Friday, November 30, 2012

நீர்ப்பறவை - சினிமா விமர்சனம்

மீனவர் பிரச்னையை பல முறை செய்தித்தாளில் வாசிக்கிறோம். "மீனவர்களை கொல்லாதீர்" என ப்ளாகில் ஒரு ஓரத்தில் எழுதி வைத்தோம். அதையே சீனு ராமசாமி ஒரு இரண்டரை மணி நேர சினிமாவாக சொல்லியிருக்கிறார்.



மீனவர் பிரச்னை தான் கதைக்களன் என்றால் வறட்சியாக போய் விடும்; சாதாரண ரசிகன் ஏமாந்து விடுவான் என்பதால் கடைசி இருபது நிமிடத்தில் தான் அந்த விஷயத்தை ஆழமாய் தொடுகிறார்.

கதை

சரண்யா - தேவராஜ் ஆகியோரின் வளர்ப்பு மகன் விஷ்ணு (இலங்கையிலிருந்து வரும் ஒரு போட்டில் அந்த ஊருக்கு வந்ததாக பின்னர் சொல்கிறார்கள்). பெரும் குடிகாரன். சுனைனாவை காதலிக்க துவங்கி, சிறிது சிறிதாக திருந்துகிறான். சொந்தமாய் படகு வாங்கி மகிழ்ச்சியான வாழ்க்கை வாழத் துவங்கும் போது, வாழ்க்கையில் பெரும் அலை அடித்து அவர்கள் குடும்பத்தை புரட்டி போடுகிறது
***
ணிரத்னம் கனமான பிரச்னையை எடுக்கும் போதெல்லாம் கையாளும் முறை தான்! ரோஜா துவங்கி, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால் என - முதல் பாதி முழுக்க ஜாலியாக வைத்துக் கொண்டு, இடைவேளைக்கு பின் சொல்லப் போகும் கனமான விஷயத்துக்கான விதையை ஆங்காங்கு தூவிய படி செல்வாரே அதே டெக்னிக் தான்.

இது சினிமா என்னும் மீடியம். முதலில் போட்ட பணத்தை தயாரிப்பாளருக்கு திரும்ப வரவைக்க வேண்டும்; படம் பார்க்கிற மக்களுக்கு ஏமாற்றம் தரக் கூடாது ; அத்தோடு சேர்த்து ஒரு மெசேஜும் இருக்கணும் என்கிற அளவில் படம் எடுத்துள்ளது தெரிகிறது.
***
முதல் பாதி ஜாலியாக செல்கிறது. ஹீரோவின் குடிப்பழக்கம், அதனால் வரும் பிரச்சனைகள், அவருக்கு தரும் ட்ரீட்மென்ட், சரியாகி மீள்வது இவை பர்ஸ்ட் ஹாபில் இருந்தாலும், தம்பி ராமையா - பிளாக் பாண்டி காமெடியால் தியேட்டர் கலகலப்பாக இருக்கிறது.

தியேட்டர் கலகலத்து சிரிக்கும் சில இடங்கள்:

ஜெயமோகன் & சீனு ராமசாமி வசனங்கள் தான் படத்துக்கு மிக பெரிய பிளஸ். பல முறை வசனம் கிளாப்ஸ் வாங்குகிறது.

மீன் ஆய்ந்தவாறே மகனுக்கு தண்ணியடிக்க காசு தரும் சரண்யா " நல்ல சரக்கா வாங்கி குடிடா; கண்ட கண்ட சரக்கை குடிச்சு உடம்பை கெடுத்துக்காதே"

பிளாக் பாண்டி திருந்திய பிறகு பாதர் " என்னப்பா ஒழுக்கமா இருக்க ஆரம்பிச்சிட்டே போலருக்கே" அதுக்கு பிளாக் பாண்டி " ஆமா பாதர்; ஆனா ஞாயித்து கிழமையானா ஒழுக்கத்துக்கு லீவு விட்டுடுவேன் பாதர் "

சுனைனா பேசும் " சாத்தானே அப்பாலே போ " டயலாக்

விஷ்ணுவும் பிளாக் பாண்டியும் பாதரிடம் பாவ மன்னிப்பு கேட்க செல்லும் இடம் ...

