Friday, March 1, 2013

நாகர்கோவில் - தொட்டி பாலமும், உதயகிரி கோட்டையும் - ஒரு பயணம்

ன்யாகுமரியில் இருந்து ஒரு நாள் ட்ரிப்பில் பத்மநாபபுரம் அரண்மனை, தொட்டிபாலம், திப்பரப்பு அருவி, சுசீந்தரம், நாகர்கோவில் - நாகராஜா கோவில் ஆகியவை பார்த்து வந்தோம். காரில் சென்று வர 1500 ரூபாய் வாங்கினர் (தூரத்தை கணக்கிட்டால் ரீசனபில் என்றே தோன்றியது )

தொட்டி பாலம்

வருஷம் 16 படத்தில் "பழமுதிர் சோலை எனக்காக தான் " என கார்த்திக் பாடியபடி சைக்கிள் ஓட்டி வருவாரே அது இந்த பாலம் தான்.


ஆசியாவின் மிக உயரமான பாலம் என்கிறார்கள். 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு நீண்டு செல்கிறது பாலம். வாகனத்தில் நாம் சென்று இறங்கினால் பாலம் இருக்கும் இடத்தில் - அதாவது பாலத்தின் மேற்புறம் இறக்கி விடுகிறார்கள். கீழே இறங்கி போக வேண்டுமெனில் 500 முதல் ஆயிரம் படிக்கட்டுகள் உள்ளன அதை கண்டதுமே வீட்டம்மா மற்றும் பெண் " நாங்க கீழே வரலை ; நீங்க மட்டும் ஒரு ரவுண்ட் கீழே போயிட்டு வாங்க; ஈசியா இறங்கிடலாம். ஏறுவது கஷ்டம் " என்று கூறி விட்டனர்

உண்மைதான் விறுவிறுவென இறங்கி விட்டேன். ஏறுவதற்குள் நாக்கு தெள்ளிதே என ஆகிடுச்சு

கீழ் தளத்தில் சிறு ஓடை போல தண்ணீர் ஓடுகிறது. சுற்றிலும் ஏராள மரங்கள். (குறிப்பாய் தென்னை மரங்கள் ). சிறுவர் பூங்கா என்று இருக்கும் இடத்தில் சறுக்கல் உள்ளிட்டவை மிக மோசமான நிலையில் உள்ளன.

சிறு சிறு கடைகள் ஓரிரண்டு அங்கேயே உள்ளது. மக்களில் பாதி பேர் மலையாளம் பேசுகிறார்கள்.


                                  

கல்லூரி மாணவர்கள் கூட்டம் தவிர நாங்கள் சென்றபோது வேறு யாரும் அங்கு இல்லை. இத்தனைக்கும் டிசம்பர் மாதம் தான் இந்த ஏரியாவில் பீக் சீசன் !

அணையில் தண்ணீர் மிக குறைவாக இருந்தது. இப்போதே இப்படி எனில் சம்மரில் எப்படி மோசமாய் இருக்குமோ தெரியலை !

நிறைய செடி கொடிகள் - மலர்கள் மிக அழகாய் இருக்கிறது.

மொத்தத்தில்: அற்புதமான ஒரு இடம் - சரியான பரமாரிப்பின்றி இருக்கிறது

Video



##########

உதயகிரி கோட்டை

நாகர்கோவில் பத்மநாபபுரம் அரண்மனைக்கு சற்று தூரத்திலேயே உள்ளது உதயகிரி கோட்டை. அங்கிருந்த செக்கியூரிட்டி வருத்தத்தோடு இப்படி சொன்னார் : " சார் மலையாளிங்க இந்த ஏரியாவை பிரிக்கும்போது காசு வரும்னு பத்மநாபபுரம் பேலசை அவங்களே வச்சிக்கிட்டாங்க. இந்த உதயகிரி கோட்டையை தமிழ் நாட்டுக்கு விட்டுட்டாங்க. இங்கே முக்கியமா மரம், செடி கொடி , விலங்கு எல்லாம் இருக்கு. ஆனா கூட பத்மநாபபுரம் அரண்மனைக்கு செல்லும் கூட்டத்தில் நூற்றில் ஒரு சதவீதம் கூட இங்கு வருவதில்லை" .

இங்குள்ள அரசரால் டச்சு தளபதி ஒருவர் சிறைபிடிக்கபட்டார். பின் அந்த தளபதியின் திறமையில் வியந்து போன அரசர், அவரை தனது போர்த்தளபதி ஆக்கினார். அந்த தளபதி நாட்டுக்கு தேவையான போர் தளவாடங்கள் செய்ய இந்த இடத்தை பயன்படுத்தினார் . வீரர்களுக்கு போர் பயிற்சியும் இங்கு தந்தார். தளபதி இறந்தபின் அவரது உடல் இங்கு புதைக்கப்பட்டு அவருக்கு கல்லறையும் இங்கு உள்ளது .

