Monday, November 19, 2012

தொல்லைகாட்சி- நீர்பறவை-AR ரகுமான் -விஜய் விளம்பரம்

நீர்ப்பறவை சிறப்பு நிகழ்ச்சி

பலரும் மிக எதிர்பார்ப்போடு இருக்கும் படம் : நீர்ப்பறவை. சமீப  காலத்தில் பெரிதும் கவர்வது இப்பட பாடல்கள் தான் !

கலைஞர் டிவியில்  இப்படத்து பாடல்களை, பாடியவர்களே வந்து பாடிக்காட்ட, பட காட்சிகளையும் சற்று காண்பித்தனர். கடலோர கவிதைகள் போல கடலை ஒட்டி நடக்கும் ஒரு காதல் கதையாகவே தோன்றுகிறது. ரவுடி ஹீரோவை திருத்தும் பெண் - அவள் மீதான காதல் என கடலோர கவிதைகள் பார்ட் டூ தான் போலும் ! கூடவே தந்தை - மகன் பாசமும், மீனவர் பிரச்னையும் தொட்டு செல்ல கூடும். ஹீரோயின் சுனைனா செம அழகு. "மீனுக்கு சிறு மீனுக்கு"  பாடல் திரையாக்கம் செய்த விதம் லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என தெரிகிறது. ஐ யாம் வெயிட்டிங் :)

ரகுநந்தன் இசையில், "பரபர பறவை" என்கிற அட்டகாசமான பாடலை பாடிய இசை அமைப்பாளர் ஜி. வி.பிரகாஷ் குமார் " எல்லா மெட்டையும் கேட்டு விட்டு, இது தான் நிச்சயம் பெரிய ஹிட் ஆகும் என செலக்ட் செய்து பாடினேன் " என்றார் சிரித்தவாறே.

விஜய் நடிக்கும் விளம்பரம்


ஒரு நகைக்கடை விளம்பரத்தில் விஜய் நடிக்கிறார். முதல்முறை பார்த்த போது ரசித்தாலும், அடுத்தடுத்து பார்க்கையில் பல லாஜிக் மிஸ்டேக்ஸ் தான் கண்ணுக்கு தெரிகிறது.

விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்ட, நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். காது குத்திய குழந்தைக்கு இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ?

பொது இடத்துக்கு என்னிக்கு விஜய் இப்படி கோட் போட்டுக்கிட்டு வந்தார் ?

இரண்டு பக்கமும் மக்கள் கூடி நின்று வாழ்த்த விஜய் ..எம் ஜி ஆரா என்ன !

ரைட்டு விடுங்க !

A.R. ரகுமான் சிறப்பு நிகழ்ச்சி

தீபாவளியன்று ஜெயா டிவி A.R. ரகுமான் பேட்டியை ஒளிபரப்பியது. பேட்டி எடுத்தது சின்மயி என்றாலும் பல முக்கிய கேள்விகளை நித்யஸ்ரீ உள்ளிட்டோர் ஏற்கனவே கேட்டு அதை வீடியோவில் போட்டு காட்டினர். பலர் " தெய்வமே நீங்க எங்கேயோ போயிட்டீங்க " ரேஞ்சுக்கு பேசினாலும் நித்யஸ்ரீ கேட்ட கேள்வி நியாயமாய் இருந்தது " முன்பெல்லாம் கர்நாடக சங்கீத பாடல்கள் அடிப்படையில் பாட்டு வைப்பீர்களே இப்போது செய்வதே இல்லையே; பத்து படத்துக்கு ஒரு முறையாவது அத்தகைய பாடல்கள் வைக்க கூடாதா" என்றார் நித்யஸ்ரீ. ரகுமான் பதில் சொல்லும்போது, கடந்த பத்து வருடத்தில் மக்கள் என்ன மாதிரி பாடல் எதிர்பார்க்கிறார்கள் என்பது மிக மாறி விட்டதாகவும், இத்தகைய பாடல்களை இயக்குனர்கள் அதிகம் ஆதரிப்பதில்லை என்றும் சொன்னார். பேட்டி முழுதும் ரகுமானின் humility மிளிர்ந்தது.

