டிவி யில் பார்த்த படம் - வாகை சூடவா
வாகை சூடவா - சன் டிவியில் மறுபடி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இம்முறை மிக வியந்த விஷயம் ஹீரோயின் நடிப்பு தான் ! தமிழில் இனியாவுக்கு முதல் படம் என்றால் நம்பவே முடியாது. என்ன ஒரு எக்ஸ்பிரஷன். உடல் மொழி..மிக அட்டகாசமான நடிப்பு.
இயக்குனர் சற்குணம் மனதை தைக்கும் விதத்தில் படத்தை எடுத்திருந்தார். எங்கள் தஞ்சை மண்ணில் பிறந்த இவர் தரமான படங்களை மட்டுமே வழங்கி வருவது மகிழ்ச்சி தருகிறது.
பிளாஷ்பேக் : செல்லமே செல்லம்
முன்பு டிவிக்களில் வந்து பலரும் ரசித்த சில நிகழ்சிகளை இந்த வரிசையில் பார்ப்போம்.
ஜெயா டிவியில் உமா பத்மநாபன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி செல்லமே செல்லம். அம்மா மற்றும் குழந்தை பங்கு பெரும் இதில் குழந்தைக்கு எளிதான கேள்விகள் தான் கேட்பார்கள். அதற்கு குழந்தையும் அம்மாவும் பெரும்பாலும் மாற்றி தான் பதில் சொல்வார்கள். பார்க்க காமெடியாய் இருக்கும். அழகான சின்ன சின்ன குழந்தைகளை பார்க்கும் ஆவலிலேயே விடாமல் பார்ப்போம். துவக்கத்தில் வரும் "செல்லமே செல்லம்" என்கிற பாட்டு பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் நினைவில் இருக்கு ! இது போன்ற குழந்தைகள் நிகழ்ச்சி இப்போது ஏதும் வருதா என தெரிய வில்லை.
வருத்தமான செய்தி
சண் டிவியில் சிறு குழந்தைகளுக்கு சமையல் சொல்லி தரும் நிகழ்ச்சி நடத்தி வந்த பிரபல சமையல் கலை நிபுணர் திரு ஜேக்கப் மாரடைப்பால் நேற்று மரணமடைந்தார்.38 வயதே நிரம்பிய இவரது மரணம் வருத்தமும் அதிர்ச்சியும் தருகிறது. கின்னஸ் சாதனையாளரான இவர் பேச்சிலர் ஆகவே இருந்துள்ளார். ஜேக்கப் அவர்களது ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்துக்கு தைரியம் தரவும் இறைவனை வேண்டுகிறேன்
வெறுப்பேற்றும் விளம்பரம்
கோல்ட்வின்னருக்கு ஒரு மொக்கை விளம்பரம் வருகிறது. பார்த்தாலே பற்றி கொண்டு வருகிறது. ரம்யா என்று ஓர் தொகுப்பாளினி இருக்கிறாரே அவர் " இந்த தீபாவளி...." என்று சொல்லி விட்டு வேகமாய் எதோ பிதற்றுகிறார். பின் இது தான் சொன்னேன் என்று ஒரு விளக்கம் வேறு. கொடுமையான விளம்பரத்துக்கு போட்டி வைத்தால் இந்த விளம்பரம் டப் பைட் கொடுக்கும் . மாத்தி யோசிங்க சாரே !
சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ்
சென்ற சூப்பர் சிங்கர் சீசன் முடிந்ததும் சிவ கார்த்திகேயன் அடித்த காமெடிகளும், அவரின் புலோப்பர்ஸ்சும் தனியாக ஓரிரு நாள் போட்டார்கள். பலரும் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சியாக அது இருந்தது. பின் யூ டியூபிலும் ஆயிரகணக்கானோர் பார்த்து மகிழ்ந்தனர். ஆனால் இப்போது முடிந்த சூப்பர் சிங்கர் புலோப்பர்ஸ் இந்த வாரம் போட்டார்கள். மரண மொக்கை ! அஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாமல் சானல் மாற்றி விட்டோம். சிவ கார்த்திகேயன் சினிமாவுக்கு போனது தமிழ் காம்பியரிங் உலகில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது என்று தான் சொல்லணும் !
