ரமேஷ் என்ற அலுவலக நண்பர் ... புதுப் படங்களை விரும்பி பார்த்து விட்டு நம்மிடம் வந்து விவாதிப்பார். தீபாவளி அன்று துப்பாக்கி டிக்கெட் கிடைக்காமல் போடா போடி பார்த்திருக்கிறார். மறுநாள் "போடா போடி பார்த்தேன் சார் நல்லா இருந்தது " என்றவரை ஏற இறங்க நான் பார்த்த பார்வையில் " நிஜமா தான் சார். நல்லாருக்கு. பாத்துட்டு சொல்லுங்க ".
இவரை இப்பதிவில் மீண்டுமொரு முறை சந்திப்போம். இப்போ போடா போடி கதை என்னான்னு பார்க்கலாம்.
கதை
லண்டனில் இருக்கும் நிஷா (தீபாவளி ரிலீஸ் படம் இரண்டிலும் ஹீரோயின் பெயர் நிஷா தான் கவனிச்சிங்களா?) - புதுமுகம் வரலட்சுமி டான்ஸ் தான் உயிர்மூச்சு என வாழ்கிறார். லண்டன் வரும் சிம்பு அவரை காதலிக்க, ஓர் கட்டத்தில் திருமணம் "ஒருவழியாய்" நடந்து முடிகிறது.
சிம்பு தன் மனைவி டான்ஸ் ஆடுவதையும், ஆண்களிடம் "ப்ரீ-யாய் பழகுவதையும் கை விடணும் என முயல்கிறார். அவர் மனைவியோ லண்டனில் நடக்கும் மிக பெரிய டான்ஸ் போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதில் ஜெயித்தது யார் என்பதை தைரியம் இருந்தால் வெண்திரையில் காண்க !
தனக்கு பின்னால் நடிக்க வந்த ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி போன்றோர் கூட தாண்டி போய் விட சிம்புவின் காரியர் கிராப் ஏனோ மேலே போகவே மாட்டேன் என்கிறது. நன்கு டான்ஸ் ஆடவும் , நடிக்கவும் தெரிந்த இளம் நடிகர் ! கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது அவசியம் என்பதை உணரவேண்டும்.
முதல் பாட்டில் சிக்ஸ் பாக் போல எதோ ஒன்று முயற்சி செய்துள்ளார் சிம்பு. நிஷாவை - நிசா நிசா என இவர் அழைப்பது செம சிரிப்பு. ஒரே சண்டை -அதுவும் ஓரிரு நிமிடத்தோடு முடிவது ஆறுதல்.
மிக பெரிய ஏமாற்றம் : ஹீரோயின். நெற்றி முழுதும் மறைத்து, கண்ணின் மேல் விழும் ஹேர் ஸ்டைலில் பெரும்பகுதி வருகிறார். அது அவருக்கு சுத்தமாய் செட் ஆகலை. ஆண்மை கலந்த குரல்.. கடைசியில் ஆடும் சல்சா டான்ஸ்சில் தான் அவர் உழைப்பும் நளினமும் தெரிகிறது. பிரபலமான வேறு ஹீரோயின் நடித்திருந்தால், படம் சற்று தப்பித்திருக்க கூட வாய்ப்பு உண்டு.
படத்தில் சின்ன சின்னதாய் சில விஷயங்கள் ரசிக்க வைக்கிறது :
கதையில் வரும் காதல்- கல்யாணம்- இதற்கெல்லாம் ஒவ்வொரு சாப்டர் பெயர் சொல்வது ( காதல் வந்த ஜோரு/ கல்யாணம் - கத்திரிக்காய், etc )
VT கணேஷ் அடிக்கும் சின்ன சின்ன ஜோக்குகள் (ஷகீலா படம் பார்த்து மனைவியிடம் மாட்டுவது)
கொஞ்சம் மெனக்கெட்டால் இயக்குனரால் நல்ல படம் தரமுடியும் என சொல்லும் காட்சிகள் இவை.
***
"லவ் பண்ணலாமா வேணாமா?" என சிம்பு திரும்ப திரும்ப பாட்டில் கேட்க, : "வேணாம்ப்பா; வேணாம்; லவ்வுக்கும் உனக்கும் ராசியே இல்லை" என கமன்ட் வருகிறது !
