Saturday, November 10, 2012

IT Act 66A - ஐ எதிர்க்க வேண்டுமா ?

ரு அரசியல்வாதியை விட இன்னொரு அரசியல்வாதி அதிகம் சம்பாதித்து விட்டார் என்று ஒருவர் ட்வீட்டுகிறார்..இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே தொடரும் அவரது செய்தி எத்தனை பேரை சென்று சேரும் ? அதிகபட்சம் அது என்ன விளைவை தரும் ?

எந்த அரசியல்வாதி பற்றி ட்வீட் எழுதினாரோ அவர் வழக்கு தொடுக்க, இன்று ட்வீட் எழுதியவர் சிறையில். !

இது போன்ற விஷயங்கள் செய்தி தாளிலும், வார பத்திரிக்கைகளிலும் வருவதில்லையா ? இவர் சொன்னது ஒரு வரி... ஆனால் பத்திரிக்கைகள் எத்தனை டேபிள் ரிப்போர்டுகள் தயார் செய்கின்றன.. அவை எத்தனை ஆயிரம் (சில நேரம் லட்சம்) பேரை சென்றடைகின்றன. இவையெல்லாம் அவதூறு இல்லையா? இணையத்தில் எழுதுவது மட்டும் தான் அவதூறா ? ஏன் அந்த பத்திரிக்கைகள் மீது வழக்கு தொடர்வது இல்லை ?

சொல்லப்போனால் இணையத்தை நாடுவது அநேகமாய் ஓரளவாவது படித்த மக்கள் தான். அவர்கள், குறிப்பிட்ட சில வரிகளை படிப்பதாலேயே தங்கள் மனதையும், கருத்தையும் மாற்றி கொள்ளும் அளவுக்கு மனப்பக்குவம் இல்லாதவர்கள் அல்ல !

பிற மீடியாவில் சொல்வது மிக அதிகம் பேரை அடைந்தாலும், அந்த மீடியாக்கள் மீது, எப்போதேனும் விடுக்கும் "அவதூறு வழக்கு" அநேகமாய் பிசுபிசுத்து போகிறது

இணையத்தில் எழுதப்படும் நியாயமான விமர்சனங்களுக்கு ஏன் இத்தனை பெரிய அச்சுறுத்தல் ? (இங்கு இணையத்தில் நடக்கும் தனி மனித தாக்குதலையும், சிலர் பெண்களை வம்பிற்குழுப்பதையும், அசிங்கப்படுத்துவதையும் ஆதரிக்க வில்லை.)

குறிப்பிட்ட செக்ஷன் 66A என்ன சொல்கிறது என்று பார்ப்போம் 

Any person who sends, by means of a computer resource or a communication device,—

a)any information that is grossly offensive or has menacing character; or
b)any information which he knows to be false, but for the purpose of causing annoyance, inconvenience, danger, obstruction, insult, injury, criminal intimidation, enmity, hatred or ill will, persistently by making use of such computer resource or a communication device,
c)any electronic mail or electronic mail message for the purpose of causing annoyance or inconvenience or to deceive or to mislead the addressee or recipient about the origin of such messages.

Punishment - Imprisonment for a term which may extend to three years and with fine.

Explanation — For the purpose of this section, terms “electronic mail” and “electronic mail message” means a message or information created or transmitted or received on a computer, computer system, computer resource or communication device including attachments in text, images, audio, video and any other electronic record, which may be transmitted with the message.
*********

இதனை பற்றி ப்ரனேஷ் ப்ரகாஷ், (Pranesh Prakash, Policy Director of the Bangalore based Centre for Internet and Society) கூறுவது இதோ:

’யாரும் என்னைப் பற்றி ஒரு புத்தகம் எழுதி, அதில் என்னை வேண்டுமென்றே மோசமாக எழுதினாலும் என்னால் அதைப் பெரிதாக ஒன்றும் சட்டப்படி செய்ய முடியாது. ஆனால் அப்படி ஒரு செய்தியை e-mail செய்தாலும் உங்களுக்கு மூன்றாண்டுகள் ஜெயில் நிச்சயம்! இது தவறாக யாரையும் கொன்றுவிட்டால் கிடைக்கும் இரண்டாண்டு சிறைத் தண்டனையை விட அதிகம்!

