Tuesday, August 21, 2012

வானவில் 102: ரஜினியின் தோல்விபடமும், பெங்களூரும்

பார்த்த படம்: ஜோதா அக்பர்


பள்ளியில் அக்பர் பற்றி நிறைய படிச்சிருக்கோம். முகலாய அரசர்களில் மிக நல்லவர் அக்பர் என்பது மனதில் பதிந்து போன விஷயங்களில் ஒன்று. அந்த அக்பர் பற்றி மட்டுமல்லாது அவரது இந்து மனைவியான ஜோதா பற்றியும் விரிவாய் பேசுகிறது இந்த படம்.

அக்பராக - ரித்திக் ரோஷன். அவர் மனைவியாக ஐஸ்வர்யா ராய் - முதலாம் பானிபட்டில் துவங்கி அக்பர் வாழ்வின் பல்வேறு பக்கங்களை காட்டுகிறது படம்.

சமீபத்தில் நாங்கள் நேரில் பார்த்த ஆக்ரா கோட்டையில் தான் பெரும்பகுதி படம் எடுக்கப்பட்டுள்ளது. நாம் சென்ற இடம் என்பதால் ரொம்ப ரசிக்க முடிந்தது.

பள்ளியில் படிக்கும் என் பெண்ணுக்கு படம் ரொம்ப பிடித்தது. வரலாற்றை இப்படி சினிமாவாக தந்தால் நிச்சயம் வரவேற்கலாம் !

ரசித்த பாட்டு: 

மனம் கொத்தி பார்வையில் பல பாடல்கள் இனிமை. என்ன சொல்ல ஏது சொல்ல என்கிற இந்த பாடலும் சரி, படமாக்கப்பட்ட விதமும் சரி எளிமையாகவும் மனதை கவரும் வண்ணமும் உள்ளன. அழகான ஹீரோயின், குறும்பான ஹீரோ, இனிய பாடல் ..பார்த்து ரசியுங்கள் !



ஆனந்த் கார்னர்

Life is the hardest school, as you never know what level of class you are in, what exam you will have next and you can't copy others because nobody else will have the same question paper.

காமெடி போஸ்டர்



ரஜினியும் பாபாவும்

பாபா படம் நஷ்டம் என்று தெரிந்து, ரஜினி டிஸ்டிரிபியூட்டர் அனைவருக்கும் பணம் திருப்பி தந்தது நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அவர் ஏன் பணம் திருப்பி தந்தார் என அவரை நன்கு அறிந்த, பணம் திருப்பி தரும் process-ல் ஈடுபட்ட ஒருவர் ஜெயா டிவியில் "திரும்பி பார்க்கிறேன்" நிகழ்ச்சியில் பேசினார்.

முதலில் பத்து நாளில் யார் யாருக்கு எவ்வளவு நஷ்டம் என கணக்கு எடுத்து தருவதாய் கூறியிருக்கின்றனர். ரஜினியோ அடுத்தடுத்த நாளும் "முடிஞ்சிதா? பத்து நாள் வேண்டாம் சீக்கிரம் முடிங்க சீக்கிரம் முடிங்க" என வற்புறுத்தியிருக்கிறார். இரண்டு நாள் கழித்து ரஜினி இப்படி சொன்னாராம் " என்னால தூங்கவே முடியலை. தூங்காம என்னால் இருக்க முடியாது. இந்த பிரச்சனை முடிஞ்சா தான் தூங்க முடியும். பத்து நாள் எல்லாம் தாங்காது" என்று சொல்ல, பின் ஓரிரு நாளில் கோடிகணக்கான பணம் தந்து விஷயம் முடிவுக்கு வந்துள்ளது.

தூக்கம் எத்தனை முக்கியம் என்பதையும், தூக்கத்துக்கு விலையாய் எத்தனை கோடியையும் தரலாம் என்பதயும் இந்த நிகழ்ச்சி சொல்லவில்லை?

