Saturday, August 4, 2012

பதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்..

ன் செல்ல செல்வங்கள் - பதிவர் துளசி கோபால் அவர்களின் புத்தகம்.

எழுதுவதற்கு விஷயங்கள் எத்தனை எத்தனை உள்ளன ! தான் வளர்த்த செல்ல பிராணிகள் குறித்து ஒரு தொகுப்பு எழுத வேண்டும் என்று நினைத்த அந்த எண்ணத்துக்கு முதல் வணக்கம் !

சிறு வயதில் வளர்த்த மணி வாத்து நீரில் மூழ்கி இறந்ததில் துவங்குகிறது பயணம். கிட்ட தட்ட 19 வளர்ப்பு பிராணிகள். நாய்கள், புறாக்கள், பூனைகள் என..

ஒரு உண்மையை சொல்லி விடுகிறேன். எனக்கு புத்தகத்தில் முதல் பகுதி தான் வெகுவாக பிடித்தது. காரணம் நாய்கள் குறித்த பகுதி முதல் பாதிக்குள் முடிந்து விடுகிறது. இரண்டாம் பகுதி முழுதும் பூனை தான் ராஜ்ஜியம் செய்கிறது ! துளசி மேடம் கூட ஒரு இடத்தில் "எனக்கும் மிக பிடித்த பிராணி நாய் தான்" என்கிறார். அவை மிக அறிவு மிக்கவை. நாம் சொல்வதை அப்படியே புரிந்து கொள்ளும். அன்பை காட்டுவதிலும் அவற்றை மிஞ்சவே முடியாது.

ஒவ்வொரு செல்லம் துளசி மேடமிடம் வரும் கதை சுவாரஸ்யம். ஒன்று கூட எங்கிருந்தும் வாங்காமல், தானாகவே அவர்கள் வீட்டு வாசலுக்கோ அல்லது பூனை என்றால் வீட்டுக்குள்ளோ வந்து விடுகின்றன. துளசி மேடமின் கணவர் கோபால் கேரக்டர் மிக சுவாரஸ்யமாக விரிகிறது. "ஏன் இதையெல்லாம் வளர்க்கிறே? இனிமே ஒண்ணும் உள்ளே வர கூடாது" என்று ஒரு பக்கம் சொன்னாலும், பின் தானும் அவற்றுக்கான வேலைகள் செய்வதை சிரிக்க சிரிக்க சொல்கிறார்.

புத்தகம் முழுதும் அவர் நம் அருகில் அமர்ந்து பேசும் பாணியில் தான் எழுதப்பட்டிருக்கு. முழுக்க முழுக்க பேச்சு தமிழ் தான். இதுவே வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் உள்ளது

ஒவ்வொரு செல்லமாக இறப்பது வாசிக்கும் நமக்கே கஷ்டமாக உள்ளது எனில் வளர்த்தவர்களுக்கு எப்படி இருக்கும் ? அதிலும் ஒரு பூனைக்கு ஹெச். ஐ. வி வந்து அதன் பின்னும் வளர்த்து இனி பிழைக்காது என்கிற நாள் வரை வைத்து பார்த்தது நெகிழ்வு.

இவை எங்களின் செல்லங்கள் !

செல்ல பிராணிகள் பற்றிய தொகுப்பு எனினும் அது துளசி - கோபால் என்கிற இரு மனிதர்களின் வாழ்க்கை பயணத்தை ஒரு பக்கம் சொல்லி செல்கிறது. அவர்களுக்கு குழந்தை பிறக்க பல வருடங்கள் ஆனது, அப்போது செல்லங்களே துணையாய் இருந்தது, பின் மகள் பிறந்தது, ஒவ்வொரு ஊராக மாறியது என வாழ்க்கை விரிகிறது

முதன் முதலில் இந்தியாவில் டிவி வந்த காலத்தில் தெருவில் யாரோ ஒருவர் வீட்டில் மட்டுமே டிவி இருக்கும். அவர் வீட்டுக்கு போய் தான் மற்றவர்கள் பார்ப்போம். அப்படி மற்றொரு வீட்டில் ஒரு விம்பிள்டன் பைனல் இரவு முழுதும் பார்த்த கதை- பின் தாங்களே டிவி வாங்கிய பின் தெரு முழுதும் இவர்கள் வீடு வந்து டிவி பார்த்தது என சுவையான பிளாஷ்பேக்.


