Sunday, August 26, 2012

சென்னை பதிவர் சந்திப்பு: பின்னே இருந்தது யார்?

சென்னை பதிவர் சந்திப்பிற்கு பின்னே நின்ற நண்பர்கள் பற்றிய சிறு குறிப்பு இது:

****
ராமானுசம் ஐயா: 

இத்தகைய விழா நடக்க வேண்டும் என்பது ஐயா அவர்களின் கனவு ! இந்த விழா என்பது ஒரு துவக்கம் தான் பதிவர்களுக்கு ஒரு சங்கம் வேண்டும் என்பதும் ஐயா அவர்கள் அடிக்கடி சொல்லும் ஒன்று. "தங்கம் செய்யாததையும் சங்கம் செய்யும்" என்பார் ஐயா.

ஐயாவை பற்றி சொல்லும் போது ஒரு காமெடியான சம்பவம் நினைவுக்கு வருகிறது; பதிவர் சந்திப்புக்கான முன்னேற்பாடு நிகழ்ச்சியில் ஒரு முறை ஐயா இப்படி சொன்னார் " மீட்டிங்கிற்கு போலிஸ் அனுமதி எல்லாம் வாங்க வேண்டியிருக்கு. ஒரு ரெண்டு வாரம் யாரும் அரசியல் பதிவு எழுத வேண்டாம்"

இதை சொன்னவுடன் அங்கிருந்த ரஹீம் கஸாலியை பாக்கணுமே ! " அட பாவிங்களா ! சும்மா மீடிங்க்னு சொல்லி கூப்பிட்டுட்டு என்னை ரெண்டு வாரம் பதிவே எழுத முடியாம செய்றீங்களே?" அப்படிங்கிற மாதிரி இருந்தது ! அரசியல் பதிவு எழுத கூடாதுன்னா கசாலி என்ன ஆவறது சொல்லுங்க !

சென்னைப்பித்தன் ஐயா:

விழாவுக்கான திட்டங்கள் துவங்கும் போது துரதிர்ஷ்ட வசமாய் ஐயாவின் காலில் அடிபட்டு விட்டது. ஆனாலும் போனில் எப்போதும் பேசி விபரங்கள் கேட்டு தெரிந்து கொள்வார். தன் கருத்துக்களை கூறுவார். மிக எளிமையான ஜாலி ஆன ஒரு நண்பராக இவரை சந்திக்கும் போது நீங்கள் உணருவீர்கள்

விழாக்குழுவினர் மேடையில் 
மதுமதி:  

இவரை கேப்டன் ஆப் தி ஷிப் என்றால் அது மிகையல்லவிழா நடப்பதில் மிக உறுதியாய் இருந்தவர். மண்டபம் துவங்கி, முக்கிய ஸ்பான்சர் வாங்குவது வரை அனைத்து வேலைகளையும் இழுத்து போட்டு கொண்டு செய்தவர். இவருக்கு போன் செய்தாலே வணக்கம் தோழர் என்பார். நாம் வழக்கம் போல் குட் மார்னிங் அல்லது குட் ஈவனிங் என்போம். இந்த விழாவிற்கு மிக அதிக வேலை செய்தவர்; விழாவின் முதுகெலும்பு - பேக்போன் என்றால் அது இவர் தான்.

பாலகணேஷ் :

ரொம்ப சுவாரஸ்யமான மனிதர். பிரபலங்களுடன் அவருக்குள்ள உறவை எழுதி நம்மிடம் பிரபலம் ஆகி விட்டார். பார்க்க மட்டுமல்ல காமெடியிலும் கூட பாக்யராஜை ஒத்தவர். மதுமதியுடன் துவக்கம் முதல் மூச்சு வாங்க ஓடி வருபவர்

ஜெய் :

