Thursday, November 8, 2012

பாரா கிளைடிங்கும், பீமன் மனைவி கோவிலும்

ணாலியில் உள்ள ஏராளமான விளையாட்டுகளில் ஒன்று ஹெலிகாப்டரில் சுற்றி வருவது ! ஒரு மணி நேரம் சுற்றி வர பத்தாயிரம் வாங்குகிறார்கள். ஹெலிகாப்டரை பக்கத்தில் பார்ப்பதே நமக்கு ஜாலியாய் இருக்கும். அதில் பறக்க தனி பட்ஜெட் போடுமளவெல்லாம் வசதியில்லை.


இந்த வீடியோவில் ஹெலிகாப்டரை அது வாடகைக்கு விடப்படும் இடத்தை நீங்கள் பார்க்கலாம்:



இந்த இடத்திற்கு அருகில் ஒரு நாள் மதியம் சாப்பிட்டோம்.


ஹோட்டலுக்கு அருகிலேயே பனி படர்ந்த மலையிலிருந்து பனி உருகி ஓடி வருவது தெரிகிறதா? இது தான் மணாலியின் ஸ்பெஷலே  !
******

நண்பர் ஜோஷியின் மகளுடன் 

இங்கு லஞ்ச் முடிந்ததும் நாங்கள் சென்றது பாராகிளைடிங் விளையாடும் இடம் !

சற்று மலை பாங்கான இடங்கள் அனைத்திலுமே பாரா கிளைடிங் விளையாட்டு இருக்கும். ஏற்காடு சென்றபோது பாரா கிளைடிங் இருக்கிறது என்று சொன்னார்கள். நேரில் பார்க்க வில்லை. மணாலியில் தான் அதை நேரடியே காணமுடிந்தது.

உயரமான சிறு குன்றின் மீதிருந்து ஒரு பாராசூட் உதவியோடு கீழே குதிக்கிறார்கள். இதற்கு பெயர் தான் பாரா கிளைடிங்.

நாம் தனியாய் குதிப்பதில்லை. பைலட் என்று சொல்லப்படும் ஒரு டிரைனரும் சேர்ந்தே குதிக்கிறார். உண்மையில் நாம் அவருடன் சேர்ந்து இந்த விளையாட்டின் சுவாரஸ்யத்தை அனுபவிக்கிறோம் அவ்வளவு தான் ! மற்றபடி காற்றின் வேகம் பொறுத்து பாராசூட்டை இயக்கி நாம் பத்திரமாய் இறங்க உதவுவது இந்த பைலட் தான்.

நாங்கள் மணாலியில் பாரா கிளைடிங் இடத்துக்கு சென்றபோது அங்கு காற்று சற்று சாதகமின்றி வீச துவங்கியிருந்தது. நாங்கள் சென்றபோது சிலர் பாராசூட்டில் குதித்து கொண்டிருந்தனர். சற்று நேரத்தில் காற்று ஒரு பக்கமாய் அடிக்கவும் சிலர் வெவ்வேறு பக்கமாய் போய் குதிக்க ஆரம்பித்தனர். கீழே இறங்கும் சிலரும் தரையில் விழுந்து சற்று அடி பட ஆரம்பித்தனர். ஒருவர் காற்று திசை மாறி, வேறு பக்கம் இருக்கும் மரத்தின் மீது சென்று விழுந்தார் ! அடுத்த சில நிமிடம் கழித்து, ஒரு டென்ட் கடை மீது ஒரு பாராசூட் இறங்கியது ! காற்று மோசமாக உள்ளதென தற்காலிகமாய் பாரா கிளைடிங் நிறுத்தப்பட்டது.



இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் துவங்கும் என்றதால் எங்கள் குழுவில் சிலர் மலை மேல் ஏறி சென்றோம்.

