Monday, August 6, 2012

சட்ட ஆலோசனை + எங்கள் வீட்டில் ஷூட்டிங் -படங்கள்

ங்கள் வீட்டில் நடந்த ஷூட்டிங் பற்றி சிறிது நேரத்தில் சொல்கிறேன். முதலில் சட்ட ஆலோசனை.. ஷூட்டிங் தான் வேண்டும் என சொல்லும் நண்பர்கள்   இரண்டு கேள்வி பதில்களையும்  தாண்டி செல்லலாம் !

சட்ட ஆலோசனை

கேள்வி: சௌந்திரராஜன் – சென்னை

ஒரு வழக்கு தொடரப்பட்டு, பிரதிவாதியிடம் எந்த விசாரணையும் நடைபெறாமல், ஒருதலைபட்சமாக தீர்ப்புக்கூறி, திரும்பவும் அந்த வழக்கு நீதிமன்றம் வந்தபோது அந்த வழக்கின் தீர்ப்பை மறு பரிசீலனைக்கு அனுப்பலாம் என்று தீர்ப்பு கூறப்பட்டது. அதற்குரிய காலம் கடந்துவிட்டது. அது பற்றி ஆய்வு செய்த போது பிரதிவாதியின் வழக்கறிஞர், வாதியின் வழக்கறிஞருடன் சேர்ந்து கொண்டு வாதிக்கு ஏற்றாற்போல மனுவை அளித்திருக்கிறார் என்ற தகவலும் காலம் கடந்து கிடைத்துள்ளது. இப்படிப்பட்ட சூழலில் பிரதிவாதிக்கு உரிய நியாயமான தீர்ப்பு கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

பதில்:

ஒரு தலை பட்சமாக வழக்கில் தீர்ப்பு வந்தால் அதற்கு பதிலாக செட் அசைட்(Set aside) பெட்டிஷன் போடலாம். அது போடப்பட்டதா என்பது உங்கள் கேள்வியில் இருந்து தெரியவில்லை. லிமிடேஷன் சட்டம் பிரிவு 5-ன் கீழ் செட் அசைட்(Set aside) பெட்டிஷன் போட கால தாமதம் ஆகியிருந்தாலும், தாமதத்துக்கான சரியான காரணம் சொல்லி வழக்கு போடலாம். நீங்கள் உடனடியாக நல்ல வழக்கறிஞரைத் தொடர்பு கொள்ளவும்.

உங்களுக்கு வழக்கறிஞர் யாரும் தெரியாவிடில் எனக்கு எழுதுங்கள். நீதிமன்றம் செல்லும் நண்பர்கள் சிலரை உங்களுக்கு அறிமுகப் படுத்துகிறேன்.

***************
கேள்வி: பாலசுப்பிரமணியன், சென்னை

நான் கவனித்த வரை தமிழ் நாட்டுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த யாரும் கவர்னர் ஆக வந்த மாதிரி தெரிய வில்லையே? நான் சொல்வது சரி தானா? இதற்கு என்ன காரணம் என்று சொல்ல முடியுமா?

பதில்:

நீங்கள் சொல்வது உண்மை தான். இந்திய அரசியலமைப்பில் ஒரு மாநிலத்துக்கு யார் கவர்னர் ஆக வரலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதில் கவர்னர் ஆக வருபவர் -

இந்திய குடிமகனாய் இருக்க வேண்டும்,

45 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்,

MLA, MP, மத்திய, மாநில அமைச்சர் போன்ற பதவிகளில் இருக்க கூடாது. இருந்தால் அப்பதவியை ராஜினாமா செய்து விட வேண்டும்,

போன்ற அவசிய காரணிகளுடன் இன்னொரு முக்கிய காரணியும் உள்ளது .

“சம்பந்தப்பட்ட கவர்னர் அந்த மாநிலத்தில் பிறந்தவராய் இருத்தல் கூடாது”

நீங்கள் கேட்டதற்கு விடை கிடைத்து விட்டதா? ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா இப்படி வேறு மாநிலத்தில் பிறந்தவர்கள் தான் தமிழகத்தில் கவர்னர் ஆக முடியும். தமிழகத்தில் பிறந்தவர் இங்கு கவர்னர் ஆக முடியாது.

