என் விகடனில் வலைப்பதிவர்கள் அறிமுகம் தொடர்ந்து நடந்தது இல்லையா? அப்போது வலைப்பூவில் நாம் ஏற்கனவே எழுதியதை நம் புகைப்படத்துடன் வெளியிட்டு வந்தனர்.
இப்போது அந்த சீரிஸ் முடிந்து அடுத்த இன்னிங்க்ஸ் துவங்கியுள்ளது. இம்முறை ஒவ்வொரு வலைப்பதிவர்களாக அவர்களே தொடர்பு கொண்டு " வலைப்பதிவில் இதுவரை எழுதாத விஷயம் நேரடியே என் விகடனுக்காக எழுதி தாருங்கள்" என்று கேட்டு வருகிறார்கள். இந்த வாரம் முதல் என் விகடனின் அனைத்து எடிஷனிலும் துவங்கி உள்ள இப்பகுதியில், சென்னை பதிப்பில் வந்த நம் கட்டுரை இது...
*******
தி. நகர் ஒரு கடல். அங்கு செய்திகளும், எழுத விஷயங்களும் ஓராயிரம் உண்டு. அங்காடி தெரு என்கிற படம் தி. நகரின் சிறு பகுதியை தொட்டு சென்றது. ஆனால், இங்கு சொல்ல மறந்த கதை ஏராளம்!
சமீபத்தில் மனைவியுடன் தீபாவளி ஷாப்பிங் சென்ற போது கவனித்த மிக சில விஷயங்களைப் பகிர்கிறேன் :
**
ஓரிடத்தில் வயதான பெண்மணி ஒருவர் "ஈருளி.. ஈருளி " என கூவி கூவி விற்று கொண்டிருந்தார்.
சென்னை போன்ற பெருநகரில் இதனை வாங்க ஆட்கள் இருப்பார்களா என்று சந்தேகம் என்னை உந்தி தள்ள " ஏம்மா டவுனு பொண்ணுங்களுக்கு ஈருளின்னா தெரியுமா?" எனக் கேட்டேன்.
" என்ன தம்பி இப்படி கேக்குறீங்க? அவங்களுக்கு எல்லாம் தெரியும். அவங்களுக்கு தெரியாதவிஷயம் ஏதாவது இருக்குமா என்னா !!" என்றார்வெற்றிலை போட்ட வாயுடன் !
*********
" சீமை பால் பத்து ரூபாய்" என கூவி கூவி விற்று கொண்டிருந்தார் ஒருவர். வீட்டம்மா வாங்கி சாப்பிடணும் என ஆசைப்பட, நானும் சாப்பிட்டு பார்த்தேன். கட்டி கட்டியாக மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது சீமை பால்(!!??)
" எப்படி சார்.. இவ்வளவு சீமை பால் கிடைக்கும்?" என சந்தேகத்தோடு கேட்க " ஆந்திராவிலிருந்து வருது சார்" என்றார் தயாரான பதிலுடன் ! ( அங்கே மட்டும் இவ்ளோ சீமை பால் கிடைக்குமா என்ன?!!)
********
தி.நகரில் காதலர்கள் உலகமே மறந்து சுற்றி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனின் பெஞ்ச்கள் இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டவை. வெயிலோ, இருளோ முகம் தெரியாதபடி மறைத்துக்கொண்டு ரகசியமான குரலில் பேசித் தீர்க்கிறார்கள். இவ்வளவு கூட்டம் இருக்கும் தி.நகரை ஜோடியாய் சுற்ற எப்படிதான் தேர்ந்தெடுக்கிறார்களோ? உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஷாப்பிங் வந்தால் பார்த்துவிட்டுச் சொல்லிவிட மாட்டார்களா?
நாங்கள் மதியம் முருகன் இட்லி கடையில் சாப்பிடும்போது எங்கள் மேஜையிலேயே ஒரு ஜோடி... ஒரு ஜிகிர்தண்டாவை வைத்துக்கொண்டு இரண்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டு இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு போன் வரவும் ''அப்பா... நானா? தி.நகரிலே இருக்கேன்பா. ஃபிரெண்ட்கூட வந்திருக்கேன். லட்சுமிப்பா'' என்றார். (லட்சுமி நாராயணன்தான் லட்சுமி ஆனாரோ?)