துளசி மேடமை சும்மா சொல்ல கூடாது எல்லாருக்கும் பட்ட பெயர் வைத்து விடுகிறார். வீட்டின் அருகில் இருப்போருக்கும் சரி செல்லங்களுக்கும் சரி நிறைய பட்ட பெயர்கள். அநேகமாய் பதிவர்களுக்கும் வைத்தாலும் வைத்திருப்பார் :))

தனக்கு ஒரு ஆப்பரேஷன் ஆகி இரண்டு வாரம் தன் செல்ல நாய் ச்சிண்டுவை பிரிந்து இருந்ததும், அப்போது அவரை பார்க்க முடியாமல் அது கஷ்டப்படதையும் பின் வீட்டுக்கு வந்த பின், அவரை விட்டு ச்சிண்டு எங்கும் போகாமல் அருகிலேயே அமர்ந்து கொண்டதும் சொல்லும் இடம் நெகிழ்வு

இவர்கள் தான் எத்தனை முறை வீடு மாறியிருக்கிறார்கள்? "வீடு மாறும் அனுபவம் எங்களுக்கு பிக்னிக் போற மாதிரி" என வீடு மாற எப்படி தயார் ஆவது என அசால்ட்டாக சொல்கிறார். செம காமெடியாய் உள்ளது.

நிறைவாக: இந்த புத்தகம் ஒரே மூச்சில் படிக்க கூடிய புத்தகம் அல்ல. சில அத்தியாயங்கள் படித்து முடித்ததும் செல்லம் ஒன்று மரித்து விட, நமக்கும் மனது கனத்து போகிறது. இதனால் ஒரு நாளைக்கு சில அத்தியாயங்கள் மட்டுமே வாசிக்க வேண்டும் என்பது என் பரிந்துரை.


செல்ல பிராணிகள் வளர்ப்போர் - மிக ரசிக்கவும், வளர்க்காதோர், அவை வளர்ப்பதில் உள்ள சிரமங்களை அறியவும் உதவும் இந்த புத்தகம் ! துளசி மேடமுக்கு வாழ்த்துகளும், வணக்கமும் !

*********
புத்தகம்: என் செல்ல செல்வங்கள் 
பதிப்பகம்:சந்தியா பதிப்பகம்  
விலை: 80
பக்கங்கள்: 152
*********

ஜூலை 22, 2012 தேதியிட்ட திண்ணை இதழில் வெளியானது

*********
நண்பர்களே, மக்கள் டிவியின் " நான் படித்த புத்தகம்" பகுதிக்கு மீண்டும் சில புத்தகங்கள் குறித்து பேசி உள்ளேன். வீட்டுக்கே வந்து இம்முறை ரிக்கார்டிங் செய்தனர். ஆறு புத்தகங்களுக்கான விமர்சனம், ஒவ்வொன்றாய் வருகிற  திங்கள் கிழமை   முதல் தொடர்ந்து ஒளி பரப்பாகும். அதில் முதல் புத்தக விமர்சனமாய் ஒளிபரப்பாக உள்ளது செல்ல செல்வங்கள் தான் ! வரும் திங்கள் முதல் காலை 8.45-க்கு இயலுமானால் பாருங்கள் !

46 comments:

  1. வணக்கம்..புத்தகம் படிக்கனும்...

    ReplyDelete
  2. நம்ம வீட்டுல யும் ஒரு செல்ல பிராணி இருக்கு..செம ப்ரிலியன்ட் நாய்.நான் சொல்றத கேட்கவே மாட்டான்..அதே சமயம் யாரையும் வீட்டுக்குள்ளே அனுமதிக்க மாட்டான்...மூணு வருசமா..இதுவரைக்கும் யாரும் என் வீட்டு காலிங் பெல் அடிச்ச தில்லை.அவனே கூப்பிட்டு விடுவான்.

    ReplyDelete
  3. வண்டிய கிளப்பினா உடனே வந்து உட்கார்ந்து கொள்வான்.அவனை விட்டுட்டு போனா எதுவும் சாப்பிடாம கோபத்தை காட்டுவான்..

    ReplyDelete
  4. \\வரும் திங்கள் முதல் காலை 8.45-க்கு இயலுமானால் பாருங்கள் !\\ Why don't you upload the Videos, if possible?

    ReplyDelete
  5. நானும் வெங்கட் எழுதினதுலருந்து இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிச்சுடணும்னு நினைச்சுட்டேதான் இருக்கேன். ஏனோ தள்ளிப் போகுது. இப்ப நீங்க வேற நல்ல விமர்சனம் கொடுத்து ஆவலைத் தூண்டிட்டீங்க மோகன். டீச்சர் இந்தியா வர்றப்ப புத்தகம் வாங்கி அவங்கட்டயே ஆட்டோகிராபும் வாங்கிட்டு அப்புறம் தான் படிக்கப் போறேன்.

