Thursday, November 29, 2012

லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ரா: இனிய அனுபவம்- சில தகவல்கள்

ங்கள் கம்பனி செகரட்டரி இன்ஸ்டிடியூட் சமீபத்தில் லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ராவிற்கு ஏற்பாடு செய்திருந்தது



கம்பனி செகரட்டரிகள் சேமநலநிதி - Company Secretaries Benovalent Fund என ஒன்று உண்டு. இந்த நிதியிலிருந்து கம்பனி செகரட்டரிகள் யாரேனும் மரணமடைந்தால் அவர்கள் குடும்பத்தினருக்கு சில லட்சம் பணம் தருவார்கள்.

இந்த சேமநல நிதிக்கு - அவ்வப்போது நிதி திரட்டும் நிகழ்ச்சி நடக்கும். சென்னையில் முதன் முறை இப்படி பெரிய விழா காமராஜர் அரங்கில் நடத்தப்பட்டது. ரூ. 250  முதல் 5,000 வரை டிக்கெட் போட்டு விற்கப்பட்டு இதன் மூலம் வரும் வருமானம் அந்த நலநிதிக்கு வழங்கப்பட்டது.

இந்த விழா நடத்த போவது முடிவானதும் எங்கள் நண்பர் ரெங்கராஜன் தான் லட்சுமண் சுருதி ஆர்கெஸ்ட்ரா வைக்கலாம் என  suggestion தந்ததுடன்  அவர்களை நேரில் சந்தித்து பேசி, நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து தந்தார். மேலும் ACS இன்ஸ்டிடியூட்டின் Joint Director திருமதி. சாரா அவர்கள்  ஸ்பான்சரில் துவங்கி பல்வேறு வேலைகளை திறம்பட கவனித்து நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஆணிவேராய் இருந்தார்.

இந்த விழா ஏற்பாடுகளின் போது லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ராவுடன் பழகும் வாய்ப்பு நண்பர்களுக்கு கிடைத்தது. நிகழ்ச்சி பற்றியும், லட்சுமண் ஷ்ருதி குறித்தும் இந்த சிறு பதிவு .
*****
1987-ல் ஆரம்பிக்கப்பட்ட லட்சுமன் ஸ்ருதிக்கு இது வெள்ளி விழா ஆண்டு. ஆர்கெஸ்ட்ரா தவிர, அசோக் நகரில் இவர்கள் ஒரு மியூசிக் பள்ளியும் வைத்து பல்வேறு இசைக்கருவிகள் வாசிக்க கற்று தருகிறார்கள். இதன் முழு விபரம் இவர்களின் இணைய தளத்தில் கிடைக்கிறது.

எப்போதுமே விழாவை சரியாக சொன்ன நேரத்துக்கு துவங்கி விடுகிறார்கள். எங்கள் விழா ஆரம்பித்த போது, 20 சதவீதம் கூட அரங்கம் நிரம்பவில்லை. ஞாயிறு மாலை என்பதால் போக போகத்தான் அரங்கம் முழுவதுமாக நிரம்பியது அதை பற்றியெல்லாம் கவலைப்படாது சரியான நேரத்துக்கு துவங்கி விடுகின்றனர்.

முதல் இரண்டு மட்டும் தான் சாமி பாட்டுகள். அப்புறம் நேரடியே புது பாட்டுக்குள் குதித்து விடுகிறார்கள். அவ்வப்போது சில பழைய பாடல்கள் மற்றும் தெலுகு, ஹிந்தி உள்ளிட்ட ஓரிரு மாற்று மொழி பாடல்கள் பாடினாலும் பெரும்பாலும் ஹிட் ஆன சமீபத்து பாட்டுகள் தான் !

உன்னி மேனன், ஸ்ரீனிவாஸ், அனுராதா ஸ்ரீராம், மாலதி ஆகியோர்தான் அன்று முக்கிய பாடகர்கள் ( நீங்கள் ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்தால் லக்ஷ்மன் ஸ்ருதிக்கு தனி பேமென்ட்; பாடகர்களுக்கு அவரவர் பாப்புலாரிட்டி அடிப்படையில் தனி பேமென்ட் என்பதை அறிக ).

