Monday, August 20, 2012

உணவகம் அறிமுகம்: சிம்ரன்ஸ் ஆப்ப கடை.

இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள் !



சிம்ரன்ஸ் ஆப்பக்கடை - பேரே வித்யாசமா இருக்குதில்ல?

துபாயை தலைமை இடமாக கொண்ட உணவகம் இது. வடபழனி மற்றும் மற்றும் வேளச்சேரியில் இதன் கிளைகள் உள்ளன. சமீபத்தில் குடும்பத்துடன் இங்கு விசிட் அடித்தோம். சுத்தம், ஆம்பியன்ஸ், உணவின் சுவை எல்லாமே எங்களை கவரும் விதமாய் இருந்தது.

வார இறுதி மாலை நேரம் என்றாலே எல்லா ஹோட்டல்களிலும் சற்று காத்திருக்கத்தான் வேணும். இங்கு வெளியில் நிறைய சேர்கள் போட்டு மக்கள் அமர வசதி செய்துள்ளனர். நமது பெயரையும் எத்தனை நபருடன் உண்ண போகிறோம் என்றும் சொல்லி விட்டால் சேர்கள் காலியாகும் விதம் பொறுத்து உங்களை அழைப்பார்கள்.

தரை தளம் மற்றும் முதல் மாடி உள்ளதால் அதிக நேரம் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஐந்து நிமிடத்துக்குள் உள்ளே அழைத்து விட்டனர்.

எங்களுக்கு முதல் மாடியில் கண்ணாடி மூலம் சாலையை நன்கு வேடிக்கை பார்த்தவாறே அமர்ந்து சாப்பிடுற மாதிரி அமைந்தது அதிர்ஷ்டமே ! எல்லா நேரமும் இப்படி நல்ல இடம் கிடைக்காது !

நாம தான் பதிவு எடுக்க மொபைலில் போட்டோ எடுக்குறோம்னா ஆள் ஆளுக்கு அங்கு மொபைலிலும், காமிராவிலும் போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்.

ஆப்ப கடை எல்லாவற்றிலும் நம் கண் முன்னே ஆப்பம் ஊற்றி தருவார்கள்.

இப்படி அவர்கள் ஆப்பம் ஊற்றுவதை குட்டி பசங்க எட்டி பார்க்கிறார்கள் பாருங்கள்






நாங்கள் சாப்பிட்ட உணவுகள் இவை தான் :

மலேசியன் பரோட்டா





சாதா ஆப்பம்,

பூ (Flower) ஆப்பம் ,

பன்னீர் ஆப்பம்,

மலேசியன் பரோட்டா

காடை மசாலா

பலூடா

 **
ஆப்பம் சுட சுட போட்டு ஆவி பறக்க எடுத்து வந்து நம் தட்டில் பரிமாறுகிறார்கள். வீட்டில் மனைவி தோசை கரண்டியிலேயே தோசையை சுட சுட எடுத்து வந்து பரிமாருவாறே.. அதே போல இங்கும் செய்கிறார்கள் ! ஆனால் சைட் டிஷ் எடுத்து வைத்து கொண்டு சாப்பிடுவதற்குள் ஆப்பம் சற்று சூடு ஆறிடுது ! இட்ஸ் ஓகே.


ஆப்பம் சற்று இனிப்பாக உள்ளது. இது சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. எங்கள் மூவருக்கும் அந்த சுவை மிக பிடித்தது.

மலேசியன் பரோட்டா பெண் ஆர்டர் செய்திருந்தாள். அதுவும் சூப்பர் டேஸ்ட்டா இருந்தது. ஆளுக்கு கொஞ்சம் பிய்த்து எடுத்ததில் நொடியில் மலேசியன் பரோட்டா காலி !

மனசு ஒரு பக்கம் எல்லா விதத்திலும் நளாஸ் ஆப்ப கடையுடன் ஒப்பிட்டு கொண்டே இருக்கிறது.