    ReplyDelete
  6. அருமையான விமர்சனம்..

    ReplyDelete
  7. நல்ல விமர்சனம் மோகன். ரொம்பவே ரசித்துப் படித்த புத்தகம்.

    ஆஹா உங்க பக்கத்திலே இதே புத்தகம் பற்றி நான் எழுதிய பதிவுக்கான விளம்பரம்.. கணேஷ் சார் சொன்னதைச் சொன்னேன்! :))

    ReplyDelete
  8. மனம் கனிந்த நன்றிகள்.

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம் மோகன் சார்! மிக்க நன்றிகள்!

    ReplyDelete
  10. நல்லதொரு விமர்சனம்...
    புத்தகம் வாங்கி படிக்க வேண்டும்...

    நன்றி…
    (த.ம. 8)

    ReplyDelete
  11. Anonymous3:37:00 PM

    செல்லமான செல்ல பிராணி.

    ReplyDelete
  12. புத்தக அறிமுகம் அருமை!

    இன்று என் தளத்தில் இப்படித்தான் சாவேன்! பாப்பாமலர்!http://thalirssb.blogspot.in

    ReplyDelete
  13. தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி

    வாருங்கள் ஒன்று திரள்வோம்!!!!!!!!!!!!!!!

    தமிழின் பெருமையை உலகிற்கு உரைத்து சொல்ல ஒன்று கூடுவோம்.....

    ஆகஸ்ட் - 26-ல் சென்னை மாநகரில்.....

    அனைத்துலகத் தமிழ் பதிவர்களின் சந்திப்பு வரும் ஆகஸ்ட் 26-ம் தேதி (ஞாயிறு) சென்னையில் நடைபெற இருப்பதால் தமிழ் வலைப் பதிவர்கள் அனைவரும் கலந்து சிறப்பிக்க வருகை தாருங்கள்.....


    மதுமதி மற்றும் குழுவினருடன் மக்கள் சந்தை.com
    95666 61214/95666 61215

    ReplyDelete
  14. கோவை நேரம்: உங்கள் வீடு நாய் பற்றி சொன்னது சுவாரஸ்யம். கோவை வந்தால் அவனை பார்க்கணும் என நினைக்கிறேன்

    ReplyDelete
  15. தாஸ்

    வீடியோ கேட்டுள்ளேன். வந்தால் யூ டியூபில் ஏற்றி விட்டு பகிர்கிறேன். ஆனால் ஏற்கனவே வந்தவை பார்க்க வேண்டுமெனில்....

    இந்த லிங்கில் மதுரை நினைவுகள் பற்றிய விமர்சனம் உள்ளது

    http://www.istream.com/tv/watch/146665/Kalai-Vanakkam--Aug-1-2012

    மேலும், 'THE MONK WHO SOLD HIS FERRARI' கீழே உள்ள லிங்கில் உள்ளது.

    http://www.istream.com/tv/watch/147268/Kalai-Vanakkam--Aug-2-2012

    ReplyDelete
  16. கணேஷ்: நன்றி படியுங்கள்

    ReplyDelete
  17. வெங்கட்: உங்கள் விமர்சனமும் படித்துள்ளேன் நன்றி

    ReplyDelete
  18. அமைதி சாரல் : நன்றி

    ReplyDelete
  19. கவி அழகன் : நன்றி

    ReplyDelete
  20. துளசி மேடம் : நன்றி

    ReplyDelete
  21. வரலாற்று சுவடுகள் : நன்றி நண்பரே

    ReplyDelete
  22. தனபாலன் சார் : தொடர் ஆதரவுக்கு நன்றி

    ReplyDelete
  23. மழை : நன்றி

    ReplyDelete
  24. சுரேஷ்: நன்றி

    ReplyDelete
  25. அருமையான விமர்சனம்,

    நானும் படிக்கணும்.

    ReplyDelete
  26. This comment has been removed by the author.

    ReplyDelete
  27. துளசி மேடம் பதிவுன்னாலே அவங்க செல்லங்கள் தான் நினைவுக்கு வரும் .நல்ல விமர்சனம் அடுத்த முறை சென்னைல புத்தகத்தை கண்டிப்பா வாங்கணும் .

    அப்புறம் முன்பு உங்க வீட்டில் ஒரு செல்ல பெண் தானே இருந்தா இப்ப ரெண்டு பேர் அழகா இருக்காங்க :))

    ReplyDelete
  28. இந்த புத்தகத்தினை படிக்கவில்லை.விமர்சனம் கண்டதும் படிக்கும் ஆவல் மிளிர்கின்றது.