"ஊலலல்லா"  பாடும் மாலதி , அனுராதா ஸ்ரீராம்,  ஸ்ரீனிவாஸ், உன்னி மேனன் 
லட்சுமண் ஷ்ருதி ஆர்கெஸ்ட்ரா நான்கு பார்ட்னர்களை கொண்டது. முக்கியமான இருவர் ராமன் மற்றும் லட்சுமணன் என்னும் ட்வின் சகோதரர்கள். இதில் லட்சுமணன் மனைவி மாலதி "மன்மத ராசாவில் " துவங்கி தமிழ் படங்களில் தொடர்ந்து பாடும் பின்னணி பாடகியாகி உள்ளார்.

பொதுவாய் இவர்கள் நிகழ்ச்சி ஒன்றுக்கு பல லட்சங்கள் செலவாகும். ஆனால் இவ்விழா இறந்து போன கம்பனி செகரட்டரிகளின்  குடும்பத்துக்கு உதவும் நிகழ்ச்சி என்பதால் குறைந்த ரேட்டுக்கு ஒத்து கொண்டனர்.

தீபாவளிக்கு இரு நாளைக்கு முன் (நவம்பர் 11 - ஞாயிறு அன்று) இவ்விழா நடந்தது. அடுத்த இரு நாளில் தீபாவளி என்பதால் அனைவரும் ஹாலிடே மூடில் ஜாலியாக இருந்தனர்.

நிகழ்ச்சி துவங்கி அரை மணி கழித்து தான் பிரபல பாடகர்கள் ஒவ்வொருவராக வருகின்றனர். அதற்கு முன் லட்சுமன் சுருதி ஆர்கெஸ்ட்ராவை சேர்ந்த ஆட்கள் சில பக்தி பாடல் பாடுகிறார்கள். ஒவ்வொரு பிரபலமும் வந்து சேர, சேர உடனே அவர்களை அழைத்து பாட வைக்கிறார்கள்.

இசை கருவிகள் இசைப்பவர்கள் அனைவரும் ஆண்களே. ஒவ்வொருவரும் சட்டை- பேன்ட்- கோட் எல்லாமே வெள்ளை நிறத்தில் அணிகிறார்கள்.  இசை கருவி வாசிப்போர் தங்கள் கருவிகள் முன் அமர்ந்து விட்டால் நிகழ்ச்சி முடியும் வரை டீ, காபி குடிப்பதில்லை. தங்கள் சீட்டை விட்டு இறுதி வரை எழாமல் வாசிக்கணும் என்பது எழுதாத விதியாம் !


ஆறு மணிக்கு நிகழ்ச்சி துவங்கினால் வாத்திய கருவி வாசிப்போர் நான்கு மணிக்கே அரங்கிற்கு வந்து தங்கள் இசைகருவிகளை சரியான இடத்தில் நிறுவி, 10 நிமிடம் முன்பே அவரவர் பொசிஷனில் அமர்ந்து விடுகிறார்கள் நிகழ்ச்சிக்கு முன் அரங்கில் வந்து பயிற்சி எடுப்பதெல்லாம் இல்லை. அதற்கு முன்பே பயிற்சி எடுத்து விடுவார்கள் போலும்.

எங்கள் உறுப்பினர்களில் பலர் குடும்பத்துடன் வந்ததால் அவர்கள் குழந்தைகள் ஒரு ஓரமாய் கூடி ஜாலியாய் டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தனர். காமிராக்கள் இவர்கள் டான்சை மட்டுமின்றி ஆங்காங்கு பெரியவர்கள் சிலர் டான்ஸ் ஆடியதையும் காமிராவில் சூம் செய்தனர்.