நல்ல நிகழ்ச்சி - திருக்குறள் கதைகள்

சித்திரம் டிவியில் வருகிறது திருக்குறள் கதைகள் . ஒரு திருக்குறள் அடிப்படையில் கார்ட்டூன் பாத்திரங்களை வைத்து,  ஒவ்வொரு கதையும் செய்துள்ளனர். ரொம்ப நல்ல கான்செப்ட் ! சிறுவர்கள் மட்டுமல்ல பெரியவர்களும் கூட விரும்புகிற விதத்தில் உள்ளது நிகழ்ச்சி. வாய்ப்பு கிடைத்தால் பாருங்கள் !

சிவகுமாரின் நேருக்கு நேர்

தீபாவளி காலையிலேயே விஜய் டிவியில் சிவகுமாரின் நேருக்கு நேர் நிகழ்ச்சி - வெடி சத்தத்திற்கிடையே அவ்வப்போது பார்த்தோம்.

பல்வேறு தமிழக தலைவர்கள் பற்றி நெகிழ்ச்சியோடு பேசினார். கடவுள் நம்பிக்கை பற்றி சொல்லும்போது " நீங்கள் பயணம் செய்யும் ரயிலில் தீப்பற்றி விடுகிறது. பிழைப்போமா இல்லையா எனும் நிலையில் கூட கடவுள் நினைவு வராமல் போகுமா? உங்கள் குழந்தைக்கு மிக பெரிய வியாதி எனில் பிரார்த்தனை செய்யாமல் இருப்பீர்களா? அத்தகைய மனிதன் இருந்தால் காட்டுங்கள்; அவன் காலில் விழுந்து நான் வணங்குகிறேன் " என்றார் சிவகுமார்  ! (எனக்கென்னவோ அத்தகைய நாத்திகர்களும் இருப்பர் என்றே தோன்றியது)

தீபாவளி சிறப்பு படங்கள்

சன் டிவி போக்கிரி மற்றும் காளை என போட்ட படங்களே தீபாவளிக்கு போட்டு வெறுக்கடித்தது. அதிலும் காளை படத்தை ஒரு நிமிஷம் கூட பார்க்க முடியாது ! எப்படி தான்  தீபாவளியன்று  போட தீர்மானித்தனரோ?

இரவு சன்னில் போட்ட மங்காத்தா மற்றும் விஜய்யில் போட்ட நண்பனுக்கும் தான் நேரடி போட்டி. நண்பன் விளம்பரம் போட்டு நாலு மணி நேரத்துக்கும் மேல் படத்தை ஓட்டினர். விஜய் டிவி என்பதால் இனி அடிக்கடி நண்பன் படம் டிவியில் ஓடுவதை பார்க்கலாம்

உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே !
****
வல்லமை இணைய இதழுக்காக எழுதப்பட்டது
****
அண்மைய பதிவு: துப்பாக்கி -சரவெடி -விமர்சனம் : இங்கு வாசிக்கலாம் 

17 comments:

  1. பல மாதங்களாக சித்திரம் டிவியில் வரும் திருக்குறள் கதைகளை வீட்டில் ரசிப்பார்கள்...