லண்டன் போன்ற காஸ்ட்லி ஊரில் சிம்பு -வரலட்சுமி இருவரும் வேலைக்கு போற மாதிரியே தெரியலை ! அப்புறம் பூவாவுக்கு எப்படி மேனேஜ் பண்றாங்களோ தெரிலை !
டான்சை முக்கியமாய் கொண்ட படத்தில் பாடல்கள் சுத்தமாய் சொதப்பி விட்டது.
கல்யாணமாகி பத்து நாள் ஹீரோ-ஹீரோயின் கட்டி பிடித்து கொண்டு தூங்குவார்களாம்; வேறு ஒண்ணும் நடக்காதாம்; சித்தப்பா " பிள்ளை பெத்துக்க; டான்ஸ் ஆட மாட்டா" என்றதும் ஹீரோயினை கர்ப்பமாக்கி விடுகிறார் சிம்பு.
இப்படத்துக்கு ஏன் வெளிநாட்டு லொகேஷன்னு தெரியலை; ஹீரோயின் ரொம்ப முற்போக்கு என்பதாலா? நம்ம ஊரிலேயே இப்படி பெண்கள் இருக்காங்களே ! (ஆனால் வெளிநாட்டை பார்ப்பது தான் படத்தில் நமக்கு பெரும் ஆறுதல்)
***
விரைவில் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறை சூப்பர் ஹிட் படம் போடா போடி என போடுவார்கள். அப்போது ஒரு முறை பாருங்கள் !
டிஸ்கி:
நான் படம் பார்த்து முடித்த மறுநாள் ரமேஷ் வந்தார் " சார் அந்த படம் சரி கிடையாது சார். கூட்டமே இல்லியாம்; நீங்க வேற அதை பாத்துட போறீங்கன்னு தான் சொல்றேன் " என்றார்.
அடபாவி.. இன்னிக்கு வந்து மாத்தி சொல்றியே ...நீ ஒரு நாள் லேட்டுய்யா !! ஒரு நாள் லேட்டு !!
***
அண்மை பதிவுகள்:
துப்பாக்கி: விமர்சனம் : இங்கு
நீர்ப்பறவை-ஏ. ஆர். ரகுமான்-விஜய் விளம்பரம் : இங்கு
இவரை இப்பதிவில் மீண்டுமொரு முறை சந்திப்போம். இப்போ போடா போடி கதை என்னான்னு பார்க்கலாம்.
கதை
லண்டனில் இருக்கும் நிஷா (தீபாவளி ரிலீஸ் படம் இரண்டிலும் ஹீரோயின் பெயர் நிஷா தான் கவனிச்சிங்களா?) - புதுமுகம் வரலட்சுமி டான்ஸ் தான் உயிர்மூச்சு என வாழ்கிறார். லண்டன் வரும் சிம்பு அவரை காதலிக்க, ஓர் கட்டத்தில் திருமணம் "ஒருவழியாய்" நடந்து முடிகிறது.
சிம்பு தன் மனைவி டான்ஸ் ஆடுவதையும், ஆண்களிடம் "ப்ரீ-யாய் பழகுவதையும் கை விடணும் என முயல்கிறார். அவர் மனைவியோ லண்டனில் நடக்கும் மிக பெரிய டான்ஸ் போட்டியில் ஜெயித்தாக வேண்டும் என ஒற்றைக்காலில் நிற்கிறார். இதில் ஜெயித்தது யார் என்பதை தைரியம் இருந்தால் வெண்திரையில் காண்க !
*********
முதலிலேயே ஒன்றை சொல்லி விடுகிறேன்: படம் ஓஹோவும் கிடையாது. நீங்க "அடப்பாவமே.. இந்த படமெல்லாம் பாக்குறியா" என துக்கம் விசாரிக்கும் அளவு மோசமும் கிடையாது. தனக்கு பின்னால் நடிக்க வந்த ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி போன்றோர் கூட தாண்டி போய் விட சிம்புவின் காரியர் கிராப் ஏனோ மேலே போகவே மாட்டேன் என்கிறது. நன்கு டான்ஸ் ஆடவும் , நடிக்கவும் தெரிந்த இளம் நடிகர் ! கெளதம் மேனன் போன்ற நல்ல இயக்குனர்களை தேர்ந்தெடுத்து நடிப்பது அவசியம் என்பதை உணரவேண்டும்.