இவரை பதிவர் சந்திப்பிற்கான முன்னேற்பாடுகள் குறித்து பேசும் மீட்டிங்கில் தான் முதலில் சந்தித்தேன். அனைவரையும் பேச விடாது இவரே அதிகம் பேசி கொண்டிருந்தார். அதை அவரே உணர்ந்து கொண்டு இப்படி சொன்னார்: " எனக்கு ரெண்டு மாசம் முன்னாடி தான் பை பாஸ் ஆனது. வீட்டிலே பேச கூடாது; பேச கூடாதுன்னு சொல்றாங்க. இங்கே வந்து தான் நான் பேசுறேன்; என்னை பேச விடுங்கையா " என்றார். அவர் பேச்சை குறைக்க ஒரு சின்ன வழிதான் செய்தார்கள். அவரை பொருளாளர் ஆக்கி விட்டார்கள். கலக்ஷன் எவ்வளவு, பட்ஜெட் எவ்வளவு என எப்பவும் திங்கிங் மேன் ஆகிட்டார். விழாவுக்கு போலிஸ் நிலையம் துவங்கி பல இடத்துக்கு மதுமதியுடன் அலைந்தவர். விழா பற்றி வரவு செலவாகட்டும் பிற விஷயங்களாகட்டும் உடனுக்குடன் அனைத்து நண்பர்களுக்கும் தவறாமல் மெயில் அனுப்பிடுவார். பேர் தான் பட்டி காட்டான். ஆள் செம மாடர்ன்.

சிவகுமார் :

இவர் முன்னேற்பாடு கூட்டங்களில் பேசும் விதமே அலாதியாய் இருக்கும். " ஒரு பதிவர் இருக்காரு; அவர் பேர் சொல்ல மாட்டேன் ; அவர் பின்னூட்டத்தில் என்ன பண்ணுவாருன்னா.." என்று பதிவர் ஒருவர் பற்றி சொல்வார். அவர் யார் என்று நாம் மண்டையை பிச்சிக்கணும்.

தன் கருத்துக்களை மிக ஆணித்தரமாக, அதே நேரம் எதிரில் உள்ளவரை புண்படுத்தாமல் சொல்வார். பல நல்ல யோசனைகள் சொன்னவர்.

பல நேரம் என் கருத்தும் இவர் கருத்தும் எதிர் எதிராய் இருக்கும்

ஆரூர் மூனா செந்தில்

பார்க்க கரடு முரடு இளைஞன். பழகி பார்த்தால் குழந்தை. வெளியூர் நண்பர்களுக்கு தங்கும் அறைகளை கவனித்து கொண்டவர் இந்த தம்பி தான்.

செல்வின்

பதிவர்களுக்கு சத்யம் தொலைகாட்சியில் பேச தொடர்ந்து வாய்ப்பு வாங்கி தந்தவர். இந்த விழாவில் பல விதங்களில் உதவியவர்

சசிகலா

இவரது கவிதை புத்தகம் இந்த நிகழ்வில் வெளியாகிறது. இனி அடுத்தடுத்த சந்திப்புகளில் நம்மில் பலரின் புத்தகம் இப்படி வெளியாகவேண்டும். விழாவுக்கு வரும் பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரும் பொறுப்பை ஏற்று சிறப்பாக பணியாற்றினார்

அரசன் /  குடந்தையூர் சரவணன்
இந்த நண்பர்கள் இருவரும் விழாவில் வரவேற்பு குழுவை பொறுப்பேற்று நடத்தினர்

TN முரளிதரன்

பரிசு பொருட்கள் வழங்குதலுக்கு  பொறுப்பேற்றவர்கள்

சீனு

மிக இளைஞர். இருப்பதிலேயே வயதில் குறைந்தவர். விழாவில் தன் நண்பர்களுடன் ஐ. டி கார்ட் தருவது உள்ளிட்ட வரவேற்பு வேலைகளை பொறுப்புடன் செய்தவர்

