பாண்டவர்கள் பன்னிரண்டு வருடம் வனவாசம் சென்ற போது மறைந்து வாழ்ந்தார்கள் அல்லவா? அப்போது இந்த இடத்துக்கு வந்துள்ளனர். இங்கிருந்த காயத்ரி தேவியை மற்றவர் கண்ணுக்கு தெரியாவிடினும், பாண்டவர்களுக்கு விஷேச சக்தி இருந்ததால் கண்டு பிடித்தனர் அவர் பாண்டவர்கள் இந்த இடத்தில் மறைந்திருக்க உதவினார். அதன் பின் காயத்ரி தேவிக்கு இந்த கோவிலை பாண்டவர்கள் கட்டினர் என்பது இந்த கோயில் குறித்த கதை
அங்கு அர்ச்சகர் போல் இருந்தது எண்பது வயது மதிக்கத்தக்க ஒரு பாட்டி ! அவர் தான் இந்த கதையை கூறினார்
அர்ச்சகர் பாட்டி |
இந்த கோயில் அருகே நூறு வருடத்துக்கும் மேல் வயதான ஒரு மரம் உள்ளது. கோவில் வளாகத்தில் ஒரு பள்ளியும் நடந்து வருகிறது.
ஹவுஸ்பாஸ் / பூக்கள் கார்னர்
சத்யம் ஹோட்டல்
சென்னையில் இட்லியை கண்டால் "தினமும் காலை அதே உணவா?" என ஓடும் நாம், அங்கு இட்லியை கண்டால் " கடவுளே" என்று
மகிழ்ச்சியுடன் பாய்கிறோம் ! காரணம் சப்பாத்தி, நான் போன்றவையே ஒவ்வொரு வேளைக்கும் தின்று நம் உணவையே பார்க்காமல் போவது தான்
சம்மரில் அங்கு பெரும்பாலான ஹோட்டல்களில் மூன்று வேளை சாப்பாட்டுக்கும் சேர்த்து வாடகை வாங்கி விடுவார்கள்.
நிச்சயம் மதியம் யாரும் நாம் தாங்கும் ஹோட்டலில் சாப்பிட போவதில்லை. வெளியே போயிடுவோம். எனவே குறைந்தது காலை மற்றும் இரவு நாம் தங்கும் ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி ஆயிடும்.
கிராமத்தில் வளர்ந்து எனக்கு இங்கு சுழித்து கொண்டு ஓடும் ஆறுகள் மிக அதிக மகிழ்ச்சி தந்தன. அவற்றை பார்த்து கொண்டு இருப்பதே மனதுக்கு அவ்வளவு நிம்மதி தருகிறது. எங்கள் ஊர் நீடாமங்கலம் நினைவுகள் இங்கிருக்கும் போது மீண்டும் மீண்டும் வந்தது.
இந்த ஆறுகளை பஸ்ஸில் செல்லும் போது சற்று உயரத்திலிருந்து பாப்போம். பின் உயரம் குறைந்து குறைந்து, நம் அருகிலேயே ஆற்றினை பார்ப்போம். மிக இனிமையான அனுபவம் இது
*******
நாங்கள் சென்ற ஒரு ஷால் தயாரிக்கும் பாக்டரியில் எடுத்த படங்களும் வீடியோவும் இதோ:
இங்கு எடுத்த வீடியோ:
*****
மணாலியில் இருந்து மணிக்கரன் அல்லது ரோடங் பாஸ் சென்று விட்டு திரும்பும் போது, மாலை நேரம் ஒரு பெரிய பிரச்னையை அனைவரும் எதிர் கொள்கிறார்கள். அது டிராபிக் ஜாம். மணாலிக்கு ஒரு கிலோ மீட்டர் முன் வரிசையாக கார்கள் நின்று கொண்டு, ஓரு கிலோ மீட்டரை கடந்து ஊருக்குள் செல்ல ஓரிரு மணி நேரம் ஆகிறது. இதில் கொடுமை என்னவென்றால் அந்த நேரம் மணாலியில் இருந்து வெளியே வண்டிகள் வருவதில்லை. ரோடின் ஒரு புறம் மட்டுமே (நாம் செல்லும் திசையில்- மணாலி நோக்கி) வாகனங்கள் செல்கின்றன. மறுபுறம் முழுதும் காலியாக கிடக்கின்றன. ஒரு விதத்தில் எதிர்புறம் செல்லாத இவர்கள் ஒழுக்கத்தை பாராட்ட வேண்டும் எனினும் எவ்வளவு நேரம் விரயம் ! குறிப்பாய் மாலை ஊருக்கு திரும்ப பஸ் பிடிக்கும் நேரத்தில் இப்படி ரெண்டு மணி நேரம் டிராபிக்கில் மாட்டினால் என்ன ஆவது? போலிஸ் அந்த இடத்தில் இருந்து வாகனங்களை விரைவில் செல்கிற மாதிரி செய்தால் நன்றாயிருக்கும் !