தமிழரான திரு. C. ரங்கராஜன் 2001 முதல் 2002 வரை ஓராண்டு அடிஷனல் சார்ஜ் கவர்னர் ஆக தமிழகத்துக்கு இருந்தார். அந்த நேரம் அவர் ஆந்திராவின் முழு நேர கவர்னர் . தமிழக கவர்னர் பதிவியில் காலியிடம் வந்ததால் தற்காலிகமாக அவரை பார்த்து கொள்ள சொல்லி கூறினர். இப்படி அடிஷனல் சார்ஜ் இருப்பவர்களை நாம் முழு நேர கவர்னர் என கணக்கில் கொள்ள கூடாது

சட்ட ஆலோசனை வல்லமை இணைய இதழில் வெளியானது

****
இந்த பதிவில் சட்ட ஆலோசனை தான் மெயின் பார்ட். இந்த ஷூட்டிங் சமாசாரம் கொசுறு தான் !

எங்கள் வீட்டில் ஷூட்டிங்



க்கள் டிவியில் பேச சென்ற முறை அவர்கள் ஸ்டூடியோ சென்ற போது,  மூன்று புத்தகங்கள் பற்றி மட்டுமே பேச முடிந்தது. இன்னும் சில புத்தகங்கள் குறித்தும் பேச தயார் செய்திருந்தேன். இந்த வார இறுதியில் மக்கள் டிவி தேவன் அவர்கள் எங்கள் வீட்டுக்கு வந்து ஷூட்டிங் செய்தார். ஷூட்டிங் என்றாலே சுவாரஸ்யம் இருக்குமல்லவா? அதிலிருந்து சில துளிகள் :

## மனைவி அலுவலகத்துக்கும், பெண் பள்ளிக்கும் அனுப்பியாச்சு. வீட்டில் நம்மை தவிர ஆள் இல்லை. அவர்களுக்கே வீட்டுக்கு ஷூட்டிங் வந்ததை அப்புறம் தான் சொன்னேன். மனைவிக்கு "எழுத்தாளர் அவதாரம்" சற்று பிடிக்கா விடினும் வீடு மற்றும் தான் வளர்க்கும் செடிகள் காமிராவில் எப்படி வந்திருக்கு என பார்க்க ஆவல் :)

** ஷூட்டிங்குக்கான விளக்குகள், இதர உபகரணங்கள் சகிதம் இறங்கியதை தெருவில் பலரும் பார்க்க தவற வில்லை. என்னிடம் கேட்கா விட்டாலும் மனைவி மற்றும் மகளிடம் இது பற்றி கேட்டுள்ளனர்.


## எங்கள் வீட்டின் வெளியே லான் (புல்வெளி) உள்ளது. அதன் அருகே முதல் புத்தகம் பற்றி பேசினேன். ஆனால் ஆடி மாதம் ஈ தொல்லை வெளியே அதிகம் என்பதால் வீட்டுக்குள் போயிடலாம் என்றனர். 

** ஹாலில் தான் மீதம் அனைத்து புத்தக விமர்சனமும் பேசினேன். வீட்டில் மாடியிலும் சில அறைகள் இருந்தாலும் அவர்கள் அவற்றை பார்த்து விட்டு ஹாலே சிறந்தது; வேறு இடம் அனைத்தும் வொயிட் பேக்ரவுண்ட் என்பதால் வேண்டாம் என்றனர்.

## அவர்கள் பேசும் நபரை தான் முழு க்ளோஸ் அப்பில் வைப்பர். பின்னே சிறியதாய் ஏதாவது பேக் ரவுண்ட் தெரியும். அவ்வளவு தான். மேலும் இந்நிகழ்ச்சியில் காமிரா ஆங்கிள் மாற போவதே இல்லை. எனவே குறிப்பிட்ட அந்த இடம் ஒழுங்காய் இருந்தால் போதும். மற்ற இடம் எப்படி இருந்தாலும் கவலை இல்லை.

