ஆறுவகை நண்பர்கள்
டைம்ஸ் ஆப் இந்தியாவில் சில சுவாரஸ்ய சமாச்சாரங்கள் வரும். அப்படி வாசித்த ஒன்று ... நம் ஒவ்வொருவருக்கும் தேவை - ஆறு நண்பர்கள் ! வேறு விதமாய் சொல்லணும் என்றால் ஆறு விதமான நண்பர்கள் கொண்ட குழு !
எதற்கும் டென்ஷன் ஆகாத ஒரு நண்பர், உங்களை பற்றி உங்களை விட அதிகம் தெரிந்த ஒருவர், எதிலும் தைரியமாய் இறங்கி பார்க்கும் நண்பர், நீங்கள் எப்போது கஷ்டம் என்றாலும் உடனே ஓடி வர ஒரு நண்பர் இப்படி வெவ்வேறு வித நண்பர்கள் ஒருவருக்கு இருப்பதே ஒரு மனிதனை முழு மனிதனாகவும் அவன் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் ஆக்கும் என்கிறது இந்த ஆராய்ச்சி.
உங்கள் நண்பர்கள் இதில் எந்தெந்த கேட்டகரியில் வருவார்கள் என முடிந்தால் யோசித்து பாருங்கள்.
டைம்ஸ் ஆப் இந்தியாவில் சில சுவாரஸ்ய சமாச்சாரங்கள் வரும். அப்படி வாசித்த ஒன்று ... நம் ஒவ்வொருவருக்கும் தேவை - ஆறு நண்பர்கள் ! வேறு விதமாய் சொல்லணும் என்றால் ஆறு விதமான நண்பர்கள் கொண்ட குழு !
எதற்கும் டென்ஷன் ஆகாத ஒரு நண்பர், உங்களை பற்றி உங்களை விட அதிகம் தெரிந்த ஒருவர், எதிலும் தைரியமாய் இறங்கி பார்க்கும் நண்பர், நீங்கள் எப்போது கஷ்டம் என்றாலும் உடனே ஓடி வர ஒரு நண்பர் இப்படி வெவ்வேறு வித நண்பர்கள் ஒருவருக்கு இருப்பதே ஒரு மனிதனை முழு மனிதனாகவும் அவன் வாழ்க்கையை சுவாரஸ்யமாகவும் ஆக்கும் என்கிறது இந்த ஆராய்ச்சி.
உங்கள் நண்பர்கள் இதில் எந்தெந்த கேட்டகரியில் வருவார்கள் என முடிந்தால் யோசித்து பாருங்கள்.
தண்ணீர் தர மறுக்கும் கேரளம், தமிழகத்துக்கு தந்த கொடைகளில் இவரும் ஒருவர் !
சந்தித்த நபர்
மடிப்பாக்கத்தில் ஒரு இன்டர்நெட் சென்டருக்கு சென்றிருந்தேன். கடையில் இருந்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்கவர். பிரிண்ட் அவுட் எடுக்கணும் என்றதும், "எனக்கு எப்படி செய்யணும் என தெரியாது நீங்களே செஞ்சிக்கனும்" என்றார். அப்புறம் பார்த்தால் கணினியை அல்லது பிரிண்டரை ஆன் செய்யவும் அவருக்கு தெரியலை. வேலை முடிந்து கிளம்பும் போது மழை பெய்ய சற்று காத்திருக்க வேண்டியதாயிற்று.
அவருக்கு கணினி பற்றி தான் தெரியலையே ஒழிய மற்ற உலக விஷயங்கள் செம அறிவு ! " தென் சென்னை, தென் சென்னைன்னு சும்மா லேண்ட் விலை ஏத்திட்டாங்க சார். ஒரு டிரையிநேஜ் கனக்ஷன் தர எவ்ளோ வருஷம் ஆகுது பாருங்க ! தலைக்கு மேலே ஈ. பி ஒயர் போனா அது சிட்டியே இல்லை சார். கிண்டி எல்லாம் பாருங்க ஒயர் எல்லாம் தரைக்கு கீழே தான் போகும்" என்றார்.
தன் பையனுடைய கடை இது என்றும் அவன் இல்லாத நேரம் மட்டுமே நான் இருப்பேன்" என்றும் சொன்னவர் பேசிய மற்ற விஷயங்களில் சென்னை பற்றி நிறையவே அறிந்து கொள்ள முடிந்தது !
டேல் கார்நிஜி சொன்னமாதிரி " Every man I meet is in someway my superior and I can learn from him".
