சூப்பர் சிங்கர் அடுத்த சீசன்
ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரபலப்படுத்துவது என்று விஜய் டிவியிடம் தான் கத்துக்கணும். சூப்பர் சிங்கர் ஜூனியர் முடிந்து சிறு இடைவெளிக்கு பின் சூப்பர் சிங்கர் சீனியர் துவங்க உள்ளது. இதற்கான ப்ரோமோ அருமையாய் செய்துள்ளனர்.
சென்ற முறை பைனல் வரை சென்ற சந்தோஷ் சாய்சரண் உள்ளிட்டோர் இன்று திரை துறையில் பிரபலமாகி விட்டனர் என்பதை காட்டும் வண்ணம் அவர்கள் நால்வரும் பாடிய திரை பாடலை காட்டி, அது என்ன படம் என்று டைட்டிலும் போட்டு காட்டும் போது, இசையில் ஈடுபாடு கொண்டோருக்கு நாமும் பைனல் வந்தால், பின்னணி பாடகராகி விடலாம் என்று ஈர்ப்பு வருவது இயற்கை தானே ! இந்த விளம்பரத்தை சாய் சரண் பாடிய பாடலின் வரியான " நண்பா .....வா நண்பா " என்று பாடி அடுத்த சீசனுக்கு அப்ளிகேஷன் அனுப்புங்கள் என்று முடிப்பது ரசிக்கும் படி இருக்கு.
முக நூல் கைது பற்றிய விவாதம்
சன் செய்திகளில் முகநூலில் பால் தாக்கரே பற்றி எழுதி சிறைக்கு சென்ற இரு பெண்கள் பற்றிய விவாதம் நடந்தது. அதில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் " லைக் பட்டனை அமுக்கியவர்களை கூட சிறையில் போடுவது சரியா? நூறு பேர் லைக் போட்டால், அந்த நூறு பேரையும் சிறையில் வைக்க முடியுமா?" என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன வழக்கறிஞர், " நூறு பேர் சட்ட மீறலான ஒரு முக நூல் செய்தியை லைக் செய்தால், அதனை சைபர் terrorism என கருதி அந்த நூறு பேரையும் கைது செய்ய முடியும் என்றார்.
எப்படியெல்லாம் மிரட்டுறாங்கப்பா !
உங்களில் யார் பிரபுதேவா பைனல் கோயம்பத்தூரில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்து, அது நேற்று விஜய் டிவியில் ஒளிபரப்பானது. காலை 11 மணி முதல் மதியம் மூணரை வரை சென்ற இந்நிகழ்ச்சியை அவ்வப்போது மட்டும் பார்த்தோம். கார்த்திக் என்கிற இளைஞர் பட்டமும் நாற்பது லட்சம் வீடும் வென்றார்.
விஜய் டிவி நிகழ்ச்சி என்றால் அழுகை இல்லாமல் இருக்குமா? இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பின் விபத்தில் இறந்த அஸ்வதி என்ற பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அவரது முழு உயர படம் தந்தனர்.
அவசர சிகிச்சை
ஜெயா டிவியில் சனி காலை ஒன்பது மணி அளவில் அறுவை சிகிச்சையை நேரடியே காட்டுகிறார்கள். சதை பிய்த்து ரத்தம் தெரிகிற நிகழ்ச்சி பார்க்க சற்று பயமாய் தான் இருக்கிறது. ஆனால் எனக்கு தெரிந்த சிலர் இந்த நிகழ்ச்சி விடாமல் பார்க்கிறார்கள். "எந்தெந்த ஆப்பரேஷன் எப்படி செய்கிறார்கள்; என்ன காம்ப்ளிகேஷன் வரலாம்; எப்படி தவிர்க்கணும்" என்ற விஷயங்கள் தெரியும் என்கிறார்கள் அவர்கள். உங்களுக்கு தைரியமான மனது இருந்தால் இந்த நிகழ்ச்சி பாருங்கள். நிச்சயம் மருத்துவ துறையில் பல விஷயம் அறியலாம் !
பிளாஷ்பேக்: பெண் - சீரியல்
டிவிகளில் முதலில் சீரியல் வர ஆரம்பித்த போது வாரம் ஒன்று என்கிற அளவில் தான் வர ஆரம்பித்தது. ஒவ்வொரு வாரமும் அரை மணிக்கு ஒரு சீரியல் இருக்கும். அதே நாள் அடுத்த வாரம் அதன் கதை தொடரும்.