** இம்முறை மொத்தம் ஆறு புத்தகம் பேசியுள்ளேன்.

துளசி கோபாலின் - என் செல்ல செல்வங்கள் 
சுஜாதாவின் - மத்யமர் 
சிறகிசைத்த காலம் 
Who Moved  My Cheese என்ற ஆங்கில புத்தகம் 
என். எஸ். கே - வாழ்க்கை வரலாறு    


## வீடு தானே என்று ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு முறை சட்டை மாற்றலாம் என்றால் அவர்கள் விடலை. ஆனால் இரண்டு முறை ஒரே சட்டையணிந்து பேசி விட்டால், அப்புறம் அவங்களே சட்டை மாற்ற சொல்லிடுறாங்க :)

** நமக்கு பின்னணியில் என்ன வரணும் என ரொம்ப பார்க்கிறார்கள். வீட்டில் இருக்கும் ஷோ கேசில் இருந்து ஒவ்வொன்றாய் அவர்களே உரிமையாய் எடுத்து போய், எடுத்து போய் வைத்து பார்க்கிறார்கள்.

## இரண்டு மணி நேரத்தில் ஆறு புக் பற்றி பேசி முடித்தாகி விட்டது.  அப்புறம் அவர்களும் கிளம்ப நானும் Office கிளம்பி விட்டேன். 

** புத்தகத்தை நம்மிடம் வாங்கி அட்டையை மறுபடி தனியே ஷூட் செய்து கொண்டனர் 

***
நாம் பேசி ஏற்கனவே மக்கள் டிவியில் வந்த புத்தக விமர்சனங்கள் இந்த லிங்கில் உள்ளது. அதே போல் இந்த நிகழ்ச்சிகளும் மறுநாள் இதே லிங்கில் பார்க்கலாம். கடைசி பத்து நிமிடத்தில் தான் நாம் பேசியது இருக்கும்
http://www.istream.com/tv/watch/146665/Kalai-Vanakkam--Aug-1-2012


இன்று துளசி டீச்சர் புத்தகம் குறித்த விமர்சனம் (செல்ல செல்வங்கள்) இந்த லிங்கில் பார்க்க முடியும் (கடைசி பத்து நிமிடம்)


http://www.istream.com/tv/watch/149677/Kalai-Vanakkam--Aug-6-2012
***********
தினம் காலை 8.45-க்கு மக்கள் டிவியில் " நான் படித்த புத்தகம்" நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.  அடுத்த ஆறு நாளுக்கு நாம் பேசியது வரும்
இயலுமானால் நாளை முதல் பாருங்கள். நன்றி !

44 comments:

  1. Anonymous12:14:00 PM

    த.ம.2

    ReplyDelete
  2. இரண்டாவது கேள்வியும் பதிலும் - நல்ல விளக்கம்...
    நாளை மக்கள் தொலைக்காட்சியில் பார்க்கிறேன்...

    தொடர வாழ்த்துக்கள்... நன்றி...
    (த.ம. 2)

    என் தளத்தில் : மனிதனின் உண்மையான ஊனம் எது ?

    ReplyDelete
  3. முதல் இரண்டு நாட்கள் நிகழ்ச்சியும் கணினியில் பார்த்தேன். இங்கே மக்கள் தொலைக்காட்சி வருவதில்லை மோகன்.

    இன்றைய நிகழ்ச்சியையும் மாலை பார்த்து விடுகிறேன்.

    பாராட்டுகள் மோகன்.

    த.ம. 4

    ReplyDelete
  4. வாழ்த்துக்கள் சார்..

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் மோகன்

    ReplyDelete
  6. வாழ்த்துகள்.. இனிமே உங்க வீட்டுப் பக்கம் உங்களை ஒரு ஸ்டார் ரேஞ்சுக்குப் பார்க்கப்போறாங்கன்னு சொல்லுங்க :-)

    ReplyDelete
  7. கேள்வி பதில் உபயோகமான தகவல்கள்.
    வீட்டில் ஷூட்டிங் அனுபவங்கள் சுவாரஸ்யம். செல்லக் கிளிகள் குரல் கொடுக்கவில்லையா?