கவிதை வீதி சவுந்தர் 

இந்த விழா முதலில் அரை நாளில் நடப்பதாய் இருந்தது. ஆனால் ஒருவரிடம் ஒருவர் பேசவே அரை நாள் போதாது என முழு நாளாய் மாற்றணும் என ஒரே ஆளாய் வாதாடி முழு நாளுக்கு மற்றவர்களை ஒப்பு கொள்ள வைத்தார். விழா குறித்த பத்திரிக்கையை எல்லாரும் குறிப்பிட்ட நாளில் வெளியிடணும் என பேசி வைத்திருக்க நம்ம வாத்தியாரால் பொறுக்க முடியலை; அவசரமா எல்லாருக்கும் ஒரு நாள் முன்னாடி வெளியிட்டு விட்டார். அதுவும் எப்படி " பதிவர் விழா - பிரபலங்கள் புறக்கணிப்பு" அப்படின்னு தலைப்பு வச்சு. இவர் எப்பவுமே தன்னோட பதிவுக்கு இப்படியே தலைப்பு வைக்கிறார். நாமளும் ஒவ்வொரு தடவையும் அது என்னன்னு பாக்க உள்ளே போறோம் !

வேடியப்பன்

ஆரம்பத்தில் பதிவர் சந்திப்பு பத்தி பேசணும் அப்படின்னு சொல்லிட்டு டிஸ்கவரி புக் பேலஸ் போக ஆரம்பிச்சோம். அவரும் யதார்த்தமா யோசிச்சு பதார்த்தமா ஒத்துக்கிட்டார். அப்புறம் பார்த்தா வாரா வாரம் மீட்டிங்கிற்கு ஆலோசனைன்னு நாலஞ்சு மணி நேரம் மக்கள் கூடீட்டாங்க. கடைக்கு புத்தகம் வாங்க வர ஆட்களே நம்ம ஆளுங்களை சுத்திக்கிட்டு போய் தான் புக்கு தேடணும். அப்படி ஆச்சு நிலைமை.

பதிவர்களுக்கு 90 % சிறப்பு தள்ளுபடி தரார்னு மெட்ராஸ் பவன் சிவகுமார் பதிவில் போட்டிருக்கார். வேடியப்பனிடமே எவ்ளோ தள்ளுபடி என கேட்டுக்கலாம்

வாரா வாரம் ஞாயித்து கிழமை மத்தியானம் டிஸ்கவரி புக் பேலஸ் வந்து நம்ம மக்களுக்கு பழக்கம் ஆகிடுச்சு. அடுத்த வாரம் கூட மத்தியானம் நம்ம நண்பர்கள் பழக்க தோஷத்தில் அங்கே வந்தாலும் வருவாங்க :))

39 comments:

  1. இதெல்லாம் ரொம்ப ஓவர்!! பதிவர் சந்திப்பு நடக்கும் நாளிலேயே ரெண்டு பதிவா? :-)))

    ஏற்பாட்டாளர்கள் லிஸ்டில் சில பெயர்கள் மிஸ் ஆகுதுபோல இருக்கு? (உங்க பேரே இல்லியே?) :-)))

    //மூச்சு வாங்க ஓடி வருபவர் //

    ஆனாலும் இப்படி கிண்டல் பண்ணக் கூடாது!! :-)))

    //பேர் தான் பட்டி காட்டான். ஆள் செம மாடர்ன்.//
    :-))))

    வித்தியாசமான பதிவு. நல்லாருக்கு. மீட்டிங்கிற்கு போலீஸ் அனுமதி வாங்கணும்கிறது புதிய தகவல். போலீஸ் ஸ்டேஷன் அனுபவத்தையே ஒரு (தொடர்) பதிவா எழுதலாம்னு நினைக்கிறேன்.

    சந்திப்பு நடக்க பங்காற்றிய அனைவருக்கும் பாராட்டுகள்.