தட்டுக்கு வெளியே எட்டி பார்க்கும் காடை

நாங்கள் ஆர்டர் செய்ததில் காடை மசாலா டாப் கிளாசாக இருந்தது. வெரி வெரி டேஸ்ட்டி. காடை பீசும் சக்கையாக இல்லாமல் மிக அருமையாய் இருந்தது சாப்பிட. இப்படி சைட் டிஷ் நன்றாக அமைந்ததால் அன்றைய சாப்பாடு எல்லா ஐட்டமும் எங்களுக்கு மிக பிடித்து போனது.

நாங்கள் மேலே சொன்ன ஐட்டம்ஸ் சாப்பிட பில் ஐநூறுக்கும் குறைவாய் ஆனது (அதிகமா குறைவா என உங்கள் சாய்சுக்கு விட்டுடுறேன்)

சிம்ரன்ஸ் ஆப்ப கடை: எதற்கு போகணும்?

அருமையான ஆம்பியன்ஸ். மிக நல்ல சுவை, நல்ல சர்வீஸ்

மைனஸ்

சற்று விலை கூட தான் ! மாச ஆரமபத்தில் தான் போக முடியும் !
*****

வீடுதிரும்பல் பரிந்துரை: அவசியம் ஒரு முறை சென்று வாருங்கள். நாங்கள் இனி அடிக்கடி போவோம் என நினைக்கிறேன் !

38 comments:

  1. நல்லதொரு உணவகம் அறிமுகம்...

    பசியைத் தூண்டும் படங்கள்...

    வாழ்த்துக்கள்... நன்றி… (TM 2)

    ReplyDelete
  2. அறிமுகம்...நன்று..இந்த கடையை நான் ஈ சி ஆர் ரோட்டில் பார்த்த தாக ஞாபகம்..பேரே வித்தியாச மாக இருப்பதால் கமெண்ட் பண்ணிகொண்டே சென்றோம்...

    ReplyDelete
  3. ஆப்பக் கடையில ஆப்பம் சாப்ட்டீங்க சரி... சிம்ரனைப் பாத்தீங்களா? ஹி,,, ஹி,,,

    ReplyDelete
  4. ஆஹா.... ஆப்பமா? எனக்கு ரொம்பப்பிடிக்கும். துளசிவிலாஸில் அஜந்தா ஆப்பச்சட்டி இருக்கு:-)

    இந்த சிம்ரன் என்ற பெயர் தமிழ்ப்படங்களில் நடித்த ஒருவரை நினைவு படுத்துதா?

    அதான் ஆப்பக்கடைக்கு இந்தப்பெயரை வச்சுருக்காங்க போல! ரசிகரா இருப்பார்:-)

    சிம்ரன் என்பதற்கு பொருள் சீக்கியர்களின் சத்சங்கம்.

    அந்த நடிகையும் பஞ்சாபி இல்லையோ!

    சண்டிகரில் நம்ம ஹௌஸ் ஓனர் பெண்ணின் பெயரும் சிம்ரன்.

    ReplyDelete
  5. இந்த அறிமுகம் அருமை.  சுவையூர வைக்கும் படங்கள்.  ஆப்பம் இனிப்பாகத்தான் இருக்கும் மோகன்.  காரணம் அதில் சேர்க்கப்படும் தேங்காய்ப் பால்.  மாவு புளிப்பதற்காக இளநீர் கலப்பார்கள்.  கேரளாவில் சில இடங்களில் கள்ளும் சேர்ப்பார்கள்.

    ReplyDelete
  6. பசியை தூண்டுகிறது மோகன் சார்

    ஆப்பம் ஓகே தான் ஆனால் நான் வெஜ் தான் யோசிக்க வைக்கிறது

    ReplyDelete
  7. Congratulations for getting Fabulous Blog Ribbon AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

    ReplyDelete
  8. சென்னையில் தமிழ் பதிவர்கள் விழா வெற்றியடைய வாழ்த்துகிறேன்!

    மேலே தமிழ் பதிவர்கள் திருவிழா ஆகஸ்ட் 26 என்று side bar -ல் உள்ளத்திற்கு code தர முடியுமா? எனது பதிவில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்!
    ReplyDelete

    ReplyDelete
  9. சுவையான பதிவு/பகிர்வு.