    ReplyDelete
  29. பூனைகளையும் பிடிக்கும் என்றாலும் நானும் நாய்தான்.... ஸாரி, நாய் நேசன்தான்! அனுபவங்களும் உண்டு. வாய்ப்பு கிடைக்கும்போது இந்தப் புத்தகம் படிக்க வேண்டும்.

    நேற்று எங்கள் ஏரியாவில் ஒரு பெரிய மஞ்சள் பாம்பு அடித்தார்கள். சாரைப் பாம்பு. 'கொல்லாதீர்கள் . கலர் புதுமையாக இருக்கிறது. முடிந்தால் உயிருடன் பிடித்து வையுங்கள், கிண்டி ஸ்நேக் பார்க் போல யாருக்காவது தொலைபேசி அவர்களிடம் ஒப்படைக்கலாம்' என்று சொன்ன என்னை விநோதமாகவும் விரோதமாகவும் பார்த்தார்கள். கொன்று விட்டார்கள்.

    ReplyDelete
  30. செல்லப் பிராணிகளின் இறப்பு மிக்க வருத்தத்தைத் தரக் கூடியது.அதைப் பற்றிய தொடர்ப் பதிவும் ஏற்கனவே இட்டிருக்கிறேன்.

    ReplyDelete
  31. தமிழ்மணம் மகுடம்
    கடந்த 2 நாட்களில் அதிக வாசகர்கள் பரிந்துரைத்த இடுகை
    பதிவர் துளசி கோபாலின் செல்ல செல்வங்கள்.. - 19/19
    மோகன் குமார்

    ReplyDelete
  32. புதுகை தென்றல் : நன்றி மேடம். அவசியம் வாசியுங்கள்

    ReplyDelete
  33. ஏஞ்சலின்: அட நல்ல நினைவு வச்சிருக்கியே ! ஆம் இப்போ ஒரு ஜோடி கிளி வந்துடுச்சு; கொஞ்ச நாள் முன்பே பகிர்ந்தேன். நீ இப்போது தான் பார்க்கிறாய் போலும்

    ReplyDelete
  34. ஸாதிகா: நன்றிங்க

    ReplyDelete
  35. ஸ்ரீராம் : நீங்கள் நாய் பிரியர் என தெரியும். தெருவில் நடந்த சம்பவம் பகிர்ந்தமைக்கு நன்றி ஸ்ரீராம். எனக்கு பாம்பு என்றால் பயம் தான்.

    ReplyDelete
  36. முரளி சார் : நன்றி; அந்த லிங்க் தந்திருக்கலாம். நாங்கள் படிக்க வசதியாய் இருந்திருக்கும்

    ReplyDelete
  37. அருமையான விமர்சனம்.

    உங்கள் செல்லங்களும் அழகாக இருக்கிறாங்கள்.

    முன்னர் ஊரிலிருந்தபோது நாய்க்குட்டி செல்லங்கள் இருந்தன. இப்போது பிளாட் வாழ்க்கை செல்லங்கள் இல்லை :(

    ReplyDelete
  38. அடடா!படிக்கணுமே!!!
    உங்களுக்கு பூங்கொத்து!

    ReplyDelete
  39. நல்ல விமர்சனம்....

    படிக்கத் தூண்டுகிறது.