கீழிருந்து  அந்த குன்றின் மேல் நடந்தும் செல்லலாம். நடக்க சிரமம் எனில் குதிரை மீதும் ஏறி போகலாம். இதற்கு சில குதிரை காரார்கள் உள்ளனர். நாங்கள் இரண்டு முறை ஏறி ஏறி இறங்கியதால் இரண்டாம் முறை குதிரையில் சென்றோம். குதிரைகள் பெயரெல்லாம் வித்யாசமா இருக்கு ! ஒன்று பேர் ஷாரூக் கான். மற்றொரு குதிரை ராஜா ஹிந்துஸ்தானி !

குன்றிற்கு சென்ற பின் எங்களை போல இன்னும் சிலர் இப்படி குதிக்க காத்து கொண்டிருந்தனர் . ஒரு மணி நேரத்துக்கும் மேல் காத்திருந்து வெறுத்து போனோம். "இதோ ஆரம்பிச்சுடும்; ஆரம்பிச்சுடும்" என்று கூறினரே ஒழிய ஒன்றும் நடக்கலை.

குன்றிற்கு கீழே வேறு சில விளையாட்டுகளும் இருந்தன. ரோப் கார், ஜம்பிங் போன்ற அதிகம் உபத்திரவம் இல்லாதவை. எங்கள் குழுவை சேர்ந்த மற்ற நண்பர்கள் இவற்றை விளையாடி கொண்டிருந்தனர்.  




காற்று ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் வீசினால் பாரா கிளைடிங் செய்வது மிக கடினமாம். மேலிருந்து கீழோ, கீழிருந்தோ மேலோ வீசினால் சமாளித்து பறந்து விடலாமாம்.

எங்களுடன் வந்த குழு தங்கள் வேலைகளை முடித்து விட்டு நெடுநேரம்
கீழே காத்திருந்ததால், பறக்காமல் திரும்பினோம்.

இன்னொரு இடத்தில தான் இந்த அனுபவத்தை என்ஜாய் செய்யணும் !



இந்த வீடியோக்களில் மற்றவர்கள் செய்யும் பாரா கிளைடிங் பார்க்க முடியும் :









****
ஹவுஸ் பாஸ்/ பூக்கள் கார்னர்



ஹடிம்பா : பீமனின் மனைவி கோவில்  

 
ஹடிம்பா கோவில் என்பது முழுக்க மரத்தால் ஆன ஒரு குகை கோயில். கோவிலின் மேல் 24 அடி உயரத்தில் பெரிய கோபுரம் உள்ளது.

ஹடிம்பா என்பது பீமனின் மனைவி பெயர். பாண்டவர்கள் மறைந்திருந்து வாழ்ந்த காலத்தில் மணாலியில் தான் இருந்தள்ளதாக நம்புகின்றனர். அப்போது ஒரு தீய சக்தி (Demon ) அவர்களை தக்க, பீமன் அதனை அழிக்கிறான். அந்த தீய சக்தியின் தங்கையான ஹடிம்பியை மணக்கிறான் பீமன். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு)

இது குகை கோவில் என்பதால், சன்னதிக்குள் செல்லும்போது நம்மை முழுதும் குறுக்கி கொண்டு மண்டியிட்டு தவழ்ந்து செல்லவேண்டும் !




ஹடிம்பா கோவில் அருகில் சிறுவர்கள் விளையாட ஒரு அட்வென்ச்சர் பார்க் உள்ளது. காஷ்மிரி உடை வாடகைக்கு தர, இங்கு பலரும் அதனை அணிந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். நாங்களும் தான் !.

மணாலி பஸ் ஸ்டாண்டிலிருந்து ஓரிரு கிலோ மீட்டரிலேயே உள்ள இந்த கோவிலில் கூட்டம் எப்போதும் நிரம்பி வழிகிறது. ஒரு மணி நேரம் போல் கியூவில் நின்று தரிசனம் பார்க்க வேண்டி உள்ளது !
****
டிஸ்கி: மிக விரைவில் ( 1 அல்லது பதிவுடன்) டில்லி-குலு மணாலி பயணக்கட்டுரை முடியும் ! 