    ReplyDelete
  8. \\தமிழ் நாட்டுக்கு தமிழ் நாட்டை சேர்ந்த யாரும் கவர்னர் ஆக வந்த மாதிரி தெரிய வில்லையே?\\ கவர்னர் பதவி, வெறும் ரப்பர் ஸ்டாம்பு, முதல்வர்தான் மாநில நலன் குறித்த முக்கிய முடிவுகளை எடுக்க முடியும். தமிழ் நாட்டுக்கு முதல்வராக வந்தவர்களில், வரத் துடித்துக் கொண்டிருப்பவர்களில் தமிழ்க்காரர்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் நெஞ்சு வழியே வந்துவிடும்.........!!

    ReplyDelete
  9. நல்ல தகவல்கள்.

    ReplyDelete
  10. சட்ட ஆலோசனை பகுதியை விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50000 பணமாக கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.நிலபட்டா ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம் என்று கூறவும். நன்றி அய்யா சட்ட ஆலோசனை பகுதியை விரும்பி படித்து வருபவன் நான். எனக்கு ஒரு ஆலோசனை வழங்க வேண்டுகிறேன். 2007 ம் ஆண்டு என் தந்தை ஒருவருக்கு 50000 பணமாக கடன் கொடுத்தார். 2 வட்டி என்று சொல்லி வெற்று promisory note ல் கையெழுத்து வாங்கி வைத்திருக்கிறார்.நிலபட்டா ஒன்றையும் வாங்கி வைத்திருக்கிறார். கடனை திருப்பி செலுத்த பல முறை கேட்டும் கடன் வாங்கியவர் இது வரை கொடுக்கவில்லை.கடனை திரும்பி வாங்க எவ்விதம் நடவடிக்கை எடுக்கலாம்

    ReplyDelete
  11. மக்கள் தொலைக்காட்சியில் என் செல்ல செல்வங்கள் புத்தகம் பற்றி பேசியவைகளைப் பார்த்தேன்.

    அருமையாப்பேசி இருக்கீங்க.

    இனிய நன்றிகள்.

    நீங்களும் டிவி ஸ்டார் & நம்ம கோகியும் இப்போ டிவி ஸ்டார்:-))))))

    ReplyDelete
  12. வாழ்த்துக்கள்

    தெரிந்தவர்களை இப்படி தொலைகாட்சியில் பார்க்கும் போது ஒரு குழந்தைத்தனமான மகிழ்ச்சி!! (வீட்ல, எனக்கு இவரை தெரியுமே(?)னு சொல்றபோ இருக்கிற குஷி...ம்...அதை அனுபவிச்சு பார்க்கணும் ) :))

    பதிவுலகம் கொடுக்கிற ஒரு சந்தோசம் இது.

    உங்களின் பேச்சு மிக நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்தை போலவே...

    ReplyDelete
  13. நண்பர்களே

    இன்று துளசி டீச்சர் புத்தகம் குறித்த விமர்சனம் (செல்ல செல்வங்கள்) இந்த லிங்கில் பார்க்க முடியும் (கடைசி பத்து நிமிடம்)

    http://www.istream.com/tv/watch/149677/Kalai-Vanakkam--Aug-6-2012

    ReplyDelete
  14. ஆஹா இங்கே மக்கள் தொலைக்காட்சி தெரியாதே :((

    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. வீட்டுல ஷூட்டிங்னா, வீட்டை அதகளப்படுத்திடுவாங்கன்னு படிச்ச ஞாபகம். இது சினிமா/சீரியல் ஷூட்டிங் இல்லாததால, அந்தளவு இருந்திருக்காது, இல்லியா?

    மேலும், safe-ஆ, வீட்டம்மா ஆஃபீஸ் போனப்புறம்தானே இதெல்லாம்!! அதனால தப்பிச்சுட்டீங்க!!

    ReplyDelete
  16. சிறப்பான ஆலோசனை
    மக்களில் தொடரும் நிகழ்ச்சிகளுக்காக வாழ்த்துகள்
    way to go!

    ReplyDelete
  17. வணக்கம்.உங்க அறிமுகம் பார்த்தேன்..நீங்களும் செல்ல பிராணி வளர்க்கறீங்க போல...ஒரு ஈ உங்களையே சுத்தி சுத்தி வருது...பார்த்துங்க...ஒருவேளை அது நான் ஈ ஆக இருக்க போகுது..?

