கம்பி மத்தாப்புடன் தீபாவளி கொண்டாடும் இந்த நடிகையை தெரிகிறதா? சற்று பொறுங்கள். அழகு கார்னரில் யாரென்று பார்க்கலாம்
துப்பாக்கி ரிசல்ட்
விஜய்க்கு நீண்ட நாள் கழித்து ஒரு செம ஹிட் படம் வந்தது போல் தெரிகிறது. இதற்கு முந்தைய வெளியீடுகளான காவலன், வேலாயுதம், நண்பன் இவை வெற்றி எனினும் அவற்றை இது தாண்டிடும் என்றே பலரின் விமர்சனங்கள் சொல்கின்றன. கேபிள், சிபி, இட்லிவடை, ஆரூர் மூனா , உண்மைத்தமிழன் என பல தரப்பையும் திருப்திபடுத்தும் விஜய் படம் என்பது கூடுதல் ஆச்சரியம். இத்தகைய அவுட்புட்டுக்கு தொன்னூறு சதவீத காரணம் முருகதாஸ் என்பதும் நிச்சயம் தெரிகிறது.
தீபாவளி அன்று படம் பார்க்கும் வழக்கம் அநேகமாய் இல்லை. அன்று உறவினர் வீடு செல்லவும், குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகில் இருக்கவுமே நேரம் போயிடும். விரைவில் துப்பாக்கி பார்க்கக்கூடும்.
படித்ததில் பிடித்தது
கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
இந்த குறளின் சிறப்பு என்ன தெரியுமா? இக்குறளில் ஒரு இடத்தில் கூட துணைக்கால் எழுத்தே இருக்காது. இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : படிச்சவங்கமற்றவர்கள் துணையை நம்பாமல், தங்களோட சொந்த்தக்காலில் நிற்கலாம் - சொன்னவர் : முனைவர் கு. ஞான சம்பந்தம்
பதிவர் பக்கம் -ராஜநாயஹம்
முதலிலேயே ஒன்றை கூறி விடுகிறேன். இதனை அறிமுகம் என எடுத்து கொள்ளாதீர்கள். இவரை அறிமுகம் செய்யும் அளவு நான் பெரிய ஆள் இல்லை.
தமிழில் இருக்கும் மிக சுவாரஸ்ய ப்ளாகுகளில் ஒன்று R.P. ராஜநாயஹம் அவர்களுடையது. திரைத்துறையில் இருந்திருப்பார் போலும். சினிமா பற்றி பிரித்து மேய்கிறார். எளிமையான , effective ஆன எழுத்து. பலராலும் மிக விரும்பி வாசிக்கப்படுகிறது.
சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுகள் பற்றிய இந்த பதிவை வாசித்து பாருங்கள் ! எவ்வளவு விஷய ஞானம் உள்ளவர் என்பது புரியும் !
உங்களில் பலருக்கு இவர் Blog பக்கம் தெரிந்திருக்கலாம். எனக்கு சமீபத்தில் தான் அறிமுகம் ஆனது. இவர் பதிவுகள் படித்து சற்று மிரண்டு போயிட்டேன்... நாமும் தான் பதிவு எழுதுறோமே என குற்ற உணர்ச்சி கூட எட்டி பார்த்தது.