    ReplyDelete
  10. போக வேண்டிய லிஸ்ட்டில் இருக்கிறது. சீக்கிரம் ட்ரை பண்ணனும் :)

    ReplyDelete
  11. கோவை நேரம்: ECR ரோடில் இந்த கடை இருக்கிற மாதிரி தெரியலையே ! நீங்க பார்த்தது வேறு ஆப்ப கடையா இருக்கும் நண்பரே ! அல்லது வேளச்சேரி வழியே போகும் போது பார்த்திருக்கலாம்

    ReplyDelete
  12. பால கணேஷ் சார் : என்ன சிம்ரன் பத்தி கேக்குறீங்க? ரொம்ப தான் குறும்பு :)

    ReplyDelete
  13. துளசி கோபால் said...

    இந்த சிம்ரன் என்ற பெயர் தமிழ்ப்படங்களில் நடித்த ஒருவரை நினைவு படுத்துதா? அதான் ஆப்பக்கடைக்கு இந்தப்பெயரை வச்சுருக்காங்க போல! ரசிகரா இருப்பார்:-)
    **

    மேடம் இவங்க தலைமை அலுவலகம் துபாய். சினிமா நடிகையை வைத்து இந்த பெயர் வைத்திருப்பார்கள் என தோணலை. நீங்க சொன்ன அர்த்தம் வைத்து கூட (சத்சங்கம்) வச்சிருக்கலாம்

    ReplyDelete
  14. அமரபாரதி


    //ஆப்பம் இனிப்பாகத்தான் இருக்கும் மோகன். //
    ****
    வீட்டில் செய்யும் ஆப்பம் இனிப்பாய் இருக்காது அமரபாரதி. மேலும் இங்குள்ள நளாஸ் ஆப்ப கடையில் கூட இனிப்பாய் சாப்பிட்ட நினைவில்லை

    ReplyDelete
  15. சரவணன் : நன்றி

    ReplyDelete
  16. நன்றி ராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  17. நன்றி நம்பள்கி. உரியவர்களிடம் சொல்கிறேன்

    ReplyDelete
  18. ஸ்ரீராம்: நன்றி

    ReplyDelete
  19. ரகு : உங்க ஏரியா தான் ஒரு முறை விசிட் அடிங்க

    ReplyDelete
  20. நம்பள்கி :

    //மேலே தமிழ் பதிவர்கள் திருவிழா ஆகஸ்ட் 26 என்று side bar -ல் உள்ளத்திற்கு code தர முடியுமா? எனது பதிவில் சேர்க்கலாம் என்று இருக்கிறேன்!//

    அது JPG- Formatல் தான் உள்ளது. நீங்கள் அதனை டவுன்லோட் செய்து வழக்கமாய் நாம் jpg -யை நம் தளத்தில் இணைப்பது போல் இணைத்து கொள்ளலாம்.

    ReplyDelete
  21. சிம்ரன்ஸ் போனது இல்லை...நளாஸ் ஏனோ பிடிக்கவில்லை சார்

    ReplyDelete
  22. இந்த ஆப்பக்கடை எங்களின் ஃபேவரைட். ஆரம்பத்தில், ‘சிம்ரன்ஸ் ஆப்பகக்டை’ என்றுதான் இருந்தது. கடைசியாகப் போனபோது ‘சிம்ரன்ஸ்’-ஐக் காணோம் - பெயரில்!! வெறும் ‘ஆப்பக்கடை’தான் இருந்தது.

    மற்ற ஆப்ப வகைகள் அவ்வளவா புதியதில்லை - பல வகைகள் வீடுகளில் செய்வதுதான். ஃப்ளவர் ஆப்பம்தான் புதிது - அதையும் இப்போ வீட்டில் செய்றோமே!! ரொம்ப ஈஸி.

    ஆனாலும், ஹோட்டலுக்குப் போகும்போது, அவங்க ஆப்பம் ஊற்றும் லாகவத்தை வாய்பிளந்து பார்ப்பதுண்டு!!

    ReplyDelete
  23. ஃப்ளவர் ஆப்பம்?????