ஜிம்மி ஜிப் என்கிற பெரிய காமிரா அங்கும் இங்கும் நகர்ந்து முன் வரிசையில் இருப்போர் தலைக்கு மேல் சென்று சென்று வந்து படம் பிடித்து கொண்டிருந்தது.
*****
பாடகர் ஸ்ரீனிவாஸ் லேப்டாப் போன்ற கணினியில் இருந்தே பாடல்களை பார்த்து பாடுகிறார். ஒரு குறிப்பிட்ட பாட்டை பாட சொல்லி கேட்க, " அந்த பாட்டை நான் பயிற்சி பண்ணலையே " என்றாலும் பின் ரசிகர்கள் வேண்டுகோளுக்கு இணங்க, கணினியில் பார்த்தபடி  பாடி முடித்தார்.  

அனுராதா ஸ்ரீராம் பல பாடல்கள் பேப்பரை பார்க்காமல் பாடுகிறார். கருப்பு தான் எனக்கு பிடிச்ச கலரு பாட்டை பாடுமுன் " யார் வேண்டுமானாலும் மேடைக்கு வந்து ஆடுங்க" என்று சொல்ல எங்கள் இன்ஸ்டிடியூட்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் சேர்மன் போன்றோர் மேடை ஏறி ஆடினர்.


மேலே படத்தில் டான்ஸ் ஆடும் ஒவ்வொருவரும் வெவ்வேறு மாநிலத்தை சேர்ந்தவர்கள். தெலுகு, மலையாளம், கன்னடம் மட்டுமே தெரிந்த 50-வயதுக்கு மேலான இவர்கள் மியூசிக்கை மட்டுமே வைத்து செமையான ஆட்டம் போட்டனர். எங்களுக்கெல்லாம் இவர்களை இப்படி பார்க்க செம ஜாலியாய் இருந்தது

இந்த பாட்டு முடிந்ததும் டிரம்ஸ் அடிக்கும் நபர் அப்படியே கண்டினியூ செய்து, தலைமுடியை விரித்து போட்டவாறு தனி ஆவர்த்தனம் செய்து அசத்தி விட்டார். டிரம்சை வாசித்தவாறே கீழே இறங்கி வந்து வாசிக்க, விழாவிற்கு வந்திருந்த பல்வேறு வயது மக்களும், அவரது துள்ளல் இசைக்கு செம ஆட்டம் போட்டனர்.

பின் அவர் மேடை ஏறி மேலும் சிலருடன் சேர்ந்து டிரம்ஸ் மழை பொழிந்தார். நிகழ்ச்சியில் பாடிய கிருத்திகா என்ற சிறுமியும் அவருடன் சேர்ந்து டிரம்ஸ் அடித்து அசத்தினாள்.


சாரே ஜகான் சே அச்சா பாடி அந்த டிரம்ஸ் மழையை நிறைவு செய்தனர். அப்போது தேசிய கொடி காட்டப்பட, அனைவரும் எழுந்து நின்றனர் ( நான் கூட ஒன்பது மணி ஆச்சே; நிகழ்ச்சி முடிய போகுதோ என நினைதேன்; சாரே ஜகான் சே அச்சா பாட்டு எப்போதும் நிகழ்ச்சி நடுவே பாடுவார்களாம்... நாட்டு பற்றை காட்டும் இப்பாடல் அவர்களின் அனைத்து முக்கிய நிகழ்வுகளில் இருக்கும் என்றனர்)

மாலை ஆறு மணிக்கு துவங்கிய நிகழ்ச்சி முடிய இரவு பதினோரு மணியாகிடுச்சு; டிவியில் பார்க்கும் போது  தான் விளம்பர இடைவேளை எல்லாம் ! நிஜத்தில் நான் ஸ்டாப் பாடல் மழை தான் ! இரவு பத்தரைக்கு மேல் ஒவ்வொரு பிரபலமாக கிளம்பிவிட, கடைசி வரை இருந்தது மாலதி தான்.