*********
ரெங்கநாதன் தெரு : இங்கு நான் பேச்சிலர் ஆக இருந்த போது ஒரு மேன்ஷனில் சில மாதங்கள் தங்கி இருக்கிறேன். அதிகாலை மற்றும் நள்ளிரவில் வெறிச்சோடி போன நேரம் இங்கு சுற்றி வருவது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கு.
சென்னை வந்த புதிதில் சிலர் ரங்கநாதன் தெருவுக்கு போனால் பெண்கள் மீது உரசலாம் என்றே செல்வதை கேள்வி பட்டுள்ளேன். இதற்கு பெயர் " உழைப்பது" என்று சொல்லப்படும் ! " வாடா தம்பி போய் உழைச்சிட்டு வருவோம்" என்று கிளம்பி போவோருக்கு, கூட்டத்தில் உரசுவதில் என்ன கிளுகிளுப்பு வருமோ தெரியலை !
*******
தி. நகரில் இப்போது விற்கும் சுவாரஸ்ய சமாசாரம் இந்த தேங்காய் பூ ! இதனை "தேங்காய் பால் கோவா " என கூவிக்கூவி விற்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது ரூபாய் இந்த தேங்காய் பூ.
" எப்படி இது மாதிரி பூ வருகிறது? " என விசாரித்தால் தேங்காய் உள்ளே உள்ள தண்ணீர் தான் இப்படி ஆகிடுது என்றும், வயிற்று புண்ணுக்கு மிக நல்லது என்பதால் இதனை பலர் வாங்கி போவதாகவும் சொன்னார்கள். தேங்காயை விட்டு விட்டு, அந்த பூவை மட்டும் தான் தனியாக வெட்டி கவரில் போட்டு தருகிறார்கள் !
*********
சரியான வெய்யிலில் கைகள் இழந்த ஒருவர் சட்டை அணியாமல் தரையில் படுத்து பிச்சை எடுக்கிறார். நூறு ரூபாய்க்கு இரண்டு சட்டை விற்கிறார் ஒருவர்.
இன்னொரு பக்கம் பிளாஸ்டிக் தண்ணீர் குடங்களை சுமந்த டிரை சைக்கிளை ரங்கநாதன் தெரு மாதிரி இருக்கும் உஸ்மான் ரோடு கூட்டத்துக்கிடையே ஓட்டி செல்கிறார் இன்னொருவர். இப்படி தி. நகரில் சுவாரஸ்ய காட்சிகளுக்கு பஞ்சமே இல்லை !
*************
வீட்டம்மாவோடு தி.நகருக்கு எத்தனை ஆயிரம் எடுத்து சென்றாலும், பஸ் மூலம் திரும்ப வர மட்டுமே காசு மிஞ்சும் என்பது நம் சொந்தக்கதை... சோகக்கதை!
*************
என் விகடன் சென்னை பதிப்பிற்காக எழுதியது.
********
அண்மைய பதிவுகள் :
தொல்லை காட்சி: நீர்ப்பறவை-௦AR ரகுமான்- விஜய் விளம்பரம் : இங்கு
துப்பாக்கி -சரவெடி -விமர்சனம் : இங்கு வாசிக்கலாம் !
இப்போது அந்த சீரிஸ் முடிந்து அடுத்த இன்னிங்க்ஸ் துவங்கியுள்ளது. இம்முறை ஒவ்வொரு வலைப்பதிவர்களாக அவர்களே தொடர்பு கொண்டு " வலைப்பதிவில் இதுவரை எழுதாத விஷயம் நேரடியே என் விகடனுக்காக எழுதி தாருங்கள்" என்று கேட்டு வருகிறார்கள். இந்த வாரம் முதல் என் விகடனின் அனைத்து எடிஷனிலும் துவங்கி உள்ள இப்பகுதியில், சென்னை பதிப்பில் வந்த நம் கட்டுரை இது...
*******
தி. நகர் ஒரு கடல். அங்கு செய்திகளும், எழுத விஷயங்களும் ஓராயிரம் உண்டு. அங்காடி தெரு என்கிற படம் தி. நகரின் சிறு பகுதியை தொட்டு சென்றது. ஆனால், இங்கு சொல்ல மறந்த கதை ஏராளம்!