    ReplyDelete
  2. நேரடி ஒலிபரப்பு பார்த்தேன் அண்ணா நல்லா பேசினீங்க.. வழமை போல சி.பி. அண்ணா, கேபிள், தொப்பி போட்டவர் யாருன்னு தெரியல, மதுமதி, ஜாகி அண்ணா எல்லாம் ஒரே மேடையில இருந்தது கலக்கலா இருந்தது.. சேட்டைக்காரன் அண்ணாவ first டைம் பார்த்தன் ஹி ஹி செம நக்கல்ஸ் அவருக்கு.. சீனு கூட நல்லா பேசுனான் ஆனா இங்க கட் ஆகி கட் ஆகி தான் வொர்க் ஆச்சு.. அதனால முழுசா கேட்க முடியல..ராஜ் கூட இரத்தின சுருக்கமா பேசினாரு.. சில பதிவர்கள் உண்மையிலே என்டேர்டைன்மேண்டா பேசுனாங்க.. மேலும் புதிய தலைமுறை அறிவுப்பு பார்த்தேன்.. சில நிமிடங்கள்.ல எனக்கும் அவங்களோட மெயில் வந்தது.. I so much of miss thiss.. இருந்தாலும் கலக்குங்க..

    ஆனா இன்னைக்கும் பதிவு போட்டிங்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல அண்ணா


    ReplyDelete
  3. நேரடி ஒலிபரப்பு பார்த்தேன் அண்ணா நல்லா பேசினீங்க.. வழமை போல சி.பி. அண்ணா, கேபிள், தொப்பி போட்டவர் யாருன்னு தெரியல, மதுமதி, ஜாகி அண்ணா எல்லாம் ஒரே மேடையில இருந்தது கலக்கலா இருந்தது.. சேட்டைக்காரன் அண்ணாவ first டைம் பார்த்தன் ஹி ஹி செம நக்கல்ஸ் அவருக்கு.. சீனு கூட நல்லா பேசுனான் ஆனா இங்க கட் ஆகி கட் ஆகி தான் வொர்க் ஆச்சு.. அதனால முழுசா கேட்க முடியல..ராஜ் கூட இரத்தின சுருக்கமா பேசினாரு.. சில பதிவர்கள் உண்மையிலே என்டேர்டைன்மேண்டா பேசுனாங்க.. மேலும் புதிய தலைமுறை அறிவுப்பு பார்த்தேன்.. சில நிமிடங்கள்.ல எனக்கும் அவங்களோட மெயில் வந்தது.. I so much of miss thiss.. இருந்தாலும் கலக்குங்க..

    ஆனா இன்னைக்கும் பதிவு போட்டிங்களே உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்ல அண்ணா


    ReplyDelete
  4. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  5. அடடா.... என்ன ஒரு கடமை இவர்களுக்கு.

    நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்கள் தான் மோகன்.

    உங்க கடமை உணர்வையும் பாராட்டணும். சந்திப்பு நடந்திட்டு இருக்கும் போது உணவு இடைவேளைல ஒரு பதிவு போட்டு அசத்தறீங்களே. வாழ்த்துகள்.

    த.ம. 2

    ReplyDelete
  6. மிக சிறப்பான தொகுப்பு..நன்றி..

    ReplyDelete
  7. சிறப்பான நபர்கள் பற்றிய சிறப்பான பகிர்வு! அருமை! நன்றி!
    இன்று என் தளத்தில்
    பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
    கோப்பை வென்ற இளம் இந்தியா!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html

    ReplyDelete
  8. இரண்டு மாறுதல்கள் பார்க்கிறேன். கமெண்ட் பெட்டியிலும், கமெண்ட் மாடரேஷனிலும்!
    விழா அமைப்பாளர்களைப் பற்றிய சுவையான அறிமுகம் நன்று.

    ReplyDelete
  9. எல்லாமே அருமையா நடத்திவிட்டீர்கள்!

    முடிஞ்சவரை நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன்.

    அனைவருக்கும் மனம் கனிந்த பாராட்டுகள்.

