வெனிசுலா நாட்டின் அதிபர் சாவேஸ் பற்றிய புத்தகம் இது. கிழக்கு பதிப்பக வெளியீடு.
ஐக்கிய நாடுகள் சபையில் பேசுகிறார் சாவேஸ்; தனது பேச்சின் இடையே இப்படி குறிப்பிடுகிறார்
"அந்த சாத்தான் நேற்று இங்கு வந்தது. இந்த மேடையில் நின்று பேசியது. அது வந்து விட்டு போன துர்நாற்றம் இன்னும் அடிக்கிறது"
அவர் சாத்தான் என்று குறிப்பிட்டது அமெர்க்காவின் அப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை ! ஐக்கிய நாடுகள் சபையில் நின்று அவர் இதனை குறிப்பிட்டது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
சாவேஸின் ஆதர்சம் பிடல் காஸ்ட்ரோ. அவரும் அமெர்க்கர்களுக்கு சிம்ம சொப்பனம் தான். ஒரு முறை பிடல் காஸ்ட்ரோ கட்டி பிடித்து இப்படி சொன்னாராம் " உங்களை விட்டால் வெனிசூலாவுக்கு வேறு நல்ல தலைவர் கிடைக்கவே மாட்டார்"
இவருக்கு பல தென் அமெரிக்க நாடுகள் ஆதரவு தர தொடங்கியதும், அதன் பின் அமெரிக்கா என்ன செய்தது என்றும் புத்தகம் பேசுகிறது.
முதல் அத்தியாயத்திலேயே அமெரிக்காவிற்கும் இவருக்கும் உள்ள பகையை காட்டி விட்டு பின் சாவேஸ் குடும்பம், இளமை காலம், படிப்பு இவை பற்றி பேசுகிறார் நூல் ஆசிரியர். ராணுவ படிப்பு முடித்து ராணுவத்தில் துணை லெப்டிநென்ட் ஆக பணிபுரிகிறார் சாவேஸ். பின் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கும் போது பல இளைஞர்களை ரகசியமாக ஒன்று சேர்த்து புரட்சி படை ஒன்று துவங்குகின்றனர். பின் அரசையே எதிர்க்கின்றனர். மிக கடுமையாக போராடும் அவர்கள் ஒரு நேரத்தில் தாங்கள் தோற்க போகிறோம் என அறிந்து சரணடைகிறார்கள். சிறை செல்கிறார்கள். இதன் பின் சாவேஸ் மீது மக்களுக்கு மதிப்பு கூடி போகிறது.
சிறையில் இருந்து வெளியே வந்து கட்சி துவங்குகிறார். தேர்தல் வருகிறது. அதில் நின்று ஜெயிக்கிறார். 1999 ஆம் ஆண்டு முதல் அதிபர் ஆனார் சாவேஸ்.
அவர் அதிபர் ஆன நேரம் பொருளாதாரம் மிக மோசமாக இருந்தது. அப்போது என்ன செய்வது என மக்களிடமே கருத்து வாங்கினார். இதற்கு அவர் பயன்படுத்தியது என்ன முறை தெரியுமா? நம் முதல்வன் படத்தில் ஒரு நாள் முதல்வராய் இருக்கும் போது அர்ஜூன் செய்வாரே.. அதே தான். மக்கள் போன் செய்து பேசலாம். அதனை முழுதும் கேட்க அதிகாரிகள் பலரை தனியே அமைத்தார்.
அதை விட அவர் செய்த இன்னொரு விஷயம் ஆச்சரியமாய் இருக்கிறது. ராணுவத்தினர் அனைவரையும் மக்கள் பணிக்கு அனுப்பி யுள்ளார். ராணுவத்தினர் முழுதும் கிராமம் கிராமமாக சென்று சாலைகள் போடுவது, மருத்துவ உதவிகள் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டுள்ளனர். விமானப்படை, கப்பற்படை போன்றவை கூட மக்களை ஏற்றி செல்ல பயன்படுத்தப்பட்டுள்ளன. கோழிக்குஞ்சுகள், தட்டு முட்டு சாமான்கள், வீட்டு பொருட்கள் அனைத்தும் ஏற்றி சென்றுள்ளனர் ! ராணுவ ஆஸ்பத்திரிகள் பொது மக்களுக்கு திறந்து விடப்பட்டது.