சமீபத்தில் மனைவியுடன் தீபாவளி ஷாப்பிங் சென்ற போது கவனித்த மிக சில விஷயங்களைப் பகிர்கிறேன் :
**
ஓரிடத்தில் வயதான பெண்மணி ஒருவர் "ஈருளி.. ஈருளி " என கூவி கூவி விற்று கொண்டிருந்தார்.
ஈருளி விற்கும் அம்மா
|
" என்ன தம்பி இப்படி கேக்குறீங்க? அவங்களுக்கு எல்லாம் தெரியும். அவங்களுக்கு தெரியாதவிஷயம் ஏதாவது இருக்குமா என்னா !!" என்றார்வெற்றிலை போட்ட வாயுடன் !
*********
" சீமை பால் பத்து ரூபாய்" என கூவி கூவி விற்று கொண்டிருந்தார் ஒருவர். வீட்டம்மா வாங்கி சாப்பிடணும் என ஆசைப்பட, நானும் சாப்பிட்டு பார்த்தேன். கட்டி கட்டியாக மலைபோல் குவிக்கப்பட்டு இருந்தது சீமை பால்(!!??)
சீமை பால் விற்கிறார் !
|
********
தி.நகரில் காதலர்கள் உலகமே மறந்து சுற்றி வருகின்றனர். ரயில்வே ஸ்டேஷனின் பெஞ்ச்கள் இவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டவை. வெயிலோ, இருளோ முகம் தெரியாதபடி மறைத்துக்கொண்டு ரகசியமான குரலில் பேசித் தீர்க்கிறார்கள். இவ்வளவு கூட்டம் இருக்கும் தி.நகரை ஜோடியாய் சுற்ற எப்படிதான் தேர்ந்தெடுக்கிறார்களோ? உறவினர்கள் அல்லது நண்பர்கள் ஷாப்பிங் வந்தால் பார்த்துவிட்டுச் சொல்லிவிட மாட்டார்களா?
நாங்கள் மதியம் முருகன் இட்லி கடையில் சாப்பிடும்போது எங்கள் மேஜையிலேயே ஒரு ஜோடி... ஒரு ஜிகிர்தண்டாவை வைத்துக்கொண்டு இரண்டு ஸ்ட்ரா போட்டு உறிஞ்சிக்கொண்டு இருந்தது.
அந்தப் பெண்ணுக்கு போன் வரவும் ''அப்பா... நானா? தி.நகரிலே இருக்கேன்பா. ஃபிரெண்ட்கூட வந்திருக்கேன். லட்சுமிப்பா'' என்றார். (லட்சுமி நாராயணன்தான் லட்சுமி ஆனாரோ?)
*********
ரெங்கநாதன் தெரு : இங்கு நான் பேச்சிலர் ஆக இருந்த போது ஒரு மேன்ஷனில் சில மாதங்கள் தங்கி இருக்கிறேன். அதிகாலை மற்றும் நள்ளிரவில் வெறிச்சோடி போன நேரம் இங்கு சுற்றி வருவது எங்களுக்கெல்லாம் ஒரு பொழுது போக்கு.
துணி வாங்க இல்லை இந்த கூட்டம்.. நகை வாங்க ! |
*******
தி. நகரில் இப்போது விற்கும் சுவாரஸ்ய சமாசாரம் இந்த தேங்காய் பூ ! இதனை "தேங்காய் பால் கோவா " என கூவிக்கூவி விற்கிறார்கள். முப்பது அல்லது நாற்பது ரூபாய் இந்த தேங்காய் பூ.
" எப்படி இது மாதிரி பூ வருகிறது? " என விசாரித்தால் தேங்காய் உள்ளே உள்ள தண்ணீர் தான் இப்படி ஆகிடுது என்றும், வயிற்று புண்ணுக்கு மிக நல்லது என்பதால் இதனை பலர் வாங்கி போவதாகவும் சொன்னார்கள். தேங்காயை விட்டு விட்டு, அந்த பூவை மட்டும் தான் தனியாக வெட்டி கவரில் போட்டு தருகிறார்கள் !
*********
சரியான வெய்யிலில் கைகள் இழந்த ஒருவர் சட்டை அணியாமல் தரையில் படுத்து பிச்சை எடுக்கிறார். நூறு ரூபாய்க்கு இரண்டு சட்டை விற்கிறார் ஒருவர்.
