Thursday, November 1, 2012

சென்னை புயல்:After Effects : படங்கள் + நேரடி அனுபவம்

நீலம் புயல் நூறு கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடக்கும். எனவே தானேயை விட இதில் பாதிப்புக்கு அதிகம் வாய்ப்பு என நேற்று வந்த தகவல்கள் மிரட்டின . எப்போது புயல் அடித்தது என்று பலருக்கும் தெரியாமலே புயல் கரையை கடந்தது



ஐம்பதுக்கும் மேற்பட்ட மரங்கள் ஆங்காங்கு வீழ்ந்து போக்குவரத்து சற்று தடைபட்டது. நிச்சயம் ஓரளவு விரைவாக தான் இவை அப்புறபடுத்தப்பட்டன என்று ரேடியோவில் கூறி கொண்டே இருந்தனர்.

மேலும் பத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் வீழ்ந்தன. புயலில் ஐவர் உயிர் இழந்ததாக தெரிகிறது. அவர்கள் குடும்பத்துக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

புயல் நேற்று மாலை ஆறு மணிக்கு மேல் அடிக்கும் என்றனர். ஆனால் நான்கரை முதல் அடித்து ஓய்ந்து விட்டது. மகாபலிபுரம் அருகே படிக்கும் எங்கள் அக்கா பையன் மாடியில் போய் நின்றால் புயலின் சீற்றம் முழுவதும் தெரிகிறது என்று சொன்னான்.

ரயில்கள் இயங்காமல் போயின. பஸ்களின் அருமையை மக்கள் இன்று உணர்ந்தனர்

இயங்காமல் நிறுத்தப்பட்ட ரயில்கள்  

நேற்று மாலை ஐந்து மணி அளவில் அலுவலகத்தில் இருந்து கிளம்பி
அப்போது புயல் அடித்து கொண்டிருப்பது தெரியாமல் டூ வீலரில் வீடு சென்றேன்

வழியில் எல்லா கடைகளிலும் ஆளே இல்லை. ஆனால் பேக்கரி, வடை, போண்டா போன்றவை போடும் கடைகள் அனைத்திலும் வழக்கத்தை விட நான்கு மடங்கு கூட்டம் இருந்தது.

நான் ஒரு கடைக்கு சென்ற போது அங்கு கடைக்காரர் இப்படி சொன்னார் " சமோசா வழக்கமா நைட்டு எட்டு மணிக்கு காலியாகும். இன்னிக்கு மதியம் ரெண்டு மணிக்கு காலி. போளி எல்லாம் எப்பவோ தீந்துடுச்சு. சூடா பக்கோடா மட்டும் போட்டு போட்டு தர்றோம்" மக்களுக்கு சூடாய் வடை போன்றவை சாப்பிட்டு கொண்டே மழை புயலை பார்க்க தோணுது !

Madippakkam road at 5.30 PM

ரேடியோவில் தான் தகவல்கள் கேட்டு கொண்டிருந்தோம். அவர்களும் எங்கு டிராபிக் அதிகம், எங்கு மரம் விழுந்துள்ளது என்று தான் பேசி கொண்டிருந்தனர். புயல் அடித்து முடிந்து விட்டதா என யாருக்கும் தெரிய வில்லை. தஞ்சைக்கு போன் செய்து டிவியில் பார்த்து நான்கரை முதல் புயல் அடித்து ஓய்ந்ததை அறிந்தோம்.

சென்னையில் நேற்று முதல் மழை அதிகமில்லை. தஞ்சை உள்ளிட்ட இடங்களில் செம மழையாம் !

மின்சாரம் பல இடங்களில் காலை பதினோரு மணிக்கு நிறுத்தப்பட்டு விட்டது. இன்று வியாழன் காலை அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களில் கரன்ட் வந்து விட்டது. மடிப்பாக்கம் போன்ற புறநகரில் இன்னும் கரண்ட் வரவில்லை. எங்கள் தெருவில் சில வீடுகளில் சம்பில் (Sump ) தண்ணீர் இருந்தும் மேலே டேங்கிற்கு ஏற்ற முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தனர். டேங்கில் இருந்த தண்ணீர் முழுதும் காலி !

