Monday, November 12, 2012

லியோனி தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் - பழைய சரக்கு பழைய பாட்டில்

லியோனி தீபாவளி சிறப்பு பட்டிமன்றம் - பழைய சரக்கு பழைய பாட்டில் 
By: தேவகுமார்
    
லியோனியின் பட்டிமன்றத்தை கேட்டது/பார்த்தது இது மூன்றாம் முறை. SULAFEST போய் விட்டு திரும்புகையில் நானும் என் நண்பரும் (பானு - I miss you!), பழைய பாடலா புதிய பாடலா பட்டிமன்றத்தை கேட்டு கொண்டே வந்தோம். அவ்வளவு கிண்டல், கேலி, பாடல் - இத்தனை நாள் இதை கேட்காமல் விட்டோமே என வருத்தம் வந்தது. அதே ஜோரோடு டெல்லியில் நடந்த அவரது பட்டிமன்றத்துக்கு (என் அத்தையுடன்) போய் ஒரு குழாயடி சண்டையை பார்த்து வந்தேன். தலைப்பு ஏதோ - ஆண்களா பெண்களா என்பதாக இருந்தது. அந்த பயத்தில் இருந்து வெளியே வருவதற்குள் என் அம்மா அப்பா ஆசைப்பட்டார்கள் என்பதால் அவர்களை இந்த தீபாவளி சிறப்பு பட்டிமன்றத்துக்கு கூட்டி சென்றேன். ஆறு மணி பட்டிமன்றத்துக்கு 5.15 இக்கு எல்லாம் அங்கு இருந்தோம் ஒரு சீட் கிடைக்கவில்லை. ஒரு ஆயிரம் பேருக்கு மேல் அமரக்கூடிய அரங்கம். நிரம்பி வழிந்தது.

திரைப்படங்களில் சிறப்பாக காதலை சொன்னது அன்றைய படங்களா இன்றைய படங்களா? தலைப்பை பார்த்தவுடனேயே எனக்கு தோன்றியது - ஆஹா! இது லியோனியின் பேட்டை ஆயிற்றே என்பது தான்.

லியோனி வந்த போது விசில் பறந்தது. அந்த இடமே ஒரு ஆர்பரிப்போடு இருந்தது. வழக்கம் போல் லியோனி கலகலபோடு ஆரம்பித்து வைத்தார் பின் வந்தவர்களும் குறை வைக்காமல் பேசினார்கள் . நிறைய பாடல், இரண்டு வரி பேச்சாளர் பாட மீதி வரியை லியோனி பாடினார். அரசியல் நையாண்டியும் இருந்தது - என்னை சபாநாயகரே என அழைக்காதீர்கள், அப்புறம் நானும் மூணாவது வரிசையில  போய் உட்காரனும்; நாங்க ரெண்டு பேரும் உங்க வீட்டுகார அம்மாவை போய் பார்க்க வேண்டி இருக்கும் - அதுக்கு லியோனி - பார்த்தா மட்டும் என்ன ஆயிட போகுது, இன்னுமாயா நம்புறீங்க? - இப்படி ஆங்கங்கே அரசியல் சொருகல்கள் ......(நாம் உட்காந்து இருப்பது கலைஞர் அரங்கம் என்பதை நினைவு படுத்திக்கொண்டே இருந்தது).

                    

பேசியதில் எனக்கு நினைவில் நிற்பது குமரி அமுதவன் பேச்சுதான். சிறப்பான கருத்தோடு தலைப்பை ஒட்டி பேசினார். நகைச்சுவையோடு இல்லை ஆயினும் சிந்திக்க வைத்தது அவர் மட்டும்தான் ! மற்றவர்கள் எல்லோரும் (லியோனி உட்பட) எந்த தலைப்பை கொடுத்து இருந்தாலும் இதையேதான் பேசி இருப்பார்கள். அதுவும், கவிஞர்  இனியவன் ... - ஐயோ, யாரப்பா இவருக்கு கவிஞர் பட்டம் கொடுத்தது? இவர் ஒரு பட்டி மன்ற பவர் ஸ்டார் (இதை நான் பாராட்டாய் சொல்லவில்லை). 