    ReplyDelete
  40. நன்றி மாதேவி

    ReplyDelete
  41. வாங்க அருணா மேடம் நன்றி

    ReplyDelete
  42. நன்றி சீனி

    ReplyDelete
  43. கப்பு,ஜிகே என்று அத்தனை செல்லங்களுடனும் நானும் கடிதங்கள் மூலம் பழகி இருக்கிறேன்.
    எப்பொழுதும் எங்கே பார்த்தாலும் ஒரு மிருகம் கூட அவர் காமிராக் கண்ணுக்குத் தப்பாது. அருமையானதம்பதிகள்.நன்றாக இருக்கக் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  44. எங்களுக்கு பூனைன்னா உயிரு சார்.அவற்றை ஆரம்பத்திலிருந்து,ரத்த வாசனை மறக்க வைத்து சாப்பிட கத்து கொடுத்துவிட்ட்டால்,பூனையாரும் வெஜிடேரியந்தான்.பூனைகிட்ட நாம அடிக்காம பாசத்த வச்சுட்டா,அவரு நம்மளை உரிமை கொண்டாடிவார்.பூனைகள் இருப்பது,வீட்டில்,பல பேரு இருப்பது போல,தோனும்.ஒரு ஈ -யை விடமாட்டாரு.திரத்திவிட்டு உள்ளே வரும் கண் கூர்மை.நமக்கு சொந்தகாரங்களா இருந்தா,அதுவும் சமயல் கட்டுக்கு வந்தா அவர்களிடம் நண்பர் என்று பழகிவிடும்.பூனை வளர்ப்பதனால,பல பாவங்கள் நம்மைவிட்டு போகும்.நமக்கு வரும் உட்காயங்களை,அது தடுத்து,அது ஏற்று கொண்டுவிடும்.ஸ்ட்ரெஸ் ரிலீசுக்கு பூனையின் அன்பான கண்களே போதும்.பொண்டாட்டி என்னிக்கு அன்பா கண்ணாள பார்க்கராருங்க.வீட்டில்,உயிருக்கு கடவுள் தனது கணக்குள திட்டம் தீட்டும் போது ,பூனை உணர்ந்து,நம்மை வளர்த்த உரிமையாளருக்காக உயிரை விடும்.பூனை நமக்காக செய்யும் நன்மைகள் உலகத்துக்கும்,மனிதர்களுக்கும் தெரியாது.அதுதான் உண்மையான நன்றி.ஆனால்,நாய் உன்னிடம் ஆதாயம் இருக்கும் போதுதான் அது வாலை ஆட்டும்.வெளியில் தெரிய க்கூடிய நன்றி உள்ள பிராணி.வீட்டில்,பூனை போன்று பல்லி மட்டும்தான் வளரக்கூடியவை.பூனையை அடிக்கடி தொடாமல்,வளர்த்தல்,அதனுடைய முடி விழாது.அதுவே,நம் மடியில்,வந்து அன்பாய் உட்கார்ந்து பாச மழை பெய்யக்குடியவை.மனதுக்கு நல்ல சந்தோழத்தினை கொடுக்ககூடியவை பூனை மட்டுமே.

    ReplyDelete
  45. எங்களுக்கு பூனைன்னா உயிரு சார்.அவற்றை ஆரம்பத்திலிருந்து,ரத்த வாசனை மறக்க வைத்து சாப்பிட கத்து கொடுத்துவிட்ட்டால்,பூனையாரும் வெஜிடேரியந்தான்.பூனைகிட்ட நாம அடிக்காம பாசத்த வச்சுட்டா,அவரு நம்மளை உரிமை கொண்டாடிவார்.பூனைகள் இருப்பது,வீட்டில்,பல பேரு இருப்பது போல,தோனும்.ஒரு ஈ -யை விடமாட்டாரு.திரத்திவிட்டு உள்ளே வரும் கண் கூர்மை.நமக்கு சொந்தகாரங்களா இருந்தா,அதுவும் சமயல் கட்டுக்கு வந்தா அவர்களிடம் நண்பர் என்று பழகிவிடும்.பூனை வளர்ப்பதனால,பல பாவங்கள் நம்மைவிட்டு போகும்.நமக்கு வரும் உட்காயங்களை,அது தடுத்து,அது ஏற்று கொண்டுவிடும்.ஸ்ட்ரெஸ் ரிலீசுக்கு பூனையின் அன்பான கண்களே போதும்.பொண்டாட்டி என்னிக்கு அன்பா கண்ணாள பார்க்கராருங்க.வீட்டில்,உயிருக்கு கடவுள் தனது கணக்குள திட்டம் தீட்டும் போது ,பூனை உணர்ந்து,நம்மை வளர்த்த உரிமையாளருக்காக உயிரை விடும்.பூனை நமக்காக செய்யும் நன்மைகள் உலகத்துக்கும்,மனிதர்களுக்கும் தெரியாது.அதுதான் உண்மையான நன்றி.ஆனால்,நாய் உன்னிடம் ஆதாயம் இருக்கும் போதுதான் அது வாலை ஆட்டும்.வெளியில் தெரிய க்கூடிய நன்றி உள்ள பிராணி.வீட்டில்,பூனை போன்று பல்லி மட்டும்தான் வளரக்கூடியவை.பூனையை அடிக்கடி தொடாமல்,வளர்த்தல்,அதனுடைய முடி விழாது.அதுவே,நம் மடியில்,வந்து அன்பாய் உட்கார்ந்து பாச மழை பெய்யக்குடியவை.மனதுக்கு நல்ல சந்தோழத்தினை கொடுக்ககூடியவை பூனை மட்டுமே.

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...