மூன்றாம் நாளாய் பள்ளிகள் இன்று விடுமுறை. சட்ட கல்லூரி உள்ளிட்ட பல இடங்களில் இன்று நடக்க இருந்த தேர்வுகள் நடக்க வில்லை.

ஆங்காங்கு ஒயர்கள் அறுந்து மரம் மீதும் சாலை ஓரத்திலும் கிடக்கிறது. அவை டெலிபோன் ஒயரா, ஈ. பி ஒயரா என நமக்கு தெரிய வில்லை.

நண்பன் தேவா எடுத்த படமும், தரும் தகவலும் இதோ:

நேற்று பெசன்ட் நகர் Beach - இக்கு அருகில் ஒரு ஆயில் tanker கரைக்கு மிக அருகில் புயலால் தள்ளப்பட்டு இருந்தது. புயல் காற்றில் கப்பலே ஆடியது. ஒரு படம் இங்கே.



அதை பார்க்க நிறைய கூட்டம். இன்று காலையில் அது கடலுக்குள் கொண்டு செல்லப்பட்டுவிட்டது.

***
சென்னை இன்று இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கிறது. அலுவலகங்கள் இயங்குகின்றன. பயமுறுத்திய அளவு புயலின் சீற்றம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் !
****
தொடர்புடைய பதிவு:

சென்னை புயல்: முதல் நாள்: நேரடி ரிப்போர்ட் : இங்கு வாசியுங்கள் !

44 comments:

  1. கப்பலே தள்ளாடிக் கொண்டிருக்கும் வேளையில் வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டம். நம் மக்களின் அட்ராசிட்டிக்கு எல்லையே இல்ல..

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி

      Delete
  2. தகவல்கள் அறியத் தந்தமைக்கு நன்றிகள்.

    சுநாமியையே வேடிக்கை பார்க்கப்போகும் கூட்டமாச்சே நம்மது..... அதான் கப்பல் ஆட்டத்தையும் நின்னு பார்க்கறாங்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க டீச்சர் நன்றி ; வெளி நாட்டில் இருப்போருக்கு இந்த பதிவுகள் பயன்படுவது மகிழ்ச்சி தருகிறது

      Delete
  3. நீலத்தால் தமிழகத்தில் அதிகமான பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை என்ற செய்தி கொஞ்சம் ஆறுதல்தான்...

    புயல் சென்னை தாக்கியிருந்தால் இன்னும் பாதிப்புகள் அதிகமாக இருந்திருக்கும்...

    ஆனா நம்ம மக்கள் எவ்வளவு சொன்னாலும் கேட்கமாட்டாங்க... வாழ்க அவர்கள் தைரியம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சௌந்தர்

      Delete
  4. அருமை, நண்பரே
    சேதமும் உங்களது துல்லியமான தகவலுக்கும் நன்றி .
    நீங்கள் பக்கோடா சாப்பிட்டீர்களா இல்லையா?

    ReplyDelete
    Replies
    1. கண்ணதாசன் சார்: சாப்பிடாமலா? கியூவில் நின்னு வாங்கிட்டோம் இல்லே :))

      Thanks

      Delete
    2. பக்கோடாவ விட மாட்டிங்க போல.

      Delete
  5. முதல் மூணு படமும் புயல் காத்து உங்க கையை ஆட்டி விட்டதால ஷேக் ஆயிடிச்சு போல. புயல் நேரத்தில் பைக்கை ஓட்டி பெசண்டு நகருக்கெல்லாம் போயி படமெடுத்து......... மோகன் உங்க கடமை உணர்ச்சிக்கு எல்லையே இல்லை, வாசகர்களுக்காக நீங்க படும் கஷ்டம்...........நீங்க பேசாம Adventurous journalism ஆரம்பிச்சுடலாம்............