ஊர் ஸ்பெஷல் - போஸ்டர் கார்னர்
எந்தெந்த ஊரில் என்ன ஸ்பெஷல் என்று சொல்லும் இந்த போஸ்டர் மிக ரசித்தேன் ; நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்
சென்னை தீபாவளி
"கிராமத்தில் பொங்கலைத்தான் கோலாகலமாய் கொண்டாடுவார்கள் சென்னையில் சாதாரண நாளாய் பொங்கல் கழிந்து போவது பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் தீபாவளியை இங்கு இவ்வளவு பெரிதாகவா கொண்டாடுவார்கள் !" என்று வியப்புடன் முகநூலில் கேட்டிருந்தார் நாடோடி இலக்கியன். சென்னையில் கொண்டாடப்படும் மிக பெரிய பண்டிகை தீபாவளி தான். பெரும்பாலானோர் புத்தாடை அணியும் பண்டிகை, இனிப்புகள், வெடி என மிக பெரும் அளவில் வேறு எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை
இம்முறை தீபாவளிக்கு முதல் நாள் இரவு பத்து மணிக்கெல்லாம் வெடி சத்தம் சற்று ஓய்ந்து விட்ட மாதிரி தெரிந்தது. சீக்கிரம் தூங்க முடிந்தது. வழக்கம் போல் அதிகாலை வெடி சத்தங்கள் அலாரமாய் எழுப்பின. கல்லூரியில் படிக்கும் வரை ஒரு நாளைக்கு பத்து முறுக்கு சாப்பிடுபவனால், இப்போது ஒரு நாளைக்கு மூன்றுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை.
பொங்கல் அல்லது தீபாவளி எனில் தஞ்சையில் பெற்றோருடன் இருப்போம். அங்கு செல்லா விடில் காலை எங்கள் வீட்டில் பண்டிகை முடித்து பின் மாமனார் வீடு சென்று விடுவோம். இம்முறையும் அப்படியே.
நான்கு நாள் தொடர் விடுமுறையால் குழந்தைகள் இம்முறை மிக என்ஜாய் செய்தனர் இந்த தீபாவளியை ...கூடவே நானும் !
மேலே தீபாவளி கொண்டாடியது - தன்ஷிகா ! தமிழ் நாட்டை சேர்ந்த பெண்கள் ஏன் நடிக்க வருவதில்லை... கேரளாவுக்கும், வட இந்தியாவுக்குமே நடிகைகள் தேடி இயக்குனர்கள் செல்கிறார்களே என வருந்துவோரே.. இதோ ..உங்களுக்காக ஒரு தமிழச்சி ! தஞ்சையில் பிறந்து வளர்ந்து படித்த தன்ஷிகா ! கண், மூக்கு, சிரிப்பு என எதிலுமே குறை சொல்ல முடியாத படி இருக்கிறார்.. ஆதரிப்பீர் அன்பர்களே ! நண்பர்களே !
கவிஞர் பாரதிபுத்திரன்
துப்பாக்கி ரிசல்ட்
விஜய்க்கு நீண்ட நாள் கழித்து ஒரு செம ஹிட் படம் வந்தது போல் தெரிகிறது. இதற்கு முந்தைய வெளியீடுகளான காவலன், வேலாயுதம், நண்பன் இவை வெற்றி எனினும் அவற்றை இது தாண்டிடும் என்றே பலரின் விமர்சனங்கள் சொல்கின்றன. கேபிள், சிபி, இட்லிவடை, ஆரூர் மூனா , உண்மைத்தமிழன் என பல தரப்பையும் திருப்திபடுத்தும் விஜய் படம் என்பது கூடுதல் ஆச்சரியம். இத்தகைய அவுட்புட்டுக்கு தொன்னூறு சதவீத காரணம் முருகதாஸ் என்பதும் நிச்சயம் தெரிகிறது.
தீபாவளி அன்று படம் பார்க்கும் வழக்கம் அநேகமாய் இல்லை. அன்று உறவினர் வீடு செல்லவும், குழந்தைகள் வெடி வெடிக்கும் போது அருகில் இருக்கவுமே நேரம் போயிடும். விரைவில் துப்பாக்கி பார்க்கக்கூடும்.
படித்ததில் பிடித்தது
கற்க கசடற கற்றவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
இந்த குறளின் சிறப்பு என்ன தெரியுமா? இக்குறளில் ஒரு இடத்தில் கூட துணைக்கால் எழுத்தே இருக்காது. இதில் இருந்து தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் : படிச்சவங்க
பதிவர் பக்கம் -ராஜநாயஹம்
முதலிலேயே ஒன்றை கூறி விடுகிறேன். இதனை அறிமுகம் என எடுத்து கொள்ளாதீர்கள். இவரை அறிமுகம் செய்யும் அளவு நான் பெரிய ஆள் இல்லை.