நாட்டி அஜூ கார்னர்

அஜூ பயல் இன்னும் எங்களிடம் வருவது இல்லை. ஆனால் முன்பு நாங்கள் இருந்தாலே கூண்டுக்குள் போய் ஒளிந்து கொள்வான். அதில் மட்டும் சிறு மாறுதல். நாங்கள் இருந்தாலும் வெளியிலேயே இருக்கிறான். நாம் அவனை பார்த்தால் முகத்தையும் உடம்பையும் திருப்பி கொண்டு சுவற்றை பார்ப்பான். சிலர் பயந்தால் முகத்தை மூடி கொள்வார்கள் இல்லையா அந்த மாதிரி ! நாம் அருகில் போனால், நாட்டி பின்பக்கம் போய் நின்று கொள்வான். இப்படியே காமெடி செய்கிறானே ஒழிய, வந்து பல மாதமாகியும் எங்கள் கையில் வருவதில்லை. இது எல்லாருக்கும் சற்று வருத்தம் தான் !

பெங்களூர் விஜயம்

ஒரு கல்யாணத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள (முதல் பந்தியில் சாப்பிட்டால் சிறப்பு விருந்தினர் தானே?) இன்று இரவு பெங்களூர் செல்கிறேன்.

நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். ரெண்டு நாள் பயணமாவது இருந்தால் தான் பெங்களூர் பயண கட்டுரையெல்லாம் எழுத முடியும் :)) கல்யாணம் முடிந்து மதிய டிரைனில் சென்னைக்கு ரிட்டர்ன் ! நாளை இணையம் பக்கம் வர முடியாது என்பதால் வானவில், ஒரு நாள் முன்னதாக செவ்வாய் இரவே வெளி வந்து விட்டது.

நெக்ஸ்ட்டு மீட் பண்ணுவோம் !

21 comments:

  1. நல்ல படம்... பிடித்த பாடல்... தூக்கத்தின் அருமை... என வானவில் அருமை...

    காமெடி போஸ்டர் ... (தம்பி... போனை போடு...)

    வாழ்த்துக்கள்... நன்றி... (TM 3)

    ReplyDelete
  2. TM 2 , TM 3 , தா ம 3 - ன்னு பின்னூட்டத்தில் போடறாங்களே ...அப்டினா என்ன அர்த்தம் ?

    ReplyDelete
  3. நன்றி தனபாலன்

    ReplyDelete
  4. விஷ்ணு பிரசாத்: தமிழ் மணத்தில் அவர்கள் நமக்கு வாக்களித்துள்ளனர் என்று அர்த்தம் ! (கிண்டலுக்கு கேட்டீங்களா சீரியஸா கேட்டீங்களான்னு தெரியலை பாஸ்)

    ReplyDelete
  5. // ரஜினியும் பாபாவும் //

    By reading this matter, I got the effect of Reading Daily-Thandhi.

    --

    ReplyDelete
  6. Nope I have not asked that question for teasing.That was my real doubt.In so many comments I have seen that text.So I was curious to know the meaning of that...Thank you for the reply.

    ReplyDelete
  7. PMK is one of the reason for Baba Flop..

    ReplyDelete
  8. //இந்த பிரச்சனை முடிஞ்சா தான் தூங்க முடியும். பத்து நாள் எல்லாம் தாங்காது" என்று சொல்ல//

    இதனால்தான் அரசியலில் இருந்து விலகி இருக்கிறார் போல!

