Sunday, November 4, 2012

துப்பாக்கி: ஒருவரி கதை + பாடல்கள் எப்படி?

விஜய்யின் தீபாவளி ரிலீஸ் துப்பாக்கி. குங்குமம் பத்திரிக்கையில் இப்படத்தின் கதை என்ன என்று கேட்க, விஜய் இப்படி பதில் சொல்லியிருந்தார். " படத்தில் நான் ஒரு ராணுவ வீரன். விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகிறேன். நான் திரும்ப ராணுவத்துக்கு போவதற்குள் நடக்கும் சம்பவங்களே துப்பாக்கி படத்தின் கதை".

சரி ...படத்தின் பாடல்கள் எப்படி என்று பார்ப்போம்.
***
பாடல் ஒவ்வொன்றையும் ஐந்து, ஆறு முறை கேட்ட பின் தான் எழுதுகிறேன்.

A.R. முருகதாஸ் பொதுவாய் தன் கதைக்கு முக்கியத்துவம் தந்து அதற்கு தகுந்த படி ஹீரோ பார்ப்பார். இம்முறை விஜய்க்காகவே தான் கதை முதல் பாட்டு வரை வடிவமைத்த மாதிரி தோன்றுகிறது.


குட்டி புலி கூட்டம் டிபிக்கல் விஜய் பாட்டு. இந்த பாட்டை நீங்கள் எப்போது முதன் முறையாக கேட்டாலும் " இது விஜய் படத்து பாட்டு" என்று எளிதாய் சொல்லி விடுவீர்கள். வேட்டைக்காரன், கில்லி என எத்தனையோ படங்களில் கேட்ட விஜய் பாடலை நினைவு படுத்துது. காலை மடித்து உட்கார்ந்து, உட்கார்ந்து ஆடும் விஜய்யின் ஸ்பெஷல் டான்சை இந்த பாட்டிற்கு எதிர்பார்க்கலாம்.

துறு துறுன்னு இருந்திடு இருந்திடு துறு பிடிக்காமலே இருந்திட பறந்திடு என மெசேஜ் சொல்லவும் மறக்க வில்லை. விஜய் ரசிகர்கள் தவிர்த்து மற்றவர்கள் திரும்ப திரும்ப கேட்கிற அளவில் இந்த பாட்டு இல்லை என்பது சற்று வருத்தமே !

கூகிள் கூகிள் என்கிற பாட்டு - ஆண்ட்ரியா மற்றும் விஜய் பாடியுள்ளனர். கூகிள், யாகூ, சாட்டிங், யூ டியூப் என முழுக்க முழுக்க இணைய வார்த்தைகளை போட்டு எழுதப்பட்ட பாடல் (மதன் கார்க்கி). பாட்டின் துவக்கம் கேட்சி ஆக இருப்பதால் இந்த பாட்டு ஹிட் ஆகி உள்ளதாக அறிகிறேன்.

பெண் ஆணையும், ஆண் பெண்ணையும் கிண்டலடித்து பாடும் பாடல். பிரச்சனை என்னவென்றால் பாடல் வரிகள் புரியாத மாதிரி இசை முழுதும் டாமினேட் செய்து விடுகிறது

கிட்ட வந்து நான் பேசும் போதோ
twitterகுள்ள மூழ்கிடுவான்
இச்சுன்னு ஸ்வீட்டா கன்னத்தில் தந்தா
நச்சுன்னு ட்வீட்டா போட்டுடுவான்

என்றெல்லாம் வரிகள் இருக்கு என்பதை மதன் கார்க்கி தன் தளத்தில் பாடல்களை பகிர்ந்த போது தான் தெரிந்து கொள்ள முடிந்தது. நிச்சயம் பாட்டு கேட்கும் போது இந்த வரிகள் புரியவே இல்லை.