"ஒரு பிரபல பின்னணி பாடகர் மட்டும் பாடினாலே மூன்று மணி நேர நிகழ்ச்சி தேவைப்படும் - நான்கு பாடகர் இருப்பதால் எந்த பாட்டு தேர்வு செய்வது என்பதே பெரிய பிரச்சனை;  அதனால் தான் பதினோரு மணி வரை பாட வேண்டியிருந்தது" என்று சொன்னார் லட்சுமணன்.

பொதுவாய் நமக்கு பல முறை கேட்ட சினிமா பாட்டுகளை அப்படியே கேட்கத்தான் பிடிக்கும். அதாவது இசை, பாடும் விதம் என எல்லாம் அப்படியே இருந்து, பாடலை மறுபடி recreate செய்தால் தான் முழுதாய் ரசிக்க முடியும். இது லட்சுமண் ஸ்ருதிக்கு மிக இயல்பாய் வருகிறது. நிகழ்ச்சியில் கேட்ட எல்லா பாடல்களும், அப்படியே டிவி அல்லது ரேடியோவில் கேட்கிற மாதிரியே இருந்தது.

நாம் ஆடியோவில் மட்டும் கேட்கிற பாடல்கள் இப்படி ஆர்கெஸ்ட்ராவில் பாடி, இசை அமைப்பதை நேரில் பார்க்கும் போது தான் அதை பாடுவது எத்தனை கடினம் என்பதும், இசைக்கு பின் எவ்வளவு பேரின் உழைப்பு உள்ளது என்பதும் புரிகிறது.

லட்சுமண் சுருதி ஆர்கெஸ்ட்ரா கேட்பதும், பார்ப்பதும் ஒரு இனிய அனுபவம். வாய்ப்பு கிடைத்தால் அவசியம் பார்த்து, கேட்டு ரசியுங்கள்

டிஸ்கி: இந்த நிகழ்ச்சி விரைவில் ராஜ் டிவியில் ஒளிபரப்பாகும்.
*****
அண்மை பதிவுகள்:

வானவில்: நீர்ப்பறவை-நடுவுல பக்கத்தை காணும்-பூஜா

முடி திருத்துவோர் வாழ்க்கை -பேட்டி

34 comments:

  1. இது போன்றா இசை நிகழ்ச்சியை நேரில் கேட்பது, பார்ப்பது நல்லதோர் அனுபவம். தில்லியில் அவ்வப்போது நிகழ்ச்சிகள் நடந்தாலும், நான் முதலில் பார்த்தது நெய்வேலியில் தான்.

    நல்ல பகிர்வு மோகன்.

    ReplyDelete
  2. போன்ற....

    கால் அதிகமாகிடுச்சு :)

    ReplyDelete
  3. ராஜ்டீவியில வருதா ஓகே...

    ReplyDelete
  4. /நிகழ்ச்சிக்கு முன் அரங்கில் வந்து பயிற்சி எடுப்பதெல்லாம் இல்லை. அதற்கு முன்பே பயிற்சி எடுத்து விடுவார்கள் போலும்/

    தோழரே..புதிதாய் ஆரம்பித்த குழுவினர்கூட மேடையில் ஏறி பயிற்சி எடுக்க மாட்டார்கள்..

    :)

    ReplyDelete
  5. மதுமதி: நன்றி நண்பா; நான் சொல்ல வந்தது - ஆறு மணி நிகழ்ச்சிக்கு மூன்று அல்லது நாலு மணிக்கு கூட பயிற்சி எடுப்பதில்லை என்பதை தான்; நீங்க சொன்னது போல் அந்த மேடையில் பயிற்சி என்பதே இருக்காது போலும்; ஒரு வேளை அன்று காலை வேறு இடத்தில் கூடி பாடகர்களுடன் சேர்ந்து ரிகர்சல் நடக்குமோ என்னவோ (டிராமாவுக்கு நடக்கும் கிராண்ட் ரிகர்சல் போல)

    ReplyDelete
  6. ஆர்கெஸ்ட்ராவில் பாடல்களைக் கேட்பது இனிய அனுபவம். நல்ல கவரேஜ்.