நூறு ரூபாய்க்கு இரண்டு சட்டை |
*************
வீட்டம்மாவோடு தி.நகருக்கு எத்தனை ஆயிரம் எடுத்து சென்றாலும், பஸ் மூலம் திரும்ப வர மட்டுமே காசு மிஞ்சும் என்பது நம் சொந்தக்கதை... சோகக்கதை!
*************
என் விகடன் சென்னை பதிப்பிற்காக எழுதியது.
********
அண்மைய பதிவுகள் :
தொல்லை காட்சி: நீர்ப்பறவை-௦AR ரகுமான்- விஜய் விளம்பரம் : இங்கு
துப்பாக்கி -சரவெடி -விமர்சனம் : இங்கு வாசிக்கலாம் !
ஒவ்வொன்றும் அருமை...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Deleteதேங்காய்ப் பூ படம் அருமை...
ReplyDeleteபத்தாயிரத்தை பத்தே நொடிக்குள் காலி செய்யலாம்...!
பத்தாயிரம் என்ன பல்லாயிரங்கள் கொண்டு வந்தாலும்...
Delete
Deleteதனபாலன் சார் : ஆம் நன்றி
வாங்க அன்புமணி நன்றி
Deleteசீம்பால்..அது இவங்க தயாரிக்கிற டுப்ளிகேட்..
ReplyDeleteதேங்காயை முளைக்க வச்சி குறிப்பிட்ட நாட்களில் எடுத்து உடைத்தால் பூ கிடைக்கும்.அல்சர் வியாதிக்கு நல்ல மருந்து.
ReplyDeleteதகவல்களுக்கு நன்றி ஜீவா
Deleteதலைன்னா ஈறு, பேன் எல்லாம் இருக்கும்.ஈறு கொல்லி தான் ஈறுளி என்றாகி விட்டது..அம்மணிகளுக்கு எல்லாம் தெரியும்..
ReplyDeleteஅருமை! இவ்ளோ தேங்காய்ப்பூவைப் பார்த்ததே இல்லை!!!!!
ReplyDeleteவீட்டில் உடைக்கும் தேங்காயில் எப்போதாவது பூ இருக்கும்.
Deleteதுளசி மேடம் மகிழ்ச்சி நன்றி
அருமையான தகவல்,நான் தி.நகரிலே வசித்தாலும் புதிய விஷயம் சொல்லியுள்ளீர்கள்
ReplyDeleteமகிழ்ச்சிங்க நன்றி
Deleteபடங்களின் சேர்க்கை அருமை..
ReplyDelete
Deleteநன்றி தோழரே
தேங்காய் பூக்கள் அழகாக இருக்கிறது. இங்குபூக்களை மட்டும் கோப்பையில் அடுக்கி எடுத்துவந்து விற்பார்கள்.
ReplyDelete
Deleteஅப்படியா மாதேவி ? நன்றி
அருமை மோகன் சார் மேலும் என் விகடனில் கட்டுரை வெளியானதற்கு வாழ்த்துக்கள்
ReplyDelete
Deleteநன்றி சரவணன்
தேங்காய்ப்பூவின் ருசி தனிதான். எப்பவாவது அபூர்வமா வீட்ல கிடைச்சாலே குஷியாகிடுவோம். இங்கே அடுக்கியிருக்கறதைப் பார்த்தா ரொம்ப அழகாருக்கு.
ReplyDeleteதி.நகர் வலம் அருமை.
//ப்பவாவது அபூர்வமா வீட்ல கிடைச்சாலே குஷியாகிடுவோம்.//
Deleteஆம் அமைதி சாரல் மேடம் நன்றி
என் விகடனில் வெளியானதுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteதேங்காய் பூக்கள் படம் அருமை.. http://www.rishvan.com
ReplyDeleteநன்றி ரிஷ்வன்
Deleteஎல்லாவற்றுக்கும் படம் போட்டீர்கள். காதலர்கள் விஷயத்துக்குப் படம் இல்லையே...! :))
ReplyDeleteதேங்காய்ப்பூ கடந்த புத்தகத் திருவிழாவிலேயே பார்த்தேன்.
சீம்பால் இப்படி விற்பதை இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.
//எல்லாவற்றுக்கும் படம் போட்டீர்கள். காதலர்கள் விஷயத்துக்குப் படம் இல்லையே...!//
Delete:))
//தேங்காய்ப்பூ கடந்த புத்தகத் திருவிழாவிலேயே பார்த்தேன்.//
புத்தக திருவிழாவில் இருந்ததா !!