*****
மணாலியில் நாங்கள் சென்ற இன்னொரு இடம் : நிகோலஸ் ரூரிச் என்ற ரஷிய ஓவியர் வாழ்ந்த வீடு மற்றும் அவரது ஓவிய கண்காட்சி.
சுதந்திரம் கிடைத்த முதல் பத்தாண்டுகள் அவர் இந்தியாவின் பல பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து இந்தியர்களின் வாழ்க்கை முறையை ஓவியமாய் பதிவு செய்துள்ளார். நேரு, இந்திரா உள்ளிட்ட தலைவர்களுடன் அவர் இருக்கும் படங்களும் இங்கு உள்ளது.
இங்கு எடுத்த வீடியோக்கள் இதோ:
அவர் இருந்த வீடு அப்படியே அவரது பொருட்களுடன் ஒரு மியுசியம் போல வைத்துள்ளனர்.
நிறைவாய் சில வரிகள்:
டில்லிக்கு செல்ல அக்டோபர் மாதம் சிறந்தது. குளிர் தாங்கும் எனில் டிசம்பரில் செல்லலாம். சிம்லாவிற்கு டிசம்பரில் சென்றால் சாலைகளில் ஸ்னோ பார்க்கலாம். எனவே டில்லி மற்றும் சிம்லா சேர்த்து டிசம்பரில் டூர் அடிக்க திட்டமிடுங்கள்.
மணாலியை பொறுத்த வரை : ஏப்ரல் மே மாதம் தான் செல்ல சிறந்தவை. மற்ற மாதங்கள் மிக அதிக குளிராய் இருக்கும். மணாலியில் ரோடங் பாஸ், ரிவர் ராப்டிங், பாரா கிளைடிங் ஆகியவற்றை என்ஜாய் செய்ய தவறாதீர்கள் !
இந்த பயணத்தில் மறக்க முடியாத நினைவுகள்:
தேவா குடும்பத்தின் உபசரிப்பு,
தாஜ் மஹால் பார்த்து வியந்தது,
சிம்லா குகை ரயில் பயணம்,
சிம்லா டு மணாலி இனிய பஸ் பயணம்,
ரோடங்கில் பனிக்கட்டி விளையாட்டு,
வெந்நீர் ஊற்றுகளை அனுபவித்த அற்புத கணங்கள்
ரிவர் ராப்டிங்
ஆகியவை !
ஒரு டயரி குறிப்பாகவே இதனை பகிர்ந்தேன். உங்களில் யாருக்கேனும் என்றேனும் இதில் ஒரு பகுதி உதவினால் கூடுதல் மகிழ்ச்சி !
நண்பர்களின் தொடர் வாசிப்புக்கு நன்றி !
இங்கு எடுத்த வீடியோக்கள் இதோ:
ஓவியர் வரைந்த பெயிண்டிங்க்ஸ் இந்த வீடியோவில் பார்க்கலாம் :
அவர் இருந்த வீடு அப்படியே அவரது பொருட்களுடன் ஒரு மியுசியம் போல வைத்துள்ளனர்.
மரத்தால் ஆன வீட்டின் மீது இருபது பேருக்கு மேல் ஏறக்கூடாது என்று போட்டிருந்தாலும் அதற்கு மேல் தான் மக்கள் கூட்டம் சென்று பார்க்கிறது !