சுனைனாவிடம் சரண்யா " நீயாவது அவன்கிட்டே பேசி வேலைக்கு அனுப்பு; இந்த காலத்து பசங்க எல்லாம் அம்மா சொன்னா எங்கே கேட்குறானுங்க? உன்னை மாதிரி சின்ன வயசு பொண்ணு சொன்னாதான் கேக்குறானுங்க"

இயக்குனர் சீனு ராமசாமி வரும் ஒரே காட்சி: அதில் அவரும் தம்பி ராமையாவும் பேசும் டயலாக் " பாத்துய்யா ; லேடிஸ் ஸ்கூல் வேணும்னு ஆர்வமா இருக்குறே ; பாலியல் புகார் வந்துட போகுது "

கடைசி இருபது நிமிடம் தவிர்த்து மற்ற நேரத்தில் சீரியஸ் காட்சியில் கூட காமெடியை மறக்க வில்லை. சர்ச் வெளியே ஒரு பெரிய பிரச்சனை நடக்கும் போது ஒருவர் எழுந்து பேச, " யாருப்பா உன்னை வெப்பன்ஸ் உடன் இங்கே அலோ பண்ணது " என்பது ஒரு உதாரணம்

பாட்டுகள் & பின்னணி இசை

ரகுநந்தன் இசையில் பாட்டுகள் ஏற்கனவே செம ஹிட் (நீர்ப்பறவை பாடல் விமர்சனம் : இங்கு ) ; நான்கைந்து அருமையான பாட்டு இருக்கும் போது, படம் துவங்கி முப்பது நிமிடம் வரை முதல் பாட்டே வரலையே என வெயிட் பண்ண வச்சுட்டாங்க. இரு முறை ஒலிக்கும் "பரபர பறவை" தான் ஹைலைட். தேவன் மகனே பாட்டில் இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிவது கமர்ஷியல் கட்டாயம் ( அதில் ரொம்ப கிளாமர் எல்லாம் இல்லை; திருமணம் ஆன கணவன்- மனைவி நெருக்கமாய் அப்பாடல் வருகிறது) ; யார் வீட்டு முகமோ; ரத்த கண்ணீர் என்ற இரு பாட்டுகள் கேட்கும்போது பிடிக்கா விடினும், கதையோடு சேர்த்து பின்னணியில் வருவதால் உறுத்த வில்லை. பின்னணி இசை ஓஹோ இல்லை. ஓகே.

கிறித்துவர்கள் எதிர்ப்பால் சில பாடல் வரிகள் படத்தில் மாறி ஒலிக்கின்றன; ஆனால் சி. டி போன்றவற்றில் பழைய பாடல் வரிகள் தான் ! இசை நிகழ்ச்சி எதிலும் பாடினாலும் கூட அந்த objectionable வரிகள் தான் பாடப்படும் என நினைக்கிறேன்

நடிப்பு

மிக பெரிய நடிகர் பட்டாளம். சிலரை குறிப்பிட்டு சொல்ல வேண்டும்.



விஷ்ணு தந்தையாய் வரும் தேவராஜ் (பூ படத்தில் ஸ்ரீகாந்த் அப்பாவாய் வருவாரே நினைவிருக்கா?) அலட்டல் இல்லாத நடிப்பு. மகன் குடிப்பழக்கத்தில் இருந்து மீண்டதும் டாக்டர் கிளினிக் சென்று, அவர் காலில் பெரிய மீனை வைத்து விட்டு விம்மும் இடம் அழகு.