    ReplyDelete
  18. சிறப்பான ஆலோசனை!நன்றி!
    இன்று என் தளத்தில் மழை!ஹைக்கூக்கள்!http://thalirssb.blogspot.com/2012/08/blog-post_6.html

    ReplyDelete
  19. நன்றி பாலஹனுமான் சார்

    ReplyDelete
  20. தனபாலன் சார் : நன்றி

    ReplyDelete
  21. பார்த்தீர்களா வெங்கட்: நன்றி

    ReplyDelete
  22. நன்றி ராஜ்

    ReplyDelete
  23. நன்றி வலங்கை சரவணன்

    ReplyDelete
  24. அமைதிச்சாரல் said...
    வாழ்த்துகள்.. இனிமே உங்க வீட்டுப் பக்கம் உங்களை ஒரு ஸ்டார் ரேஞ்சுக்குப் பார்க்கப்போறாங்கன்னு சொல்லுங்க :-)

    அப்படியெல்லாம் இல்லீங்கோ தேன்க்சுங்கோ

    ReplyDelete
  25. ஸ்ரீராம். said...

    செல்லக் கிளிகள் குரல் கொடுக்கவில்லையா?
    *****

    நாட்டி ( பெண்) தைரிய சாலி. பயப்படவே இல்லை. அஜூ (பையன்) ரொம்ப பயந்து போய் பதுங்கி கொண்டான். ஞாபகமாய் விசாரித்தமைக்கு மிக நன்றி ஸ்ரீராம்

    ReplyDelete
  26. தாஸ்: அப்ப "தமிழின தலைவர்" ஆண்டால் பரவால்லியா? :) இருப்பதில் அவருதானே தமிழர் :))

    ReplyDelete
  27. பிரபாகர்: அவசியம் அடுத்த சட்ட ஆலோசனை பகுதியில் உங்கள் கேள்விக்கு பதில் தருகிறேன்

    ReplyDelete
  28. துளசி கோபால் said...
    மக்கள் தொலைக்காட்சியில் என் செல்ல செல்வங்கள் புத்தகம் பற்றி பேசியவைகளைப் பார்த்தேன்.

    அருமையாப்பேசி இருக்கீங்க.


    நீங்களும் டிவி ஸ்டார் & நம்ம கோகியும் இப்போ டிவி ஸ்டார்:-))))))

    ****
    டீச்சர்: உங்களை பற்றி பேசியதை விட உங்க கோகி படம் டிவியில் பார்த்ததில் தான் நீங்க ரொம்ப ஹாப்பி போல :)

    ReplyDelete
  29. Kousalya said...

    உங்களின் பேச்சு மிக நன்றாக இருக்கிறது உங்கள் எழுத்தை போலவே.
    *****
    மேடம்: பல தளங்களில் அற்புதமாய் இயங்குபவர் நீங்கள். நீங்கள் இப்படி சொன்னது மிக மகிழ்வாய் உள்ளது,

    எப்போதும் நினைவில் கொள்ளும் பாராட்டாய் இது இருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

    ReplyDelete
  30. புதுகைத் தென்றல் மேடம்: நான் தந்த லிங்கில் பார்க்க முயலுங்கள் நன்றி

    ReplyDelete
  31. ஹுசைனம்மா: ஆம் சீரியல் அல்லது சினிமான்னா வீடு நாஸ்தி என நினைக்கிறேன்

    ReplyDelete
  32. சென்னை பித்தன் ஐயா: தங்கள் மனம் திறந்த பாராட்டு பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

    ReplyDelete
  33. கோவை நேரம்: ஹா ஹா. செம ஷார்ப் பார்வை உங்களுக்கு கரக்ட்டு !!