ஆட்சிக்கு வந்த இரு ஆண்டுகளில் ஏராள சாதனை செய்துள்ளார் சாவேஸ் ! அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்ற பின், பணக்கார்களிடம் இருக்கும் அதிகப்படியான நிலங்களை கைப்பற்றி ஏழைகளுக்கு கொடுக்க முயல அங்கு ஆரம்பித்தது பிரச்சனை. அவருக்கு எதிராக கழகம் வெடித்து பின் அவரை எதிரித்து தேர்தலில் நின்றோர் ஆட்சியை பிடித்து விட்டனர். ஆனால் ஒரே நாள். .. மக்கள் எழுச்சியில் அவர்கள் ஆட்சியை சாவேஸ் இடம் ஒப்படைத்து விட்டு விலகி விட்டனர் !
இவை ஒரு புறமிருக்க எண்ணெய் கூட்டமைப்பு என்கிற அமைப்பு பல நாடுகளையும் உள்ளடக்கியது. அங்கு பேசி எண்ணெய் விலையை பல மடங்கு உயர்த்த ஏற்பாடு செய்து விட்டார் சாவேஸ். இதனால் அவர் நாட்டிற்கு நல்ல வருமானம். அமெரிக்காவிற்கு பெரும் செலவு/ பாதிப்பு.
சாவேஸுக்கு எதிரான கிளர்ச்சி மற்றும் ஆட்சி கவிழ்ப்பு இவற்றுக்கு பின்னே அமெரிக்காவின் சி. ஐ. ஏ இருந்திருக்கலாம் என்கிறார் நூல் ஆசிரியர்.
அமெரிக்கா முதலில் பிடல் காஸ்ட்ரோவை நினைத்து தான் கவலைப்பட்டது. பின் சாவேஸ், அதன் பின் பொலிவியா என பல நாடுகள் சேர்ந்து கொண்டு தலைவலி தர ஆரம்பித்து விட்டது.
" அமெரிக்கர்கள் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. அங்கும் மூன்று வேலை உணவு கிடைக்காமல், வீடில்லாமல் இருப்போர் உண்டு. அவர்களை பற்றி கவலைப்படாமல் ஆயுதங்கள் வாங்க பணம் செலவழிப்பது என்ன நியாயம்?" என்கிறார் சாவேஸ் !
2005 ல் அமெரிக்காவை காத்ரீனா புயல் தாக்கிய போது சாவேஸ் உதவ முன்வர, புஷ் அதனை ஏற்று கொள்ள வில்லை.

2006-ல் மூன்றாம் முறையாய் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றார் சாவேஸ் என்பதுடன் இந்த புத்தகம் முடிவடைகிறது
*******
வெனிசுலா என்கிற நாடு பற்றியும், அமெரிக்கவிற்கும் - தென் அமெரிக்கா நாடுகள் சிலவற்றுக்கும் இருக்கும் பனிப்போரை இந்த புத்தகம் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.

மருதன் எழுதி நான் வாசிக்கும் முதல் நூல் இது. மிக எளிமையான நடையில் முடிந்த அளவு சுவாரஸ்யத்துடன் பதிவு செய்துள்ளார். வாய்ப்பு கிடைத்தால் வாசியுங்கள் !