சுவாரஸ்ய புது நிகழ்ச்சி : குட்டி சுட்டீஸ்
சொல்லுங்கண்ணே சொல்லுங்க இமான் சண் டிவி யில் தொகுத்து வழங்கும் புது நிகழ்ச்சி "குட்டி சுட்டீஸ் ". நான்கு குட்டி குழந்தைகளை வைத்து கொண்டு அவர்களிடம் சில கேள்விகள் கேட்டு தன் ட்ரேட்மார்க் கமன்ட் வழங்குகிறார் இமான். சொல்லுங்கண்ணே நிகழ்ச்சி போல பொது அறிவு கேள்வியாய் இல்லாமல் குழந்தைகளிடம் பிடித்த சாப்பாடு, சிறந்த நண்பன், அம்மா-அப்பா பற்றி என ஜாலியாய் போகிறது கேள்விகள். கோட் சூட்-டுடன் இமானை பார்க்கவே ஜாலியா இருக்கு. உங்கள் வீட்டில் குட்டி பசங்க இருந்தால் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துக்கலாம் என தொடர்பு கொள்ள ஒரு நம்பரும் தர்றாங்க. ஜாலி ஆன நிகழ்ச்சி. ஞாயிறு மாலை ஐந்தரை மணிக்கு வருகிறது முடிந்தால் பாருங்கள் !
ரசித்த முகநூல் செய்தி
ஓராண்டு ஆட்சியில் நூறாண்டு சாதனை புரிந்த அம்மாவின் ஜெயா டிவியில் "நீங்களும் செல்லலாம் தெருக்கோடி" என்ற விளம்பரம் அடிக்கடி வருகிறது !
மாணவன் ஆசிரியரை கத்தியால் குத்திய சம்பவம்
தினம் ஏன் தாமதமாய் வருகிறாய் என ஆசிரியர் கேட்டதால், அவரை பதிமூன்று வயது மாணவன் பின்னாலிருந்து கத்தியால் குத்திய சம்பவம் இந்த வாரம் நடந்தது. இது பற்றி அந்த ஏரியாவின் கல்வி அதிகாரி பேசியதை நியூஸ்களில் காட்டினார்கள்
" சின்ன கத்தி தான் அது. ஒண்ணும் பிரச்சனை இல்லை. லேசா தான் குத்தினான். பெருசா பாதிப்பில்லை. ஆசிரியரை ஆஸ்பத்திரியில் சேத்துருக்கோம். அவரு நார்மலா நல்லாருக்கார். பையனை போலீசில் வச்சு விசாரிச்சிக்கிட்டு இருக்கோம். எல்லாம் கண்ட்ரோல்லே இருக்கு. எல்லாத்தையும் சரி பாத்துட்டோம் . ஒண்ணும் ப்ராப்ளம் இல்லை"
வரிக்கு வரி ப்ராப்ளம் இல்லை; சரி பண்ணியாச்சு; கண்ட்ரோலில் இருக்கு என அவர் பேசியது, சீரியஸ் விஷயத்தை காமெடி ஆக்கிடுச்சு. எல்லாம் சொன்ன அவர், " என்னைய வேலைய விட்டு மட்டும் தூக்கிடாதீங்க" என்ற கவுண்டர் டயலாக் மட்டும் சொல்லவே இல்லை :)
சமையல் ஜேக்கப் மரணம்??? நம்பவே முடியலைங்க. பாவம் சின்ன வயசு:(
ReplyDeleteஅன்னார் குடும்பத்துக்கு எங்கள் இரங்கல்கள்.
நியூஸியிலே ஃபேர் கோ என்று ஒரு நிகழ்ச்சி உண்டு. அதுலே வருசாவருசம் பெஸ்ட் அண்ட் வொர்ஸ்ட் விளம்பரங்களுக்குப் பரிசு கொடுக்கறாய்ங்க.
Deleteநன்றி டீச்சர்
வாகை சூடவா நானும் சில காட்சிகள் மட்டும் பார்த்தேன்.... நல்ல படம் - முழுதும் பார்க்கவேண்டும்!
ReplyDeleteஜேக்கப் - எனது இரங்கல்....
விளம்பரம் - மகா கொடுமை!
குட்டி சுட்டீஸ் - விளம்பரம் பார்த்தேன் - நிகழ்ச்சி பார்க்க வில்லை இன்னும்.
Deleteவெங்கட் நன்றி
ஜேக்கப் அவர்களின் மரணம் துரதிஷ்டமானது வருந்துகிறேன்
ReplyDeleteஆம் கண்ணதாசன்
Deleteவாகை சூட வா - இப்பவும் பார்க்கவில்லை.
ReplyDeleteஉ.ப. மதிப்பெண் வழங்கும் (வழங்கும் நிகழ்ச்சி என்றால்) முறை வேடிக்கையாக இருக்கும்!
ஜேக்கப் மரணம் அதிர்ச்சிதான்.
வெறுப்பேற்றும் விளம்பரம்... நல்லவேளை, இதுவரை கண்ணில் படவில்லை!
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பார்க்கவில்லை!!
குட்டி சுட்டி இமான் நிகழ்ச்சி பார்க்க நினைத்து மறந்து விட்டது! (ஆகா அதுவும் பார்க்கவில்லை!)