    ReplyDelete
  7. அப்படியே நேரில் பார்த்த மாதிரி இருக்கிறது எனக்கு .அப்படி பிரித்து அழகாக எழுதி இருக்கிறீர்கள் மோகன் சார்.pictures also super.

    ReplyDelete
  8. சென்னையில் இருக்கும் போது பலமுறை சென்றதுண்டு... (முன் இரு வரிசைகளில் எங்களுக்கு இருக்கை-எப்போதும்) அப்போதே மாலதி அவர்கள் நன்றாக பாடுவார்கள்...

    ReplyDelete
  9. தூள் மாமு விமர்சனம், ஆமா இந்த படம் எந்த தியட்டேர்லே ஓடுது.
    ஜாலி ஜாலி, இன்னைக்கு வியாழன் வேலை அரை நாள்தான் ஜெட்டாஹ் பலத் போய் பார்த்து விட வேண்டியதுதான் .
    (சும்மா கலாய்ச்சேன் )

    ReplyDelete
  10. நல்ல பாடல்கள் கேட்பது எப்பவுமே ஒரு இனிமையான தருணம் தான்.... அதிலும் நேரடியாக பாடி கேட்பது ரொம்ப உற்சாகமாக இருக்கும்...

    தகவல்களுக்கு நன்றி சார்...

    ReplyDelete
  11. நல்ல பகிர்வு. நான் இதுமாதிரி இசை நிகழ்ச்சிகளை இதுவரை நேரில் பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்று நெடுநாளைய ஆசை....

    ReplyDelete
  12. ANNA wonderful detailing and interesting to read too!

    ReplyDelete
  13. இது மாதிரி நிகழ்ச்சிகளை நேரில் பார்ப்பது தான் மிகவும் நல்லாயிருக்கும். திண்டுக்கல் அங்கிங்கு ஆர்கெஸ்ட்ராவினர் மிக அருமையாக நிகழ்ச்சி நடத்துவர்.திண்டுக்கல்லில் எங்கள் வீட்டிற்கு அருகில் குடியிருந்தனர். அவர்கள் ரிகர்சல் செய்வதை கேட்கவே நல்லாயிருக்கும்.ரஹ்மானின் நிகழ்ச்சி அடுத்த மாதம் நேரு ஸ்டேடியத்தில் என் மகனுடன் போகலாம் என்று ப்ளான்.

    ReplyDelete
  14. இது போன்ற விவரங்கள் எப்போதுமே சுவாரஸ்யம் அளிப்பவை. ராஜ் டிவியில் எந்தத் தேதியில் போடுகிறார்கள்? நீங்கள் தெரிவீர்களா?

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளை தனியாக இதுப்போல பார்க்க, கேட்க நல்லா இருக்கும். ஆனாம் இப்போலாம் கல்யாணத்துல வச்சு இம்சை குடுக்குறாங்க. ரொம்ப நாள் கழிச்சு பார்க்குற சொந்தங்கள், நண்பர்கள்கிட்ட பேச முடியாம டொம்மு டொம்முன்னு தட்டுவாங்க. எரிச்சலாத்தான் இருக்கும்

    ReplyDelete
  17. இவங்க எங்க கல்லூரி மாணவர்கள் [மாநிலக் கல்லூரி], அவங்க மனதில் தான் படித்த கல்லூரிக்கு ஒரு ஸ்பெஷல் இடம் எப்பவும் உண்டு அதனால் கல்லூரியில் நடக்கும் எந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டாலும் தவறாம வருவாங்க. இங்கே படிக்கும்போது கல்லூரி நிகழ்சிகளை ஒரு ஜாலிக்காக நடத்தி பின்னர் அது வெற்றியடைய அதையே இந்தக் குழுவை ஆரம்பித்தனர். தான் காதலிக்கும் வேறு ஒரு பெண்ணுக்கு கடிதத் தூதுக்கு லக்ஷ்மன் அனுப்பிய பெண் தான் மாலதி, காதலித்த பெண் அல்வா கொடுத்துவிட துடித்த லக்ஷ்மன் மாலதிக்கு முன்னரே தன் மேல் காதல் இருப்பது தெரிய வந்து அவரையே மணமுடித்தார்.