தமிழில் இருக்கும் மிக சுவாரஸ்ய ப்ளாகுகளில் ஒன்று R.P. ராஜநாயஹம் அவர்களுடையது. திரைத்துறையில் இருந்திருப்பார் போலும். சினிமா பற்றி பிரித்து மேய்கிறார். எளிமையான , effective ஆன எழுத்து. பலராலும் மிக விரும்பி வாசிக்கப்படுகிறது.
சீர்காழி கோவிந்தராஜன் பாட்டுகள் பற்றிய இந்த பதிவை வாசித்து பாருங்கள் ! எவ்வளவு விஷய ஞானம் உள்ளவர் என்பது புரியும் !
உங்களில் பலருக்கு இவர் Blog பக்கம் தெரிந்திருக்கலாம். எனக்கு சமீபத்தில் தான் அறிமுகம் ஆனது. இவர் பதிவுகள் படித்து சற்று மிரண்டு போயிட்டேன்... நாமும் தான் பதிவு எழுதுறோமே என குற்ற உணர்ச்சி கூட எட்டி பார்த்தது.
ஊர் ஸ்பெஷல் - போஸ்டர் கார்னர்
எந்தெந்த ஊரில் என்ன ஸ்பெஷல் என்று சொல்லும் இந்த போஸ்டர் மிக ரசித்தேன் ; நீங்களும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் பகிர்கிறேன்
சென்னை தீபாவளி
"கிராமத்தில் பொங்கலைத்தான் கோலாகலமாய் கொண்டாடுவார்கள் சென்னையில் சாதாரண நாளாய் பொங்கல் கழிந்து போவது பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. ஆனால் தீபாவளியை இங்கு இவ்வளவு பெரிதாகவா கொண்டாடுவார்கள் !" என்று வியப்புடன் முகநூலில் கேட்டிருந்தார் நாடோடி இலக்கியன். சென்னையில் கொண்டாடப்படும் மிக பெரிய பண்டிகை தீபாவளி தான். பெரும்பாலானோர் புத்தாடை அணியும் பண்டிகை, இனிப்புகள், வெடி என மிக பெரும் அளவில் வேறு எந்த பண்டிகையும் கொண்டாடப்படுவதில்லை
இம்முறை தீபாவளிக்கு முதல் நாள் இரவு பத்து மணிக்கெல்லாம் வெடி சத்தம் சற்று ஓய்ந்து விட்ட மாதிரி தெரிந்தது. சீக்கிரம் தூங்க முடிந்தது. வழக்கம் போல் அதிகாலை வெடி சத்தங்கள் அலாரமாய் எழுப்பின. கல்லூரியில் படிக்கும் வரை ஒரு நாளைக்கு பத்து முறுக்கு சாப்பிடுபவனால், இப்போது ஒரு நாளைக்கு மூன்றுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை.
பொங்கல் அல்லது தீபாவளி எனில் தஞ்சையில் பெற்றோருடன் இருப்போம். அங்கு செல்லா விடில் காலை எங்கள் வீட்டில் பண்டிகை முடித்து பின் மாமனார் வீடு சென்று விடுவோம். இம்முறையும் அப்படியே.
நான்கு நாள் தொடர் விடுமுறையால் குழந்தைகள் இம்முறை மிக என்ஜாய் செய்தனர் இந்த தீபாவளியை ...கூடவே நானும் !
அழகு கார்னர்
மேலே தீபாவளி கொண்டாடியது - தன்ஷிகா ! தமிழ் நாட்டை சேர்ந்த பெண்கள் ஏன் நடிக்க வருவதில்லை... கேரளாவுக்கும், வட இந்தியாவுக்குமே நடிகைகள் தேடி இயக்குனர்கள் செல்கிறார்களே என வருந்துவோரே.. இதோ ..உங்களுக்காக ஒரு தமிழச்சி ! தஞ்சையில் பிறந்து வளர்ந்து படித்த தன்ஷிகா ! கண், மூக்கு, சிரிப்பு என எதிலுமே குறை சொல்ல முடியாத படி இருக்கிறார்.. ஆதரிப்பீர் அன்பர்களே ! நண்பர்களே !