36 comments:

  1. அடடா..... பறக்க முடியலையா?????? பேசாம நீங்க ஒருமுறை நியூஸி வரத்தான் வேணும் போல:-)))))

    இங்கே பஞ்ஜி ஜம்ப். பாரா க்ளைடிங் எல்லாம் செஞ்சுறலாம். நோ ஒர்ரீஸ்.

    பீமன் மனைவி கோவில் விவரம் புதுசு. வடக்கே எங்கே போனாலும் ராமாயணம் மகாபாரதம் நிகழ்ச்சிகள் எல்லாம் அங்கெ அந்த ஊரில்தான் நடந்துச்சுன்னு சாதிப்பாங்க:-))))) அதுக்கேத்த மாதிரி கோவில்களும்!

    பயணத்தில் உங்க கூடவே வர்றோம்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி டீச்சர் உங்க கைடன்சில் சுற்றி பார்க்க கொடுத்து வச்சிருக்கணும்

      Delete
  2. superb, thank you for sharing with us.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அஜீம்பாஷா மகிழ்ச்சி

      Delete
  3. ஜாலியான அழகான பயணக்கட்டுரை. ரசித்தேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீவிஜி

      Delete
  4. அருமையான இடங்கள் , அழகான புகைப்படங்கள் .

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய் பெரியசாமி

      Delete
  5. இடும்பியின் மகன் தான் கடோத்கஜன் (பானை போன்ற வழுக்கைத் தலையை உடையவன்). கர்ணன் இந்திரனிடமிருந்து பெற்ற சக்தி ஆயுதத்தை இவனை நோக்கி எய்த வேண்டியதாக ஆனது.

    ரஃப்டிங் செய்யமுடிந்தும் பராக்ளைடிங் செய்ய முடியாதது வருத்தம் தான்!

    ReplyDelete
    Replies
    1. அடிஷனல் தகவல்களுக்கு மிக்க நன்றி சீனி

      Delete
  6. படங்களும் பயண கட்டுரை யும் இடங்களை பற்றி தெரிந்து கொள்ள உதவியாய் இருந்தது நன்றி மோகன் சார்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சரவணன் சார்

      Delete
  7. உங்களோட இந்த குலுமனாலி பதிவகளை படிக்கிறப்போ குலுமனாலி போகணும் ஆசை வந்துருச்சி. அருமையான இடங்கள் , அழகான புகைப்படங்கள் . நன்றி மோகன் சார்

    ReplyDelete
    Replies
    1. மிக நன்றி ராகவாச்சாரி

      Delete
  8. காற்று சாதகமாயில்லையெனில் அடி வாங்கணும் என்பது தெரித்தும் மக்களுக்கு ஆர்வம்தான் போலும்:).

    ReplyDelete
    Replies
    1. ஆம் அய்யாசாமியும் குழுவில் இருந்து ஒரு பத்து வயது சிறுவனும் தான் பறந்தே ஆகணும் என ஒரே அடம் !

      Delete
  9. நண்பர் மகளோட இருக்குற போட்டோவுல உங்களை பார்க்கும்போது..., கஷ்மீர் தீவிரவாதிக்கிட்ட ஃபைட் பண்ணி ஜெயிச்சுட்டு!! வீறு நடை போட்டு வரும் கேப்டன் போலவே இருக்கீங்க!!:-(

    ReplyDelete
    Replies
    1. கடைசில எதுக்கு சோக ஸ்மைலி :)

      Delete
  10. ஐயோ! ஐயோ! உங்களுக்குன்னு ட்ரெஸ் கலர் கிடைக்குது பருங்க!!?? அவ்வ் உங்க ஹவுஸ் பாஸ் பாவம்

    ReplyDelete
  11. //
    ராஜி3:13:00 PM
    ஐயோ! ஐயோ! உங்களுக்குன்னு ட்ரெஸ் கலர் கிடைக்குது பருங்க!!?? அவ்வ் உங்க ஹவுஸ் பாஸ் பாவம்//

    அலோ.. இந்த டிரஸ் எடுத்ததே ஹவுஸ் பாஸ் தான்.