பல்வேறு நடிகைகள் இயக்கிய சீரியல் பெண். ஒவ்வொரு எபிசோடும் ஒவ்வொரு ஹீரோயின் இயக்கினார். அந்த வகையில் சுகாசினி, ரேவதி, ரோகினி போன்றோருக்கு இது தான் இயக்கத்தின் முதல் படி என்று சொல்லணும். இதில் வந்த சில சிறுகதைகள் மிக அருமையாய் இருந்தது. சுஜாதா கதைகளும் இரண்டோ மூன்றோ வந்த நினைவு..
டிவியில் பார்த்த படம்: பள்ளிக்கூடம்
சற்று மெலோ டிராமாவான படங்கள் தான் அதிகம் எடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு உண்மையாக இருந்தாலும், தங்கர் பச்சான் இயக்கிய படங்களில் அழகி, சொல்ல மறந்த கதை மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய மூன்றுமே எனக்கு பிடித்த படங்கள். சமீபத்தில் சன் டிவியில் பள்ளிக்கூடம் படம் மீண்டும் பார்த்தேன்.
நாம் படித்த பள்ளிக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்கிற கான்செப்ட் உண்மையில் மிக அருமையான ஒன்று. படம் பார்த்து முடிக்கும் போது நமக்கும் நம் பள்ளியை பார்க்கவும், அந்த பள்ளிக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்றும் தோன்றுகிறது. ஆனால் எத்தனை பேர் அதனை அடுத்த கட்டத்துக்கு எடுத்து போகிறோம் என்பது கேள்விக்குறியே.
தங்கர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு, பிற நடிகர்களை வைத்து இந்த மண்ணின் கதைகளை தொடர்ந்து இயக்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.
லிட்டில் மாஸ்டர்ஸ்
ஜெயா டிவியில் நடக்கும் டான்ஸ் ஷோ- லிட்டில் மாஸ்டர்ஸ். நடன இயக்குனர் ரகுராம் மற்றும் நடிகை மும்தாஜ் தான் ஜட்ஜ்கள். இவர்களோடு பிரிதிவிராஜ் வேறு. நாங்கள் பார்த்த எபிசோடில் அவர் devil மாதிரி வேஷத்தில் வந்து மிரட்டினார். பிரிதிவிராஜை சாதரணமா பார்த்தாலே சற்று பயமாய் தான் இருக்கும் இதில் devil வேஷத்தில் கேட்கவே வேணாம் !
இந்த நிகழ்ச்சியில் நிஜமா ஏழு அல்லது எட்டு வயது குட்டி பசங்க தான் ஆடுறாங்க (விஜய்யில் -பதிமூணு பதினாலு வரை ஜூனியர் என்பார்கள் ). ஜட்ஜ்கள் மார்க் போடாமல் சூப்பர், சுப்ரீம், சுமார் என்று கிரேட் சொல்றாங்க
பசங்க என்னவோ நல்லா தான் ஆடுறாங்க. ஆனா ஏனோ நிகழ்ச்சி தான் விஜய் டிவி ப்ரோகிராம்கள் அளவு பாப்புலர் ஆகலை.
சன் எக்ஸ்பிரஸ் கொண்டாட்டம்
ஞாயிறு மாலை நான்கரை மணிக்கு சன் டிவியில் வரும் புதிய நிகழ்ச்சி " சன் எக்ஸ்பிரஸ் கொண்டாட்டம்". அவர்களுக்கு SMS அனுப்பும் வாசகர் வீட்டுக்கு நேரடியே செல்கிறார்கள். அவர்களுக்கு தேவையான பொருள் என்ன வேண்டும் என கேட்டு, அதனை அவர்கள் முன் கொண்டு வந்து இறக்குகிறார்கள். அவர்கள் கேட்கும் மூன்று கேள்விகளில் இரண்டுக்கு பதில் சொன்னால் அந்த பொருள் அவர்களுக்கே கிடைக்கிறது.
