படி அசையும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் அலை போல வந்து நம் மீது மோதும் ! இது தான் பயங்கர த்ரில்லே ! பகல் பத்து மணிக்கு இந்த பயணம் சென்றோம். வெய்யில் ஓரளவு அடித்தது. ஆனாலும் ஒவ்வொரு முறை ஆற்றில் உள்ள தண்ணீர் எங்கள் மேல் படும்போது உடல் விறைத்தது ! ஐஸ் கட்டி மாதிரி தண்ணீர் இருந்தால் பின்னே என்ன ஆவது?
எங்களுடன் வந்த குழு செல்லும் ராப்டிங் இதில் சற்று பாருங்கள்
இரண்டு படகோட்டிகள் படகை திறமையாக ஓட்டி வந்தனர்.
அந்த அரை மணி நேரமும் மிக மிக மிக என்ஜாய் செய்தோம். எங்கள் படகில் நான், மனைவி, மகள் ஆகியோர் மட்டுமே இருந்தோம். மூவர் முகத்திலும் முழுக்க முழுக்க சிரிப்பும் த்ரில்லும் தான் அந்த அரை மணி நேரமும் இருந்தது. இந்த ராப்டிங் சென்றவர்களால் வாழ் நாளைக்கு அதை மறக்க முடியாது !
இமய மலையில் இருந்து பனிக்கட்டி உருகி தான் இந்த ஆறுகளில் ஓடுவதாகவும் அதனால் தான் தண்ணீர் இப்படி ஜில் என்று இருப்பதாகவும் சொன்னார்கள் !
நாங்கள் செல்லும் ராப்டிங் வீடியோ (துவக்கம் மட்டும்)
பூக்கள் கார்னர்
படகில் முன்னே அமர்பவர் மேல் தான் மிக அதிக தண்ணீர் கொட்டுகிறது. எடை பாலன்ஸ் செய்யணும் என ஹவுஸ் பாஸ் முன்னே அமர்ந்ததால் அவருக்கு தான் ஐஸ் தண்ணீர் மழை அதிகம் கொட்டியது ! ஆனாலும் படகு அவ்வப்போது சுழலும் போது பின்னே இருக்கும் நாம் முன்னே வந்துடுவோம். அப்போ நம் மேல் தண்ணீர் கொட்டும்.
படகோட்டி நேபாளை சேர்ந்தவராம். ஹவுஸ் பாஸ் தான் அவரிடம் சின்னதா பேட்டி எடுத்தார். (நமக்கு ஹிந்தி தெரியாது)
எங்களை மிக அதிகமாய் குஷிப்படுத்திய அந்த அரை மணி நேர ரிவர் ராப்டிங் ரொம்ப சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இது முடிந்ததும் சர்வ நிச்சயமாய் ஒவ்வொருவரும் உடை மாற்ற வேண்டும். அனைவரும் ஐஸ் நீரில் நனைவதால் குளிர் பின்னி எடுத்துடும். கரையில் வைத்து விட்டு அப்புறம் வந்து உடை மாற்றி கொண்டோம். இதற்கு அறைகள் அங்கேயே உண்டு.
மணாலியில் என்றில்லை, எங்கு ரிவர் ராப்டிங் இருந்தாலும் அவசியம் சென்று பாருங்கள். செம்ம்.......ம அனுபவமாய் அது இருக்கும் !
சேப்டி உடை போட்டு விடுகிறார்கள் |
இந்த சவாரிக்கு அவர்கள் தங்கள் இஷ்டப்படி எக்கச்சக்கமாய் பணம் சொல்வார்கள். பேரம் பேசி குறைக்க வேண்டும். ஜோஷி தான் இந்த டிபார்ட்மென்ட் முழுக்க பார்த்து கொண்டார். பணம் தருவதுடன் நம் வேலை முடிஞ்சுது ! ஒரு ஆளுக்கு ஐநூறு ரூபாய் போல தந்த மாதிரி நினைவு. (உடைக்கும், படகு ஓட்டுனர் டிப்ஸ் எல்லாம் சேர்த்து).
சாலையில் ராப்டிங் விளம்பரம் |
இரு படகுகளில் எங்கள் க்ரூப் சென்றது. முதல் க்ரூப் முன்னே போய் விட்டது.