    ReplyDelete
    Replies
    1. :))

      கடைசி போட்டோ நண்பர் தேவா எடுத்தது அவர் வீடு அங்கு அருகில் உள்ளது ஜெயதேவ்.

      Delete
  6. புயல் பற்றிய புயல்வேகச் செய்திகளுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைதி சாரல்

      Delete
  7. புயல் தகவல்கள் பற்றி என் தம்பி மூலம் தெரிந்து கொண்டேன். இங்கு முந்தாநாள் இரவு தூற ஆரம்பித்த மழை நேற்று மாலை தான் ஓய்ந்தது. ஆனால் ஒரு அதிசயம் என்னவென்றால்.....எப்போதும் போல் பவர்கட் ஆகாமல் தொடர்ந்து இருந்தது.

    ReplyDelete
    Replies
    1. உங்க தம்பி இருக்காரே என கவலை பட்டீர்கள் போல...அது இயற்கை தானே !

      நன்றி ரோஷினி அம்மா

      Delete
  8. செய்தி தொலைக்காட்சியை போல இருந்தது உங்கள் பதிவு . நன்று.

    ReplyDelete
    Replies
    1. நன்றி விஜய் பெரியசாமி

      Delete
  9. மதியம் 2 மணிக்கே போளி காலியா. அடுத்த மகாசென் புயலுக்கு திடீர் வடை,பஜ்ஜி கடை ஒன்று திறந்திட வேண்டியது தான். நேற்று தி.நகரில் ஷாப்பிங் செய்ய மக்கள் புயலென புகுந்து விட்டார்களாம். ஆஃபிஸ் விட்டதும் யாரும் வீட்டிற்கு போகலை போல.

    ReplyDelete
    Replies
    1. //அடுத்த மகாசென் புயலுக்கு திடீர் வடை,பஜ்ஜி கடை ஒன்று திறந்திட வேண்டியது தான். //

      :))

      Delete
  10. நேற்று நான் சென்னைல தான் இருந்தேன். புயலின் பாதிப்பு எனக்கொண்ணும் தெரியலியே.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சென்னை வந்ததில் தான் பயந்து புயல் ஓடி போச்சு என சொல்றாங்க. அதற்கு மிக நன்றி

      Delete
    2. புயல், மழை இல்லைன்னா உங்களை சந்திச்சு இருப்பேன். நீங்க தப்பிச்சுட்டீங்க.., ஆனா, பாவம் கவிஞர் மதுமதியும், கணேஷ் அண்ணாவும் மாட்டிக்கிட்டாங்க:-((((

      Delete
  11. என்னுடைய ஆபீஸ் பெயர் பலகை காற்றில் தாக்குபிடிக்க முடியாமல் விழுந்து விட்டது.. கதவுகள் கூட விழும் நிலைக்கு வந்து விட்டது!! கொஞ்சம் பலத்து தான் இருந்தது.. ஆனால் பெரும் அபாயம் இல்லாதது மகிழ்ச்சி!! உடனடி ரிப்போர்ட் போட்டு கலக்கிடீங்க..

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ஏரியா தகவல் சொன்னதுக்கு நன்றி சமீரா

      Delete
  12. புயல் அடித்தது தெரியவே இல்லைதான்! எங்கள் பக்கம் 5 மணிக்கு மேல்தான் அதிகமாக காற்று வீசியது! மழை பெய்யவே இல்லை!

    ReplyDelete
  13. மழை பெய்யும் பொழுது சூடாக ஏதாவது சாப்பிட இருந்தால் நன்றாகத்தான் இருக்கு.
    சென்னை புயலைப்பற்றி உங்க நேரடி ரிப்போர்டில் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நீங்க நம்ம கட்சி உண்மையை ஒத்துக்கிட்டீங்க :)

      Delete
  14. சுடச்சுட புயல் ரிப்போட்டுடன் சாப்பாட்டுக்கடை ரிப்போட்டும் கொடுத்துவிட்டீர்கள்.