போய் வரவா என்பது மிக மிக மெதுவான மெலடி. உறவுகள் பிரிவதை அடிப்படையாய் வைத்து வருகிற பாட்டு. கொஞ்சம் முயன்றிருந்தால் முஸ்தபா முஸ்தபா போல கல்லூரி கடைசி நாட்களில் ஒலிக்கும் பாடலாய் வந்திருக்கலாம். மிக மெதுவான பாடல் என்பதால் அதற்கு சற்று வாய்ப்பில்லை என்றே சொல்லணும். கேட்க கேட்க இந்த பாட்டு ஓரளவு பிடிக்கலாம்

"வெண்ணிலவே " என்கிற பாட்டு "ஆஜா ஆஜா " என ஹிந்தியில் துவங்குகிறது. பின் அப்படியே ஒரு பல்டி அடித்து

வெண்ணிலவே தரையில் உதித்தாள்
ஒரு சிரிப்பில் இதயம் பறித்தாள்

என்று மெலடியாய் போகிறது. ஹரிஹரன் மற்றும் பம்பாய் ஜெயஸ்ரீ பாடிய இந்த பாட்டு மிக மெதுவாய் போனாலும் ரசிக்க கூடிய மெலடி. இந்த பாட்டு மழையில் ஒலிக்குமோ என்னவோ ! நடு நடுவே ஒற்றை மழைத்துளி கொட்டும் சத்தம் வந்து கொண்டே இருக்கிறது.

இவை தவிர அலைக்கா லைக்கா என்கிற பாட்டும் அண்டார்டிகா என்கிற பாட்டும் கூட ஆல்பத்தில் உள்ளன. இவை இரண்டும் நான்கைந்து முறை கேட்டும் ஈர்க்க வில்லை. படம் பார்த்த பின் எண்ணம் மாறுமோ என்னவோ தெரியலை.

பட விமர்சனம் எழுதும் போது முடிக்கிற மாதிரி தான் இந்த பாடல் விமர்சனத்தையும் முடிக்க வேண்டியிருக்கிறது.

துப்பாக்கி பாடல்கள்.. "Strictly for Vijay Fans " !

15 comments:

  1. வெண்ணிலவே மட்டும் நல்லாருக்கு....கூகுள் கூகுள் ஓகே...மத்தபடி ஒண்ணும் சொல்றமாதிரி இல்ல!

    ReplyDelete
    Replies
    1. ரகு: ஆம் சரிதான்

      Delete
  2. கூகுள் கூகிள் நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. பிரேம்: பாட்டு ஹிட் ஆகிடுச்சு பாடல் கேட்காமல் இசை சற்று அதிகம் என்பது தான் நான் சொல்லியது நன்றி

      Delete
  3. நல்ல விமர்சனம்... இப்பல்லாம் படத்தோட ஹிட் கு பாடல் கைக்குடுபதும் காலைவாரி விடுவதும் சகஜமாகி விட்டது...
    கூகுள் பாட்டு நல்ல இருக்கு..
    நன்றி சார்....

    ReplyDelete
  4. உண்மைதான். 'கூகிள் கூகிள்' பாடல் ஆரம்பம் மட்டும் நன்றாக இருக்கிறது. 'போய் வரவா' பாடல் அலுக்க வைக்குமளவு ஸ்லோ!

    ReplyDelete
    Replies
    1. படம் வரும் முன்பே பாட்டு கேட்டீங்களா ஸ்ரீராம் சார் நன்றி

      Delete
  5. அருமையான பகிர்வு! எனக்கும் ஒரு முறை கேட்டால் பாடல் வரிகள் புரியவில்லை! இசை வரிகளை கபளிகரம் பண்ணி விடுகிறது! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  6. Anonymous5:57:00 PM

    கூகுல் பாட்டு மட்டும்தான் நான் கேட்டு இருக்கேன்! மத்த பாடல்களை இனிதான் கேட்கனும்! பாபே ஜெயஸ்ரீ பாடல் நிச்சயம் கேட்டே ஆகனும்! தகவலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுடர்விழி

      Delete
  7. இப்போ வர பாடல்களை விட நல்லாத்தான் இருக்கு. தாண்டவம், சகுனி, மாற்றான், பில்லா 2, ஆதி பகவன், போடா போடி இதை எல்லாம் விட துப்பாக்கி பாடல்கள் எவ்வளவோ பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. ராஜ் டேஸ்ட் ஒவ்வொருவருக்கும் நிறைய மாறுது என நினைக்கிறேன். மாற்றான் தோல்வி என்றாலும் எனக்கு அதில் மூன்று பாட்டு மிக பிடித்தது; ஆறு ஏழு முறை கேட்டும் துப்பாக்கியில் இரண்டு பாட்டு தான் ஈர்த்தது

      தங்கள் கருத்துக்கு நன்றி

      Delete
  8. /// "Strictly for Vijay Fans " !////

    அப்போது இது முருகதாஸ் படமா இருக்காது.....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...