****
மணாலியில் இருந்து சண்டிகர்-க்கு பஸ் மூலம் வந்து, பின் டில்லிக்கு ரயில் பிடித்தோம். டில்லி வந்து விமானம் மூலம் சென்னை ரிட்டன். (இது தான் மிக குறுக்கு வழி. குறிப்பாய் மணாலியிலிருந்து சண்டிகர் வரை மட்டும் பஸ்ஸில் வந்து பின் ரயிலில் வருவது மிக நன்று. பலரும் மணாலி முதல் டில்லி வரை பஸ் பயணம் செய்கின்றனர். -17 மணி நேர பஸ் பயணம் tedious ஆக இருக்கும்)நிறைவாய் சில வரிகள்:
டில்லிக்கு செல்ல அக்டோபர் மாதம் சிறந்தது. குளிர் தாங்கும் எனில் டிசம்பரில் செல்லலாம். சிம்லாவிற்கு டிசம்பரில் சென்றால் சாலைகளில் ஸ்னோ பார்க்கலாம். எனவே டில்லி மற்றும் சிம்லா சேர்த்து டிசம்பரில் டூர் அடிக்க திட்டமிடுங்கள்.
மணாலியை பொறுத்த வரை : ஏப்ரல் மே மாதம் தான் செல்ல சிறந்தவை. மற்ற மாதங்கள் மிக அதிக குளிராய் இருக்கும். மணாலியில் ரோடங் பாஸ், ரிவர் ராப்டிங், பாரா கிளைடிங் ஆகியவற்றை என்ஜாய் செய்ய தவறாதீர்கள் !
இந்த பயணத்தில் மறக்க முடியாத நினைவுகள்:
தேவா குடும்பத்தின் உபசரிப்பு,
தாஜ் மஹால் பார்த்து வியந்தது,
சிம்லா குகை ரயில் பயணம்,
சிம்லா டு மணாலி இனிய பஸ் பயணம்,
ரோடங்கில் பனிக்கட்டி விளையாட்டு,
வெந்நீர் ஊற்றுகளை அனுபவித்த அற்புத கணங்கள்
ரிவர் ராப்டிங்
ஆகியவை !
ஒரு டயரி குறிப்பாகவே இதனை பகிர்ந்தேன். உங்களில் யாருக்கேனும் என்றேனும் இதில் ஒரு பகுதி உதவினால் கூடுதல் மகிழ்ச்சி !
நண்பர்களின் தொடர் வாசிப்புக்கு நன்றி !
(டில்லி- சிம்லா - மணாலி பயணம் நிறைந்தது)
படங்கள் + ஓவியங்கள் எல்லாம் சூப்பர்...
ReplyDeleteபயணக் கட்டுரை பலருக்கும் உதவக் கூடும்... நன்றி...
ஷால் பேக்டரியிலிருந்து ஏதாவது வாங்கி வந்தீர்களா? (இரண்டொரு *** **களை வாங்கி வந்திருக்கலாமே???)
ReplyDeleteசார் :))
Deleteஸ்ஸ்ஸ் அப்பாடா! ஒரு வழியா பயணப்பதிவு முடிஞ்சுதா?! ஒவ்வொரு பதிவையும் சற்று பொறாமையுடந்தான் படிச்சேன். எனக்கு பனிப்படர்ந்த காஷ்மீர் அதை சுற்றியுள்ள இடத்துக்கு போகனும்ன்னு ஆசை(ரோஜா படம் பார்த்ததிலிருந்து..,). ஆனா, என் ரங்க்ஸ்க்கு குளிர்ன்னா ஆகாது. நம்ம ஊரு மார்கழிலேயே எட்டு மணிக்கு முன்னாடி வெளில வர மாட்டார்.
ReplyDeleteஇப்போதான் பசங்க வளர்ந்து வர்றாங்களே! பசங்களோடு ஒரு விசிட் அடிச்சுட்டு வந்துட வேண்டியதுதான். கண்டிப்பா அப்போ இந்த பயணக்கட்டுரை எனக்கு யூஸ் ஆகும். போய்ட்டு உங்களைவிட இன்னும் 3 பதிவு எக்ஸ்ட்ராவா போடுவேனாக்கும்.
பொண்ணு வேலைக்கே போயிட்டா அடுத்து அவள் கல்யாணம் ஆகி ஹனிமூன் போகணும் சின்ன பொண்ணு அல்லது பையன் கூட தான் நீங்க ஊர் சுற்ற சான்ஸ் இருக்கு
Delete
ReplyDelete@ ராஜி
//போய்ட்டு உங்களைவிட இன்னும் 3 பதிவு எக்ஸ்ட்ராவா போடுவேனாக்கும்.//
இதை கேட்பார் யாருமே இல்லையா?
மாங்கு மாங்குன்னு படம் வீடியோ எல்லாம் போட்டிருக்கேன் ராஜி போட்ட காமண்டை பத்தி எழுதுறீர் !!