    //நீங்கள் யாரும் பயப்பட வேண்டாம். ரெண்டு நாள் பயணமாவது இருந்தால் தான் பெங்களூர் பயண கட்டுரையெல்லாம் எழுத முடியும் :)) கல்யாணம் முடிந்து மதிய டிரைனில் சென்னைக்கு ரிட்டர்ன் ! //

    இல்ல, இந்த பயணத்தை பற்றியும் நீங்க கண்டிப்பா எழுதுவீங்கன்னு நம்பறேன். ஏன்னா, அ ந் நி ய ன் மாதிரி எப்பவும் உங்களுக்குள்ள ஒரு பதிவர் எட்டி பார்த்துகிட்டே இருக்கார். :)

    ReplyDelete
  9. ஜோதா அக்பர் பார்த்ததில்லை.
    காமெடி போஸ்டர் கடுப்பையும் சிரிப்பையும் வரவழைத்தது.
    ரஜினியின் இந்த உயர்ந்த குணம் பாராட்டப் பட வேண்டியது.
    த.ம. ஓட்டுப் பெட்டியைக் காணோமே...!

    ReplyDelete
  10. இந்த வாரம் வானவில் சினிமா ஸ்பெஷல் போல இருக்கிறது. [மற்ற விஷயங்கள் இருந்தாலும் சினிமாச் செய்திகள் சற்று அதிகமாக இருப்பது போல் தோன்றுவதால்].

    //Is TM down today?//
    அப்படித்தான் தோன்றுகிறது ஆதிமனிதரே! இங்கு எங்கள் பகுதியில் கடந்த 2 வாரங்களாகவே சரியாக வரவில்லை. நடுவில் திடீர்திடீரென்று சில சமயங்களில் வருகிறது. பட்டையில் இணைப்பதும் முடியவில்லை. காரணம் என்னவென mail அனுப்பியும் பதில் கிடைக்கவில்லை. யாருக்காவது தெரிந்தால் கூறவும். [btw, உங்கள் புனைப்பெயர் வித்யாசமாக இருக்கிறது. கல்தோன்றி மண் தோன்றா காலத்து மனிதர் என்ற பொருளில் வைத்திருக்கிறீர்களா?]

    ReplyDelete
  11. சிறப்பான தொகுப்பு! நன்றி!

    இன்று என் தளத்தில்
    கோயில்களில் கொள்ளையும் பக்தர்கள் வேதனையும்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_22.html
    ஒரு வில்லன்! ஒரு ஹீரோயின்! ரெண்டு ஹீரோக்கள்!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_4096.html

    ReplyDelete
  12. சிறப்பான பகிர்வு. போஸ்டர் ரசித்தேன்....

    த.ம. 10

    ReplyDelete
  13. மாதவா: தினத்தந்தி அளவு ஜனரஞ்சகமா ஆகிட்டோமா ! பரவால்லியே !

    ReplyDelete
  14. வடிவேலன்: நன்றி. ஆனால் படமே கொஞ்சம் போர் தான் (கவுண்டமணி காமெடி பாட்டு தவிர )

    ReplyDelete
  15. ர‌கு said...

    இல்ல, இந்த பயணத்தை பற்றியும் நீங்க கண்டிப்பா எழுதுவீங்கன்னு நம்பறேன். ஏன்னா, அ ந் நி ய ன் மாதிரி எப்பவும் உங்களுக்குள்ள ஒரு பதிவர் எட்டி பார்த்துகிட்டே இருக்கார். :)

    **
    ரகு: மிக சரியா சொல்லிட்டீங்க ! இந்த பயணத்தில் ரெண்டு மூணு பதிவு ரெடி ஆகிடுச்சு

    ReplyDelete
  16. ஸ்ரீராம்: நன்றி தமிழ் மணம் நேற்று ரொம்ப தகராறு பண்ணிருக்கு போல.

    ReplyDelete
  17. ஆதி மனிதன் said...

    Is TM down today?

    அப்படி தான் சொல்றாங்கோ

    ReplyDelete
  18. வெங்கட ஸ்ரீநிவாசன் said...

    இந்த வாரம் வானவில் சினிமா ஸ்பெஷல் போல இருக்கிறது

    பட விமர்சனமும், வானவில்லில் சினிமா செய்தியும் இருப்பதால் அப்படி தோணிருக்கு போல

    ReplyDelete
  19. நன்றி சுரேஷ்

    ReplyDelete
  20. நன்றி வெங்கட்

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...