கத்தியால் குத்திய மாணவன் பற்றி ஆசிரியர் கோபப் பட்டு ஒன்றும் என்பது ஒரு +
Deleteவிரிவான கருத்துகளுக்கு நன்றி ஸ்ரீராம் சார்
'கத்தியால் குத்திய மாணவன் பற்றி ஆசிரியர் கோபப் பட்டு ஒன்றும்.... ' இங்கு "சொல்லவில்லை" என்ற வார்த்தை விடுபட்டு விட்டது. ஜி மெயில் புதிய முறை தமிழ் டைப்பிங்கில் எனக்கு அடிக்கடி வரும் தொல்லை இது! :))
ReplyDeleteஇளம் வயதில் காலமான ஜேக்கப் குடும்பத்தினருக்கு ஆறுதல் கிடைக்கப் பிரார்த்தனைகள்.
ReplyDeleteமாணவருக்கு என்ன பிரச்சனை என சரியான முறையில் அணுகினார்களா தெரியவில்லை.
வாகை சூட வா சில காட்சிகள் படம் வெளியான புதிதில் பார்த்திருக்கிறேன். ரசிக்க முடிந்தது. இன்னொரு முறை போடாமலா போய்விடுவார்கள்:)?
ராமலட்சுமி
Delete//மாணவருக்கு என்ன பிரச்சனை என சரியான முறையில் அணுகினார்களா தெரியவில்லை.//
ஆம் மேடம் சரியான கவுன்சலிங் (டாக்டர்/ ஆசிரியர்கள்) தந்திருக்கணும்
சமையல் நிகழ்ச்சின்னாலே ஸ்டூடியோக்குள்ள பத்துக்கு பத்து ரூமுல அரை மணிநேரம் அல்லது 1 மணினேரம் மொக்கைப் போடுறதை மாத்தி..., வெவ்வேறு லொக்கேஷன்ல அந்த ஊருல விளையும் காய்கறிகள், கனிகள், அங்க கிடைக்கும் நண்டு, எறா, சுறாவை வெச்சு அந்தந்த ஊரு ஸ்பெஷல் உணவை அங்கனயே சமைச்சு அசத்துவார். ஒவ்வொரு பண்டிகை போதும் அந்த பண்டிகை ஸ்பெஷல் பலகாரங்களையும் சமைப்பார் எந்தவித மத பாகுப்பாடின்றி. குட்டீசுக்கு சமைக்கும் ஆர்வத்தை செம கலகலப்பா ஏற்படுத்துனவர். அவர்க்கு இந்த சின்ன வதுல மரணம் ஏற்பட்டிருக்க வேணாம். அவருக்கு என் அஞ்சலிகள்.
ReplyDeleteராஜி மிக உண்மை :(
Deleteஜேக்கப் நன்றாகத் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தார். அவரது இறப்பு அதுவும் மாரடைப்பால் என்பது சற்று அதிர்ச்சியாகத் தான் இருக்கிறது. அவர் உறவுகளுக்கு அனுதாபங்கள்.
ReplyDeleteவிளம்பரத்தைப் பார்த்த என் பெண் அதன் விளக்கத்தில் ‘இந்த தீபாவளி’ என்று வரும்படிக் கூட இல்லையே என்று கிண்டல் செய்தாள்.
வாகை சூடவா படம் மிஸ் செய்யாமல் பார்க்கவேண்டும் என்று ஏற்கனவே எங்கள் வீட்டில் ரிமைண்டரில் போட்டு வைத்திருந்தனர். நல்ல படம்!
Deleteசீனி
//விளம்பரத்தைப் பார்த்த என் பெண் அதன் விளக்கத்தில் ‘இந்த தீபாவளி’ என்று வரும்படிக் கூட இல்லையே என்று கிண்டல் செய்தாள்.//
:))
வாகைசூடவா படம் முன்பே பார்த்துவிட்டேன். படம் எனக்கு பிடித்திருந்தது.
ReplyDeleteஜேக்கப் அவர்களின் மரணத்திற்கு அனுதாபங்கள்.
திரு.ஜேக்கப் மரண செய்தி இன்று காலையில் சன் நியூசில் கேட்டதும் அப்படி ஒரு ஷாக். மிக தன்மையாக அமைதியாக பேசுவார்.சாப்பாட்டில் சேர்த்திருக்கும் பொருட்களின் சத்து விகிதம் பற்றி அவ்வளவு பொறுமையாய் சொல்வார்.
ReplyDeleteசமீபத்தில் என் அம்மாவிற்கு ஆஞ்சியோ ப்ளாஸ்டி செய்த போது 29 வயதுள்ள சாஃப்ட்வேர் பணியிலிருப்பவருக்கும் செய்தாங்க. ஐசியுவில் அவரை பார்த்த போது டாக்டரிடம் நான் புலம்பியே விட்டேன்.டென்ஷன் டென்ஷன் என்று இருப்பதால் தான் இந்த பிரச்சனை என்று டாக்டர் கூறினார்.அந்த நண்பருக்கு சிகரெட் பழக்கம் கிடையாதாம்,ஃபேமிலியில் யாருக்கும் ஹார்ட் ப்ராபளம் இல்லையாம்.டாக்டர் நம்ம கையில் எதுவும் இல்லை என்று மேலே கையை காண்பித்தார்.