Deleteபயணக்கட்டுரை நிச்சயம் பயனுள்ளதாத்தான் இருக்கு.
ReplyDeleteநன்றி அமைதி சாரல் மேடம்
Deleteமணாலியை பொறுத்த வரை : ஏப்ரல் மே மாதம் தான் செல்ல சிறந்தவை. மற்ற மாதங்கள் மிக அதிக குளிராய் இருக்கும். மணாலியில் ரோடங் பாஸ், ரிவர் ராப்டிங், பாரா கிளைடிங் ஆகியவற்றை என்ஜாய் செய்ய தவறாதீர்கள் !
ReplyDeleteசுற்றுலா செல்லும் ஆசை நிறைய இருக்கிறது உங்கள் தகவல்கள் கண்டிப்பாக
அப்போது பயன் தரும் நன்றி மோகன் சார்
முடியும் பொது அவசியம் போய் வாங்க சரவணன்
Deleteநண்பர்களின் தொடர் வாசிப்புக்கு நன்றி / அடடா,, வாசிப்பு அனுபவத்திற்காக நாங்கள் அல்லவா நன்றி சொல்ல வேண்டும்!
ReplyDeleteஅடடா மகிழ்ச்சி நன்றி
Delete80 வயது அர்ச்சகர் பாட்டி - ஆச்சர்யம். அழகான படங்களுடன், அதை விட வீடியோக்களுடன் நன்றாக எழுதி இருந்தீர்கள்.
ReplyDelete@சிவகுமார்..... //இதை கேட்பார் யாருமே இல்லையா? //
:)))))
//80 வயது அர்ச்சகர் பாட்டி - ஆச்சர்யம். //
Deleteஆம் அந்த லேடியை படம் பிடிக்க நெடு நேரம் காத்திருந்து படமெடுத்தேன் (சன்னதி உள்ளே படம் எடுக்க கூடாதே )
All the Pictures are very Nice.
ReplyDeleteExcellent Travellogue :)
Thank you Vijay Periyasamy
Deleteபயனுள்ள பயணக்கட்டுரை! அழகான படங்கள் வீடியோக்களுடன் சிறப்பான பகிர்வு! மிக்க நன்றி!
ReplyDeleteஅருமையான பதிவு மற்றூம் பகிர்வு. நன்றீ
ReplyDeleteநன்றி அன்பு தம்பி
Deleteஅருமையான காணொளிகள் நண்பரே..
ReplyDeleteகண்ணுக்கு குளிர்ச்சியாக....
தெரியாத தகவல்கள் பல.....
பகிர்வுக்கு நன்றிகள் பல..
மகிழ்ச்சி மகேந்திரன் நன்றி
Deleteநல்ல விரிவான பயணக் கட்டுரை. இனி பயணம் செய்ய இருப்பவர்களுக்கு நிறைய உதவிக் குறிப்புகள் வழங்கி இருப்பது சிறப்பு.
ReplyDeleteநன்றி முரளி சார் மகிழ்ச்சி
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...
பார்த்தேன் சார் மிக நன்றி தெரிவித்தமைக்கு
Deleteபயணக்கட்டுரை அருமை!!!! லேனா தமிழ்வாணன் தோற்றார் போங்கள்!!!!
ReplyDeleteவீடு திரும்பல் மீண்டும் என் விகடனில்....பார்த்தீர்களா?
http://en.vikatan.com/article.php?aid=26568&sid=785&mid=31
பார்த்தேன் நண்பரே மகிழ்ச்சி நன்றி விரைவில் அதனை இங்கு தனி பதிவாக பகிர்வேன்
Deleteமிக அழகான பயண கட்டுரை... உங்களின் அனுபவங்களை பகிர்ந்ததொடு மட்டும் அல்லாமல் அதில் நீங்கள் குறிப்பிட்ட வழிமுறைகள், பரிந்துரைகள் மிக பயனுள்ளவை...
ReplyDeleteகுறிப்பாக நேரில் செல்ல வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு உங்களின் படங்களும் வீடியோ-க்களும் நல்ல தொரு வாய்ப்பு...
மிக்க நன்றி சார்....
வாங்க சமீரா நன்றி
Deleteஅருமையான பயணம். பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி மாதேவி
Deleteஅழகான பயணக்கட்டுரை. நிறைய தகவல்கள். நிறைவாய் இருந்தது.
ReplyDeleteநன்றி ரோஷினி அம்மா மகிழ்ச்சி
Delete