சாதாரண ஏரிகளில் இந்த பயணம் செல்வதும், இங்கு செல்லும் ரிவர் ராப்டிங்கும் மிக மிக வித்யாசப்படும். ஆற்றின் நடுவே பாறைகள் இருப்பதாலும், சில இடங்கள் அதிக ஆழம் இருப்பதாலும் படகு மேலும் கீழும் அசையும். அப்படி அசையும் ஒவ்வொரு முறையும் தண்ணீர் அலை போல வந்து நம் மீது மோதும் ! இது தான் பயங்கர த்ரில்லே ! பகல் பத்து மணிக்கு இந்த பயணம் சென்றோம். வெய்யில் ஓரளவு அடித்தது. ஆனாலும் ஒவ்வொரு முறை ஆற்றில் உள்ள தண்ணீர் எங்கள் மேல் படும்போது உடல் விறைத்தது ! ஐஸ் கட்டி மாதிரி தண்ணீர் இருந்தால் பின்னே என்ன ஆவது?
எங்களுடன் வந்த குழு செல்லும் ராப்டிங் இதில் சற்று பாருங்கள்
இரண்டு படகோட்டிகள் படகை திறமையாக ஓட்டி வந்தனர்.
அந்த அரை மணி நேரமும் மிக மிக மிக என்ஜாய் செய்தோம். எங்கள் படகில் நான், மனைவி, மகள் ஆகியோர் மட்டுமே இருந்தோம். மூவர் முகத்திலும் முழுக்க முழுக்க சிரிப்பும் த்ரில்லும் தான் அந்த அரை மணி நேரமும் இருந்தது. இந்த ராப்டிங் சென்றவர்களால் வாழ் நாளைக்கு அதை மறக்க முடியாது !
இமய மலையில் இருந்து பனிக்கட்டி உருகி தான் இந்த ஆறுகளில் ஓடுவதாகவும் அதனால் தான் தண்ணீர் இப்படி ஜில் என்று இருப்பதாகவும் சொன்னார்கள் !
கடைசியில் குட்டி ரவுண்ட். ......................போகாத சிலருக்காக |
பூக்கள் கார்னர்
படகில் முன்னே அமர்பவர் மேல் தான் மிக அதிக தண்ணீர் கொட்டுகிறது. எடை பாலன்ஸ் செய்யணும் என ஹவுஸ் பாஸ் முன்னே அமர்ந்ததால் அவருக்கு தான் ஐஸ் தண்ணீர் மழை அதிகம் கொட்டியது ! ஆனாலும் படகு அவ்வப்போது சுழலும் போது பின்னே இருக்கும் நாம் முன்னே வந்துடுவோம். அப்போ நம் மேல் தண்ணீர் கொட்டும்.
படகோட்டி நேபாளை சேர்ந்தவராம். ஹவுஸ் பாஸ் தான் அவரிடம் சின்னதா பேட்டி எடுத்தார். (நமக்கு ஹிந்தி தெரியாது)
எங்களை மிக அதிகமாய் குஷிப்படுத்திய அந்த அரை மணி நேர ரிவர் ராப்டிங் ரொம்ப சீக்கிரமே முடிவுக்கு வந்தது.
இது முடிந்ததும் சர்வ நிச்சயமாய் ஒவ்வொருவரும் உடை மாற்ற வேண்டும். அனைவரும் ஐஸ் நீரில் நனைவதால் குளிர் பின்னி எடுத்துடும். கரையில் வைத்து விட்டு அப்புறம் வந்து உடை மாற்றி கொண்டோம். இதற்கு அறைகள் அங்கேயே உண்டு.
மணாலியில் என்றில்லை, எங்கு ரிவர் ராப்டிங் இருந்தாலும் அவசியம் சென்று பாருங்கள். செம்ம்.......ம அனுபவமாய் அது இருக்கும் !
எங்க நாட்டில் இந்த ரிவர் ராஃப்டிங் ரொம்ப ஃபேமஸ்.
ReplyDeleteபாறைமேல் மோதி சாகப்போறோமுன்னு பயமா இருக்கும். அப்படி ஒரு வேகத்துலே ஆறு ஓடும் படகின் வேகமும் அதிகம். குடல் வாய்க்குள்ளே வரும்வரை கத்தல். இறங்கும்போது வாயெல்லாம்சிரிப்பூ:-)))
நீங்க போட்டுருக்கும் பர்ப்பிள் பூவுக்குப் பெயர் ஐரிஸ்.