Deleteஅமுதா: ம்ம் வாழ்க்கை முறை தான் இத்தகைய நோய்களை வரவைக்குது போலும்
சென்ற முறை சூப்பர் சிங்கர் முடிந்ததும் அந்த குட்டீஸ் கூட சிவகார்த்திகேயன் அடித்த லூட்டி செம சூப்பர்... அந்த பசங்க எல்லாம் தங்க்லீஷ் ல பாடி அசதினது மறக்க முடியாது.. அவர் இடம் வெற்றிடம் தான் மறுபதற்கில்லை... அதுபோல அது இது எது கூட செம மொக்கையாக செல்கிறது.. எபோதாவது பார்ப்பதும் இப்போது நின்றுவிட்டது...
ReplyDeleteசெல்லமே செல்லம் இப்பொது வருவதில்லை.. நல்ல நிகழ்ச்சி!!
சமீரா: செல்லமே செல்லம் பாதுருக்கீன்களா நன்றி
Deleteவாகை சூடவா, சாட்டை தமிழ்த் திரையுலகில் நம்பிக்கையூட்டுபவை!
ReplyDeleteமரணத்துக்கு வயதில்லை, ஜேக்கப் அவர்கள் மரணம் நினைவூட்டுகிறது. அனுதாபங்கள்!
ஏனைய "தொல்லை" கள் பற்றி ஏதும் தெரியாது.
நன்றி யோகன்
Deleteஜேக்கப் அவர்கள் ஆன்மா சாந்தியடைய வேன்டுகிறேன்.
ReplyDeleteனேங்கள் கூரியது போல் மரண மொக்கை விளம்பரம் இன்னும் சிலது இருக்கிறது.ஹமாம் சோப்பு பஜ்ஜி சாப்பிடும் விளம்பரம்.
ஆரிப் நல்லவேளை அவற்றை நான் இன்னும் பார்க்கலை :)
Deleteஜேக்கப்பின் மரணத்தை இன்னும் ஜீரணிக்க முடியலை. சஞ்சீவ் கபூருக்கு அடுத்தபடியாக எனக்கு மிகவும் பிடித்த சமையல் கலைஞர்.
ReplyDeleteகுட்டி சுட்டீஸ் போன வாரம் பார்த்தேன். அண்ணாச்சியின் கலாட்டா பதில்கள் அட்டகாசம்.
அமைதி சாரல்: ஆமாங்க எங்க வீட்டில் கூட அனைவருக்கும் ஷாக் தான்
Deleteஜேகப்...இழப்பு நம்ப முடியவில்லை...
ReplyDeleteவாகை சூடவா
ReplyDeleteநானும் பார்த்தேன்...இப்ப தான்...நல்ல படம்...
ஆம் ரெவரி நன்றி
Delete//அஞ்சு நிமிஷம் கூட பார்க்க முடியாமல் சானல் மாற்றி விட்டோம்.//
ReplyDeleteஆபிஸுக்கு கிளம்பறதுக்கு முன்னாடி மைண்ட் கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கணும்னு ஏதாவது காமெடி சீன்ஸ் பார்ப்பேன். நேத்து மதியம் நல்லாருக்கும்னு நம்ம்ம்பி இந்த ப்ரோக்ராம் பார்த்தேன். முடியல....அஞ்சு நிமிஷத்துககப்புறம் 'சிரிப்பொலி'க்கு மாறிட்டேன்.
Deleteரகு: நன்றி
ரொம்ப நாளாய் பார்க்க நினைத்த படம் வாகை சூடவா! அன்று பார்க்க நினைத்து உட்கார்ந்தால் பாதியில் கரண்ட் கட்! ஹீரோயின் நடிப்பு எனக்கும் மிகவும் பிடித்திருந்தது! விமலும் வாத்தியார் வேசத்துக்கு ரொம்ப பொறுத்தம்தான்!
ReplyDeleteஜேக்கப் அவர்களின் மரணம் அதிர்ச்சியை தந்தது. மத பாகுபாடின்றி கடவுளுக்கு எல்லாவித நைவேத்தியங்களும் செய்து தந்து அசத்துவார்.... அவர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
ReplyDeleteவாகை சூடவா பார்க்க நினைத்திருக்கும் படம்...
ஜேக்கப் அவர்களின் மரணம் அதிர்ச்சி! சிவகார்த்திகேயன் விட்டுச்சென்ற வெற்றிடம் ...நிரப்பப் படுவது கடினம்தான்.
ReplyDelete