    ReplyDelete
  10. இந்த விழா வெற்றி பெற பசி மறந்து கண் துஞ்சாது உழைத்த அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. இத்தகைய மாபெரும் நிகழ்வுக்காக பசி மறந்து கண் உறங்காது உழைத்த அனைவருக்கோம் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. அருமையான கூட்டு முயற்சி சார்... அனைவரின் பங்களிப்பும் அதற்கேற்ற உழைப்பும் வெகுவாக பாராட்டும் படி அமைந்தது... இந்த அளவிற்கு பொறுப்புடன் வீட்டு நிகழ்ச்சி போல நீங்கள் குறிப்பிட அனைவரும் மற்ற பதிவர்களும் ஓடி ஓடி வேலை செய்தது என்னை வியக்க வைத்தது....என்னுடைய இந்தவார விடுமுறையை பயனுள்ளதாக அமைத்துக் (வாயிப்பு) கொடுத்ததற்கு மிக்க நன்றிகள் சார்... மேலும் பல பதிவர்கள் மாநாட்டினை சிறப்புடன் நடத்திட என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!!!!!

    ReplyDelete
  13. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  14. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  15. இதில் அடைந்த ஆக்கப் பூரவமான முடுவுகளைச் சொல்லி ஒரு பதிவு போட்டேன்கன்ன நல்லாயிருக்கு. இது இன்னொரு டெசோ மாநாடு அல்ல என்பதை நிரூபிக்கனுமில்லியா............ஹி...ஹி......ஹி......

    ReplyDelete
  16. கரடு முரடாய் இருப்பவர்கள் அத்தனை பேர்களுடன் பழகினாலும் கருப்பட்டி கணக்காய் தான் இனிப்பர். வெல்லக்கட்டியாய் பேசுபவர்கள் பல சமயம் வேப்பங்காய் போல கசப்பர். இது உலக நியதி போலும்.

    நல்லாயிருக்குங்க.

    ReplyDelete
  17. அதுக்குள்ளயா......
    அண்ணே நீங்க ரொம்ப ஸ்பீடு...
    நம் அனைவரின் கூட்டு முயற்சி நன்கு நடந்தேறியது மகிழ்ச்சி. விழாவில் உங்க உங்கள் பங்கு பத்தி நாலைக்கு நம்ம் பயபூள்ளகதான் எழுதனும்...இங்கே காணோம்...

    நண்பர்கள் பற்றி சுவையாகக் கூறியிருக்கிறீர்கள்...

    நன்றி.

    ReplyDelete
  18. மின்னல் வேகப் பதிவு :-)

    ReplyDelete
  19. அருமை.

    குடந்தையூர் சரவணன் பெயரை, குடந்தையூரான்னு போட்டுட்டீங்களா?

    ReplyDelete
  20. அருமை.

    குடந்தையூர் சரவணன் பெயரை, குடந்தையூரான்னு போட்டுட்டீங்களா?

    ReplyDelete
  21. நீங்கதான் முதல் பதிவு போடுவீங்கனு ஒரு நினைப்பிருந்துச்சு.. ஆனா இத்தனை வேகமாப் போடுவீங்கனு எதிர்பார்க்கலிங்க.
    எல்லோருக்கும் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  22. அறிமுகங்களுக்கு நன்றி. அடுத்தமுறை சென்னை வரும்போது பார்த்துவிடுவோம்:-)

    ReplyDelete
  23. அருமையான ஏற்பாடு.பாராட்டுக்கள்.

    ReplyDelete
  24. தாஸ்:

    நேரடி ஒளிபரப்பை பலரும் பார்த்தாய் சொல்கிறார்கள் சிலர் மட்டும் தெரியலை என்கிறார்கள் ஏன் என தெரியலை

    ReplyDelete
  25. ஹுஸைனம்மா said...
    இதெல்லாம் ரொம்ப ஓவர்!! பதிவர் சந்திப்பு நடக்கும் நாளிலேயே ரெண்டு பதிவா? :-)))

    ***

    ஹிஹி இந்த பதிவு - விழா குழுவினரை அறிமுகம் செய்து மேடையில் பேச நான் தயார் செய்தது காலை பேசி விட்டதால் மதியம் இதை ரிலீஸ் செய்தாச்சு . விழா நேரலை ஒலிபரப்பு செய்த கணினி மதிய உணவு இடைவேளையில் சும்மா இருப்பதை பார்த்து இரு நிமிடத்தில் பப்ளிஷ் செய்து திரட்டிகளில் சேர்த்தேன்

    ***
    ஏற்பாட்டாளர்கள் லிஸ்டில் சில பெயர்கள் மிஸ் ஆகுதுபோல இருக்கு? (உங்க பேரே இல்லியே?) :-)))



    நீங்க தாங்க ரொம்ப நல்லவர் !