விஜய் படத்தை எதிர்பார்க்கும் படம் என்று சொல்வதா என்று கிண்டல் செய்யாதீர்கள் ! சிறு சரிவுக்கு பின் விஜய் மீண்டுவிட்டார் என்று தான் சொல்லணும். காவலன், வேலாயுதம், நண்பன் என ஹாட்ரிக் அடிச்சுட்டார். முருகதாஸ் எனக்கு ஓரளவு பிடித்த இயக்குனர் (ஏழாம் அறிவு சொதப்பலை விடுங்கள்);
கடந்த ஒரு வாரமாய் ஆபிஸ் ஜிம்மில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் செம விவாதம்.
"எங்க அஜித் வரலாறுல லேடி மாதிரி நடிச்சாரே ; உங்க ஆளால முடியுமா? "
" அட விடுப்பா.. அது அவருக்கு நேச்சுரலா வந்துடுச்சு" - ஒரு சாம்பிள் !
படம் வரும் வெள்ளி ரிலீசா, தீபாவளிக்கு தான் வருகிறதா என்பதில் ஏகப்பட்ட குழப்பம். வெள்ளியன்று வந்தால் மாலை காட்சியே படம் பார்க்க ஜிம் நண்பர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்...எனக்கும் சேர்த்து. (யாரது ஐயய்யோன்னு கத்துனது. நோ நோ அப்படில்லாம் கத்தப்படாது !)
பாலோ அப் :மடிப்பாக்கம் கொலை வழக்கு
மடிப்பாக்கம் நகை கடையில் பகலில் நிகழ்ந்த கொலை/ கொள்ளை பற்றி இங்கு எழுதியிருந்தோம் அல்லவா? அந்த வழக்கு துப்பு துலக்கப்பட்டு விட்டது
அலி மற்றும் தினேஷ் என்கிற இரு இளைஞர்கள் தான் இதனை செய்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். அலியின் வீட்டில் நகைகள் முழுமையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் இறந்த சிறுவனின் ரத்தக்கறை கூட இருந்ததாம் :((
இவர்கள் இருவரும் அறுபது முறைக்கு மேல் கடைக்கு அடகு வைக்கிற மாதிரி வந்து சென்றனராம். கடை முதலாளிக்கு நன்கு அறிமுகம் ஆன இவர்களுக்கு கஞ்சா பழக்கமும் உண்டு என கூறப்படுகிறது.
விரைந்து நடவடிக்கை எடுத்து கண்டு பிடித்துள்ளது போலிஸ். ஐந்து கிலோ நகையும் அப்படியே கிடைத்து விட்டது ..ஆனால்... போன உயிர் போனது தான். அந்த சிறுவனை இழந்து விட்டோம் :(
போஸ்டர் / QUOTE கார்னர்
அய்யாசாமி தயாரித்த கேரட் ஜூஸ்
"கேரட் ஜூஸ் செய்வது ரொம்ப ஈஸிங்க. கேரட் தோலை லேசா சீவி எடுத்துடுங்க. துண்டு துண்டா நறுக்கிக்கோங்க. காய்கறிக்கு நறுக்கிற மாதிரி ஒரே சீரா நறுக்கணும்னு இல்லை. மிக்சியில் தானே போட போறோம் ? நறுக்கிய கேரட்டை பில்டர் இருக்குற மிக்சியில் போட்டு நல்லா அரைக்கணும்.
ஒரு நிமிஷம் போல அரைச்சிட்டு, அப்புறம் கொஞ்சம் தண்ணி ஊற்றி மறுபடி அரைங்க.உடனே குடிக்கிறதா இருந்தா அத்தோட கொஞ்சம் பால் சேத்துக்கலாம். ஜூசை ஸ்கூல் அல்லது ஆபிஸ் எடுத்து போறதா இருந்தா பால் சேர்க்க வேண்டாம் (ஜூஸ் கெட்டு போயிடும் ); லேசா தேன் ஓரிரு சொட்டு சேர்த்தா கேரட் ஜூஸ் ரெடி !
அடிக்கடி இப்படி கேரட் ஜூஸ் செஞ்சு குடிச்சா, கண் பிரச்சனைகள் வராது அத்தோட கலர் அதிகமாகி சும்மா தகதகன்னு மின்னுவீங்க..ம்ம்ம்ம் !" -
ஆறுவகை நண்பர்களும்... (இவ்வளவு தானா...?)
ReplyDeleteQUOTE கார்னர் - பொறுமை...
நன்றி தனபாலன் சார் கொஞ்ச நாளா உங்களை இங்கு காணும் நான் கூட வீடு சிப்ட் பண்ற வேலையில் இருக்கீங்கீங்க என நினைதேன்
Deleteவானவில் வழக்கம் போல பல்சுவை....
ReplyDeleteஅழகு கார்னர் - வர வர தைரியம் அதிகமாகிடுச்சு ஐயாசாமிக்கு! நடக்கட்டும் நடக்கட்டும்....