    ReplyDelete
  18. வெங்கட்: உங்க வீட்டம்மா ( கோவை டு தில்லி) இது மாதிரி நிகழ்ச்சி பார்க்கனும்னு ஆசைபடுறாங்க. கூட்டிட்டு போங்க

    ReplyDelete
  19. புதுகை தென்றல் மேடம் : ஆம் ஒளிபரப்பாகும் நாள் & நேரம் பின்னர் தெரிவிக்கிறேன்

    ReplyDelete
  20. ராமலட்சுமி மேடம் : ஆம் நன்றி

    ReplyDelete
  21. மகிழ்ச்சி சீன் கிரியேட்டர் : நன்றி

    ReplyDelete
  22. தனபாலன் சார்: நன்றி

    ReplyDelete

  23. அஜீம் பாஷா :)) நன்றி

    ReplyDelete
  24. வாங்க சமீரா நன்றி

    ReplyDelete
  25. ரோஷினி அம்மா : உங்க வீட்டுக்காரர் கிட்டே சொல்லியாச்சு. நிச்சயம் கூட்டி போவார் நன்றி

    ReplyDelete
  26. நன்றி அன்பு மகிழ்ச்சி

    ReplyDelete
  27. அமுதா கிருஷ்ணா : ஆஹா ரகுமான் கச்சேரியா ? தூள் கிளப்புங்க

    ReplyDelete
  28. ஸ்ரீராம் சார்: எப்போ வருதுன்னு இன்னும் தெரியலை. நிச்சயம் சொல்றேன்

    ReplyDelete
  29. ராஜி: கல்யாண வீட்டுல ஆர்கெஸ்ட்ரா முழுசா ரசிக்க முடியலை; பக்கத்தில் பேசவும் முடிவதில்லை

    ReplyDelete
  30. விரிவான விபரங்களுக்கு மிக நன்றி தாஸ். லட்சுமன்- மாலதி காதல் கதை ஏற்கனவே கேள்விப்பட்டுள்ளேன் இங்கு அதனை தெரியாத மற்றவர்கள் கேட்கும் வண்ணம் நீங்க மறுபடி சொன்னது மகிழ்ச்சி

    ReplyDelete
  31. The comments are goods and it looks like we are seeing the programme live.

    Thanks

    ReplyDelete
  32. முதல் முறையாக இப்ப இசைக்குழுவினருடன் பழகும் வாய்ப்பு கிடைத்திருப்பதால் உங்களுக்கு சில விசயங்கள் ஆச்சரியம் ஏற்படுத்தியிருக்கும். பொதுவாக எல்லா இசைக்குழுவினரும் முதலிலேயே என்னென்ன பாடல்கள் யார் யார் பாடவேண்டும் என முடிவு செய்து அவர்களுக்கும் தகவல் கொடுத்து விடுவர். அதே போல இசை வல்லுனர்களுக்கும் சொல்லிவிடுவர். அவர்கள் அதற்கான பயிற்சியை மேற்கொண்டு விடுவதால் நிகழ்ச்சிக்கு வந்து எதுவும் செய்ய மாட்டார்கள்.

    ReplyDelete
  33. எனக்கு எங்கள் ஊர் திருவிழாவிற்கு விஜய் டிவி, சூப்பர் சிங்கள் ஜூனியர்ஸ் மற்றும் அங்கே வாத்தியம் இசைக்கும் கலைஞர்களை வைத்து நிகழ்ச்சிநடத்தவேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. என்ன செயவாகும்? நண்பர்கள் யாருக்கேனும் தெரியுமா?

    ReplyDelete
  34. சொல்ல மறந்துவிட்டேன். திரு.மோகன் சார் உங்கள் எழுத்து, நிகழ்ச்சியை நேரில் பார்ப்பது போல் இருந்தது. நன்றி

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...