முதல் பாட்டில் சிக்ஸ் பாக் போல எதோ ஒன்று முயற்சி செய்துள்ளார் சிம்பு. நிஷாவை - நிசா நிசா என இவர் அழைப்பது செம சிரிப்பு. ஒரே சண்டை -அதுவும் ஓரிரு நிமிடத்தோடு முடிவது ஆறுதல்.
மிக பெரிய ஏமாற்றம் : ஹீரோயின். நெற்றி முழுதும் மறைத்து, கண்ணின் மேல் விழும் ஹேர் ஸ்டைலில் பெரும்பகுதி வருகிறார். அது அவருக்கு சுத்தமாய் செட் ஆகலை. ஆண்மை கலந்த குரல்.. கடைசியில் ஆடும் சல்சா டான்ஸ்சில் தான் அவர் உழைப்பும் நளினமும் தெரிகிறது. பிரபலமான வேறு ஹீரோயின் நடித்திருந்தால், படம் சற்று தப்பித்திருக்க கூட வாய்ப்பு உண்டு.
படத்தில் சின்ன சின்னதாய் சில விஷயங்கள் ரசிக்க வைக்கிறது :
கதையில் வரும் காதல்- கல்யாணம்- இதற்கெல்லாம் ஒவ்வொரு சாப்டர் பெயர் சொல்வது ( காதல் வந்த ஜோரு/ கல்யாணம் - கத்திரிக்காய், etc )
VT கணேஷ் அடிக்கும் சின்ன சின்ன ஜோக்குகள் (ஷகீலா படம் பார்த்து மனைவியிடம் மாட்டுவது)
கொஞ்சம் மெனக்கெட்டால் இயக்குனரால் நல்ல படம் தரமுடியும் என சொல்லும் காட்சிகள் இவை.
***
"லவ் பண்ணலாமா வேணாமா?" என சிம்பு திரும்ப திரும்ப பாட்டில் கேட்க, : "வேணாம்ப்பா; வேணாம்; லவ்வுக்கும் உனக்கும் ராசியே இல்லை" என கமன்ட் வருகிறது !
லண்டன் போன்ற காஸ்ட்லி ஊரில் சிம்பு -வரலட்சுமி இருவரும் வேலைக்கு போற மாதிரியே தெரியலை ! அப்புறம் பூவாவுக்கு எப்படி மேனேஜ் பண்றாங்களோ தெரிலை !
டான்சை முக்கியமாய் கொண்ட படத்தில் பாடல்கள் சுத்தமாய் சொதப்பி விட்டது.
கல்யாணமாகி பத்து நாள் ஹீரோ-ஹீரோயின் கட்டி பிடித்து கொண்டு தூங்குவார்களாம்; வேறு ஒண்ணும் நடக்காதாம்; சித்தப்பா " பிள்ளை பெத்துக்க; டான்ஸ் ஆட மாட்டா" என்றதும் ஹீரோயினை கர்ப்பமாக்கி விடுகிறார் சிம்பு.
இப்படத்துக்கு ஏன் வெளிநாட்டு லொகேஷன்னு தெரியலை; ஹீரோயின் ரொம்ப முற்போக்கு என்பதாலா? நம்ம ஊரிலேயே இப்படி பெண்கள் இருக்காங்களே ! (ஆனால் வெளிநாட்டை பார்ப்பது தான் படத்தில் நமக்கு பெரும் ஆறுதல்)
***
விரைவில் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறை சூப்பர் ஹிட் படம் போடா போடி என போடுவார்கள். அப்போது ஒரு முறை பாருங்கள் !
டிஸ்கி:
நான் படம் பார்த்து முடித்த மறுநாள் ரமேஷ் வந்தார் " சார் அந்த படம் சரி கிடையாது சார். கூட்டமே இல்லியாம்; நீங்க வேற அதை பாத்துட போறீங்கன்னு தான் சொல்றேன் " என்றார்.
அடபாவி.. இன்னிக்கு வந்து மாத்தி சொல்றியே ...நீ ஒரு நாள் லேட்டுய்யா !! ஒரு நாள் லேட்டு !!
***
அண்மை பதிவுகள்:
துப்பாக்கி: விமர்சனம் : இங்கு
நீர்ப்பறவை-ஏ. ஆர். ரகுமான்-விஜய் விளம்பரம் : இங்கு
ஆஹா இந்த காவியப் படத்தினை நீங்களும் பார்த்தாச்சா! நல்ல வேளை நான் தப்பித்தேன் - ஆனா வேற ஒரு படத்தைப் பார்த்த கதையை பிறகு சொல்கிறேன்! :)
ReplyDeleteத.ம. 2
அப்டியா என்ன படம் வெங்கட்?