    ReplyDelete
    Replies
    1. திருக்குறள் கதைகள் பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி ! வருகைக்கு நன்றி

      Delete
  2. //லட்சக்கணக்கான சுனைனா ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் என தெரிகிறது. ஐ யாம் வெயிட்டிங்//

    ஹலோ, நீங்க யாரைத்தான் விட்டு வைப்பீங்க? முதல்ல உங்களுக்கு பிடிக்காத 10 நடிகைகள்னு ஒரு பதிவு எழுதுங்க :))

    //காது குத்திய குழந்தைக்கு இவ்ளோ நாள் பெயர் வைக்காமலா இருப்பார்கள் ?//

    உங்க அலுவலகத்தில் வேலை செய்யறவங்களை கூட்டிட்டு போய், அவங்களுக்கு பெயர் வைக்க சொன்னால் கூட, அவர் 'ஷோபா....எங்கம்மா பேரு"ன்னு நெகிழ்ச்சியோட சொல்லியிருப்பார் :))

    //பேட்டி முழுதும் ரகுமானின் humility மிளிர்ந்தது//

    இசையைத் தாண்டி ரஹ்மானை பிடிக்க இதுவும் ஒரு முக்கிய காரணம்!

    ReplyDelete
    Replies
    1. //ஹலோ, நீங்க யாரைத்தான் விட்டு வைப்பீங்க? முதல்ல உங்களுக்கு பிடிக்காத 10 நடிகைகள்னு ஒரு பதிவு எழுதுங்க :))//

      ஹீ ஹீ

      Delete
  3. வயித்தெறிச்சல கௌப்பாதீங்க.

    ReplyDelete
  4. ஜோதிஜி அண்ணா : டிவியில என்னா தான் வருதுன்னாவது மத்த ஊர் காரங்களுக்கு தெரியட்டுமே !

    ReplyDelete
  5. நீர்ப்பறவை எதிர்பார்ப்புக்குரிய படம் தான்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழரே நன்றி

      Delete
  6. உண்மையில் இந்த நாளில் பொதிகை தொலைக்காட்சி அதிக விளம்பரங்கள் இன்றி சில நல்ல நிகழ்சிகள் ஒளிபரப்பியது. ஆனால் எத்தனை பேர் அந்த டிவி பக்கம் சென்றோம் என்பது கேள்விக்குறியே

    yes

    ReplyDelete
  7. தீபாவளி நல்லா டிவி பாத்து என்ஜாய் பணிடீன்களா சார்..

    சித்திரம்-ல வர திருக்குறள் கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். என் வீட்டு வாண்டு கூட சேர்ந்து நானும் விரும்பி பார்ப்பேன்..

    தீபாவளிக்கு டூர் போனதால ஒரு ப்ரோக்ராம் கூட பார்க்கவில்லை.. (வீட்டில் இருந்தாலும் பார்பதில்ல அது வேற விஷயம்)...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சமீரா நீங்களும் உங்கள் வீட்டு குட்டி பசங்களும் திருக்குறள் கதைகள் பார்ப்பது அறிந்து மகிழ்ச்சி

      எந்த ஊருக்கு டூர்? அந்த ஊர் பற்றி நீங்க எழுதலாமே

      Delete
  8. ////விஜய் பெயர் வைக்கும் குழந்தை ஏற்கனவே காது குத்தப்பட்ட, நன்கு வளர்ந்த பெண்ணாக இருக்கிறாள். ///

    அண்ணே, அந்த குழந்தையோட அம்மாவுக்கு ரொம்பவே வயசாகிட்ட மாதிரி தெரியல?

    ReplyDelete
    Replies
    1. ராமசாமி அண்ணே : அப்படியா???

      Delete
  9. விஜய்ன்னு வரும்போதே அங்கே பல லாஜில் மிஸ்டேக் இருக்கும். இதுல புதுசா ஆச்சர்யப்படுறாராம் அண்ண்ன்?! ஹையோ! ஹையோ!

    ReplyDelete
    Replies
    1. அலோ உங்க அண்ணி " என்னாது விஜய் யை கிண்டல் பண்ணி எல்லாம் எழுதுறீங்க ; அவ்ளோ தைரியம் வந்துடுச்சா " அப்படிங்கறாங்க !

      Delete
  10. நீர்ப் பறவை நன்றாக இருக்கும் போல் தோன்றுகிறது பொறுத்திருந்து பார்ப்போம்.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...