கவிஞர் பாரதிபுத்திரன்
எம் சி சி கல்லூரியில் பேராசிரியராய் இருக்கும் பாரதிபுத்திரன் அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து சொல்ல போன் செய்தேன். நண்பர் செந்தில்குமாரிடம் அவர் நம்பர் வாங்கி 15 வருடத்துக்கு பின் பேசுகிறேன். " மோகன் எப்படி இருக்கீங்க? எத்தனை வருஷம் ஆச்சு உங்க குரலை கேட்டு ?" என்று பேச ஆரம்பித்தார் " இன்டர்நெட்டில் நீங்க என்னை பற்றி எழுதினதை படிச்சேன். ரொம்ப நெகிழ்வா இருந்தது ரொம்ப சந்தோசம். " என்று கூற, அவரை பற்றி நான் இந்த பதிவில் எழுதியது எப்படி அவருக்கு தெரிந்தது என செம ஆச்சரியம்.
" நம்ம காலேஜ் பசங்க உங்க ப்ளாக் படிக்கிறாங்க அவங்க தான் கொண்டு வந்து காட்டினாங்க. நாம ரெண்டு பேரும் தினம் சந்திச்சது; இரவு உங்களை நான் சைக்கிளில் ஸ்டேஷனில் கொண்டு வந்து விட்டது அதெல்லாம் ரொம்ப சுவாரஸ்யமா எழுதிருந்தீங்க ரொம்ப நன்றி மோகன்" என்று பேச பேச, மனம் நெகிழ்ந்து போனது. நாம் எங்கோ ஒரு ஓரத்தில் எழுதுவது எப்படி எல்லாம் மனிதர்களை தொட்டு செல்கிறது பாருங்கள் ! அதை விட முக்கிய விஷயம் பாரதிபுத்திரன் இன்னும் அன்பை அப்படியே வாரி வாரி வழங்குவது தான். நமக்கெல்லாம் அன்பை பேச்சினில் எப்படி வெளிப்படுத்த வேண்டும் என்றே தெரியாது அவர் எவ்வளவு எளிதாய் தன் அன்பை , பிரியத்தை பேச்சில் தெரிவிக்கிறார் !
நண்பன் தேவா அவரை பார்க்க விரும்புவதாக சொல்ல, " என்னிக்கு வேண்ணா வாங்க மோகன். எப்ப வேண்ணா பாக்கலாம் " என்றார் அன்போடு. பிரியம் நிரம்பி வழியும் அவரையும் அவர் துணைவியாரையும் விரைவில் நேரில் சந்திப்பேன் !
துப்பாக்கி - செம ஹிட்...
ReplyDeleteநல்லதொரு பதிவர் அறிமுகம்...
போஸ்டர் கார்னர் - ஸ்பெஷல்...
நன்றி திண்டுக்கல் தனபாலன்
Deleteஇவர் பதிவுகள் படித்து சற்று மிரண்டு போயிட்டேன்... நாமும் தான் பதிவு எழுதுறோமே என குற்ற உணர்ச்சி கூட எட்டி பார்த்தது.
ReplyDelete//
ராஜநாயகம் அண்ணனும்,நானும் பதிவுலகில் சமகாலத்தவர்கள். தமிழில் பத்தி எழுத்து என்பதற்கு இவர் மிகப் பெரிய உதாரணம், இலக்கணம்.