********
********
பெயர்: மோதிப்பார்
ஆசிரியர்: மருதன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை: ரூ : 60
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 126
விலை: ரூ : 60
பல விஷயங்கள் இருக்கும் போலிருக்கிறதே... வாங்கிப் படித்துவிடுவோம்... நன்றி...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Deleteநம்ம ஊர் அரசியலே புரியவில்லை.... :))
ReplyDeleteஸ்ரீராம் சார் :))
Deleteநன்றிங்க ,எளிதா விரைவா நிறைவா தெரிய முடிஞ்சது
ReplyDeleteவாங்க கண்ணதாசன் மகிழ்ச்சி
Deleteபுதிய விஷயம். நல்ல பகிர்வு
ReplyDeleteமகிழ்ச்சி நன்றி முரளி சார்
Deleteஅண்ணன் அமெரிக்காவை எதிர்த்து போராடுவது அவ்வளவு எளிதல்ல. அந்த விதத்தில் இவரைப்பாராட்ட வேண்டும்.
ReplyDelete\\" அமெரிக்கர்கள் மீது எனக்கு வெறுப்பு கிடையாது. அங்கும் மூன்று வேலை உணவு கிடைக்காமல், வீடில்லாமல் இருப்போர் உண்டு. அவர்களை பற்றி கவலைப்படாமல் ஆயுதங்கள் வாங்க பணம் செலவழிப்பது என்ன நியாயம்?" என்கிறார் சாவேஸ் !\\ உலக நாடுகளுக்கிடையே சண்டையை மூட்டி இரண்டு பக்கமும் ஆயுதம் விற்று பிழைப்பவன் அண்ணன் அமேரிக்கா என்கிறார்களே, அண்ணனே ஆயுதம் வாங்குகிறாரா? யாரிடமிருந்து?
புத்தகம் கைவசம் இப்போது இல்லை ஜெயதேவ் அதனால் உங்கள் கேள்விக்கு பதில் தெரியலை மன்னிக்க
Deleteசகோ நல்ல பதிவு,
ReplyDeleteதிரு சாவேஸ் அமெரிகாவை எதிர்கிறார் எனில் என்ன பொருள்.தனது நாட்டு உள்விவகாரங்களில் அமெரிக்கா தலை இடாமல், எண்ணெய் வளத்தை( உலகில் அதிக எண்ணெய் கொண்டது வெனிசுவேலா) சுரண்டாமல் பார்த்துக் கொள்கிறார்.
எனக்கு இவரைப் பிடிப்பது இவரின் புதிய சுதேசி பொருளாதார கொள்கைகள்தான். பொது உடமைக் கொள்கையாளர் என்றாலும், இப்போதைய சூழலுக்கு ஏற்ப தனியார் தொழிலையும் ஊக்குவித்து,சிறப்பாக செயல்படுகிறார்.
http://en.wikipedia.org/wiki/Economic_policy_of_the_Hugo_Ch%C3%A1vez_government
Since his election in 1998, the administration of Venezuelan president Hugo Chávez has proposed and enacted democratic socialist economic policies. Domestic policies have included redistribution of wealth, land reform, and democratization of economic activity via workplace self-management and creation of worker-owned cooperatives.[1] Internationally the Chávez administration has attempted to increase autonomy from U.S. and European governments by increasing control over domestic oil production and promoting economic and political integration with other Latin American nations.[1]
Despite high oil revenues, other industries have suffered. GDP has returned to levels last seen fifty years ago,[2] and the fiscal deficit is 15% of GDP.[3]
எனினும் இயற்கை வளம் இருப்பதால் மட்டுமே எந்த கொள்கைவாதமும் பேச முடியும் என்பது நம் கருத்து.
இந்த தேர்தலில் கூட போராடியே வெற்றி!!!.
மக்களினால் ஏற்கப்படும் வரை சாவேஸ் போற்றப்படுவது இயல்பே!!
நன்றி!!
வருகைக்கும் விரிவான கருத்துக்கும் நன்றி சார்வாகன்
Deleteபடித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteசாவேஸ் பற்றிய உயர்ந்த எண்ணம் எனக்கில்லை - பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகள்/தலைவர்கள் போலவே இவரும்.
எனினும் புத்தகம் படிக்கத் தூண்டுகிறது.
அப்பாதுரை: நலமா? வருகைக்கு நன்றி
Deleteபடித்துப் பார்க்கிறேன்....
ReplyDeleteதலைப்பே வாங்க தூண்டுகிறது. நன்றி.
ReplyDelete