நிச்சயம் ரிவர் ராஃப்டிங் செய்ய வேண்டும். கங்கையில் சென்ற அனுபவம் இருக்கிறது! அதுவும் நல்ல குளிர் காலத்தில்.... :)
ReplyDeleteஎஞ்சாய்...நாங்கலாம் தண்ணியில் இருக்கும் போது இந்த லைப் ஜாக்கெட் யூஸ் பண்ணவே மாட்டோம்...ஹி ஹி ஹி
ReplyDeleteகாணொளி எங்களுக்கும் ஒரு' ஜில்'லென்ற
ReplyDelete'சிலீர் 'அனுபவம் தான்.
இனிய அனுபவம் ஜில்லிட்டது...
ReplyDeleteஆஹா அருமை....இப்போவே குலுமனாலி போகணும் போல இருக்கு. கலக்கறீங்க !!
ReplyDeleteஇதிலெல்லாம் செல்ல எப்பவும் எனக்கு பயம் உண்டு:)!
ReplyDeleteபூவின் வண்ணமும் வடிவமும் மிக அழகு.
நாமே அனுபவித்தால்தான் முழு சுகமும் நமக்கே தெரியும் என்று நினைக்கிறேன். ஆர்வத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். பூவின் நிறம் மிகக் கவர்கிறது.
ReplyDeleteஇப்பொழுதே குளுமணாலி சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.பூ ரொம்ப அழகா இருக்கு.
ReplyDeleteமிகவும் வித்யாசமான அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா? காணொளிகளில் பாறைகளைப் பார்க்கும் பொழுது சற்று பயமாக இருக்கு.
ReplyDeleteவித்தியாசமான அனுபவத்தை சிறப்பாக பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteநல்ல அனுபவமாக இருந்திருக்கும். எனக்கு இதிலெல்லாம் பயம் ஜாஸ்தி...
ReplyDeleteபூக்கள் கார்னர் பிரமாதம்.
அது குலு இல்லை?
ReplyDeleteடீச்சர்: நன்றி உங்கள் அனுபவம் சொன்னதுக்கும் பூவின் பெயருக்கும்
ReplyDeleteநன்றி வெங்கட்
ReplyDeleteகோவை நேரம்: நீங்கல்லாம் ஹீரோ சார். நாங்க சாதாரண மனுஷங்கோ :)
ReplyDeleteநன்றிங்க ஸ்ரவாணி
ReplyDeleteதனபாலன்: நன்றி
ReplyDeleteமகிழ்ச்சி சுரேஷ் குமார்
ReplyDeleteவாங்க ராமலட்சுமி மேடம் நன்றி
ReplyDeleteஸ்ரீராம் : நன்றி ; பூவை பலரும் இம்முறை குறிப்பிடுகிறார்கள் எல்லா புகழும் படமெடுத்த ஹவுஸ் பாசுக்கே
ReplyDeleteமகிழ்ச்சி தொழிற் களம்
ReplyDeleteஆம் ராம்வி நன்றி
ReplyDeleteசுரேஷ் நன்றி
ReplyDeleteஅப்படியா ரோஷினி அம்மா? நன்றி
ReplyDeleteகேபிள்: "குளு குளு" என்கிற எண்ணத்தில் எழுதிட்டேன். பயண கட்டுரை முடிய போகுற நேரத்தில் சொல்றீங்க மாத்திக்கலாம் :))
ReplyDeleteஸார் , அரை மணி நேரம் ஆற்றில் போனபின் எப்படி அதே இடத்திற்கு வருவீர்கள்.இல்லை கீழே போனவுடன் வண்டி பிடித்து வர வேன்டுமா?அவர்கள் போட்டை எப்படி அதே இடத்திற்கு கொண்டு செல்லுவார்கள்.?
ReplyDeleteகுலு மணாலியின் குளு குளு ராப்டிங் அருமையாத்தான் இருக்கு. வாய்ப்பு கிடைச்சா போகணும்ன்னு ஆசையைத்தூண்டுது காணொளி.
ReplyDelete