ஏம்ப்பா ஏன்? வீட்டில் மாட்டி விடாம விட மாட்டீங்க போலருக்கே :)
Deleteசிறுவனை வேலைக்கு அமர்த்தியது, அதுவும் திருட்டு அபாயம் நிறைந்த நகைக்கடையை அவன் பொறுப்பில் விட்டது குறித்து எந்தக் கேள்விகளும் எழுப்பப்படவில்லையா?
ReplyDeleteசரியான கேள்விகள் ஆனால் அவை பற்றி பெரிதாய் கிளறவில்லை என்று தான் தெரிகிறது :(
Deleteவழக்கம்போல் வானவில் கவர்கிறது.
ReplyDeleteகேரளத்து அம்மணி பேரைப் போட்டிருந்தா நல்ல இருக்கும்.
முரளி சார் பதிவின் தலைப்பில் இருக்குது பேரு !
Deleteகலர் மின்னும் வானவில். ரசித்தேன்.
ReplyDeleteமகிழ்ச்சி டீச்சர்
Deleteநறுக்கிய கேரட்டை பில்டர் இருக்குற மிக்சியில் போட்டு நல்லா அரைக்கணும்.
ReplyDelete>>
உங்க மாப்பிள்ளை ஃபில்டர் வெச்ச மிக்ஸி நம்ம வூட்டுல இல்லை. போய் உங்க ச்கோ வூட்டுல போய் வாங்கி வான்னு இம்சை பண்றாரு சகோ.
அடுத்த காமன்ட்டில் ஜூஸ் குடிக்க மாட்டேன்னு சொல்லிட்டீங்க நமக்கு செலவு மிச்சம் !
Deleteஅத்தோட கலர் அதிகமாகி சும்மா தகதகன்னு மின்னுவீங்க..ம்ம்ம்ம் !" -
ReplyDelete>>
உங்க கலரோட மர்மம் இதானா?! இனி கேரட் ஜூஸ் குடிப்பேன்?! ம்ஹூம்..
எனக்கு யார் கேரட் ஜூஸ் குடுத்தாங்க? நான் தான் பொண்ணுக்கும், மனைவிக்கும் தினம் ஜூஸ் போட்டு தர்ரேன் ஒரு சொட்டு நமக்கு தர்றதில்லை
Deleteநான் கலர் ஆனா பிரச்சனைன்னு நினைக்கிறாங்க போல :)
யப்பா... வானவில் நல்ல இருக்குன்னு ஒத்துக்கறேன். அதுக்காக இப்படில்லாம் ஓவியா படத்தைப் போட்டு பயமுறுத்தாதீங்கப்பூ... திகில் படத்துல மேக்கப் இல்லாம நடிக்க சரியா இருப்பாங்க போலருக்கு. எனக்கு ஐயாசாமி சொன்ன கேரட் ஜூஸ் பிடிச்சது. எங்க யாரைச் சந்திச்சாலும் அவங்கட்டருந்து ஏதாவது விஷயத்தை கிரகிச்சுக்கற மோகன்குமாரைப் பிடிச்சது.
ReplyDeleteநல்ல போட்டோவா போட்டிருக்கணும் போல
Deleteகளவாணி பாருங்க நிச்சயம் பிடிக்கும் !
போட்டோவுல ஓவியா மேக்கப்லாம் நல்லாத்தான் இருக்கு, பட் ஓவியாவோட ஸ்பெசாலிட்டி தெரியாததால அது ரிஜக்டட்.......
ReplyDelete/////எதிர்பார்க்கும் படம்: துப்பாக்கி /////
ReplyDeleteஅண்ணனுக்குள்ள இருக்கற விஜய் ரசிகன் வெளில வந்துட்டான்........ இத மைண்ட்ல வெச்சிக்கிறேன்......
அண்ணே இல்லண்ணே இல்லவே இல்ல. நான் டாகுடறு ரசிகர் இல்ல
Deleteநோ, நான் இத ஒத்துக்கவே மாட்டேன்...... சொன்னா சொன்னதுதான்..... நீங்க துப்பாக்கி ஓடாதுனு பயப்படுறீங்கண்ணே...... அதான் இப்படி சொல்றீங்க.....!
Deleteஅண்ணே எதோ படவிமர்சனம் எழுதினா கொஞ்சம் பேர் படிப்பாங்களேன்னு போகலாம்னு நினைச்சேன். இப்புடி கெட்ட பேர் வரும்னா நான் பாக்கவே போக மாடேன்கோ
ReplyDelete//டேல் கார்நிஜி//
ReplyDeleteஇவர் யார்?
கிண்டியில் ஒயர் தரைக்கு அடியில் போகிறது என்பது புதிய தகவல். அப்படியா? அது ஏன் - எப்படி அங்கு மட்டும் அப்படி?