    நோட்டட் மை லார்ட்.

    இந்த முறை விடறதில்லை:-)

    ReplyDelete
  24. நல்லதொரு அறிமுகம்.

    ஆப்பத்தில் தேங்காய்ப் பால் மற்றும் இளநீர் சேர்ப்பதால் சற்று இனிப்பாகத்தான் இருக்கும். இது கேரளா முறை.

    ஆமா,.. ஃப்ளவர் ஆப்பம்ன்னா காலிஃப்ளவர்ல செஞ்சதா?.

    ReplyDelete
  25. சீனு: நன்றி. நளாஸ் ஏன் பிடிக்கலை என்கிறீர்கள் ஆச்சரியமா இருக்கு

    ReplyDelete
  26. ஹுசைனம்மா: ஆஹா ! தலைமை இடத்திலேயே சாப்பிட்டுட்டிங்க போலருக்கு ஆம் பிளவர் ஆப்பம் தான் ஸ்பெஷல். சாதாவும் அதுவும் இங்கு ஒரே விலை தான் ( ஒன்று 15 ரூபாய்)

    ReplyDelete
  27. அமைதிச்சாரல் said...

    ஆமா,.. ஃப்ளவர் ஆப்பம்ன்னா காலிஃப்ளவர்ல செஞ்சதா?.

    **
    இல்லீங்க அமைதிச்சாரல். பூ வடிவில் இருப்பதால் அது ஃப்ளவர் ஆப்பம்; பதிவில் உள்ள படத்தில் இருக்கும் பாருங்க

    ReplyDelete
  28. //இல்லீங்க அமைதிச்சாரல். பூ வடிவில் இருப்பதால் அது ஃப்ளவர் ஆப்பம்; பதிவில் உள்ள படத்தில் இருக்கும் பாருங்க //

    ஒரு வக்கீல் இம்புட்டு அப்பாவியா இருக்கிறதைப் பாத்தா, நம்ம்பமுடியலை!! :-))))))

    அவங்க கலாய்க்கிறாய்ங்கங்க!!

    ReplyDelete
  29. ""இஸ்லாமிய நண்பர்களுக்கு இனிய ரம்ஜான் திருநாள் வாழ்த்துகள் ! - "" மிக்க நன்றி சார்...
    கவர்ச்சியான மற்றும் அழகான அறிமுகம் சார் (சிம்ரன்ஸ் ஆச்சே).....

    ReplyDelete
  30. ஆப்பக்கடை கலகலக்கிறது.

    ப்ளவர் அப்பம் நன்றாகவே இருக்கின்றது.

    எமது நாட்டில் பால் அப்பம்,முட்டை அப்பம், சீஸ்அன்ட் பெப்பர் அப்பம், வெஜிடபிள் அப்பம் சில ஹோட்டல்களில் கிடைக்கும்.

    ReplyDelete
  31. சுவையான பகிர்வு.

    ReplyDelete
  32. இனிய அறிமுகம்.

    நீங்க பாட்டுக்கு புதுசுபுதுசா ஹோட்டல் அறிமுகம் செய்தால் - சென்னை வரும்போது உங்களோடு எந்த ஹோட்டல் போறதுன்னு குழப்பமா இருக்கு! :)

    ReplyDelete
  33. Price is very cheap for the menu u have given:) have to try this restaurant on this November

    ReplyDelete
  34. சமீரா said...

    கவர்ச்சியான மற்றும் அழகான அறிமுகம் சார் (சிம்ரன்ஸ் ஆச்சே).....
    **
    நன்றி சமீரா

    ReplyDelete
  35. தகவலுக்கு நன்றி மாதேவி

    ReplyDelete
  36. நன்றி ஆட்டோமொபைல்

    ReplyDelete
  37. வெங்கட்: எதுக்கு போனால் என்ன? பர்ஸ் எடுத்துட்டு வந்துடங்க அய்யாசாமி உஷார் பேர்வழி

    ReplyDelete
  38. முயற்சித்து பாருங்கள் கேரளா காரன் ரசிப்பீர்கள் என நம்புகிறேன்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...