அண்ணே வாங்க ரொம்ப நாள் கழிச்சு எட்டி பார்த்திருக்கீங்க
Deleteராஜநாயகம் சார் பற்றி அருமையா சொன்னீங்க மகிழ்ச்சி
அண்ணே: மகிழ்ச்சி நன்றி
Deleteராஜநாயஹம் சினிமா உலகில் பணியாற்றியவர் மட்டும் அல்லர், எந்த சினிமாக் கதாநாயகனை விடவும் அழகானவர் (பார்த்தேனில்லை, சொல்லிக் கேள்வி). இசையிலக்கண ஞானம் உள்ளவர். இன்றைக்கு எழுதிக்கொண்டு இருக்கும் எவரையும்விட இலக்கிய வாசிப்பின் ஆழம் கூடியவர். சேக்ஸ்பியரில் ஒரு அத்தாரிட்டி என்றும் புரிகிறது. அவரது பழைய பதிவுகளையும் வாசித்துப் பாருங்கள்; தொடர்ந்து வாசியுங்கள், மோகன்!
ReplyDeleteராசு சார்: அப்படியா? சென்னையில் இருந்தால் அவரை ஒரு முறை சந்திக்கலாம் சார்
Deleteஅவரை தற்போது தொடர்ந்து வாசித்து வருகிறேன் சார்
Deleteதுப்பாக்கி நல்லா வந்திருக்கா? பாக்கணும் அவசியம். ராஜநாயகம் அவர்களின் தளம் இதுவரை நான் படித்திராதது. உடன் பார்க்கிறேன் நண்பா. தன்ஷீகாவை எனக்கும் ரொம்பப் பிடிக்கும். அழகான உயரமான பெண். வானவில்லின் வண்ணங்கள் அழகு.
ReplyDeleteபடிங்க நிச்சயம் பிடிக்கும் நண்பரே
Deleteதுப்பாக்கி விஜய் ரசிகர்களின் படம்ன்னு சொல்றாங்களே..
ReplyDeleteஹிட்டுன்னு தான் நினைக்கிறேன் ஒரு வாரத்தில் நிச்சயமா தெரியும்
DeleteColorful rainbow.. Anna plz add Unmai thamilan anna's review too..
ReplyDeleteநேயர் விருப்பம் நிறைவேற்றியாச்சு ஹாரி நன்றி
Deleteதுப்பாக்கி படம் முருகதாஸ் 90 சதவீதம்ன்னா ஏழாம் அறிவு ஏன் சரியா போகலை...? படம் நல்லாயிருந்தால் நீங்க நடிச்சாக் கூட ஓடும்..!
ReplyDelete:)
Deleteஎந்த பொருளுக்கு எந்த ஊர் சிறப்பு அருமையான பட்டியல்.கதம்பமாக தொகுத்திருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி Srini Vasan
Deleteஎல்லாமே வழக்கம்போல சுவாரஸ்யம்.
ReplyDeleteநன்றி ஸ்ரீராம் சார்
Deleteஊர் ஸ்பெஷல் ரசிக்கும் படி இருந்தது.
ReplyDeleteநன்றி கவிஞர் சசி கலா
Deleteவீடு சுரேஷ்: ஒரு இயக்குனரின் எல்லா படமுமே சக்சஸ் ஆகிட முடியாது இல்லியா?
ReplyDeleteதமிழில் மிக அதிக வெற்றி சதவீதம் கொண்ட இயக்குனர் இப்போது உள்ளதில் ஷங்கர் மட்டும் தான் என நினைக்கிறேன் ( கே. எஸ். ரவிக்குமார் பல தோல்வி படம் தந்தவர். ஷங்கருக்கு பாய்ஸ் மட்டுமே தோல்வி படம்)
முருகதாசின் வெற்றி சதவீதம் நிச்சயம் குட்-னு தான் சொல்லணும். தமிழில் ஏழாம் அறிவு தவிர வேறு படம் அவர் சொதப்பிய மாதிரி தெரியலை. இந்த படம் நிச்சயம் சொதப்பும் என்று தான் நான் உட்பட நினைத்திருந்தேன்.
கல்லூரியில் படிக்கும் வரை ஒரு நாளைக்கு பத்து முறுக்கு சாப்பிடுபவனால், இப்போது ஒரு நாளைக்கு மூன்றுக்கு மேல் சாப்பிட முடிவதில்லை
ReplyDelete>>>
ஒருவேளை உங்களுக்கு வயசாய்டுச்சோ?!