கேரட் ஜூஸ் அடிக்கும்போது, வடிகட்டியில் கிடைக்கும் கேரட் சக்கையை என்ன செய்வீர்கள்? அதையும் சேர்த்து சாப்பிடுவது அல்லவா உடல்நலம் தரும்? கேரட்டை மிக்ஸியில் அடிக்கும்போது நன்றாக நைஸாக அரைந்துவிடுமே (அல்லது மைக்ரோவேவில் ஒரு நிமிடம் போல வைத்தும் எடுக்கலாம்... அதையும் சேர்த்தே ஜூஸ் செய்யுங்கள். அதோடு பால், தேன், பாலாடை சேர்த்து அடித்தால் “யம்மி”தான்!!
மின்னுது வானவில்
ReplyDeleteமகிழ்ச்சி மேடம் மிக நன்றி
Deleteஹுசைனம்மா:
ReplyDeleteடேல் கார்நிஜி மிக புகழ் பெற்ற சுய முன்னேற்ற நூலாசிரியர். இவர் எழுதிய என்கிற " How to win friends & Influence peple" புத்தகம் மிக பிரபலமானது. இவர் குறித்த லிங்க் http://en.wikipedia.org/wiki/Dale_Carnegie
ஈ.பி ஒயர் தரைக்கு கீழ் போகும் என அவர் சொன்னது எனக்கும் புது தகவல். கிண்டி மட்டுமில்லை, மயிலாப்பூர் உள்ளிட்ட சென்னையின் முக்கிய பகுதிகளில் அப்படி தான் என்றார்.
கேரட் சக்கை பெண்ணுக்கு பிடிக்காது என அவருக்கு தர மாட்டார். மனைவி சாப்பிட்டுடுறார் என நினைக்கிறேன்
வானவில் அருமை.
ReplyDeleteநன்றி ரோஷினி அம்மா
Deleteகேரட்டை அப்படியே எ.ப. சாறு பிழிந்து, பெ.தூள் சேர்த்து சாப்பிட்டு விடுவது வழக்கம்.
ReplyDeleteஓவியான்னு ஒரு நடிகையா?
மடிப்பாக்கம் கொலை வழக்குக் குற்றவாளிகளைப் பிடித்து நாளாச்சே.... எப்படித்தான் பழகியவர்களை, வயதில் சிறிய பாலகனைக் கொலை செய்ய மனம் வந்ததோ?
// ஓவியான்னு ஒரு நடிகையா?//
Deleteவீடுதிரும்பல் இன்னும் நிறைய இலக்கிய சேவை ஆத்தணும் போலருக்கே :)) களவாணி பாருங்க அப்புறம் யாருன்னு கேட்க மாட்டீங்க
மடிப்பாக்கம் மேட்டர் அதே பதிவில் முன்பே அப்டேட் செய்தேன் இருந்தாலும் வானவில்லில் எழுதினால் நிறைய பேர் படிப்பார்கள் என மறுபடி எழுதப்பட்டது
வானவில் பலவர்ணங்களில்.
ReplyDeleteதுப்பாக்கி பார்த்துவிட்டு எழுதுங்க.
மாற்றான் பாத்துட்டு எழுதுங்கன்னு நம்மை மாட்டி விட்டது நீங்கதானே ! ஒய் திஸ் கொலைவெறி மேடம் :)
Deleteநேயர் விருப்பத்தால் அய்யாசாமி தான் இது மாதிரி படம் பார்க்கும் பலிகடா ஆகுறார் :)
கலர் அதிகமாகி சும்மா தகதகன்னு மின்னுவீங்க..ம்ம்ம்ம் !" - //
ReplyDeleteSecret of your complexion Mohan?? -:)
நோ ! ஐ யாம் பாவம் !
Deleteஆறுவகை நண்பர்கள் சூப்பர்...
ReplyDelete>>அடிக்கடி இப்படி கேரட் ஜூஸ் செஞ்சு குடிச்சா, கண் பிரச்சனைகள் வராது
உண்மைதான். Rabbit-க்குக் கேரட் ரொம்பப் பிடிக்கும். எந்த Rabbit-ஆவது கண்ணாடி போட்டு நீங்கள் பார்த்ததுண்டா :-)
த.ம.19
ராபிட் கேரட் சாப்பிடும் கதை சொல்லி கவுதுட்டிங்களே சார் :)
Deleteதுப்பாக்கி பார்த்துட்டு எழுதுங்க மோகன் சார்
ReplyDeleteம்ம் டுப்பாக்கி சுடாம இருந்தா சரி
Deleteகேரட் கலர் வந்தா அசிங்கமா இருக்குமே?
ReplyDeleteவானவில் கலர் மயமா இருக்கு!!! காரட் ஜூஸ் ட்ரை பண்றேன்...
ReplyDelete