    நாத்தனாருக்கு - அண்ணியை வம்பு வளர்க்காம இருக்க முடியாது போலருக்கு :)

    ReplyDelete
  12. படங்களும் வர்ணனைகளும் அருமை.நன்றாக என்ஜாய் செய்திருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி முரளி சார்

      Delete
  13. மணாலியும் படங்களும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மாதவி மேடம்

      Delete
  14. மகள் போயிருந்தப்ப இந்த ஹிடம்பா மந்திரில் தரிசனம் செஞ்சாங்களாம். பனி உருகி ஆறாக ஓடுமிடம் ஆஹா!! செம அழகு.

    ஹவுஸ் பாஸின் போட்டோகிராபி அசத்தல்

    ReplyDelete
    Replies
    1. ஆம் மேடம் மிக அருமையான இடம் மகள் தோழிகளுடன் போனாரோ? நீங்க போகலையா?

      Delete
  15. Anonymous6:54:00 PM

    /// மிக விரைவில் ( 1 அல்லது 2 பதிவுடன்) டில்லி-குலு மணாலி பயணக்கட்டுரை முடியும் ! ///

    வீடு திரும்பல் வாசகர்களுக்கு தீபாவளி பரிசாண்ணே.

    ReplyDelete
    Replies
    1. தம்பி. மணாலி பயணக்கட்டுரை முடிஞ்சோன அடுத்த பயணக்கட்டுரை விரைவில் ஆரம்பிச்சுடும்ப்பா. இடைவெளி தற்காலிகம் தான் :)

      Delete
    2. Anonymous5:22:00 PM

      அப்ப ரசிகர்கலுக்கு சொதனை திரும்பவும் துவஙுதா அன்னே

      Delete
  16. தமிழில் இடும்பி என்று கூறுவார்கள்! (ஹடிம்பி கோயில்)பாரா கிளைடிங்க் சுவாரஸ்யமாக இருந்தது! நன்றி!

    ReplyDelete
  17. அசத்தலான படங்கள். குறிப்பாக உணவு விடுதி!

    [பாரா] க்ளைடிங் என்ற வார்த்தை யாரானா படத்தில் அமிதாபும் அம்ஜத்தும் கிளைடரில் அடிக்கும் கூத்தை நினைவு படுத்தியது.

    //அந்த தீய சக்தியின் தங்கையான ஹடிம்பியை மணக்கிறான் பீமன். இவர்களுக்கு ஒரு மகனும் உண்டு)//

    கடோத்கஜன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார். நீங்க சொல்ற இந்திப்டங்கள் எனக்கு தெரியாது நான் அப்போ பிறக்கலை :)

      Delete
  18. இனிய பயண கட்டுரை...

    நன்றி...

    ReplyDelete
  19. இடங்களின் இயற்கை சூழலை
    பார்க்கும் போது இப்பவே போகணும் போல தான் இருக்குது..
    பதிவாக்கித் தந்தமைக்கு நன்றிகள் நண்பரே.

    ReplyDelete
  20. சிறப்பான பகிர்வு. வடக்கில் நிறைய சுற்றுலா தளங்களில் இந்த பாரா கிளைடிங் இருக்கின்றது. அடுத்த முறை சென்று விடலாம்... கவலையை விடுங்கள்.

    ReplyDelete
  21. ரோஜா படத்துல வர்ற காஷ்மீர் கோயில் இந்த ஹடிம்பா கோயில் தான்! இங்க வச்சுதான் ஜனகராஜ் மதுபாலா சந்திப்பாங்க.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...