உள்ளே நுழையும் போதே மயில், கிளி, மான், லவ் பேர்ட்ஸ் என பல்வேறு விலங்குகளும் வரிசையாக நம்மை வரவேற்கின்றன. எங்கள் கிளிகளை பிரிந்திருந்தததால் கிளிகளை தான் பார்த்து அதிகம் கொஞ்சி கொண்டிருந்தோம்



மரங்கள் அதிகம் இருப்பதால் அழகான சூழல் நிலவ, புதிதாக திருமணம் ஆன ஜோடிகளை வைத்து அவர்கள் திருமண ஆல்பம் தயார் செய்ய பல்வேறு காமிராமேன்கள் புகைப்படம் எடுத்து கொண்டிருந்தனர்.


ஒவ்வோர் ராசிக்கும் ஏற்ற மரம் என 12 ராசிக்கும் 12 மரங்கள் அங்கு இருந்தது.

உதாரணமாய் கன்னி ராசிக்கு மா மரம், சிம்ம ராசிக்கு பாதிரி மரம்....



மர வீடு என உயரத்தில் ஒரு மரத்தின் மீது ஏறி பார்க்க ஏற்பாடு செய்துள்ளனர். 5 ரூபாய் கட்டணம் என்பதால் இதில் கூட அதிகம் யாரும் ஏறி பார்க்கவில்லை.

மிக சில குடும்பங்களும், ஆங்காங்கு காதலர்களும் மட்டுமே உள்ளனர்

உதயகிரி கோட்டை வீடியோ இதில் காணலாம்



மொத்தத்தில் : மரங்களின் மீது ஆர்வம் அதிகமிருந்தால் மட்டுமே இந்த இடத்திற்கு செல்லலாம். மற்றபடி விசேஷமாய் ஏதுமில்லை.

***
மேலதிக தகவல்களுக்கு:

http://en.wikipedia.org/wiki/Udayagiri_Fort

18 comments:

  1. //மொத்தத்தில்: அற்புதமான ஒரு இடம் - சரியான பரமாரிப்பின்றி இருக்கிறது//

    ஒரு மலையிலிருந்து அடுத்த மலைப்பகுதிக்கு தண்ணீரைக் கொண்டு போறதுக்காக கட்டப்பட்ட பெரீய்ய்ய்ய தொட்டிதான் அது. முன்னாடி இருந்த கம்பீரம் இப்ப இல்ல. அந்தத்தூண்கள் எவ்ளோ உசரம்ங்கறதைக் காமிக்கிறதுக்காக ரெண்டு மூணு தூண்களை சாம்பிளுக்காக விட்டு வெச்சிருக்காங்க. மத்ததெல்லாம் மண்ணுக்குள்ளே மறைஞ்சு கிடக்கு.

    அடுத்தது நார்ஜா கோவிலா?.. தொடர்ந்து வரேன் :-)))

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சி மேடம் தொடருங்கள்

      Delete
  2. பாலத்தில் கஷ்டப்பட்டு நிற்கிற மாதிரி தெரியுதே... (சீக்கிரம் எடுங்கப்பா...)

    மீன ராசிக்காரர்கள் கோபித்துக் கொள்ள போகிறார்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க படம் எடுத்தப்போ மிஸ் பண்ணதை கவனிக்கலை :)

      Delete
  3. கன்னியாகுமரி மாவட்டத்தில் எனக்கு மிகவும் பிடித்த ஒரு இடம் தொட்டிப் பாலம்

    ReplyDelete
    Replies
    1. அப்படியா? வருகைக்கு நன்றி சீனு

      Delete
  4. தொட்டிப்பாலம் கீழே ஓடும ஓடைக்கரைகளில் அன்னாசிப்பழங்கள் விளைந்திருக்கும்.நாங்க ஒரு முறை போகும்போது குளிக்குற மாதிரியே பொய் லவட்டிக்கிட்டு வந்தோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா அப்படியா நன்றி கோகுல்

      Delete
  5. படங்கள், வீடியோ பகிர்வுகள், தகவல்கள் எல்லாமே அருமை. முதல் படத்தில் கோணம் மிக நன்று.

    ReplyDelete
    Replies
    1. அடடா புகைபடக்காரரே சொல்லும் போது மகிழ்வா இருக்கு

      Delete
  6. சிறப்பான இடங்கள். செல்ல வேண்டும் இந்த இடங்களுக்கு...

    கடைசி ராசிய விட்டுட்டீங்களே...:))

    ReplyDelete
    Replies
    1. அவசியம் சென்று வாருங்க ரோஷினி அம்மா

      Delete
  7. ஐந்து வருடங்களுக்கு முன்சென்று வந்தேன் அறிமுகமில்லா திருச்சி மக்களுடன் சுற்றுலா சென்றோம் நானும் என் நண்பரும் நாங்க பாலத்தில் தனித்து காட்டிய ஆட்டத்தில் அனைவரும் சரண் மறக்கமுடியாத நினைவுகள்....

    ReplyDelete
    Replies
    1. மலரும் நினைவுகள் ..

      Delete
  8. மிக அருமையான பதிவு. இந்த அழகான இடங்கள் இருக்கின்றன என்று அறிவதே அருமை!

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. மிக மகிழ்ச்சி வெற்றிமகள் மேடம் நன்றி

      Delete
  9. நன்றி ஐயா

    ReplyDelete
  10. This comment has been removed by the author.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...