வீட்ல மத்தவங்க சாப்பிடட்டும்னு நல்ல எண்ணம் தான்
Deleteஇன்னிக்கு கூட பாருங்க நம்ம சகோதரி அதிரசம், பொருள் விளங்கா உருண்டைஎல்லாம் அனுப்பிருந்தார் ஒரு கட்டு கட்டியாச்சு
கண், மூக்கு, சிரிப்பு என எதிலுமே குறை சொல்ல முடியாத படி இருக்கிறார்.. ஆதரிப்பீர் அன்பர்களே ! நண்பர்களே !
ReplyDelete>>
முன்னலாம் வெறும் ஃபோட்டோ போட்டு சும்மா யார்ன்னு இன்ஃபர்மேஷன் மட்டும்தான் குடுப்பீங்க. இப்போ என்னடான்னா.., அந்த பொண்ணை வர்ணிச்சு எழுதுனதுமில்லாம மத்தவங்ககிட்ட அந்த பொண்ணுக்காக ஆதரவு வேற கேக்குறீங்களா?!
அண்ணி! அண்ணி! அண்ணனை என்னன்னு கொஞ்சம் ”கவனிங்க”...,
வானவில் அழகு! அருமையான பகிர்வு!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteதன்ஷிகா எந்த படத்திலே வருகிறார்? துப்பாக்கி நல்லாயிருக்கும் என்று தோன்றியது.முருகதாஸ் ஏழாம் அறிவு தோல்விக்கு பிறகு நிறைய உழைத்து இருப்பார் என்று தோன்றியது. என் மகன் நேற்று காலை 8 மணி ஷோவிற்கு போகணும் என்று தீவாளிக்கு 7.30 மணிக்கு சாமி கும்பிட்டோம்!!!11 மணிக்கு அவன் வீட்டிற்கு வரும் போது அவன் முகம் நிறைய சந்தோஷம்.
ReplyDeleteஅரவான் மற்றும் பேராண்மையில் நடிச்சிருக்கார்;
Deleteநாங்களும் துப்பாக்கி சீக்கிரம் பாக்க போறோம் நன்றி அமுதா மேடம்
பதிவர் அறிமுகம் நன்றி தளம் சென்று படிக்கிறேன்
ReplyDeleteநன்றி சரவணன்
Deleteகல்லூரியில் படிக்கும் வரை ...//
ReplyDeleteஎன்னது கல்லூரியில படிச்சீங்களா? -:)
ரெவரி :))
Deleteவேதாரண்யம் உப்பு ரொம்ப ஃபேமசு. நன்றி அண்ணா. பாரதி புத்திரன் சார் க்கு வணக்கஙகள்
ReplyDeleteநன்றி அன்பு உங்க ஊர் ஆச்சே ! நேற்று தீபாவளி வாழ்த்து சொல்ல ஊருக்கு போன் பேசினோம் நீ டியூட்டிக்கு போனதாக அப்பா சொன்னார்கள்
Deleteஎந்த ஊருக்கு எது ஃ பேமஸ் ..... நல்ல தொகுப்பு. அதசரி ஊட்டி, நீலகிரி ரெண்டும் வேற வேறயா அண்ணா.............. நல்லதுங்க!!
ReplyDeleteGood catch Jayadev !
Delete// அண்ணே வாங்க ரொம்ப நாள் கழிச்சு எட்டி பார்த்திருக்கீங்க //
ReplyDeleteரொம்ப நாள் கழிச்சு கமெண்ட் போட்டு இருக்கேன்னு சொல்லுங்க. அதுதான் சரி, காரணம் எல்லா இடுகையும் எட்டிப்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன் :)
படித்ததில் பிடித்தது சூப்பர்! போஸ்டரில் எங்க ஊர் ( தூத்துக்குடி) மக்ரோன் இல்லாத்து கொஞ்சூண்டு வருத்தம்.....
ReplyDelete