*******
இங்கு நாம் பேசுவது இரண்டு விஷயங்கள்:

ஒன்று இணையத்தில் செய்யப்படும் பல விமர்சனங்கள் இந்த செக்ஷன் 66A-ன் கீழ் கொண்டு வர மிக அதிக வாய்ப்புள்ளது இது ஆட்சியாளர் கையில் தவறாய் பயன்படுத்த சாத்தியக்கூறுகள் அதிகம்.

இரண்டு: இந்த சட்டம் பத்திரிக்கை/ டிவி உள்ளிட்ட மீடியாக்களை ஒப்பிட்டால் இணையத்தை மிக பாரபட்சமாக நடத்துகிறது

இந்த சட்டத்தை நாம் எதிர்க்க இதுவே காரணம் !


இந்த விஷயத்தில் தருமி ஐயா அவர்கள் மிக நியாயமான முறையில் தன் கருத்துகளை எழுதி உள்ளார் இதனை பல்வேறு பதிவர்களும் ஆதரித்து தங்கள் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.

ஒரு சட்டம் தவறானது எனில் அதை எப்படித்தான் மாற்றுவது?

அரசாங்கமே மிக அதிக எதிர்ப்பு எழும்பினால் மாற்றலாம். இப்படி அரசாங்கம் சட்டத்தை மாற்றுகிற சம்பவங்கள் நடக்கின்றன என்றாலும் அவை எப்போதேனும் தான் நடக்கிறது

அடுத்து - இன்று எதிர் கட்சியாய் இருக்கும் அணி பின் ஆளும்கட்சியானால் - சில சட்டங்கள் மாற்றப்படலாம்

கடைசி மற்றும் முக்கியமானது : சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை (Fundamental Rights) மீறுகிறது - எனவும், அத்தகைய சட்டம் செல்லாது என சொல்ல நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது. உண்மையில் மக்களை வருத்தும் ஒரு சட்டத்தை மாற்ற இது தான் சிறந்த வழி. 

தற்போது குறிப்பிட்ட செக்ஷன் 66A தவறானது என ஒரு பொது நல வழக்கு தொடுக்கப்பட்டுளதாக தெரிகிறது. ட்வீட் செய்து  சிறை சென்றுள்ள
சீனிவாசன் வழக்கிலும், அவரது வழக்கறிஞர்கள் இதே நிலைப்பாட்டை எடுக்க கூடும்

நிச்சயம் இந்த பொது நல வழக்கு வெற்றி பெறவேண்டும் என விரும்புகிறோம் ! உயர் நீதி மன்றமோ, உச்ச நீதிமன்றமோ இவற்றில் ஏதேனும் ஒன்றில், இந்த கோரிக்கையில் உள்ள நியாயம் புரிபடும்.. விரைவில் இந்த சட்டம் மாற்றப்படும் என நம்புவோம்... முயலுவோம் !

7 comments:

  1. நானும் படித்தேன். இதையே நினைத்தேன்.

    ReplyDelete
  2. உண்மைதான்! இந்த நிலை மாற வேண்டும்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  3. காங்கிரஸின் மிகச் சிறந்த தலைவர்களுள் கார்த்தி சிதம்பரமும் ஒருவர்.....அய்யா ஜாலி! என்னை யாரும் அரெஸ்ட் பண்ண மாட்டாங்களே :))

    ReplyDelete
  4. கருத்து? யாருக்கு சொல்லுகிறோம் என்பதில் என்பதில் கவனம் வேண்டுமோ? தவறோ?

    ReplyDelete
  5. ஆமாம்.... இந்தியாவில் பேச்சு சுதந்திரம் எழுத்து சுதந்திரம் எல்லாம் இருக்குன்னு சொல்றாங்களே.... அப்போ..... அதெல்லாம் உண்மையில் இல்லையா?

    பத்திரிகை ஊடங்களைவிட இணையத்தை வெளிநாட்டுக்காரர்கள்தான் அதிகம் வாசிப்பாங்கன்றதால் 'எதுவும்' வெளியில் தெரிஞ்சுடக்கூடாதுன்றதால் கெடுபிடி பண்ணறாங்களோன்னு தோணுது!

    உள்ளூர் மக்களுக்குத் தெரிஞ்சால் பரவாயில்லை. எல்லாத்தையும் கண்டுக்காமப் போயிருவாங்க:(

    ReplyDelete
  6. நல்ல அலசல். நிச்சயம் கவனிக்க வேண்டிய விஷயம். அரசு என்ன செய்கிறது என்று காலம் தான் பதில் சொல்லும்...

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...