சரண்யா - அசத்தியிருக்கிறார். போதை மறக்கடிக்கும் இடத்தில் " பாத்து மெதுவா திருத்துங்கடா ; ஒரேடியா திருத்த பாக்காதீங்க; அவன் சாராயம் கேட்டா வாங்கி குடுங்கடா" என்றும், பின் " செல்லம் குடுத்து தான் கெடுத்துட்டோம்" என்று புலம்பவதும் அம்மா பாத்திரத்துக்கு இவரை விட்டால் இப்போது ஆள் இல்லை என சொல்லவைக்குது.

தேவராஜ் அல்லது சரண்யா இந்த வருட சிறந்த துணை நடிகர் நாமிநெஷனில் நிச்சயம் இருப்பார்கள் என நம்புகிறேன்.

விஷ்ணு: படத்துக்காக நிறையவே உழைத்துள்ளார். குடிகாரனாகவும், திருந்தி வாழும் போதும் இயக்குனரின் நடிகனாக இயல்பான நடிப்பு. க்ளைமாக்சில் அவர் பங்கு எதுவும் இல்லாமல் போய் விடுகிறது.

சுனைனா :கடற்கரை ஓரம் இருக்கும் எல்லாரும் கருப்பா தான் இருக்கனுமா என்ன? அதுவும் இது சினிமாதானே ? அழகு சுனைனாவை வெயிலில் நிற்க வைத்து கருக்க வைக்காமல் இயல்பான நிறத்தில் விட்டிருக்கலாம். இந்த நிறத்திலும் கூட, இரு காது அருகிலும் தொங்கும் அந்த ஒற்றை சுருள் முடியும், பற்கள் தெரியாமல் சிரிக்கும் சிரிப்பும் என்னமோ செய்கிறது. காதலை கண்ணிலேயே காட்டுவதாகட்டும், Boat தயாராகும் போது ஆசையோடு வந்து பார்ப்பதாகட்டும் சுனைனாவுக்கு இதை விட சிறந்த பாத்திரம் இன்னொரு முறை கிடைக்குமா தெரியலை

பாதராக வரும் அழகம்பெருமாள் அந்த வட்டார வழக்கை சரியே பேசுகிறார்.

சாட்டையில் மிகையான நடிப்பு என்று விமர்சிக்கப்பட்ட தம்பி ராமையா நகைச்சுவையிலும் சரி, வயதான மேக் அப் மற்றும் நடிப்பிலும் சரி நிறைவு.

தியேட்டர் கமண்ட்ஸ் :

படம் துவங்கும் முன் ஹீரோ குரலில் " குடிப்பழக்கம் நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்கு கேடு" எனப் பேச, அதில் "கேடு" என ஒலித்த அடுத்த நொடி " சரி நீ கொஞ்சம் மூடு" என்றார் சத்தமாய் ஒருவர் ! குடிமக்களிடம் செம சிரிப்பலை.



காதல் படம் என்கிற ரீதியில் விளம்பரப் படுத்தியதால் தியேட்டரில் 25% காதல் ஜோடிகள் தான். அதிலும் எனக்கு இரண்டு பக்கமும் ஒவ்வொரு ஜோடி உட்கார்ந்து கொண்டு பேசி தீர்த்தனர்

இடைவேளையில் இரு நண்பர்கள் :" First half செமையா இருக்குல்ல ? ; மறுபடி தேசிய விருது வாங்கிடுவாரு இந்த ஆளு"

படம் முடிந்து படிகளில் இறங்கி போகையில் ஒரு நண்பர் கூட்டம் " செம டைரக்ஷண்டா " என்றும் " நல்ல வேளை சுனைனாவை வயசான மாதிரி காட்டலை"

சீனு ராமசாமி இயக்கம்

குடிப்பழக்கம்,மீனவர் பிரச்சனை, இலங்கை தமிழர் இன்னல் என பல சமூக அவலங்கள் கதையின் ஊடே சென்றாலும் அதையெல்லாம் காமெடி மற்றும் காதல் என்கிற இனிப்பு தடவி தந்துள்ளார். "கனமான விஷயத்தை ஆழமாய் சிந்திக்கலை; விருதே இவர் நோக்கு" போன்ற விமர்சனங்கள் வரலாம். என்னை பொறுத்தவரை படம் நிச்சயம் பிடித்திருந்தது. என்னுடன் பார்த்த பலருக்கும் கூட...