என் விகடனில் வெளியானதற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteஈறுருவி என்று சொல்வோம். அது ஈறுளி ஆகி விட்டதா!
சீம்பால் தான் சீமை பாலா ......எப்படி இவ்வளவு....
எப்பவாவது தேங்காய் உடைக்கும் போது அத்தி பூத்தாற் போல் தேங்காய்ப்பூ கிடைக்கும். அவ்வளவு மகிழ்வாயிருக்கும். இவ்வளவு பூக்களா!!! அதுவும் பூக்கள் மட்டும் நாற்பது ரூபாயா!!!
அவ்வளவு கூட்டத்திலும் கூர்ந்து கவனித்து எழுதியுள்ளீர்கள். பாராட்டுகள்.
மகிழ்ச்சி நன்றி ரோஷினி அம்மா
Deleteபாரி முனையில் இந்த தேங்காய் பூ கடை பார்த்து இருக்கிறேன். ரயில்வே ஸ்டேஷனில் மட்டுமா காதலர்கள்.ட்ரையினில் தாம்பரம் - பீச் இரண்டு,மூன்று முறை ஒரே நாளில் பயணிக்கும் காதலர்களும் உண்டு.பகல் பொழுதில் கூட்டமே இல்லாத போது.
ReplyDeleteபாரிமுனையில் இருக்கா?
Deleteடிரையின் தகவல் புதுசு
எங்களுக்கு தி.நகரை சுற்றிக்காண்பித்தமைக்கு நன்றி
ReplyDelete
Deleteநன்றி எழில் மகிழ்ச்சி..வீடுதிரும்பலை தொடர்வதற்கும்
arumai..
ReplyDeletecongrats.
வாங்க வடிவேலன் நன்றி
Deleteநேரடி வர்ணனை போல் உள்ளது.பார்த்ததை அழகாச் சொல்லி இருக்கிறீர்கள்.
ReplyDeleteமுரளி சார்:மகிழ்ச்சி நன்றி
Deleteவாழ்த்துகள்!
ReplyDeleteதேங்காய்ப் பூ அழகு:)!
ராமலட்சுமி மேடம்: நன்றி
Deleteஅருமையான ரௌண்ட் அப். சீம்பால் மஞ்சளாகவல்லவோ இருக்கும். இது சீமைப்பால்.
ReplyDeleteதேங்காய்ப் ப்பூ அருமை. உண்மையில் இவ்வளவு பெரிய பூ பார்த்ததில்லை. எல்லோரும் சொல்வது போல குட்டிப் பூ கண்டாலே மிக மகிழ்ச்சியாக இருக்கும்.
பைசா மிஞ்சுமா. இது தெரிந்துதான் ரங்கநாதன் தெரு போவதில்லை:)
தி.நகர்- கலகல்ப்பு!
ReplyDeleteஅருமை சார்
ReplyDeleteபோட்டோ எல்லாம் மொபைல் கேமராவில் எடுத்ததா ?
என்விகடனில் தங்களது ப்ளாக் பார்க்க நேர்ந்தது (http://en.vikatan.com/article.php?aid=26568&sid=785&mid=31).அதில் விஜய் நடித்த விளம்பரத்தை பற்றி
ReplyDeleteகுறிப்பிட்டு இருந்தீர்.
அந்த குழந்தைக்கு பெயர் வைக்கலைன்னு ஏன் நினைக்கனும்? தனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு பிரபலத்தை பார்க்க நேரும்போது , அவங்கிட்ட ஆசையா(பெருமையா கூட ,எதிர்காலத்துல இது அந்த பிரபலம் வச்ச பெயர்னு சொல்லலாம்) தன் குழந்தைக்கு பேர் வைக்க சொல்லி இருக்கலாம் தானே.
உங்கள் தேங்காய் பூ படத்தை சுட்டு என் பகிர்வில் போட்டுக் கொண்டேன் :)) மிக்க நன்றி.
ReplyDeleteமக்கள் தமிழில் பேசிக் கொள்வது மகிழ்ச்சி் அளிக்கிறது.
ReplyDeleteமக்கள் தமிழில் பேசிக் கொள்வது மகிழ்ச்சி் அளிக்கிறது.
ReplyDelete