இந்த நிகழ்ச்சி நேற்று (நவம்பர் 25 ) நாங்கள் வருடா வருடம் பேச்சு போட்டி, பாட்டு போட்டி நடத்தும் செயின்ட் லூயிஸ் விழி இழந்தோர் பள்ளியில் நடத்தினார்கள். கலந்து கொண்ட சிறுவர்கள் எல்லாமே எங்களுக்கு நன்கு அறிமுகமானவர்களே . சிறுவர்கள் சரியே பதில் சொல்லி பள்ளிக்கு ஒரு நல்ல ஆடியோ சிஸ்டம் வென்றனர். காண மகிழ்ச்சியாய் இருந்தது
பல நேரங்களில் ஏழைகளுக்கும், உண்மையில் உதவி தேவைப்படுவோருக்கும் உதவுகிற வகையில் இந்த பரிசுகள் அமைகின்றன. தங்கள் பிரபலத்துக்கு தான் செய்கிறார்கள் என்றாலும் சன் டிவி செய்யும் இந்த நல்ல செயலை பாராட்டி தான் ஆகவேண்டும் !
****
அண்மை பதிவுகள் :
இங்க்லீஷ் விங்க்லீஷ் : தவறவிடகூடாத ஒரு படம்
மோதிப்பார்- அமெரிக்காவுக்கு எதிரான மனிதரின் கதை
தூக்கு தண்டனை தேவையா? ஒரு விவாதம்

உங்களில் யார் பிரபுதேவா

மிக அருமையான பதிவு
ReplyDeleteவணக்கம் வளர்ந்து வரும் புதிய திரட்டி தினபதிவு
உங்கள் வரவை விரும்புகிறது.
தினபதிவு திரட்டியில் இன்று அட்ராசக்க -சி.பி. செந்தில்குமார் சிறப்பு பேட்டி
http://www.dinapathivu.com/
தினபதிவு திரட்டி
நன்றி தினபதிவுகள்
Deleteஎன்னால சேர்ந்தாப்பல அரை மணிநேரம் டிவி பார்க்க முடியலை.உங்களால மட்டும் எப்படி பார்க்க முடியுது?! பொறுமையின் சிகரம் சகோ நீங்க!
ReplyDelete
Deleteவாங்க ராஜி. சவுக்கியமா?
உண்மையிலேயே விஜய் தொலைக்காட்சியைப்
ReplyDeleteபார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய
இருக்கிறது...
நல்ல அலசல்கள் நண்பரே..
நன்றி மகேந்திரன்..
Deleteஇந்த நிகழ்ச்சிகளில் எதுவுமே நான் பார்க்கவில்லை! :))
ReplyDelete
Deleteஸ்ரீராம் சார்: நல்லது !!
பல நிகழ்ச்சியின் தகவலுக்கு நன்றி... (மின்வெட்டு Now 18 hours)
ReplyDeleteதனபாலன் சார்: 18 மணி நேரமா ? கொடுமை !
Deleteசூப்பர் சிங்கர் விளம்பரம் நன்றாகத் தான் உள்ளது.
ReplyDeleteபெண் சீரியல் முன்பு பார்த்திருக்கிறேன். வித்தியாசமாக இருக்கும்.
பள்ளிக்கூடம் இதுவரை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
வாங்க ரோஷினி அம்மா நன்றி
Deleteஇவ்வளவு நிகழ்ச்சிகள் பார்த்து அதை பற்றிய விமர்சனம் இடுகின்றீர்கள் மோகன் சார் பாராட்டுக்கள் எனக்கு நியூஸ் மியூசிக் திரைப்படம் பார்க்கவே நேரம் போதவில்லை
ReplyDeleteசரவணன் : நலமா? நன்றி
Deleteநல்ல பகிர்வு மோகன். தொலைக்காட்சி தொடர்ந்து பார்க்காத என் போன்றவர்களுக்கு தகவல்கள் தரும் பகிர்வு... :)
ReplyDeleteவெங்கட்: நன்றி
Deleteபள்ளிக்கூடம் முன்பு பார்த்திருக்கின்றேன். "தங்கர் படங்களில் நடிப்பதை முற்றிலும் நிறுத்தி விட்டு, பிற நடிகர்களை வைத்து..." உங்கள் கருத்துத்தான் என்கருத்தும்.
ReplyDeleteதொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ...சூப்பர் சிங்கர் மட்டும் இடையிடையே பார்த்திருக்கின்றேன்.