சமுத்ரகனி பாத்திரம் எப்போதும் சமூக அவலம் பேசுவது, மிக மிக ஆர்டினரி இன்டர்வேல் ப்ளாக் உள்ளிட்ட சிற்சில தவறுகள் இருந்தாலும் மெசேஜ் உடன் கூடிய படத்தை முடிந்த அளவு என்டர்ட்டேயிநிங் ஆக தந்தமைக்கு பாராட்டுகள் !

மீனவர் சுட்டு கொல்லப்படும் அவலத்தை ஓர் படமாக எடுத்த நிலையில், இதுவாவது அரசாங்கத்தை யோசிக்க வைக்குமா ?

நீர்ப்பறவை - நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம் !
****
அண்மை பதிவு:
இந்தியா ஏன் கசக்கிறது? பயமுறுத்தும் சாலைகள் -By -ஆதிமனிதன்

லட்சுமன் சுருதி ஆர்கெஸ்ட்ரா : அனுபவம்- சில தகவல்கள்

முடி திருத்துவோர் வாழ்க்கை - பேட்டி

வானவில்: நீர்ப்பறவை-நடுவுல பக்கத்தை காணும்-பூஜா

22 comments:

  1. பார்க்க முயல்கிறேன் மோகன்.

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட் நன்றி

      Delete
  2. Replies
    1. நன்றி சரவணன் பாருங்கள்

      Delete
  3. Anonymous8:03:00 PM

    மீனவர் சுட்டு கொல்லப்படும் அவலத்தை ஓர் படமாக எடுத்த நிலையில், இதுவாவது அரசாங்கத்தை யோசிக்க வைக்குமா ?//

    Wishful thinking Mohan...Politics is all about votes....

    BTW,I enjoyed your "BIODATA"...Take it easy bro...

    ReplyDelete
  4. நல்ல விமர்சனம்... பார்த்திடுவோம்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தனபாலன்

      Delete
  5. படம் எங்கள் ஊரில் வரவில்லையே!!
    என்ன செய்வது....ஒரே வழி இணையம்தான்!!!!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ? ஓகே

      Delete
  6. உடனடி விமர்சனம்!

    ReplyDelete
  7. விமர்சனம் நல்லா இருக்கு... நன்றி

    ReplyDelete
  8. Half boil படத்துக்கு

    One side omlet போல விமர்சனம்



    நன்றி

    ReplyDelete
  9. திரு.மோகன் உங்கள் விமர்சனம் படித்தேன்.நாம் நேரில் சந்திக்கும்போது கண்டிப்பாக இது குறித்து விவாதிப்போம்.

    ReplyDelete
    Replies
    1. அண்ணே: வாங்க நீங்க எட்டி பார்த்தது மிக மகிழ்ச்சி

      Delete
  10. அருமையான விமரிசனம். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நடன சபாபதி சார்

      Delete
  11. ஆஹா! உங்களுடைய விமர்சனம் படித்ததும் படம் பார்க்கலாம் என்ற ஆசை வந்துவிட்டது.
    கண்டிப்பாக பார்க்கிறேன்.

    உங்களுடைய அருமையான எழுதுநடையால் இந்த சினிமாவில் கூடுதல் எதிர்ப்பார்ப்பை கொண்டுவந்துவிட்டீர்கள் வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி செம்மலை நன்றி

      Delete
  12. Thanks for the Thanks Jayadev :)

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...