    நம்மை பத்தி நாமே சொல்றது எப்படி? ( உண்மையில் அவ்வப்போது ஐடியா தந்தது மற்றும் மக்கள் தொலைக்காட்சி விகடன் பத்திரிக்கை ஆகியோரை விழாவை கவர் செய்ய அழைத்தது மட்டுமே என் வேலை. அலுவலக வேலைப்பளுவில் நான் அதிகம் செல்லலை. )

    ReplyDelete
  26. ஹாரி பாட்டர் உங்கள் உணர்வுகளை புரிந்து கொள்ள முடிகிறது மிக மகிழ்ச்சி நன்றி

    ReplyDelete
  27. ஸ்ரீராம். said...
    இரண்டு மாறுதல்கள் பார்க்கிறேன். கமெண்ட் பெட்டியிலும், கமெண்ட் மாடரேஷனிலும்!
    விழா அமைப்பாளர்களைப் பற்றிய சுவையான அறிமுகம் நன்று.

    **

    விழா நடக்கும் போது விழா பற்றி தவறாய் எழுத கூடாதே என்று கமன்ட் மாடரேஷன் வைத்தேன். தொடர்ந்து வைக்கும் படி நண்பர் ஒருவர் மிக அறிவுறுத்தினார் இப்போ கமன்ட் மாடரேஷன் இல்லை

    ReplyDelete
  28. அன்பின் மோகன் குமார்

    அருமையான பதிவு - விழாவின் வெற்றிக்கு உழைத்தவர்கள் தான் உண்மையிலேயே பாராட்டத் தக்கவர்கள்.

    புலவர் ராமானுசம் ஐயாவின் திட்டங்கள அனைத்தும் அழகாக நிறைவேற்றப் பட்டதில் மிக்க மகிழ்ச்சி ஐயாவும் மிக அடக்கமாக விதை விதைத்தது மட்டும் தான் நான் - மற்றபடி செடியாகிப் பழம் தந்தது அனைத்தும் நண்பர்கள் தான் எனக் கூறினார். அனைவருக்கும் பாராட்டுகள் கலந்த நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  29. நல்ல தொகுப்புகள்....

    தொகுப்புகள் தொடரட்டும் ... நன்றி சார் (13)

    ReplyDelete
  30. நல்ல தொகுப்பு. எதிர்காலத்திற்கு பயன்படும்!

    ReplyDelete
  31. என்னால் பதிவர் திருவிழாவிற்கு வர முடிய வில்லை என்ற வருத்தம் தான். உங்கள் அனைவரையும் நேரலையில் கண்டது மகிழ்ச்சி, உங்கள் புகைப்படம் கண்டேன், வாழ்த்துக்கள் தோழா, என் தளத்திற்கும் கொஞ்சம் vangalen
    நான் பதிவுலகிற்கு ஒன்ற மாத குழந்தை.
    நன்றி

    ReplyDelete
  32. Anonymous9:01:00 PM

    அருமை சார்! நல்ல பகிர்வு!

    ReplyDelete
  33. அருமையான தொகுப்பு மோகன்...

    ReplyDelete
  34. பதிவர் சந்திப்ப பத்தி நீங்க சொல்லிருக்க விதமே சூப்பரா இருக்கு.... அப்படீன்னா அந்த நிகழ்வு எவ்ளோ அழகா இருந்துருக்கும்.....???

    ReplyDelete
  35. கருணாநிதி-யோன்னு பயந்துட்டேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...