Ultimate சொதப்பல் லியோனியின் தீர்ப்புதான். சிறு வர்த்தகத்தில் அந்நிய முதலீடு வந்தால் பெட்டி கடையில் வெள்ளை காரன் பீடி விற்பான் என ஆரம்பித்து, எதையோ சொல்லி (சொதப்பி)  அன்றைய காதலே என முடித்தார்.

பட்டிமன்றத்தை விட சுவாரசியம், அங்கு நடந்த விஷயங்கள் தான். சிறு பிள்ளைகள் கொஞ்ச நேரத்தில் போராகி அரங்கத்தின் உள்ளே ஓடி பிடித்து விளையாட ஆரம்பித்தார்கள். ஒரு பிள்ளை அம்மாவை தேடி கொண்டு இருந்தது. அவரவர்கள் கொண்டு வந்த சிப்ஸ், பழங்கள், பால் தயிர் சாதங்கள் (பிள்ளைகளுக்கு) திறந்து வைத்து மொசுக்கி கொண்டே பட்டிமன்றம் பார்த்தது இன்னும் சுவாரஸ்யம். நிகழ்ச்சி முடிந்த பின்னர் நிறைய பேர் நடுவர் இருக்கையில் அமர்ந்து படம் எடுத்துகொன்டனர்.


ஒரு பையன் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்தே பின் பக்கம் பார்த்து கொண்டே உட்கார்ந்து இருந்தான். நாமும் அப்படி உட்காரும் காலம் வெகு தொலைவில் இல்லை.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

தேவகுமார்
***
அண்மைய பதிவு:

தொல்லைகாட்சி: நாஞ்சில் சம்பத்- உங்களில் யார் பிரபுதேவா: இங்கு வாசிக்கலாம் !

12 comments:

  1. தம்ப்ப்ரி.. பானுங்கறது பானுபிரியாவா? பானுசந்தரா? சும்மா பொது அறிவுக்காக கேட்டேன் :)

    ReplyDelete
  2. Anonymous10:53:00 PM

    அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
    என் மனம் கனிந்த இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் mohan sir

    ReplyDelete
  6. உங்களுக்கும் உங்களின் குடும்பத்தாருக்கும் எனது மனம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. தொலைக்காட்சியில் பார்க்கும்போது எல்லோரும் ஆஹா.......ஓஹோன்னு விழுந்து விழுந்து சிரிக்கிற மாதிரி சீனு காமிக்கிறாங்க, ஒரு தடவை சிரிச்சதை வெவ்வேறு ஆங்கிளில் எடுத்து திரும்பத் திரும்ப பயன்படுத்திகுவாங்களோ!!

    ReplyDelete
  8. இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ!

    ReplyDelete
  9. தூர்தர்ஷன்ல மட்டுமே இருந்த காலத்துல பட்டி மன்றங்கள் ரசிக்கதக்கதா இருந்துச்சு. ஆனா, இப்போ 107 சேனல்ல்யும் பட்டி மன்றம் போடுறாங்க. அதனால், எனக்கு பட்டி மன்றத்து மேல ஈர்ப்பு போய்டுச்சு.

    ReplyDelete
  10. லியோனி பட்டி மன்றங்கள் பெரும்பாலும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கின்றன.கேட்பவர்களும் கருத்தாழத்தோடு கேட்க விரும்புவதில்லை.மேலோட்டமான நகைச்சுவை ஒதுமானது என்றே நினைக்கிறார்கள்.

    ReplyDelete
  11. பின்னூட்டமிட்ட நண்பர்கள் அனைவருக்கும் தேவா சார்பாக நன்றிகள்

    ReplyDelete
  12. தேவா, நீங்க மோகன் சந்தேகதே தீர்த்துடுங்க சீக்கரம். லியோனி பட்டிமன்றம் கொஞ்சம் monotonous ஆயிடுச்சு. அத இப்போ எல்லாம் வெறும் DMK propoganda மேடையா மாத்திட்டாங்க....

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...