    ReplyDelete
  34. \\ தாஸ்: அப்ப "தமிழின தலைவர்" ஆண்டால் பரவால்லியா? :) இருப்பதில் அவருதானே தமிழர் :)) \\ அங்க தான் சார் நிஜமான நெஞ்சு வலியே வருது. அவரோட root மனவாடாம். எனக்கு ஒரு ஏக்கம் சார், மற்ற எல்லா தென் மாநிலங்களிலும், [முக்கியமாக கேரளத்தில்] முதல்வர்கள் மாநில முன்னேற்றத்துக்காக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும் போது, இங்கு மட்டும், வந்தோமா கொள்ளையடித்தோமா போனோமா என்றே இருக்கிறார்களே, அது ஏன் சார்? மற்ற மூன்று மாநிலங்கள் தமிழகத்தின் உரிமைகளை மறுத்து எத்தனை அட்டூழியம் செய்தாலும், தமிழக உரிமையை நிலைநாட்ட ஜெயலலிதா முயன்ற அளவுக்கு கூட தமிழன் என்று சொல்லிக் கொள்பவர்கள் எதுவும் செய்யவில்லையே, அது ஏன் சார்? நமக்கெல்லாம் விடிவே வராதா? [அதுசரி, இவரு ஆட்சிக்கு வருவது மக்களுக்கு சாபக்கேடாயிற்றே, அதற்க்கு எதற்கு சார் ஸ்மைலி போடுறீங்க, ஒரு வேலை இவரைப் பிடிக்குமோ!!]

    ReplyDelete
  35. தாஸ்: உங்களுக்கு கலிஞரை பிடிக்காது என தெரியும். அதான் ஸ்மைலி போட்டேன்

    //மற்ற எல்லா தென் மாநிலங்களிலும், [முக்கியமாக கேரளத்தில்] முதல்வர்கள் மாநில முன்னேற்றத்துக்காக என்னென்ன செய்ய முடியுமோ அத்தனையும் செய்யும் போது, இங்கு மட்டும், வந்தோமா கொள்ளையடித்தோமா போனோமா என்றே இருக்கிறார்களே, அது ஏன் //

    மிக உண்மை. எனக்கும் அதே வருத்தம் உண்டு

    ReplyDelete
  36. சட்ட ஆலோசனைகள் செம, தொடர்ந்து ஆலோசனைகள் வந்துகொண்டே இருக்கட்டும்!

    ReplyDelete
  37. வாழ்த்துக்கள்... Mohan

    ReplyDelete
  38. ஆலோசனைகள் சூப்பர்....!

    மக்கள் தொலைக்காட்சி பார்த்து காலம் பல ஆச்சு, இங்கே எனக்கு கனெக்ஷன் கிடைக்கவில்லை நண்பா...!

    ReplyDelete
  39. நாம் நம்பி போகும் வழக்கறிஞர்களின்ன் உண்மைத்தன்மையை எப்படி அறிந்து கொள்வது? நம் வழக்கறிஞரரின் மேல் மெல்லிய சந்தேகம் வந்தபின் செய்ய வேண்டியது என்ன? சற்று விளக்கமான பதில் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

    ReplyDelete
  40. திங்கள் அன்று பார்க்க முடியவில்லை.. மகளை பள்ளியில் கொண்டு விட்டு விட்டு வருவதால் நேரமாகி விடுகிறது இன்று சுஜாதாவுக்காக சீக்கிரமாக ஓடிவந்தேன். 5நிமிடங்கள் லேட்தான்.. அருமையான விமர்சனம் நாளை Eagle book center போகவேண்டும். மத்யமர் வாங்க.. ( அய்யாசாமி சட்டை கலர் கலக்கல். நாளைக்கு கிளிபச்சை கலர் சட்டையா? )

    ReplyDelete
  41. வரலாற்று சுவடுகள் : நன்றி நண்பா

    ReplyDelete
  42. நன்றி வடிவேலன்

    ReplyDelete
  43. மனோ: நன்றி இணையத்தில் பார்க்க லிங்க் தந்துள்ளேன். பாருங்கள் நண்பா

    ReplyDelete
  44. உமா மேடம்: நீங்கள் சொன்னது மிக மகிழ்ச்சி.

    //நாளைக்கு கிளிபச்சை கலர் சட்டையா? ) //
    கிட்ட தட்ட ரைட்டு ! பச்சையும், நீலமும் கலந்த சட்டை !

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...