Deleteநல்ல விமர்சனம்... நன்றி...
ReplyDeleteநன்றி ஸ்கூல் பையன்
Deleteஉலக தொலைக்காட்சியில் முதல் முறையாக..// ஹஹஹ. படம் அவ்வளவாக நன்றாக இல்லை என்கிறார்கள் பார்த்த அனைவரும்/
ReplyDeleteகருத்துக்கு நன்றி ஸ்ரீவிஜி
Deleteஆமாம் மோகன் சார், முதலில் படம் ரொம்பவும் மோசம் என்று கேள்விப்பட்டேன்.பின்னர் ஓரளவு சுமார் என்று பேச்சு.இன்று விகடனில் 42 மார்க். ஒன்னும் புரியல, சி.டியிலோ ,டிவியில் போட்டாலோ பார்க்கலாம் என்று நினைக்கிறன்.
ReplyDeleteபடம் ஆவரேஜ். இயலும்போது பாருங்கள் சீன் கிரியேட்டர்
Deleteரொம்ப தகிரியம் தான் இந்த படம் எல்லாம் பார்க்க..
ReplyDeleteஹீ ஹீ
Deleteஇதற்குப் பிறகும் பார்க்கும் எண்ணம் வருமா...?
ReplyDeleteநன்றி...
வருகைக்கு நன்றி தனபாலன்
Delete//நீ ஒரு நாள் லேட்டுய்யா !! ஒரு நாள் லேட்டு//
ReplyDeleteஓஒ!! படத்தைப் பார்த்தால் நம் பெயருக்கு முன்னால் ’லேட்’ போட்டுவிடுவார்களா!!!
சீனி: விடுங்க சிம்பு பாவம்
Delete//விரைவில் உலக தொலைக்காட்சிகளில் முதல் முறை சூப்பர் ஹிட் படம் போடா போடி என போடுவார்கள். அப்போது ஒரு முறை பாருங்கள்//
ReplyDeleteநல்ல விஷயமா இருந்தா மட்டும்தான், "யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்'னு நினைக்கணும் மோகன். இந்த படத்துக்கு.....அய்யய்யோ!
ரகு: ரைட்டு :))
Deleteசிம்புவுக்கு நடிப்பதில் பெரிய விருப்பமில்லை போல! வேறு ஏதோ திட்டமிடுகிறாரோ என்னமோ!!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஸ்ரீராம் சார்
Deleteபரவாயில்லை எங்களுக்கு லேட்டா நியூஸ் கிடைக்காம சீக்கிரமே கிடைச்சிடுச்சு. தப்பிச்சோம் நன்றி
ReplyDelete"விரைவில் உலக தொலைக்காட்சிகளில்...." ஹா...ஹா.
ReplyDeleteநன்றி.
வாங்க எழில் நன்றி
Deleteநான் அவசரப்பட்டு படம் பாக்கறதில்ல.
ReplyDeleteமுரளி சார்: வாங்க நன்றி
Delete/////லண்டன் போன்ற காஸ்ட்லி ஊரில் சிம்பு -வரலட்சுமி இருவரும் வேலைக்கு போற மாதிரியே தெரியலை ! அப்புறம் பூவாவுக்கு எப்படி மேனேஜ் பண்றாங்களோ தெரிலை ! /////
ReplyDeleteஎன்னமோ மத்தப்படங்கள்ல மட்டும் ஹீரோவும் ஹீரோயினும் சோத்துக்கு கல்லு உடைக்கிற மாதிரி........?
சரிங்கண்ணா :))
Deleteseemz u hate simbu :) u must be above 40 :)
ReplyDeleteama ama arya jayam ravi jeeva graph hollywood level-la pogudhe crazy point :)
ReplyDeleteஆனாலும் நீங்க ரொம்ப பாவம் சார்.. எப்படி தான் இந்த மாதிரி படத்தையெல்லாம் 3 மணி நேரம் கஷ்ட பட்டு பாதீன்களோ...
ReplyDeleteஇந்த விமர்சனம் செம காமிடியா இருந்தது...
ரமேஷ் சார் தான் ஹை லைட்....
Ok ok...! One time can see :)
ReplyDelete