    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா நன்றி மாதேவி

      Delete
  15. மின்சார ரெயில், பாலம் என்று நிறைய அலைந்து படம் எடுத்தீர்களோ? கரைக்கு வந்த கப்பல் படம் ஜோர். புயல் சொல்லப் பட்ட அளவு பயமுறுத்தவில்லைதான்! 94 ல் ஒருமுறை கோடையில் புயல் வந்தபோது ஒருவாரம் கரண்ட் இல்லாமல் கஷ்டப்பட்ட நினைவு வந்தது. நேற்று எங்களுக்கு 12 To 12 தான்!

    ReplyDelete
    Replies
    1. நம்ம உழைப்பை கவனிச்சு மதிச்சீங்க ஸ்ரீராம் ! நன்றி !!

      Delete
  16. கப்பலை பார்க்க பயமாத்தான் இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி கவிஞர் சசிகலா

      Delete
  17. தகவல்களுக்கு நன்றி. நேற்று மாலை வெளியே சென்றுவிட்டதால் விவரங்கள் தெரியவில்லை. இன்று காலை நாளிதழில் பார்த்து விவரங்கள் தெரிந்து கொண்டேன்.

    ReplyDelete
  18. Anonymous9:04:00 PM

    Stom Chaser அவதாரம் எடுத்திருக்கீங்க மோகன்... Be safe...

    ReplyDelete
    Replies
    1. ரெவரி: உங்கள் நாட்டிலும் புயல் போல ; பத்திரமா இருக்கீங்களா? கரன்ட் இல்லை என்றனரே ? நீங்கள் வெஸ்ட் கோஸ்ட்டோ ?

      Delete
  19. படத்துடன் கூடிய பல தகவல்களுக்கு நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன் சார்

      Delete
  20. நீளம் புயல் பற்றி மிகவும் விரிவாக எழுதியுள்ளீர்கள் சார். நன்றி.

    மக்களுக்கு, வேடிக்கைப் பார்க்கும் புத்தி மாறவில்லை. இது எப்படித் தோன்றியிருக்கும் என்று யாரவது சொன்னால் நன்று.

    நானும் அலுவலகம் முடித்து இரவு ஏழு மணிக்கு, எந்த மரம் நம்ம தலையில் விழுமோ என்கிற ஒருவித பயத்துடன் வந்துக் கொண்டிருந்த பொழுது, பத்து பதினைந்து பேர் சாலையில் சாமி சிலையை தூக்கிக் கொண்டு ஊர்வலம் சென்றார்கள். அடுத்த தெருவில் பீஸா பையன் வண்டியை நிறுத்திவிட்டு டெலிவரி கொடுக்க ஒரு அப்பார்ட்மெண்டில் நுழைந்தக் காட்சி என்னை என்னவோ செய்தது.

    குறைந்தப் பட்சம், அவசியமில்லாத வேலைகளை ஒரு இரண்டு மணி நேரம் தள்ளிப் போடக் கூடாதா?

    ReplyDelete
    Replies
    1. நன்றி அமைதி அப்பா. அந்த பிஸ்சா பையன் பற்றி சொன்னது மனதை என்னவோ செய்யுது. மக்களுக்காவது மனசு என ஒன்றில்லை??

      Delete
  21. அண்ணா அருமையான புயல் வேக ரிப்போர்ட். சுனாமி வந்தா ச்விம்மிங் கே போட்ருபிங்க போல‌

    ReplyDelete
  22. தமிழ் பின்னுட்டம் போட வைச்சிடிங்களே அண்ணா. நன்றீ

    ReplyDelete
  23. அந்தக் கடைசிப்படம் அட்டகாசம் போங்க..

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...